செவ்வாய், 25 செப்டம்பர், 2012

தமிழர்கள் என்றால் அனைவருக்குமே ஏளனம்

 
 
  மகிந்தவின் இந்தியப் பயணம் ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கே அவமானம்
அனலை நிதிஸ் ச. குமாரன்
ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு நாடுகள் சிறிலங்காவின் அரச தலைவர்கள் மீது தமது அதிருப்தியை வெளியிட்டுவரும் இவ்வேளையில், சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து இந்திய நாட்டுக்குள் வரவேற்றுள்ளது ஒட்டுமொத்த இந்திய நாட்டுக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நிகழ்காலத்தில் நடக்கும் அறியாமைகள் எதிர்காலங்களில் பல்வேறு எதிர்வினைகளை உண்டுபண்ணுவதுடன், ஒட்டுமொத்த சமூகத்துக்கே அபகீர்த்தியை ஏற்படுத்திவிடும். இதுவே வரலாறாகி பல நூறு ஆண்டுகள் நிலைத்துவிட வழிகோலப்படும்.நான்காம் கட்ட ஈழப் போர் உக்கிரம் அடைந்திருந்த வேளையில் தக்க தருணத்தில் தேவையான காய்நகர்த்தல்களை இந்திய அரசு செய்திருந்தால் பல்லாயிரம் ஈழத் தமிழ் மக்களை அழிவிலிருந்து காப்பற்றியிருக்கலாம்.
கலைஞர் தனக்கு வந்த பாணியிலேயே பேசியும் வந்தார். நிபந்தனைகளை விதித்து காலைவாரி விடும் பரம்பரையில் தான் வந்தவர் இல்லை என்று அடிக்கடி கூறி, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவினை வழங்கியே வருகிறார். மிரட்டிப் பார்ப்பதும், பின்னர் கைவிடுவதும் கைவந்த கலையாகி விட்டது கலைஞருக்கு.
ஈழத் தமிழர்கள் மீது ஏதோ தானேதான் அதீத கரிசனை கொண்டுள்ளவர் போன்று பல அறிக்கைகளை தொடர்ந்தும் சமீப மாதங்களில் விட்டுக்கொண்டு வரும் கலைஞர், இந்திய மத்திய அரசு செய்யும் காரியங்களை எள்ளளவேனும் நிறுத்த வழி செய்யும் வலிமை இருந்தும்கூட வாய்ப்பேச்சில் வீரரடி என்கிற பாணியிலையே செயற்படுகிறார்.
சிங்கள இரானுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக்கூடாது என்று போராடும் அனைத்துத் தமிழக அரசியல் மற்றும் பொது அமைப்புகளின் உணர்வுகளையும் மீறி இந்திய நடுவண் அரசு 400-க்கும் அதிகமான சிங்களப் படையினருக்குப் பயிற்;சி அளிப்பதாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரே இந்தியப் பாராளுமன்றத்தில் கூறுகிறார். தமிழகத்துக்கு விளையாட வந்த விளையாட்டு வீரர்களையே தமிழகத்தை விட்டு அனுப்பினார் தமிழக முதல்வர். இப்படியான கொந்தளிப்பு நிலையே காணப்படும் இன்றைய நிலையில் மகிந்தவின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழர்கள் என்றால் அனைவருக்குமே ஏளனம்
சில அற்ப காரணங்களுக்காகப் போராட்டங்களைச் செய்து வெற்றிகளை அடைகிறார்கள் பல இந்திய மாநிலத் தலைவர்கள். அப்படியிருக்கையில்,தமிழகத்தின் உயிரிலும் மேலான உணர்வுப் பிரச்சினையான தமிழீழத் தமிழர் பிரச்சினையை இந்திய நடுவண் அரசு மதிக்காமல் செயற்படுவது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் அவமரியாதையே. தமிழர்கள் என்றால் அடிவாங்கி ஓடும் இனம் என்கிற கருத்தையே இந்திய மற்றும் சிங்கள அரசுகள் தொடர்ந்தும் வைத்துள்ளன.
யூதர் ஒருவருக்கு அடிபட்டாலோ அல்லது சீனத்தவருக்கு மற்ற இனத்தவர் அடித்தாலோ ஒட்டுமொத்த யூதரோ அல்லது சீனரோ துணைக்கு வந்துவிடுவார்கள். இதன் காரணமாக இன்று யாரும் யூதரையோ அல்லது சீனரையோ தொட அஞ்சுகிறார்கள்.இதைப் போன்று பல நூறு சம்பவங்களை உலகம் பூராவும் காணக்கூடியதாக இருக்கிறது. உலகத்தில் வாழும் பல்வேறு இன மக்களும் தங்கள் தேசிய அடையாளங்களுடன் ஒற்றுமையாக இணைந்து வரும் இக்காலத்தில் இந்திய நடுவண் அரசு தமிழர்களை ஒற்றுமைப்பட விடாமல் செயற்படுகிற வேலைகளேயே செய்கிறது.
