இது முற்றிலும் உண்மையாக நடந்த நிகழ்வு.
எனக்கு இது ஒரு வியப்பான ஒன்றாகாவே உள்ளது.
மாயை என்பதற்கான முழு அர்த்தம் உணர இது காரணமாயிற்று.
பலர் பல சமயங்களில் கூறியவைகளை ,உணர்ந்தவைகளானவைகளை என்னுள் மீள்பார்வை பார்க்கவைத்த ஒரு காட்சி இது.
இதைத்தான் தோடுகிறார்களே,
இப்படிப்பட்ட செல்பிக்காகத்தான் முயன்றுவருகிறனரா இந்த செல்பி சமூகம் என மன ஓட்டம் கேள்வி கேட்கிறது.
ஆனால்,நான் செல்பி பிரியனும் இல்லை.
இதற்காக இந்த செல்பி எடுக்கவும் இல்லை.
இந்த செல்பிக்கு பின் உள்ள நிகழ்வை முதலில் பார்ப்போம்.
இந்த செல்பி எடுக்க காரணம் வறட்சி,பசுமை மறைந்துவரும் ஏக்கம் மற்றும் ஐந்தறிவு உயிரினங்கள் நீரின்றி படும் அவதி இவற்றால் மனப்போராட்டத்திற்கு ஆட்பட்ட நிலையில் மனிதர்கள் தான் இயற்கையை பாழ்படுத்துகிறான் ,அவனுக்கு இயற்கைஇன்னையே நீ எந்தகைய தண்டனையையும் கொடு.உன்னேடு இயைந்துவாழும் இவைகளுக்கு ஏன் இந்த தண்டனை என்ற கேள்வியுடன் சிந்தித்துக்கொண்டே எனது மனைவியின் வருகைக்காக காத்திருந்த பொழுது இயற்கையுடன் இயைந்த ஒரு செல்பி எடுக்கப்பட்டது கடந்த 22.2.17 மாலை 4.33க்கு.
அந்த செல்பி இதோ
இனி இதில் கடவுள் பிரதஷ்டனை விசயத்திற்கு வருவோம்
ஏதெச்சையாக நேற்று இரவு எனது Instagram பார்த்துக்கொண்டிருந்தபொழுது
S Photo Editor-Collage Maker என்ற செயலி ஒன்று பார்த்தேன் .அதனை எனது செல்பேசியில் நிறுவி அதன் செயல்பாடுகளை சோதித்துப்பார்த்துக்கொண்டு வந்தேன்.அப்பொழுது அதன் Edit பகுதிக்கு சென்று இதன் Mirrorபகுதிக்கு உட்செல்ல எனது செல்போனில் கடவுள் உரு பிரத்தஷ்டனை ஆனது.
படத்தின் பின்புலத்தினை நன்றாக உற்றுநோக்கவும். (அதில் எத்தனை கடவுளின்உ ருக்கள் தெரிகிறது என்பது உங்களின் மனதினை பொறுத்தது )
இதனை கண்ணுற்ற நான் இது இயற்கை அன்னை என்பதனை அறிந்துகொண்டேன்.
அவள் என்னைப்பார்த்து எனது மனப்போரட்டம் அறிந்து ஏதோ ஒன்றை எனக்கு உணர்த்துகிறார் என்பதனை அறிந்துகொண்டேன்.
அது அவள் என்னிடம் நீ உன்னின் எதிரெதிர் இருசமனபார்வையில் உன்னுள் கட்புலனாகும் சமயம் இவ்வுலக உண்மையை அறிவாய் என உரக்க உரைப்பதாக உணர்கிறேன்.
எனது பகுத்தறிவு பாதையின் அடுத்த பரிணாமம் உணர்த்திய இயற்கை அன்னைக்கு எனது வாழ்த்துக்கள். அதுவும் மகளிர் தினமான இன்று உமக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.
இயற்கை அன்னையே நீ வாழ்க .
உமது செழிப்பில் தான் இவ்வுலகு நலம்பெறும்.
இதுவோ எனது செல்போனில் இயற்கை அன்னை தொன்றிய நிகழ்வின் உண்மை.
Tweet |
|