ஞாயிறு, 22 ஜூலை, 2012

இரட்டைப்பிள்ளை பிறக்க கணவன் இறக்கவேண்டும்.

   நொரண்டு : வணக்கம் நண்டு.

நண்டு : வாங்க நொரண்டு.

நொரண்டு :   இரட்டைப்பிள்ளை பிறக்க கணவன்  இறக்கவேண்டுமாமே.

நண்டு : அட ...என்னப்பா சொல்லர .

நொரண்டு : ஆமாப்பா.

நண்டு :  யார் சொன்னா ?.


நொரண்டு எங்க பாட்டி சொன்னாங்கப்பா .

நண்டு :  யார்ட்ட ?.

நொரண்டு : எங்க அத்தைகிட்ட சொல்லிட்டு இருந்தாங்க


நண்டு : என்னானு?.

நொரண்டு : அவங்க நேத்து கனவு கண்டாங்கலாம்.

நண்டு :  அதனால் என்ன ?.


நொரண்டு : அட,சொல்ல  முதல விடப்பா.


நண்டு :  சரி சொல்.


நொரண்டு : எங்க அத்தை எங்க மாமா இறந்து விட்டதா கனவு கண்டாங்களாம்.அது கண்டு பயந்து போய் எங்க பாட்டிகிட்ட என்ன அர்த்தம்னு கேட்டாங்க .அதுக்கு  எங்க பாட்டி கணவன் இறந்ததாக  கனவு கண்டா ,கனவு கண்டவள் நீண்ட நாள் கணவனுடன் சுமங்கலியா வாழ்வாள்.இரட்டை பிள்ளைகள் பிறக்கும் ,அதனால கவலைப்படாதே.ஒன்னும் ஆகாதுனு சொன்னாங்க...இது நிஜமா. 


நண்டு :  கனவுகள் பற்றியும் அதற்கான பலன்கள் பற்றியும் நிறைய நம்பிக்கைகள் இருக்கு.அதுல இதுவும் ஒன்று.


நொரண்டு  ஓ .


நண்டு : 

 '' மரப்பெட்டி யுடையக் கண்டாள் ;
 மல்லிகைப்பூவாடக்கண்டாள் ;
ஏற்றி வைத்த திருவிளக்கு இருளடைந்து போகக்கண்டாள் ;
உரைத்துவைத்த சந்தனந்தான் உலர்ந்திட கண்டாள் ;
தேங்காயுடையக் கண்டாள் ;
செம்பு ஜலங் குறையக்கண்டாள் ;
மாலை கசங்கியே தான் மணவாளன் மாளக்கண்டாள்   '' இத  படிச்சிருக்கியா ?.

நொரண்டு  இல்லப்பா, அவங்க இரட்டை  குழந்தைகள் பொத்துக்கிட்டு  100 வருசம் இருந்தவங்களாப்பா.


நண்டு :   ஹா ...  ஹா ..ஹா ...


நொரண்டு : ஏப்பா சிரிக்கிற .


நண்டு :   இது கண்ணகி கண்ட தீ நிமித்தம் இது.


நொரண்டு : ஓ ..ஓ.. ,என்னப்ப ,உண்மையாகவா ?. இது  நிமித்தமா ?.கனவா ?.


நண்டு :  ம் ...அத இளங்கோவை படித்து தெரிந்துகொள்.

நொரண்டு :நின்ன என்ன சொல்ல வர்ரா.


நண்டு :  அந்த காலத்தில தாங்கள் கண்ட கனவு அப்படியே நடக்குனு நம்பினாங்க.இப்ப அதற்கு நேர்மாறா நடக்கும்னு நினைக்கிறாங்க.

நொரண்டு : ஆமாப்பா, இப்படித்தான் இருக்கின்றனர்.

நண்டு :ஆனால் ,ஒன்றுமட்டும்  தெரியல.


நொரண்டு  என்ன தெரியல .


நண்டு :  எங்கையோ இடிக்குதுப்பா ?.