தன் தேசத்தில் வாழும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் செயற்படும் இந்திய நடுவண் அரசை ஆதரித்து இந்திய இறையாண்மைக்குள்ளேயே தாமும் வாழுவதாகத் தமிழக மக்கள் தொடர்ந்தும் கூறுவேர்களேயானால் தமிழினம் என்றுமே சோரம் போகும் இனம் என்ற கணிப்பில் இந்திய நடுவண் அரசென்றாலும் மற்றும் இந்தியாவின் பிற மாநிலத்தவரானாலும் தமிழகத்தேயே மதிக்காமல் போகும் காலம் வெகு தொலைவிலில்லை.
தமிழீழ மக்களைக் காப்பாற்றும்படி கூறி மானமுள்ள பலர் தீக்குளித்துச் செத்தார்கள். செத்தாவது தமது இனத்தைக் காப்பாற்றிவிடலாம் என்று மாண்டுபோனவர்களின் கனவுகளை இந்திய நடுவண் அரசு ஒரு பொருளாகவே எடுத்துக்கொள்ளவில்லை.செத்தால் என்ன இவர்கள் தமிழர்கள்தானே என்கிற நினைப்பே இந்திய நடுவண் அரசுக்கும், அதன் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இருந்து வருகிறது.
தாமே தமிழினத் தலைவர்கள் என்று கூறிவரும் தலைவர்கள் தமது இனத்தைக் காட்டிகொடுக்காமல் இருந்தாலே போதும் மற்ற இனத்தவர்கள் தமிழினத்தின் மீது மரியாதை வைத்துச் செயற்படுவார்கள். எலும்புத் துண்டுக்கு ஆசைப்படும் தலைமைகள் இருக்கும் இனத்தை எப்படித்தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என்கிற கேள்வியே அனைவர் மனங்களிலும் எழுகிறது.
தமிழர்களை அழித்தவர்களுக்கு விருந்தாம்!
அனைத்துத் தமிழகக் கட்சிகளின் கோரிக்கைகளையும் ஏற்க மறுத்தது இந்திய அரசு. திட்டமிட்டவாறே 4-நாள் பயணமாக செப்டம்பர்19-ஆம் தேதியன்று மகிந்த டெல்லி சென்றடைந்தார். இந்தியாவின் தலைவர்களைச் செப்டம்பர்20-ஆம் தேதியன்று சந்தித்ததுடன் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்ததுடன் அவர் அளித்த இரவு விருந்தில் கலந்து கொண்டார் மகிந்த.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதிஷா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாஞ்சியில் செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச தரத்திலான புத்தமத மற்றும் அறிவுசார் பட்டப்படிப்புக்களை கற்பிக்கவிருக்கும் தர்ம தம்ம பல்கலைக்கழக திறப்பு விழாவில் பங்கேற்க சிறிலங்காவின் ஜனாதிபதி ராஜபக்சாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் வேடிக்கை என்னவெனில், இம்மாநிலத்தை ஆளுவது பாரதிய ஜனதா தளம். இம்மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங்க் சவுகானின் அனுமதியின்றி இந்திய நடுவண் அரசு செயற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆக இந்தியாவின் இரு பிரதான கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் தமிழர்களுக்குத் தொடர்ந்தும் தீங்குகளையே விளைவித்து வருகிறார்கள் என்பது இதிலிருந்து நன்கே தெரிகிறது.
தமிழகத்தில் இருந்து எதிர்ப்பலைகள் கிளம்பியதும், சவுகானின் ஒப்புதல் பெறாமல்;தான் இந்திய நடுவண் அரசு மகிந்தாவை வரவழைத்துள்ளது என்று பா.ஜ.கட்சியினர் கூறி வருகிறார்கள். வை.கோ தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான ம.தி.மு.கவினர் மத்தியப் பிரதேசம் சென்று தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும் ம.தி.மு.கவினர் மத்தியப் பிரதேச எல்லையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க, தே.மு.க, நாம் தமிழர் கட்சிஇ தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ராஜபக்சவின் வருகையைக் கண்டித்து, மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் ராதாகிருஷ்ணன் தெரிவிக்கையில்,“ராஜபக்சவின் இந்திய வருகையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.