திங்கள், 21 டிசம்பர், 2009

அரிசி தமிழனின் உணவா ?

.

நண்டு: வணக்கம் நொரண்டு


நொரண்டு :ஏன் நண்டு


நண்டு: எனக்கு ஒரு சந்தேகம் ?


நொரண்டு : என்ன ?


நண்டு: அரிசி தமிழரின் உணவா ?


நொரண்டு :புரியவில்லை


நண்டு: அட ,
நமது உணவுகள் பதார்த்தங்கள் அனைத்தும்
தற்பொழுது
அரிசியினால் செய்யப்படுபவைகளே.
அரிசியில்லாமல் நமது உணவு வகைகளே இல்லை என்று கூறலாம் .
அப்படிப்பட்ட அரிசியை நாம் ஆரம்பம் தொட்டே பயன்படுத்தி வருகின்றோமா?

நொரண்டு :RICE என்ற சொல்லே அரிசி என்ற சொல்லில் இருந்து தான் வந்தது என்பதினின்று
நாம் அதற்கு உரிமைகோரலாமே ..

நண்டு: இது தவறான பார்வை .

நொரண்டு : என்ன செல்லவர்ர

நண்டு: அட ,சங்க நுற்களில் அரிசியைப்பற்றி ஒரு குறிப்பு இல்லை .
திணை போன்றவைகள் தான் குறிப்பிடப்பட்டுள்ளது .

நொரண்டு :அப்படியயேனில்
அரிசியை என்றிலிருந்து பயன்படுத்தி வந்தான் ?.

நண்டு: அது குறித்தான ஆய்வுகள் கட்டாயம் தேவையாக உள்ளது .


நொரண்டு :சரி தான் ,உனக்கு என்ன ஆச்சு ?

நண்டு: ஒன்னுமில்லை , இப்போவேல்லாம்
கம்மஞ்சோறு ,
கேப்பக்கழி ,
ராகி கூலு
எல்லாம்
இல்லாமல் போனதோடு
மட்டுமல்லாது ,
அதப்பத்தி பேசரதோ ,
சாப்டதா சொல்ரதோ கூட
கோவலமா நினைக்கப்படுவது என்பது என்னமோ
நாம் எதையோ இழந்த விட்ட மாதிரி இருந்துச்சு அதனால் தான் .

நொரண்டு :அதனால்

நண்டு: நாம் இது போன்று எத்தனை அடையாளங்களை இழந்திருக்கின்றோம்
என நினைக்கும் பொழுது
மனது கனக்கிறது .

நொரண்டு :.....

நண்டு: .......

நொரண்டு :......

.


.


.

Download As PDF

புதன், 2 டிசம்பர், 2009

கட்டாய திருமணப்பதிவு -அரசுக்கு ஒரு வேண்டுகோள்


.













நண்டு: வணக்கம் நொரண்டு ஏதாவது சிறப்புச் செய்திகள் ...

நொரண்டு: நண்டு திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்னூ அரசு
அறிவித்துள்ளது தெரியுமா ?

நண்டு: தெரியும் ,நல்ல விசயம் தானே ....

நொரண்டு: கட்டாயம் என கூறிய பின் ,அதற்கு எளிய வழியை கடைப்பிடிக்காமல் ...

நண்டு: புரியவில்லை

நொரண்டு: இதற்கு முன் நடந்த 99 % திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவே
வரலாறு இல்லை ,காரணம் தெரியுமா ?

நண்டு: நீயே சொல்லூ ..

நொரண்டு: பதிவு செய்வதிலுள்ள சிக்கல்....
முதலில் ,அதாவது அரசன் அரசிகள் கலத்துல சொத்துருக்கரவர்கள் மட்டுமே மனுசங்க,அவங்க மட்டுமே அரசில் அங்கம் .
நம்ம நாட்டுலையும் சுதந்திரத்திற்கு
முன் அப்படி இருந்தது,
அதனால சொத்திருக்கவங்களின் திருமணம் மட்டுமே திருமணமாக அங்கிகரிக்கப்பட்டது .
அதனால் சொத்து எங்கு பதிவு செய்யப்படுகிறதோ இங்கு திருமணமும் பதிவு செய்யப்பட்டது .
அப்பத்தானே சொத்துருக்கரவர்கள் மட்டுமே குடிமகனாக அங்கிகரிக்க முடியும் ....