நொரண்டு : என்ன ?.

நண்டு :   இந்த முரணிற்கு காரணம் தான்.

நொரண்டு :ஆமாம்.ஏன் இந்த முரண்.


நண்டு :கனவில் கண்பது அனைத்தும் அப்படியே நடக்கும்  என்பதையும் ஏற்க முடியாது .


நொரண்டு :ஏன்,தையல் மிசின்...


நண்டு :  ஹா ...  ஹா ..

நொரண்டு  ம்...


நண்டு : அது போல அதற்கு நேர்மாற நடக்கும்  என்பதையும் ஏற்க முடியாது.

நொரண்டு  அப்ப என்னத்தத்தான்  ஏத்துக்கிறதா ? .


நண்டு :  அச்சம் நீங்கி அமைதியை மனத்தில் ஏற்படுத்த சொல்லப்படும் இன்சொல்லாக எடுத்துக்கொள்ளலாம்.அவ்வளவே.

நொரண்டு : இது  மூட நம்பிக்கையில்லையா.


நண்டு :   ஹா ...  ஹா ..ஹா ...நல்ல பகுத்தறிவு .

நொரண்டு :  புரியல.


நண்டு : புரியாம இருக்கும் வரை எல்லாம் முட நம்பிக்கையே.Download As PDF

வியாழன், 19 ஜூலை, 2012

'புத்துலகு படைக்க வரும் புதிய பகுத்தறிவாளர்களே' - வருக...வருக...
நண்பர்  இக்பால் செல்வன்  அவர்கள்  

தமிழ் பகுத்தறிவு வலைப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

விடுத்துள்ளார்.

மிகவும் நல்ல செயல்.

சவால்கள் நிறைந்த  பயணத்திற்கு  வாழ்த்துக்கள்.


அவரின் அழைப்பை கண்டதும் எனக்கு நினைவிற்கு வந்தது எங்களின் முந்தைய முயற்சி.
....


நொரண்டு : எதாவது புதிய செய்தி உண்டா ?

நண்டு : ம்......ம்....இந்த நூற்றாண்டின் புதிய பகுத்தறிவாளர்கள் ஒரு சங்கம்ஆரம்பித்து இருக்காக .

நொரண்டு என்ன புதிய பகுத்தறிவாளர்கள் சங்கமா ?

நண்டு : ஆமாம் ,...புதிய பகுத்தறிவாளர்கள் சங்கம் என்றில்லை
' பகுத்தறிவாளர் சங்கம்' என்று ஒரு புதிய சங்கத்தை ஆரம்பித்து இருக்காக...

நொரண்டு : எப்போ.. ?...எங்க... ? யார் ...?....

நண்டு : எனக்கு அதல்லாம் தெரியாது . எனக்கு வந்தத சொல்றேன்.முதலில்
நான் அவர்களின் சிறு விண்ணப்பத்தை கண்டு அதிர்ந்தேன் ....

நொரண்டு  ஏன் ?.....

நண்டு : ஏன் ?.....உனக்கு எதுவும் தெரியாதா?...உனக்குஎதுவும் வரலையா?

நொரண்டு முதல்ல விசயத்துக்கு வா .

நண்டு : அதென்ன பகுத்தறிவாளர்கள் என்று சொன்ன உடனே பழமைவாதிகள்
தாக்க ஆரம்பித்து விடுவார்களா என்ன ?? இந்த நூற்றாண்டிலுமா... ??? '
பகுத்தறிவாளர் சங்கம்' என்று கூறிக்கொள்பவர்கள் உண்மை தான் கூறுகின்றனரா ? அல்ல ......