கவும் அங்கம் வகிக்கிறது. தி.மு.கவைப் போல மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு மீதான கட்டுப்பாட்டைக் கண்டித்து மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளார்.அதுபோல, ராஜபட்சவின் இந்திய வருகையைத் தடுத்து நிறுத்தும் சக்தி கருணாநிதிக்கு உள்ளது.ஏனெனில் மத்திய அரசின் அழைப்பின் பேரில்தான் ராஜபக்ச இந்தியா வருகிறார். ராஜபக்ச வருகையைத் தடுத்து நிறுத்த அவர் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். இல்லையெனில் அவர் மத்திய அரசிலிருந்து விலக வேண்டும்" என்றார் ராதாகிருஷ்ணன்.
யார் சொன்னாலென்ன நமது வேலைகள் நமது குடும்ப நலன்களுக்காக நடந்தால் திருப்தியே என்கிற மனநிலையில்;தான் கலைஞர் இன்றும் இருக்கிறார். ஏமாற மக்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.கலைஞர் நன்கே மக்களின் தகைமைகளை அறிந்து செயல்படுகிறார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
தமிழினம் செய்த பாவம் என்னவெனில் தன்னலம் கருதாத சிறந்த தமிழ்த் தலைவர்கள் இப்போது நம்மிடம் இல்லையென்பதே. எதையாவது கூறிவிட்டு இருப்பது வெறும் கண்துடைப்பு நாடகமே. ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாகக் கலைஞர் போன்ற தமிழகத் தலைவர்களினால் செய்யக் கூடிய வேலையை தேவையில்லாமல் பிரச்சாரப்படுத்தி தமிழர்களுக்கு இன்னும் அவப்பெயரை உண்டுபண்ணும் வேலைகளை நிறுத்துவதே தமிழர்களுக்குச் செய்யும் நன்மையாக இருக்கும்.
செப்டம்பர் 17-ஆம் தேதியன்று சேலத்தில் விஜயராஜ் என்ற ஆட்டோ சாரதி மகிந்தவின் இந்தியப் பயணத்தை எதிர்த்துத் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி உயிர் நீத்துள்ளார். “ஆடி ஓடித் திரிந்தவன் இன்று பிணமாகக் கிடக்கிறானே...ராஜபக்சவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் சோனியா, மன்மோகன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கதறுகிறார் மரணித்தவரின் தந்தை தங்கவேல்.
இலட்சக் கணக்கில் தமிழர்களைக் கொலை செய்த கொலைகாரப் பாவி ராஜபக்ச இந்திய தேசத்துக்குள் கால் வைக்கக் கூடாது" என்று ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டு,தான் கையில் கொண்டுவந்திருந்த பெட்ரோல் கேனில் இருந்து பெட்ரோலை உடலில் ஊற்றி, தீ வைத்துக்கொண்டார்.அதைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடிப்போய் அணைத்தார்கள். கவலைக்கிடமான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமானார்.
தமிழினத்தையே சம்ஷாரம் செய்து அழித்த சிங்களத்தின் அதிபர் மகிந்தவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து ஒரு மதத்தின் போதனையை அளிக்கவிருக்கும் நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்ளச் செய்ததன் மூலமாக அது இந்தியாவின் வரலாற்றில் மறக்க முடியாத வடுவை உண்டுபண்ணும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
தமிழர்களின் சதையை வெட்டி ரசித்த கொலைகாரர்களுக்கும், தமிழ்ப் பெண்களைத் துவம்சம் செய்தவர்களுக்கும், பல்லாயிரக் கணக்கான அப்பாவி ஈழத் தமிழ் மக்களைக் கொன்று குவித்த அரக்கர்களுக்கும் இந்தியாவின் மத்திய அரசும், மத்தியப் பிரதேச அரசும் அழைத்து மதிப்பளித்துள்ளதானது நிச்சயம் ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, புத்தர், காந்தி பிறந்த தேசத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ள செயலாகும்.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com
Download As PDF

