படேல் தான் பிரதமராகி இருக்கவேண்டும்,அப்படி நடந்திருந்தால்
நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும் என்ற மோடியின் பேச்சு பற்றி பலர் பலவிதமாக தங்களின் அனுமானங்களை கூறிவருகின்றனர்
.இப்படிப்பட்ட அனுமானங்களை படிக்கும் பொழுது எனக்கு அவர்களின் மீதிருந்த மரியாதை குறைவதோடு ,இன்னும் கற்காலத்திலேயே அவர்கள் இருப்பதால் அவர்கள் மீது அனுதாபமும் ஏற்படுகிறது.உண்மையில் இவர்கள் அறிந்துள்ள வரலாறு மிகவும் அபத்தமான வரலாறாகும்.அவையால் நமது இந்தியாவிற்கு இன்னும் கொடுதலே நேரும். வரலாற்றை பகுத்தறிவுடன் நோக்குவோர் இங்கு யாரும் இல்லை.படிப்பறிவுடனே நோக்குவதால் தான் இத்தனை முரண்பாடுகள்.
சரி மோடியின் பேச்சிற்கு வருவோம்.படேல் தான் பிரதமராகி இருக்கவேண்டும்.இது சரியாக என நோக்க ,
படேல் பிரமராகி இருப்பார் ,ஆனால் ஏன் ஆகவில்லை ?.என்பதற்கான பதிலே சரியான ஒன்றாக இருக்கும்.
இதற்கான பதில் ,மிகப்பெரிய வரலாற்று மறைப்புகளை வெளிக்கொணர்ந்து ,மிகப்பெரிய வரலாற்று உண்மையும் வெளிப்படுத்தும் என்பதுவே உண்மை.
நீண்டகாலமாகவே நான் இது குறித்து ஆய்ந்துவருகிறேன்.இப்போதும் கூட ,அது நீண்ட ஆய்வு,இந்தியா பற்றிய முழுமையான ஆய்வு.அதில் ஒரு பகுதி தான் இது ,மிகவும் சிறிய ஆனால் சிக்கல்கள் நிறைந்த பகுதி.இந்தியர் அனைவரும் தெரித்துகொள்ளவேண்டிய பகுதி.காந்தியின் இன்னொரு பகுதியும் இது ஆகும்.
இது பற்றி சுருக்கமாக கூறுவது மிகவும் கடினம் ,எனினும் சுருக்கமாக கூறுவதென்றால் மோடி சொல்வதில் நியாயம் உள்ளது.
எவ்வாறு எனில், சிலதை மட்டும் கூறுகிறேன்.
சுதந்திரம் நெருங்க நெருங்க,பதவி ஆசை கொண்ட சில காந்தியின் சீடர்களின் செயல்களால், காந்தி மிகவும் மனமுடைந்தே தனது செயல்பாடுகளை செய்துவந்தார்.காந்திக்கு இந்தியாவின் விடுதலை மட்டுமே ஒரே குறிக்கோளாக இருந்தபடியால் தனது சீடர்களின் பதவிவெறியை அவர் சகித்தே வந்தார்.மக்களுக்கான சுதந்திரம் மட்டுமே அவருக்கு முக்கியம் என்பதால் ,தனது சீடங்களின் செயலை மறக்க ஆன்மீக பயணத்தில் மனத்தை லயித்தார்.மக்களையும் அதில் இணைத்தார்.அதனால் தான் அவரின் வாழ்வில் ஆன்மீகம் ஒரு அங்கமாகவே இருந்துவந்தது.
அவரின் சகிப்பை அவரின் சீடர்கள் சிலர் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டனர்.காந்தி உயிருடன் இருந்தவரை தங்களின் சுயத்தை மறைத்து நல்லவர்கள் போல் நடித்து அவரை ஏமாற்றியே வந்தனர் ,அவரின் மறைவிற்குப் பின் தான் அவர்களின் கோரமுகத்தை இந்தியா பார்த்தது
அதன் நீட்சி தான் இன்றைய இந்தியா.
தொடரும்.....
படங்கள் உதவி நன்றி ;தினமலர் @ கூகுள்
Tweet |
|