நொரண்டு :  பொதுவாக பகுத்தறிவாளர்கள் பொய் எதுவும் கூறமாட்டார்கள் . தவறு,தவறு ,பகுத்தறிவாளர்கள் எப்போதும் உண்மை மட்டுமே பேசுவர் ,மேலும் தங்களின் பழமைவாதத்தை நிலைநாட்ட உடனடியாக செயலில் இறங்கி பகுத்தறிவாளர்களை பழமைவாதிகள் அழிக்க நினைப்பது தொடரும் வரலாற்று நிகழ்வே . எந்த நூற்றாண்டானாலும் அப்படியே .ஆனால் , பகுத்தறிவாளர்கள் மன்னராட்சி காலத்தை விட தற்பொழுது
பழமைவாதிகளோடு மற்றவர்களின் இன்னல்களுக்கும் ஆளாகவேண்டிவரும்  ..

நண்டு :  யார் அந்த மற்றவர்கள் ?

நொரண்டு பழைய பகுத்தறிவாளர்கள் ....

நண்டு :  ....?....புரியவில்லை......?

நொரண்டு என்றும் ,எப்பொழுதும் பழமைவாதிகளோடு, பகுத்தறிவாளர்களாக தங்களை உருவகப்படுத்தி்கொண்ட பழைமையானவர்களும் ( பழைய பகுத்தறிவாளர்கள்) சேர்ந்து, புதிய கருத்துக்கள் அது எங்குதோன்றினாலும் தங்களின் பழைமை கருத்துக்களை பாதுகாக்க எதிர்க்கவே செய்வர் .பழமைவாதிகளை விட பழைய பகுத்தறிவாளர்கள் தான் தங்களின் கடுமையான எதிர்ப்பையும், முட்டாள்தனமான விவாதத்தையும் முன்வைப்பர் .

நண்டு :  புதிய பகுத்தறிவாளர்கள் விவாதம் என ஆரம்பித்துள்ளனர் .அது நன்றாகத்தான் உள்ளது.( எனக்கு தெரிந்ததை சொன்னேன் )

நொரண்டு  அப்படியா ....அப்போ ..நீ சேந்துட்டே

நண்டு :  இல்ல ...இல்ல ....நான் எங்க ஊரில இதே மாதிரி ஒரு சங்கத்தில இருக்கோன் .நாங்களாம் சேர்ந்து ஆரம்பிச்சது .நான் நிறையா பேசியிருக்கோன்.எத்தனையோ நிகழ்ச்சிகள் செஞ்சிருக்கோம் .
எங்க தலைவர் எவ்வளவோ கருத்துக்களை விட்டுச்சென்றுள்ளார் அதை மக்களிடம் கொண்டு செல்வதற்கே இனி ஏழேழு பிறவி எங்களுக்குவேண்டும். இப்பப்போய் ... என்ன .....


நொரண்டு  சரி விடு . ஆமா நீ உன் சிஸ்டத்தை அப்டேட் சேஞ்சிட்டையா ?

நண்டு :  ம்......அதல்லாம் ... அப்பப்போ..உடனுக்குடனே...ஒரு வினாடி கூட தாமதம் இல்லாம...என் சிஸ்டத்தை பாத்தேன எல்லாமே நியு தான்..ஏங்கேக்கர...

நொரண்டு : அட ...அறியா மனிதா ... அப்ப உன் அறிவை மட்டும் ஏன்
 அப்டேட் சேஞ்சுக்கமாட்டேங்ர...கொள்கைகளும், கோ ட்பாடுகளும் உறைந்து விடக் கூடாது. உறைந்து போகும் கொள்கைகளும் , கோட்பாடுகளும் மதமாகிவிடும்(அதுஒருகாலத்தில் பகுத்தறிவாக இருந்திருந்தாலும் சரி) .

நீ மதமாகிய கொள்கை,கோட்பாட்டில் இருக்கின்றாய்.
உன்னால் உண்மையை சுவாசிக்க முடியாது.


நீ  'வரலாற்றை படித்து அறிவியலில் வாழ்கின்றாய் .....
அறிவியலை படித்து வரலாற்றில் வாழ் ' ...
அப்போதுதான் உண்மை உனக்கு த்தெரியும்.