திங்கள், 17 செப்டம்பர், 2012

பெரியாரை புறக்கணிக்கும் கிளிப்பிள்ளைபெரியாரிஸ்டுகள் .


பெரியாரை புரிந்துகொள்வது என்பது மிகமிக சிக்கலான ஒன்றாகும்.
அதற்கு உண்மையில் மிகச்சீரிய சுயபயிற்சிவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது.பெரியாரைப்பின்பற்றுபவர்கள் கூட அத்தகைய ஒரு பயிற்சியின் மூலம் பெரியாரை தெரிந்துகொண்டவர்கள் தானா என்பது கேள்விக்குரிய ஒன்றாகும் .ஏனெனில் பலர் இன்னும் பக்குவம் இல்லாமல் இருக்கின்றனர். அதனால் தான் இன்னும் நம் சமுதாயம் அவரை ஒரு மத எதிர்ப்பாளராகவே பார்த்துக்கொண்டிருக்கிறது .
சாதிகள் இன்னும் இங்கு  சாதீகளாக எறிகிறது .


பெரியாரைப்பற்றி தெரிந்துகொள்ள அறிந்துகொள்ள எத்தகைய பயிற்சி வேண்டும் எனக்கேட்டால்,

முதலில் பெரியார் வாழ்ந்த காலகட்டதையும்,அந்த காலகட்டங்களில் நடந்த நிகழ்வுகளையும்,சூழலையும் ,அப்போதைய தேவையாக இருந்தது எது என்பது பற்றியும் ,அந்த காலகட்டத்தில் பகுத்தறிவின் தேவை எவ்வாறு இருந்தது என்பதையும் ,பகுத்தறிவின் அவசியத்தையும் , நமது சமுதாயம் எந்தவிதமான இடையூறுகளை அத்தகைய காலகட்டத்தில் சுமந்து கொண்டிருக்க வேண்டியிருந்தது என்பதையும்,அதனால் எவ்வளவு பின்னடைவுகளை இன்றுவரை அடைந்திருக்கிறோம் என்பதையும் ஆழ்ந்து ஆய்ந்து மனித நேயத்துடன் நோக்கும் பார்க்கும் பக்குவத்தையும் மனப்பான்மையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும்.

பின் அத்தகைய காலகட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவர் செயல்பட்ட விதத்தையும்,அவரின் அவசியத்தையும் உற்றுப்பார்க்கவேண்டும்.அதன் மூலம் சமுதாயம் அடைந்த நன்மைகள் என்ன ?.பயன்பட்டவர்கள் யார் ?. என்பதனையும் சீர்தூக்கி பார்க்கவேண்டும்.

இந்தகைய படிப்பினையை பயிற்சியாக மேற்கொண்டால் பெரியாரைப்பற்றிய உங்களின் கேள்விகளுக்கான விடையை நீங்களே எழுதிச்செல்வீர். மற்றவர்கள் பெரியாரை அறியாமையினால் கேட்கும் கேள்விகளுக்கு சரியான உண்மையான பதிலாக நீங்கள் இருப்பீர்கள்.

இதைத்தவிர்த்து

பெரியாரின் எழுத்துக்களை மட்டும் படிப்பது என்பது மிகமிக முட்டாள் தனமான ஒன்றாகும் .

பெரியாரை மட்டும் படித்தல் என்பது சரியான புரிதலை தராது .

அவர் படும் முரண்களை புரிந்துகொள்ளமுடியவே முடியாது .

