இன்று இணையம் வந்தபொழுது இங்கு ஒரு ஆரோக்கியமற்ற அசாதரணசூழல் நிலவுவதை உணர முடிந்தது.
இச்சூழல் மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
நமது நாடு காந்தீய சுதந்திர பூமி.
இங்கு யாருக்கும் ,எவருக்கும் ஒருவரை விட மற்றொருவருக்கு
அதிக அதிகாரமோ,உரிமையோ கொடுக்கப்படவில்லை.
யாரும் அப்படி எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படவும் இல்லை.
கூடவும் கூடாது.முடியவும் முடியாது.
ஆனால் நடந்த சில நிகழ்வுகள் அப்படியில்லை என்பதனை காட்டுகிறது.
இனிய இணைய உலகில் ,நமது தாய் மொழி தனது மழலை நடையை ஆரம்பித்துள்ள இந்நிலையில் ,இது போன்ற அசாதரணசூழல் இணையத்தில், நம் மொழி பாவனையாளர்களை அதிரவைத்துள்ளது என்பது தான் மிகவும் வருத்தமான ஒன்றாக உள்ளது.
கருத்துரிமைக்கு எல்லையில்லை ,
இங்கு யாரும் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடவும் கூடாது.
இங்கு யாரும் யாருடைய சுதந்திரத்தையும் தடைபோடவும்
கூடாது.
இங்கு சுதந்திரம் மற்றும் கருத்துரிமை பற்றிய சரியான புரிதல் இல்லாதது தான் இத்தகைய அசாதரணசூழலுக்கு காரணம் .
இது பற்றி விரிவான புரிந்துணர்வை ஏற்படுத்தவேண்டும்.
இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இணைய பாவனையாளர்கள் சந்திப்பு ஒன்று கூட ஏற்பாடு செய்யலாம்.
மேலும் இணைய உலகில் நாம் அனைவரும் ஒருவரே.
இங்கு ஒருவருக்கொருவர் பகைமை கொண்டிருத்தல் என்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.
மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியது மட்டுமல்ல,
மதிக்கப்பட்ட வேண்டிய ஒன்றும் ஆகும்.
தமிழன் கடக்கவேண்டிய தொலைவுகள் மிகஅதிகம் .
நீங்கள் யாரென்று எனக்குத்தெரியாது ,
ஆனால்
உங்களின் நல்ல எழுத்துக்கள்
எனக்கு உறவு.
உறவுகளை மேம்படுத்துவோம்.
Tweet |
|