நண்டு :   சரியப்பா ...சரி.....நீயும் ஒரு பகுத்தறிவாளி் தான்...போ..... .
எப்ப சங்கம் ஆரம்பிக்கர.. 
முதல்ல நீ் http://pakuttarivalarsangam.blogspot.com/ .... போய்ப்பார்........

நொரண்டு : எனக்கு தெரியும்...உன்ன டெஸ்ட் பார்த்தேன்.

நண்டு : அதானே ....நீயும் தத்துவம் பேசர.............

( எனக்குள் பல புதிர்கள் மின்னி மறைந்தன ....)


நொரண்டு :: உண்மையில் ...

. 1.செம்மொழியாம் தமிழ் மொழி புதிய பாதையில் வீறுநடை
போடும் காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன் .

. 2. தமிழகத்தை புதிய கருத்துக்கள் இனி அலங்கரிப்பதை பார்க்கலாம்.

. 3. புதிய பகுத்தறிவாளர்களின் உலகை மாற்றும் உன்னத கருத்துக்கள் தமிழுக்கு இனி வளம் சேர்க்கும் என நம்பலாம்.


. எனவே,

 'புத்துலகு படைக்க வரும் புதிய பகுத்தறிவாளர்களை'.... . . . 
வருக...வருக...என வரவேற்கிறேன்
அதனை மீள்பதிவாக்குகின்றேன்    இங்கே  பார்வைக்கு.


Download As PDF

செவ்வாய், 17 ஜூலை, 2012

கடவுளின் மரணமும் 3 மரண தண்டனையும்.
டைரில் வரிகளின் மூழ்கியிருந்த  டிராசிஸ்க்கு கழுத்துக்குக்கீழ் ஏதே செய்வது போல் தோன்றவே எழுந்தான்.அப்பொழுது அதிகாலை முடிந்து நற்பகல் வந்துவிட்டிருப்பதை மணிக்கடிகை காட்டியது .கழுத்துக்குக்கீழ் அல்ல வயிற்றில் தான் ஏதே செய்கிறது என்பதனை உணர்ந்தவன் அது பசி என்பதனை அறியாமலே தனது உணவுக்கூடம் நோக்கி இயல்பாக நகர்ந்தான்.அங்கு யாரும் இல்லாதது கண்டு அழைப்பு ஒலியை ஏற்படுத்தினான்.


நீண்ட நேரம் கழித்து வீரன் ஒருவன் வந்தான்.


அவனைப்பார்த்து பார்டன் எங்கே  என யோசித்தபடி கேட்டான்.  


அதற்கு வந்த வீரன்  எந்த பதிலையும் கூறாது நின்றான்.

அது கண்டு வெகுண்ட டிராசிஸ்,பார்டனை வரச்சொல் என கர்சித்தான்.


அப்பொழுது விரன் தனது உடைவாளை உருவுவது கண்டு அதிர்ந்தான்.
பின் யோசித்தவனாய்,நான் எப்பொழுதிருந்து சிறை வைக்கப்பட்டுள்ளேன் என கேட்டான்.


அதற்கு வீரன் எனக்கு தெரியாது,ஆனால் தாங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதுவும் 3மரண தண்டனைகள் என்றான்.


அது கேட்டு  நான்  பைரோனை பார்க்கவேண்டும்  என்றான் .


அரசரை பார்க்கமுடியாது என விரன் சொல்வது கேட்டு அதிர்ந்தவனாய்  அமர்ந்தான் டிராசிஸ். 


. . .


அரசருக்கு எனது வணக்கங்கள் பல.

ஹா...ஹா ... ஹா...உண்மையாகவா...உண்மையாகவா... இதை எதிர்பார்க்கவில்லை டிராசிஸ் ,நான் இதை எதிர்பார்க்கவில்லை.


தாங்கள் தானே இப்பொழுது அரசர்.

அதில் சந்தேகமே இல்லை.

அதனால் அவ்வாறு வணங்கினேன்.

