"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Death's no new thing; nor do our bosoms thrill
When Joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much - praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightnings' flash from darken'd skies
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise ! -
We marvel not at greatness of the great;
Still less despise we men of low estate."
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
-கணியன் பூங்குன்றன்
................
நேற்று என் மனைவி கோயிலுக்கு செல்லவேண்டும் என்றார்.அதானல் நானும் அவர்களுடன் கோயிலுக்கு சென்றிருந்தேன்.அவங்க சாமி கும்பிட கோயிலுக்குள்ள போய்ட்டாங்க.வெளிய நின்னுக்கிட்டிருந்த என்ன அந்த வழியா வந்த எனது சக வழக்கறிஞர் என்னப்பா இந்தப்பக்கம் என எள்ளினார்.நான் நாத்திகன்,அடுத்தவனை சாமி கும்பிடாத,சாமி கும்பிடாத னு சொல்றவன் .அது மடத்தனம் அப்படினு சொல்றவன்.அப்படிப்பட்ட நான் என் வீட்டிலே கடவுளை கும்பிடற ஆளை திருத்த முடியாத ஒரு கையாலாவாதவன் என்பதுவே அவரின் எள்ளளுக்கான காரணம்.முன்பு இது போன்ற தருணங்களில் சூழலுக்கு ஒவ்வாத வறட்டு காரணம் ஏதாவது ஒன்றை சொல்லி சமாளித்துவந்துள்ளேன்.ஆனால்,இப்பொழுது அவர் கேட்டதும் உடனே சரியான உரிய பதில் தர ,அவர் மன்னிக்கவும்,தெரியாமல் கேட்டுவிட்டேன் ,இனி இதுபோல் யாரையும் என் வாழ்க்கையில் கேட்கவேமாட்டேன் என்றார்.அதற்கு நான் ,ஏன் உணர்ச்சி வசப்படுறீங்க,இது மாதிரி இன்னும் நிறையா இருக்கு , நீங்க இந்த புத்தகத்த படிங்க ,அப்ப இன்னும் தெளிவாவிங்க ,இதுக்கே இப்படி ஆயிட்டா என கூறி அனுப்பிவைத்தேன்.
......
ஒரு ஊரில ஒரு ராஜா இருந்தார்,அவருக்கு 3 மகன்கள்,
முவரும் தந்தை மாதிரியே அரசனாகவேண்டும் என ஆசைப்பட்டனர்.அதனால் அரசன் தனது நாட்டை விரிவுபடுத்த விரும்பினான்.ஆனால்,அண்டை நாடுகள் தனது நாட்டைவிட பலம் வாய்ந்ததாக இருக்கவே,அரசன் சதி செய்து மற்றவர்களை வெல்வதிலேயே தனது கவனத்தை செலுத்திவந்தான்.வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தன.சதி செய்வதிலேயே அவன் மனம் போய்க்கொண்டிருந்த்தால்,அவனின் 3 மகன்களுக்கும் நல்ல கல்வியும்,பயிற்சியும் கொடுப்பதை தவறவிட்டுவிட்டான்.அரசன் தனது மகன்களால் ஒழித்துக்கட்டப்பட்டார்.3மகன்களும் தங்களுக்குள் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் மாய்த்துக்கொண்டனர்.ராஜ்யமும் அடுத்தவர் கையில் சென்றுவிட்டது.
இப்பவெல்லாம் இது போன்ற கதைகளை நாம் கேட்கமுடிவதில்லை.
ஆம்,கதை சொல்லிகளை நாம் காலச்சக்கரத்தில் இழந்துவருகின்றோம்.இருந்தாலும் இந்த கதைசொல்லிகள் விட்டுச்சென்ற புதிர்கள் இப்பொழுது இந்த புத்தகத்தின் மூலம் வெளியுலகிற்கு அவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
அந்த புதிரில் ஒன்று தான் ஒரு ஊரில ஒரு ராஜா.
நாம கூட விளையாட்ட ஏன் ஒரு ஊருள,ஒரு ராஜா தான் இருப்பாங்களா?.2 ராஜா இருக்கக்கூடாதானு.
ஆனால்,ஒரு ஊருக்கு ராஜா எப்படி இருக்கமுடியுமுனு கேட்கத்தோனவில்லை சிறுவயதில்.ஆனால்,இந்த நூலாசிரியர் கேட்கிறார்.கேட்பதோடு ஒரு புரிதலையும்,புரிதலையும்,நாம் இன்றுவரை புரிந்துவந்த புரிதல் தவற்றையும் சாடுவதோடு திருத்திக்கொள்ள தனாகவே நம்மை தயார்படுத்துகிறார்.
அதன் மீதான பயணத்தில் ,
யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; என்ற கணியன் வரிகளை
To us all towns are one என்ற தொனியில்
நாம் இனி பயன்படுத்துவது எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கும் என்பதனை உணர்த்துகிறது இந்த நூல்...
பழமைகளைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் சரியாக புரிந்துகொள்ளாமல் புதுமையைச் சிறப்பாக படைக்க முடியாது என்பதனை சொல்லாமல் சொல்லிச்செல்கிறது இந்த நூல்.
இதையும் பார்க்க .
தொடரும் ....
Tweet |
|