அதனால் பெரியாரைப்பற்றிய சரியான புரிதலையும் காணமுடியாமல்


ஒரு மத எதிர்ப்பாளராக,
கடவுள் மறுப்பாளராக,
கிளிப்பிள்ளையாக  நாம் வலம்வர முடியுமே தவிர

ஒரு பகுத்தறிவனாக பயணிக்கமுடியாது .

கிளிப்பிள்ளையாக  ஒரு பாமரனால் கூட  வலம்வர முடியும்.

இவ்வாறு வலம்வரும் பெரியாரிஸ்டுகள்
பெரியாரை புறக்கணிக்கும் கிளிப்பிள்ளைபெரியாரிஸ்டுகளாவார்கள்.
(படத்தில் காணும் கட்டிலில்,அது போடப்பட்டுள்ள இடத்தில் தான் பெரியார்  செப்டம்பர் 17, 1879 ல் பிறந்தார் )


 சாக்கிரட்டீஸை புரிந்துகொள்ள பிளேட்டோ தேவைப்பட்டான் .

இருவரும் சிந்தனையாளர்களாக அறியப்பட்டனர்.ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.

ஆனால் ,இங்கு பெரியார்  ? .

(அ-பொ : எறி -அழி,வெட்டு)


.


Download As PDF

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

கனவுகளை என்ன செய்ய ?

அட்டக்கத்தி
போராட்ட
மனக்குகை
வக்கிர அபிலாசை
தெரிப்புகளை

பிறப்பித்து
சாகடித்து

காயமின்றி
வெறியடக்கி

எல்லாம்  எல்லாம் 
உள்ளீடற்ற
வெறுமை
வேடம் பூண்டு

நான் காணும் 
கனவுகளில் என்ன செய்ய ? ..? ..?

நான்  காணும் 
என் கனவுகளை என்ன செய்ய

கவியாகி
கழுவேற்றுவதை  தவிர.

.
படம் : நன்றி Google,இணையம்
Download As PDF

திங்கள், 10 செப்டம்பர், 2012

தமிழக முதல்வர் அம்மா அவர்களை ஆபாசமாக சித்தரித்ததற்கு வன்மையான கண்டனங்கள் .தமிழக முதல்வர் அம்மா அவர்களை 
ஆபாசமாக சித்தரித்து கார்ட்டூன் வரைந்த

Hasantha Wijenayake  க்கும் 

அதனை வெளியிட்ட   lakbimanews  க்கும் 


எனது வன்மையான கண்டனத்தை


இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
  கார்ட்டூன் வெளியிட்ட செய்தித்தாளை பார்க்க இங்கே  செல்லவும் 


 http://www.lakbimanews.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=48&Itemid=41
Download As PDF

சனி, 8 செப்டம்பர், 2012

ராஜபட்சேயை புறக்கணிப்போம் Boycott Mahinda Rajapaksa's visit to Madhya Pradesh SIGN THIS PETITION
Why this is important

Sri Lanka's President Mahinda Rajapaksa and his regime are accused of ordering the killings of over 40,000 Tamil civilians during the closing stages of their war against the Tamil Tigers in 2009. They continue to stonewall international efforts to ensure a neutral investigations into the allegations of heinous war crimes against them. The regime is accused of continuing to crush dissidence with brute force. Scores of journalists, human rights activists and opposition figures have been killed or forced into exile.

The regime has militarised the traditional homelands of the Tamils. Over 100,000 troops, almost all of them Sinhala, are lording over a Tamil population, that is denied basic rights. Even over 60 years after independence and a 30 year civil war, there is negligible devolution of power to the Tamils under a rigid unitary constitution.

Since the war ended, Rajapaksa regime has a policy that actively encourages settlement of Sinhala population in what has been recognised as traditional homelands of the Tamils. Human rights abuses against the Tamil population and the continues denial of basic rights has only increased since the end of the war, in the absence of any international action.

A resolution seeking a fair, international investigation against war crimes on the island and punishment for those found guilty as per international law has been unanimously passed by the elected representatives of the 7.25 crore people of Tamil Nadu in the state legislative assembly.
The Indian government continues to train personnel from the tainted Sri Lankan armed forces, despite knowing the overwhelming sentiment of the Tamil people of India on the issue.