ஓவ்...ஓவ்.....ஓவ்...ஓவ் ....எனக்கு மிகவும்  மகிழ்ச்சியாக உள்ளது.இதைவிட வெகுமதி எனக்கு யாரும் தரமுடியாது.வேறு யாரும் தரமுடியாது.
டிராசிஸிசே என்னை  அரசனாக ஏற்றுக்கொண்ட பின் ,உண்மையில் நான்  அரசனே  தான் .
டிராசிஸ் உனக்கு விதித்திருந்த 3 மரணதண்டனைகளிலிருந்தும் நீ  விடுவிக்கப்பட்டாய். 
வா...வா...வா,என் அருகில் வா ,உனக்கான ஆசனம் இந்த மகாசாம்ராஜ்யத்தின் பிரதான மந்திரியாகும்.
வா,டிராசிஸ்,வா ,ஏற்றுக்கொள் ...வா...என்று தனது இரண்டு கைகளையும் நீட்டி அழைத்தான்  பைரோன் .
டிராசிஸ் ,உனக்கு தெரியுமா  நீ என்னை அரசனாக ஏற்றுக்கொள்ளமாட்டாய் என நினைத்துத்தான் உனக்கு 3 மரணதண்டனைகள் அளிக்கப்பட்டது.


ஏன் 3 மரண தண்டனைகள் ?.


டிராசிஸ் உனக்கு யாரும் சொல்லவில்லையா ???. ஓ...ஓ...ஓ... உனக்கு எப்படி தெரியும் , உனக்கு முன்னே உன்னை சார்ந்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனரே.பிறகு யார் உனக்கு சொல்லுவார்கள்.கைபனை பாராட்டியே ஆகவேண்டும்.சரியாக கணித்து கூறினான்.அதனால் தான் எல்லாம் சரியாக நடந்தது முடிந்தது.ஆனால், ஆனால், உன் விசயத்தில் மட்டும் சற்று சருக்கல்.

நான் கேட்டகேள்விக்கு பதிலில்லையே .மரணதண்டனை  விதிக்கப்பட்டவர்களுக்கு  உணவு மறுக்கப்படுவது சரியானது தானா?.புதிதாக உள்ளதே . 


ஓ,ஓ,ஓ, ...உனது  மனமாற்றத்திற்கு அது தான் காரணமா டிராசிஸ்?.
வாழ்க்கையில் முதல்முதலில் பசியை  உணர்ந்திருக்கின்றாய் என நினைக்கின்றேன்.பசி...பசி...இது எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது.
என்னை மன்னித்துவிடு உன்னை வருத்தியதற்கு.
. . .


உனக்கு யார்  இந்த பதவியை கொடுத்தது ...கடவுளா ? .


டிராசிஸ் இறந்தவனால்  எப்படி பதவி  கொடுக்கமுடியும்?. 

உளராதே .


ஓ...உனக்கு செய்தி தெரியாது அல்லவா .உங்களின் கடவுள் இறந்துவிட்டார் டிராசிஸ். இறந்துவிட்டார் .


உண்மையாகவா  !!!!!! ?????  .


ஆம்,நேற்று மாலை .

நான்  பார்டனை பார்க்கவேண்டும்.


அவன் தப்பிசென்றுவிட்டான்.


தப்பிசென்றுவிட்டானா ?..


ஆம்,கைது செய்ய முயன்றபொழுது தப்பிவிட்டான்.

ஓஓஓஓ

எனக்கு  உண்மையை கூறு பைரோன் .


நேற்று  இறந்துவிட்டதாக தகவல்.

யார் மூலமான தகவல்.


அபாகஸ் என்பவனிடமிருந்து.


என்ன  அபாகஸிடமிருந்தா .


ஆம்,உனக்கு  அபாகஸ் தெரியுமா ?.


யார் செய்தி கொண்டு வந்தார் ?.


தொடரும்....

இதன் முந்தைய பகுதியை இங்கே பார்க்கவும்

கடவுளின் சாம்ராஜ்யமும் அபாகஸும் .