நண்டு: சரி பழைய கதை இருக்கட்டும் ...

நொரண்டு: சுதந்திரத்திற்குப்பின் அப்படியே பலவிசங்கள் தொடர்ந்தது போல் இதிலும் தொடந்தது ...

நண்டு: பழைய கதையவிடு ...இப்ப என்ன சொல்லவர ...

நொரண்டு: அட , மக்களாட்ச்சியில் சட்டத்தின் நன்மைகள் எளிமையாக மக்களை சென்றடைய
வேண்டும் ...

நண்டு: அதற்கு இப்ப என்ன ?

நொரண்டு: இந்த சட்டத்தின் நன்மைகள் எளிமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதுவே
எனது கோரிக்கை .

நண்டு: எப்படி ..

நொரண்டு: பிறப்பு ,இறப்பை எப்படி உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்கின்றேமே
அதுபோலவே திருமணமும் உள்ளாட்சி அமைப்புகளிலேயே பதிவு செய்ய அனுமதிக்கலாமே .
மேலும் ,எதற்கொள்ளாமோ இலவசம் இருக்கும் பொழுது இதற்கு மட்டும் 100 எதற்கு . மனமொத்து
காதல் திருமணம் செய்பவர்களிடம்
சட்டம்''4(C)-ல் திருமண அழைப்பிதழ் அல்லது திருமணம் நடைபெறும் இடத்தை குறிப்பிடும்
ஏனைய ஆதாரம் ''
என கேட்டால் எங்கிருத்து வரும் , மேலும் , இது தான் திருமணத்தை உறுதி
செய்கின்றதா .

இப்படித்தான் பழைய பதிவு முறையில் இருந்த வரம்பிற்கு மீறிய அரசர் காலத்து
கட்டுப்பாடுகளால் யாரும் அந்தப்பக்கமே போனதில்லை . திரும்பவும் சற்று சிறிய
மாற்றத்துடன் தொடர்வது . அதற்கு தண்டனை எனக்கூறுவது ஜனநாயகமன்று .

நண்டு: அதற்கு என்ன செய்யச்சொல்ற ...

நொரண்டு: உள்ளாட்சி அமைப்பிடம் பதிவிற்கான அதிகாரத்தை கொடுத்து ,இலவசமாக
பதிவுச்சான்றிதழ் வழங்குவதே சாலச்சிறத்தாக இருக்கும் .
அதை அரசு செய்தால் நலமாக இருக்கும் .

நண்டு: மிக நல்ல யோசனை தான் .
அரசுக்கு ஒரு வேண்டுகோளாக நான் இதனை வைக்கின்றேன் .
இதைப்படிப்பவர்களும் வைப்பார்கள் என நம்புகின்றேன் .
அரசும் இதனை பரிசீலிக்கும் என
நம்புகின்றேன் .


நொரண்டு: எனவே,
. இதன்முலம் ஒரு வேண்டுகோள் ::
. தமிழக முதல்வர் அவர்களே ,
. மிக நல்ல பலனை மக்கள் அடைய ...
. உள்ளாட்சி அமைப்பிடம் திருமண பதிவிற்கான
அதிகாரத்தை கொடுத்து ,
இலவசமாக பதிவுச்சான்றிதழ்
வழங்க வேண்டுமாய்
மக்களின் சார்பாக வேண்டுகிறேன் .
தாங்கள் செய்வீர்கள்
என
நம்புகின்றேன் .





.



.


. Download As PDF

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

நீதித்துறையில் மறைக்கப்படும் ஜனநாயகத்தத்துவம் .

.


.
நண்டு : டெல்லியில்
நேற்று (16.8.09)நடந்த முதல்-மந்திரிகள்
மற்றும்
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் மாநாட்டில்
பிரதமர் பேசியதை படித்தாயா ? .


நொரண்டு : உண்மையில் ஆச்சரியப்பட்டுவிட்டேன் .
அழகான ,
அர்த்தம் பொதிந்த பேச்சு. எதிர்பார்க்கவில்லை
இப்படி ஒரு அற்புதமான பேச்சை அவரிடமிருந்து .
வாழ்த்துக்கள் பிரதமர் வாழ்த்துக்கள் .


