.
நொரண்டு :வணக்கம் ,நண்டு .
நண்டு :வாங்க நொரண்டு
நொரண்டு :என்ன ரொம்ப நாளா ஆளை பாக்க முடியல ?
நண்டு :ம் ..இங்க தான் இருக்கேன் ஈரோட்ல .
நொரண்டு :ம் .என்ன சிறப்புச்செய்திகள் ஏதாவது உண்டா?
நண்டு :தெரிஞ்சுக்கிட்டே கேக்கிறயா ?
நொரண்டு : அப்ப சிறப்புச்செய்தி இருக்கா ? சொல்லு ...சொல்லு ரொம்ப நாளாச்சு .
நண்டு : இன்று நான் மக்களின் ஒற்றுமையைக்கண்டு மிகவும் மகிழ்ந்த நாள் .
நொரண்டு :என்ன ?
நண்டு :ஆம் ,இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காந்தியின் இறப்பிற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை இன்று என் வாழ்நாளில் நேரடியாக பார்த்து மிகவும் அகம் மகிழ்ந்தேன் .அதுவும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அனைவரும் ஒரே கூறையில் இருந்து அரசுக்கு தங்களின் எதிர்ப்பை மிகவும் நாகரிகமாக மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளதை நினைக்கும் பொழுது .மக்கள் விழிப்புணர்வுடன் தான் உள்ளனர் என்பதனை உணரமுடிந்தது .
நொரண்டு :விளக்கமாகச்சொல் .
நண்டு :ஈரோட்டில் இரண்டு மேம்பாலங்கள் கட்ட அரசு முடிவு செய்த்து .
நொரண்டு :அது நல்லது தானே .
நண்டு : ஈரோடு மிகவும் சிறிய ஊர் .இதற்குள் இரண்டு மேம்பாலங்கள் தேவையோ இல்லை .
நொரண்டு :அப்படியா .
நண்டு :ஆம் ,யாரோ கொடுத்த தவறான யோசனைகளினால் மேம்பாலங்கள் கட்ட 100 கோடிக்கு மேல் பணம் ஒதுக்கப்பட்டது .மக்களின் விருப்பங்களை அறியாமலெயே .
நொரண்டு :ஏன்?
நண்டு :இலவசங்களில் மக்கள் மயங்கி இருக்கின்றனர் என்ற மமதை மக்களின் உணர்வினை கேட்கத்தேவையில்லை என்ற முடிவுக்கு அவர்களை இட்டுச்சென்றிருக்கலாம் .
நொரண்டு : ம் ..
நண்டு : அதனால் இவனுங்க கிட்ட என்ன கேக்கறது .நாம என்ன செஞ்சாலும் இவனுகளுக்கு கவலையில்ல .நாம அதச்செஞ்சேம் ,இதச்செஞ்சேம்னும் சொல்லி ஓட்டு வாங்கிறலாமுனு ஆரம்பிச்சாங்க மக்களின் விருப்பங்களை அறியாமலெயே .
நொரண்டு :இப்ப என்னாச்சு .
நண்டு :ஈரோட்ல இருக்கற அத்தன பேரும் ஒன்னாசேந்து முழுக்கதவடைப்பு நடத்தி மிகவும் வெற்றிகரமா முடித்துள்ளனர் .
நொரண்டு :ம்..
நண்டு :ஆமா ,ஒரு சிங்கில் டீக்கடை கூட இன்னைக்கு திறக்கல . அனைத்துக்கட்சி ப்ந்தின் போது கூட அங்கொன்னும் ,இங்கொன்னுமா கடைகள் இருக்கும் .ஆனால் ,இன்னைக்கு ஈரோடு முழுக்கவும் கிட்டத்தட்ட 10 கிலோமிட்டர் சுற்றளவுக்கு ஒரு கடை கூட திறக்கப்படவில்லை.சூப்பர்.
நொரண்டு : அப்படியா ?
நண்டு :ஆமாம் .
நொரண்டு :அவ்வளவு ஒற்றுமைக்குக்காரணம் .
நண்டு :மக்களின் விருப்பங்களை கேட்காமலே தான் தோன்றித்தனமாக செயல்படுவதால் .
நொரண்டு :சரி ,பாலவேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது அரசு கதவடைப்பு தானே செய்வ செஞ்சுட்டுப்போனு ,அவர்கள் பாலத்தை கட்டினார்கள் எனில் .
நண்டு :வரும் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு இடத்தில கூட டெபாசிட் வாங்க முடியாது .
நொரண்டு :அப்ப போக்குவரத்து நெரிசலில மக்கள் அவஸ்தைப்படவேண்டியது தானா ?.
நண்டு :அட நீ ஒன்னு .ரிங் ரோடு போட்டு பஸ்டாண்ட தூக்கி அவுட்டர்ல போட்டாலே 50% டிராபிக் குறஞ்சிரும் .அப்புறம் டிராபிக்கோ யில்ல என்ற நிலை ஏற்பட்டுவிடும் .அதவிட்டுட்ட தேவையில்லாத வேலை .கெட்ட பேர் .மேலும் செலவும் கம்மி .
நொரண்டு :மாரியம்மன் கோயில் தான் பிரச்சனைக்கு காரணங்கராங்க ?.
நண்டு :பாலம் வேண்டாங்கரது தான் மெயின் பிரச்சனை .
நொரண்டு :அப்ப ...?
நண்டு :பாலங்கட்டறத விட்டுட்டு .மாற்று யோசனைகள் செஞ்சாலே பல பிரச்சனைகள் தானே அமிழ்ந்துவிடும் .
நொரண்டு :இல்லனா .
நண்டு :மதவாதிக மாரியம்மன எடுத்துக்குவாங்க .
நொரண்டு :ம் ..
நண்டு :மத்தவங்க MGR யை எடுத்துக்குவாங்க .
நொரண்டு :MGR ஆ?
நண்டு :ஆமாம்பா ஆமாம் ,இது புரியரவங்களுக்கு புரியும் .உனக்கு புரியாது .ஏன்ன இது அரசியல் .
நொரண்டு :என்னமே போப்பா .என்னமே சொல்ர .நான் டீக்குடிச்சுட்டு வரேன் .வரயா .
நண்டு :ம் ,,,போலாம் .
.
.
.
.
. Download As PDF
Tweet |
|