The UPA government led by Manmohan Singh, continues to have close tied with a regime accused of genocide and continues to invite and entertain them at official functions. The Government of India has invited Mahinda Rajapaksa to BJP ruled Madhya Pradesh to lay the foundation for a Buddhist university at Sanchi.

Does a man accused of running a genocidal regime that stonewalls international calls for investigations and accountability, deserve to come to the land of the Buddha...the universal icon for peace, brotherhood and righteous living ?
Does his regime deserve the support of the Indian people ?
Does India need to stoop to the depths that Pakistan and China are willing to, for the sake of a misplaced notion of Realpolitik ?
I just signed this petition -- will you join me?

Boycott Mahinda Rajapaksa's visit to Madhya Pradesh
To: Sushma Swaraj, Leader of the opposition, Lok Sabha, Shivraj Singh Chauhan

The petition is really important and could use our help. Click here to find out more and sign:
http://www.avaaz.org/en/petition/Boycott_Mahinda_Rajapaksas_visit_to_Madhya_Pradesh/?

Thanks so much,
ezra


Download As PDF

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

சிவப்புகாசியும் ஆட்டுக்குட்டிகளும் ஆறாவதுஅறிவும் நானும் டோமிப்பயலும்

.1..

என் நண்பனின் ஊருக்கு  நான் விடுமுறைக்கு சென்றிருந்த பொழுது நடந்த ஒரு நிகழ்வு .

இது நடந்து 30 வருடம் ஆகுது .

அப்பல்லாம் கிராமத்துப்பக்கம் காலைக்கடனை முடிக்க வெளிக்காட்டுக்கு போரது தான் வழக்கம் .அவங்க ஊருல ரயில்வே பாதை போகுது .
அத ஒட்டி இருத்தது வெளிக்காடு. எனக்கு அவசரம் என்பதால் மட்ட
மதியம் போனேம் .நாங்க போன சமயம் ஆடுக மேஞ்சுக்கிட்டிருந்தது .
சற்றே  தயக்கத்துடன் நான் .மேய்ப்பனை பார்த்தேன் ,அப்ப ஆடுகள்  தண்டவாளங்களை கடக்க ஆரம்பித்தன
சற்று ஆறுதல்  மனத்தில் அந்தப்பக்கம் போய்விடுவார் என.
அந்தப்பக்கம்  போய்விட்டால் எங்களைப்பார்க்க முடியாது என்பதால் .

இரயில் வரும் சப்தம் .

மேய்ப்பவர் ஆடுகளை வேகப்படுத்த  வேகப்படுத்த
வந்துவிட்டது இரயில் .
இந்தப்பக்க ஆடுக ,அந்தப்பக்கம் போன ஆடுகளைப் பார்த்து  ,இரயிலை பொருட்படுத்தாம  கடக்க ....
இறக்கும் தனது சக ஜீவன்களைக் கண்டும்,
தண்டவாளங்களை கடக்க சென்று கொண்டிருத்தன ஆடுகள்.
மேய்ப்பான்  கடக்க இருந்த மீத ஆடுகளை முடிந்த வரை கூச்சலிட்டு தடுக்க .

அதற்குள் சில ஆடுகள் பலியாயின .

எனக்கு ஒன்றும் ஓடவில்லை . ஆடிவிட்டது ஆடி .அவரிடம் சென்றோம் .
மேய்பவரும் சிறிது வருத்தப்பட்டார்  .விபத்தில் தப்பிய  ஆடுகளை மனம் பதைக்க பதைக்க கட்டிப்பிடித்தேன் .அவைகள் இயல்பாக இருந்ததை உணர்ந்தேன் .எனக்கு  வியப்பாக  இருந்தது .

இது பற்றி நண்பனிடம் கேட்டேன் .

அவன் சொன்னான் இந்த மந்தை ஆடுகளே  இப்படித்தான் .தனக்கு முன் செல்வதைப்பார்த்து ஏன் ,எதுக்குனே தெரியாம பின்தொடரும் . அதுக்குனு அறிவை வளர்த்தாது .முன்னாடி போறதுக்கும் அது கிடையாது .
ஏதே வாழுதுக .தான் செத்தாலும் கவலைப்படாது , கூட இருக்கறதப்பத்தி கவலையும் படாது .
இன்னைக்கு செத்ததுக குறஞ்ச விலைக்கு போகும்,மத்தது அதிக விலைக்கு இன்னும் கொஞ்ச நா கழிச்சு போகும் ,அவ்வளவு தான்,குறஞ்ச விலைக்கு போகுதேங்கர கவலையத்தவுத்து  வேற கவலை மேக்கரவுனுக்குக்கூட கிடையாது என்றான் .