நண்டு : என்ன ஆச்சரியமா இருக்கு ,
நீ வாழ்த்துவது என்றால் ?
என்ன காரணம் ?


நொரண்டு : கோர்ட்டின் மீது மக்கள் நம்பிக்கை
வைக்கும் அளவிற்கு நீதித்துறை
செயல்படவேண்டும் ,விரைவு நீதிமன்றங்கள்
விரைவாக தீர்ப்பு வழங்கவேண்டும் ,
தண்டனைக்காலத்தைவிட ஜெயிலில்
பெருமளவினர் அதிக காலம் தண்டனை
அனுபவித்து வருகின்றனர் .
வருத்தம் அளிக்கின்றது - என கூறியுள்ளாரே
அதனால்தான் .

நண்டு : இது எல்லாத்துக்கும் தெரிந்ததுதானே .


நொரண்டு : ஆம் ,
ஆனால் ,இதைக்கூட கூறத் தயங்கினவர்களைத்தான்
அல்லது
இவ்விசயத்தில் தலையிடாதவர்களைத்தான்
பார்த்திருக்கின்றேன் .


நண்டு : எப்படி ?


நொரண்டு : 'கோர்ட்டின் மீது மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
நீதித்துறை செயல்படவேண்டும் '
என்ற அவரின் பேச்சிற்கு
நீ என்ன அர்த்தம் புரிந்துகொண்டாய் சொல் .


நண்டு :'கோர்ட்டின் மீது மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
நீதித்துறை செயல்படவேண்டும் ' அவ்வளவே .


நொரண்டு : அட நண்டு
வெளிப்படையான பாமரப்பார்வை அது .
அதற்கு அர்த்தம் -நீதித்துறை
மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
செயல்படவில்லை,
நீதித்துறையின் மீது
மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் .
மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
செயல்படாத நீதித்துறை
நமது ஜனநாயக நாட்டில் உள்ளது .
இனி அப்படி செயல்படக்கூடாது
'கோர்ட்டின் மீது மக்கள்
நம்பிக்கை வைக்கும் அளவிற்கு
நீதித்துறை செயல்படவேண்டும் ' என்பதுவே .


நண்டு : அப்படியா ...?
உண்மையில் அப்படித்தான் உள்ளதா ..


நொரண்டு : நான் ,நீ
பேசிக்கொண்ட பேச்சுல்ல இது ,
முதல்-மந்திரிகள்
மற்றும்
ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள்
முன்னிலையில்
பிரதமர் பேசியது .
ஆதாரங்கள் இல்லாமல்
பிரதமர் அவ்வாறு பேசியிருக்க மாட்டார் .


நண்டு : நீதித்துறையின் மீது
மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் எனில் ?


நொரண்டு : ஜனநாயகம்
குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றது
என அர்த்தம் .


நண்டு : நீ என்ன சொல்ற ?


நொரண்டு :பிரதமரே பேசியிருக்கும் பொழுது
நான் என்ன சொல்ல .
அவர் கூற்றில் உண்மை இல்லாமல இருக்கும் .
அரசு தான் உரிய நடவடிக்கை
துரிதமாக மேற்கொள்ள வேண்டும் .
எடுக்கும் என நம்புகின்றேன் .

நண்டு : எப்படிப்பட்ட நடவடிக்கைகள்
இருந்தால் நலமாக இருக்கும் என எண்ணுகின்றாய் .


நொரண்டு : நண்டு ,
மன்னராட்சியில் ,
அரசர் கேள்விக்கு அப்பாற்பட்டவர் .
அரசர் தவறே செய்யாதவர் ,
அரசர் செய்யும் தவறுகள் எதுவும் தவறுகள் அல்ல,
அரசன் என்ன நினைக்கின்றனே
அதை
அப்படியே
நீதிமன்றம் பிரதிபலிக்கவேண்டும் ...
இப்படியான கோட்பாடுகளினால்
நீதித்துறை முழுக்கமுழுக்க கட்டமைக்கப்பட்டது .
மிகவும் மிகவும் கவனமாக.
அரசனிடமிருந்து ,
அரசரின் பிரதிநிதிகளுக்கு ,
நீதி - நீதித்துறையாக மாற்றப்பட்டபொழுது .
அதனால்,
மன்னராட்சியில்
நீதிபதிகளும்
எக்கேள்வி்க்கும் அப்பார்ப்பட்டவர்கள் .
அதனால் , அவர்களிடம் நான்
என்ற எண்ணம் அழுத்தம் திருத்தமாக இருந்தது .
அவ்வாறு
இருக்கும் படியே திட்டமிட்டு
அமைக்கப்பட்டிருந்தது .
ஆனால் , ...