கடவுளின் வருகை இன்னும் சில தினங்களில் இங்கு 
படங்கள் உதவி ; wikipedia
Download As PDF

வியாழன், 12 ஜூலை, 2012

சொர்கத்தை அடைவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்லவேண்டும்

இன்னும் எவ்வளவு தூரம் செல்லவேண்டும் சொர்கத்தை அடைவதற்கு  ?

20 நதிகள்,46 பார்வதங்கள்,3மலைகள்,27 சாம்ராஜ்யங்களினூடே 600 திரணியங்களை  கடக்கவேண்டும்.

அவ்வளவு தானா ?.

ஹா...  ஹா...  ஹா...

ஏன் ?.

நினைப்பது போல் அவ்வளவு எளிதல்ல ...அதலால் தான் .

ம் ...

இனி தான் கடினம் என்றால் என்னவென்பதனையே அறியப்போகிறோம்.

ஓ...எப்படி சொல்கின்றீர்?.

முதலாவதாக நாம் இது வரை கடந்த நதிகளை விட இனி நாம் கடக்க இருக்கும் நதிகள் மிகவும் பயங்கரமானவையாம்.

லிடல்,டலாடஸ்,டைகிரிசு  களை விடவா ?.

அப்படித்தானாம்.

ஓ ! ?  ஓ !?  ஓ !?. (சிந்தனையில்)

நாம் கடக்க இருக்கும் நதிகள் சொர்க்கத்திலிருந்து வரும் ஜலசமுத்திரங்களாம் .அதன் போக்கும் சொர்கத்திலேயே
நிச்சயிக்கப்படுகிறதாம்.


ம்..(பெருமூச்சுடன்).

அவைகளில் பாதம் படுவதையே புனிதமான கருதப்படுகிறதாம்.
அவைகளில் நீராடுதலை சொர்க்கத்தில் நீராடியதாகவும் ,அவைகள் செய்த பாவங்களை   கழுவுவதாகவும் எண்ணப்படுகிறதாம்.
அவைகள் பரிசுத்தமானவையாகவும்,தூய்மையானவையுமாக இருந்து  தாங்கள் பயணித்த இடங்களில் வழமையை கொடுத்து தொன்மையை நிரப்பி இயல்பினை  விதைத்துச்செல்கின்றதாம்.

ஆவலாக உள்ளது.


இருந்தாலும் ஆபத்துகள் அதிகம் இருக்கும் அதனால், அவைகளை மிகுந்த விழிப்புணர்வுடன் தான் அணுகவேண்டும்.இவைகள் பற்றி காணாமல் போன ஆடுகள் கூறியதை வைத்து கவனப்படுத்தப்பட்டவை.


ஓ...காணாமல் போன ஆடுகள் ,முழுவதையும் கூறவும்   .


தொடரும்....

இதன் முந்தைய பகுதியை இங்கே பார்க்கவும்Download As PDF

புதன், 4 ஜூலை, 2012

இந்த பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம் ?.இவன்  எங்க வீட்ல வளர்ந்து வர பூனைப்பையன்.
உடம்பில் காதல் சின்னத்தை தாங்கி ஜொலிக்கும் இவனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கின்றேன்.

என்ன பெயர் வைக்கலாம் ?

நல்ல சுருசுருப்பானவன்.

இவங்க அம்மாவும்,தம்பியும் எங்க வீட்லதான்  வளர்ராங்க.

இவன் அம்மா பெயர் கருப்பி,தம்பி பெயர் ராஜா.நம்மவர்,கருப்பி


இவங்க இங்க எவ்வளவு சுதந்திரமா இருக்காங்கனு  படத்த பார்த்து தெரிஞ்சுக்கங்க.

ராஜா,கருப்பி,நம்மவர்


சரி விசயத்திற்கு வருவோம்......

விலங்குகள் வாழ்கின்றன என்பதும் ,அவைகள் எவ்வாறு வாழ்கின்றன என்பதும் பற்றி மட்டுமே பழங்காலம் தொட்டு இன்றைய நவீன காலம் வரை நாம் படித்துவந்துள்ளோம்.