..2.....

பகுத்தறிவு - 6 வது அறிவு .

மனுசந்தான் 6 அறிவு படைத்தவனாம் . மத்ததெல்லாம் குறைவாம் .எனக்குத் தெரிந்த அனைவரிடமும் நான் கேட்ட ஒரே கேள்வி .6வது அறிவு பகுத்தறிவு
எனில் ,மிதமுள்ள 5 அறிவுகள் என்ன என்ன ?

99% நபர்களால் சரியாக கூறமுடியவில்லை .

4 தோறுது அவ்வளவே .

நீங்களும் கூறிப்பார்க்களாமே .

பெரும்பான்மையினருக்கு தெரியவில்லை
என்பதால் 5 அறிவுதானு இனி ஏத்துக்களாமே...3...


எங்க குட்டி செல்லப்பயல்  டோமிப்பயல் .
அவனுக்குனு ஒரு பாட்டு பாடுவேன் .
அது ..

"குண்டு ..குண்டு டோமி டா..
குட்டி .. குட்டி டோமி டா..
குட் ..குட் டோமி டா..
குடு குடுனு வருவான்டா .."

இப்படி பாடுனதும் எங்க குட்டிபயல் குடுகுடுனு ஓடிவந்து மடியில படுத்துக்குவான் .

ரொம்ப செல்லம் ...

அவனுக்கு நிறைய அறிவு .நல்லா எதையும் புருஞ்சுக்குவான் .
ஏதாவது தப்பு செஞ்சானா உடனை காலைத்தூக்கி மன்னிப்பு கேப்பான் .

மேல படத்தில பாருங்க தெரியுதா .

காவலுக்கு கெட்டிக்காரன் . சுறுசுறுப்பானவன் .
கொஞ்சுனா எப்படி ரசிப்பான் தெரியுமா . காலடியிலே கிடப்பான் .
அவனுக்கு வேண்டியது அன்பு .

அவன் கொடுப்பது

எசமா  விசுவாசம் ...

எசமா விசுவாசம் ...

எசமா  விசுவாசம் ...


அவன் தான் எனக்கு சகலமும் .

..4...


இப்ப நாமெல்லாம் இப்படித்தான் வளர்ந்து கொண்டு வரேமுனு நினைக்கிறேன் .

அய்யா பகுத்தறிவுப்பகலவரே ,பெரியாரே

6 அறிவுகள் என்னானு சொல்லாம

6 வது அறிவை பயன்படுத்தச்சொன்னா

நாங்க என்ன செய்ய ...

5 லேயே நிக்குரோம் .....5...

சிவகாசி  ஏன்  சிவப்புகாசியானது  ? .


.
Download As PDF

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

தவளைகள் உறங்கா மாரிக்காலம்

.
எதை எதையோ வெளித்தள்ள
வெளித்தள்ளி வெடிக்கும்
ஏக்கப்பெருமூச்சு
ஊர்ந்து செல்லும் தூரம் கடந்த
நீர்மப்பெருக்கம்
எழுப்பிவிடும் மரணபீதி
எல்லை நீண்டு வரம்புதெரியா
நாக்குசுருதி
எக்களிக்கும்
மாரிக்கால
வதனசூடு
பிய்த்துக்கொண்டோடும்
சொட்டுச்சொட்டாய்
சூத்திரம்
தவிர்த்த
இயக்கமாய்
நெளிநெளியாய் சுருள்சுருளாய்
நீட்டமாய்
கோணலாய்
திடீர் திடீரென மாறிச்செல்லும்
ஒளியினுடே
சுற்றித்திரியும்
தவளைகள் உறங்கா மாரிக்காலம்.


படங்கள் உதவி : கூகுள் இமேஜ் மற்றும் இணையம் ,நன்றி.
Download As PDF