தொடரும் ...

.
.

.

Download As PDF

சனி, 15 ஆகஸ்ட், 2009

தமிழனால் அரை நிர்வாணப்பக்கிரியான காந்திஜி

.

நண்டு : இன்று  சுதந்திர தினம் .


நண்டு : .ம்...

நொரண்டு : ஏன் அரைநிர்வாணப்பக்கிரியானார்னு சொல்லு ...

நண்டு : தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் மனிதன் மனிதனை அடிமைப்படுத்தும் நிலையினை , மனிதனை மனிதனாக பார்க்காதன்மையை , அதனின்று மனிதனாக விடுதலை பெற துடித்து க்கொண்டிருந்த தமிழக ஒப்பந்தக்கூலிகளைக்கண்டார் . மற்றவர்களைப்போல் அல்லாது அவர்கள் கொள்கைப்பிடிப்புடனும் , அதே நேரத்தில் அகிம்சை வழிப்போரட்டத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் வைத்து இயங்கிவந்தனர் .மேலும்,அவர்கள் மனிதனை மனிதனாகப்பார்க்கும் மக்களாகவும் இருந்தனர் . அவர்களின் தியாகம் , உண்மை,உறுதி,விடுதலை உணர்வு ஆகியவற்றைக்கண்டு ஆச்சரியப்பட்டார்.   இது அவரை மிகவும் கவர்ந்தது . அவர்களின்பால் மிகுந்த அன்பும் ,பாசமும் கொண்டார் . அகிம்சைப்போராட்டம் இங்கு தான் இப்படித்தான் ஆரம்பமானது .
தென்னாப்பிரிக்காவிலிருந்த தமிழர்களின் ஆதரவு எப்பொழுதும் காந்திக்கும். அவரின் போராட்டத்திற்கும் உந்து சக்தியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் கடைசி வரை உறுதுணையாகவும் இருந்தது . இது தான் காந்தியை இந்திய விடுதலைப்போராட்டத்திற்கே உந்திச்செல்லும் சக்தியாகவும் ஆனது .


பிறகு, இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு தன்னை முழுமையான  ஈடுபடுததிக்கொள்ள காந்தியடிகள்  இந்தியா முழுவதும் பயணம் செய்கின்றார்.

தமிழர்கள்  தென்னாப்பிரிக்காவிலேயே அப்படியெனில் ,தாயகத்தில் சிறப்புடன் மிகுந்த வேட்கையுடன்  இருப்பர் என்று ,தனது போராட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவில் எப்படி தமிழர்கள் உந்து சக்தியாக இருந்தார்களே .அது போலவே இங்கும் தமிழர்கள் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள் என்ற எண்ண ஓட்டத்தில் இருந்த காந்தி தமிழகம் வருகின்றார் .

இங்கு அவர் பார்த்த தமிழனின் நிலை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .
மிகப்பெரிய மனித நேயம் கொண்ட இவர்களின் நிலை இதுவா என மிகவும் மன வேதனை அடைந்தார் .தங்களின் பண்பாடு ,கலாச்சாரம் இன்ன பிற அடையாளங்களை தொலைத்துவிட்டு இருக்கின்றனறே இப்படி என மனமொடிந்தார் .சிந்து சமவெளிப்பரப்பில் பிறந்த காந்திக்கு தமிழனின் பண்பாடும் ,நாகரிகமும் இரத்தத்தில் கலந்த ஒன்றாகத்தானே இருக்கமுடியும்.
தங்களின் அடையாளங்களை என்று இந்த மனித நேயர்கள் முழுமையாகப் பொறுகின்றார்களே ,அது வரை அவர்களைப்போல தானும் ஆடை உடுத்துவேண்டும் என்று உறுதி பூண்டார் .கத்தியவார் ஆடைகளான (KATHIAWARI DRESS) வேட்டி, நீண்ட குர்த்தா,தலைப்பாகை ஆகியவற்றைத் துறந்து  அரை வேட்டிக்கும் மேல் துண்டுக்கும் மாறினார் தமிழனால் மனித நேயத்திற்காக .

கதராடைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் .கையில் ராட்டையுடன் கடைசி வரை தனது  எண்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார் .

இதனாலேயே ''அரை நிர்வாணப்பக்கிரி '' என்ற ஏச்சுக்கும் ஆளானார் .

நொரண்டு : அப்ப ,தமிழனால்தான் அரை நிர்வாணப்பக்கிரியானார்னு சொல்ற

நண்டு : நான் சொல்லவில்லை இது உண்மை ,வரலாறு .

முடிவுக :தமிழன் ,இந்தியன் தன்மானத்துடன் ,தனித்துவத்துடன் தனது நிலையில் உயர்ந்து விளங்கும் காலம் வரை காந்தி ''அரை நிர்வாணப்பக்கிரி '' யாகவே அறியப்படுவார் என்பதுவே உண்மை  .





.
Download As PDF

ஞாயிறு, 5 ஜூலை, 2009

ஈரோடு, Mhow -ல் சுப்ரீம் கோர்ட் கிளை -அரசிடம் கோரிக்கை

முன்பு
நான் ஈரோடு சென்று
மதுரை திரும்பும்பொழுதெல்லாம்
எனது நண்பரும் ,'
'நவின ஊடகம் '' ஆசிரியரும் ,
வழக்கறிஞருமான எஸ் .இளங்கோவன் ,
என்ன இந்த முறையாவது '' பெரியார் இல்ல''த்தை கண்டுவந்தீரா? என்பார் .
இல்லை என்ற பதிலே எப்பொழுதும் .

பொதுவாகவே, ஒருவரின் பிறந்த இடத்தையோ,வாழ்ந்த இடத்தையோ,மறைந்த இடத்தையோ பார்ப்பதால்
என்ன பயன் ?
ஒன்றும் இல்லை என்ற கருத்து எனதாக இருந்தது .