விலங்குகளைப்பற்றியும் அதன் உலகம்  பற்றியும்  நாம் இதை வைத்துத்தான்  புரிந்தும்  வந்துள்ளோம்.
ஆனால், அவைகளின் வாழ்வின் ஊடாக என்ன செய்தியை,தத்துவத்தை நமக்கு சொல்கின்றன ,அவைகளுக்குள் கொண்டுசெல்கின்றன என்பதனை இது வரை நாம் அறிந்தோம் இல்லை. அறிய முயற்சிக்கவும்  இல்லை.

நமக்கு விலங்குகள் என்றால் விலங்குகள் தான்.இதை ஒரு மூடத்தனமாக நான் நினைக்கின்றேன்.

நீதிக்கதைகள் மற்றும் பிற கதைகளில்,விலங்குகளின் மேல் மனிதன் தனது கருத்தையும்,தன்மைகளையும்,அசைவையும் ஏற்றி மனிதனாக விலங்குகளை வெளிப்படுத்தினானே தவிர ,விலங்குகளின் இயல்பை இயல்பாக வெளிப்படுத்தவே இல்லை.

மனிதன் விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களின் உலகை  அறியாமல் ,அவைகள் சொல்லும் செய்தியை உள்வாங்காமல் இவ்வுலகை தாண்ட நினைப்பதும்,பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பது கேலிக்குறியதாகவே அமையும்.கடவுளின் துகள் ஹிக்ஸ் போசா( Higgs boson)னும்  மனித குல உயர்விற்கு பயனற்றுத்தான் போகும். 


கடைசியாக எங்க பூனப்பயனுக்கு ,அதனை அதன் தாய் என்ன பெயரிட்டு அழைக்கிறது என்பதனை அறியும் அறிவு வளராத காரணத்தினால்,மனிதனின் மொழியில்,பெயரில்   மதன் என பெயரிட்டுள்ளேன்.இது  சரியல்ல என்றாலும் இது அறியாமை உலகம் என்பதனை எனக்கு நானே உணர்த்த இப்பெயர்.மதனும் அந்த பெயரை எனது அறியாமையை கண்டு நகைத்து இணங்கமுடன் ஒத்துழைக்கிறது.  
.
Download As PDF

திங்கள், 2 ஜூலை, 2012

100 முள்ளிவாய்க்கால் நினைவாக

உலகில்  ஒவ்வொன்றும்  ஒவ்வொரு விதத்தில் தன்னால் இயன்ற அளவு உண்மைகளை வெளிப்படுத்திக்கொண்டே செல்லும்.ஆனால்,புரிதலின் பின்தங்கிய நகர்வால் நேற்றைய உண்மைகள்  இன்று வெளிவருகிறது. இன்றைய நிகழ்விற்காக உண்மைகள் நாளை நகர்த்தி. இப்படியான நகர்வையே நாம் வரலாறாக காண்கின்றோம்.அதனால் தான் வரலாற்றில் பொய் மையின்  சாயல் மிகுந்து உள்ளது .

நாவினால் சுட்ட வடுவாக 100 முள்ளிவாய்க்கால்கள் .அதன் வலியால் மனதில்  தோன்றிய பல   பிம்பங்களுக்கு மத்தியில் ,இந்த வலியை,உண்மையை உலகிற்கு காட்சிப்படுத்தவேண்டிய கடமை நமக்கு உண்டு என்பதோடு  ,பல தளங்களிலும் அதனை செயல்படுத்த வேண்டும்  என்பதனையும் ,அதன்  அவசியத்தை  உணர்த்துவதாக இருந்தது    

The Boy in the Striped Pyjamas என்ற காவியம் .


அருமையான இந்த காவியம் - என்னும் சொல்லும் பல செய்திகள்.


    

 நன்றி :You Tube,Wikipedia ,Google .

Download As PDF