ஒரு வழக்கு விசயமாக ஈரோடு காவல்நிலையத்திற்கு சென்ற பொழுது ஆய்வாளர் வெளியே
சென்றிருந்த படியால் சற்று காலாற நடந்து வரலாம் என நண்பர் கூற ,நடக்க அங்கே
''பெரியார் நினைவில்ல''த்தைக் கண்டு உள்ளே சென்றோம் .
பெரியார் பற்றிய ஒரு நல்ல புரிதல் மேலும் .
பகுத்தறிவினால் மனித குலத்தின் உயர்விற்கு உழைத்த அவரின் தொண்டு நேரடியான
பாதிப்பை ஏற்படுத்துயது .
ஓரு ஆகச்சிறந்த இலக்கிய படைப்பு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமே அத்தகைய பாதிப்பை
ஏற்படுத்தியது .
அதற்கெல்லாம் காரணம் எனது நண்பர் தான் .
இலக்கியச் சந்திப்புகள் ,பகுத்தறிவுக்கூட்டங்கள் ஆகியவற்றில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும்
அவர் ,நிறைய புத்தகங்களை இரவல் வாங்கிச்செல்வார்.
பின் நீண்ட கேட்பிற்குப்பின் திருப்பித்தருவார் .
நானும் நினைத்துக்கொள்வேன் ,படிப்பதற்கு வேண்டி காலம் தாழ்த்துகின்றார் என .
இருந்தலும் அவர் செறிவேறிய தன்மையில்லாமலே இருந்தார் .
குடும்பச்சூழல் என நினைத்துக்கொண்டேன் .
'' பெரியார் இல்ல''த்தை விட்டு வெளியே வந்த அவர் ,காவல்நிலையத்தின் பணிமுடிந்து
வெளியே வரும் வரை எதுவும் பேசவில்லை .
சரி ,கிளம்புகின்றேன் என்றேன் .
''பெரியார் மன்றம் '' இதற்கு பின்புறம்தான் இருக்கு சென்று வரலாம் என்றார் .
ஏன் என்றேன்.
நூலகத்தில் புத்தகம் எடுக்கலாம்னு ...என்றார் .
என்ன புத்தகம் வேண்டும் என்றேன்.
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்றார் .
என் கையில் '' பெரியார் -ஆகஸ்டு 15'' மட்டும் தான் உள்ளது என்றேன் .
சரி கொடுங்கள் என்றார் .
இதை ஏற்கனவே தாங்கள் படித்தது தானே என்றேன் . மிகப்பெரிய தயக்கத்துடன் ,மன்னிக்கவும் ,
நீங்கள் கொடுக்கும் அனைத்துப்புத்தகங்களையும் வாங்கிச்சென்று அன்றே படிக்க நினைப்பேன் .
ஆனால் ,ஒரிரு பக்கங்கள் மட்டுமே படிப்பேன் அவ்வளவே .
ஆனால் ,
இன்று 'பெரியார் நினைவில்ல''த்திற்குச்சென்று பார்த்த பிறகு எனக்குள் ஒரு பொறி ஏற்பட்டது
போன்று உணர்கிறேன் .
எவ்வளவு பெரிய மனிதர் ''பெரியார் '' .
நம் காலத்தில் வாழ்ந்த அவரை தெரிந்துகொள்ளாமல் இருப்பது மூடத்தனமல்லவா ? என்ற எண்ணம்
ஏற்பட்டது என்றார் .
எனக்கு அப்பொழுது தான் ஒரு பொறி .
நாம் அப்படி இருக்கலாம் .
ஆனால்,சமுதாயத்தில் பலர் அப்படியில்லை .
அப்படிப்பட்டவர்களுக்கு ...???
அப்படிப்பட்டவர்களுக்காகவே ,
உயர்ந்த மனிதர்கள் தோன்றிய இடங்களில் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடிய
விதத்தில் மிகப்பெரிய அமைப்புகள் ஏற்படுத்துவதன் மூலம் அந்த அமைப்பிற்கு வருகை
தருபவர்கள் கட்டாயம் அந்த உயர்ந்த மனிதர்களைப்பற்றியும் ,அவராது கொள்கை கோட்பாடுகளையும்
அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் . மேலும் ,ஏன் இந்த அமைப்பு இங்கு வந்தது ? என்ற
கேள்விக்கு ,பகுத்தறிவும் ,மனித நேயமும் என்ற பதில் அந்த அமைப்பில்
பணிபுரிபவர்களிடமும் ,அந்த அமைப்பிற்கு வருகை தருபவர்களிடமும் , அந்த அமைப்பை
அலங்கரிப்பவர்கள் மத்தியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் .மேலும் , அந்த அமைப்பின்
பயன்பாடு மக்களை அந்த உயர்ந்த மனிதர்களை நினைத்துப்பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை
ஏற்படுத்தும் என்பது திண்ணம் என்ற எண்ணம் ஏற்பட்டது .

பொதுவாக ,ஒரு ஊரில் மிகப்பெரிய அமைப்புகளில் பணியாற்ற வருபவர்கள் அந்த ஊரின்
சிறப்பை அறிந்துகொள்வதும் ,சிறிதளவாவது அதனில் செயல்பட நினைப்பதும் ,மேலும்
,அவ்வவ்வூரில் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவ்வூரின் சிறப்பை பேசும் போதெல்லாம்
மனதில் அதன் தாக்கம் ஏற்பட்டு இயங்குவதும் இயல்பாகும் -இது உளவியல் .

இத்தருணத்தில் தான்
சுப்ரீம் கோர்ட் கிளைகளை
நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்க
சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளதை படித்தேன் .
பிற நகரங்களில் சுப்ரீம் கோர்ட் கிளைகளை அமைப்பதற்கு பதிலாக
பெரியார் பிறந்த ஈரோட்டிலும் ,
அம்பேத்கார் பிறந்த *Mhow* விலும்
அந்த மனித நேய தலைவர்களுக்கு
நீதித்துறையின் மூலமாக கொடுக்கும்
சரியான மரியாதையாக இருக்கும் .
இதன் மூலம் அவர்களை பலதரப்பட்ட மக்கள் மேலும் அறிந்து கொள்வர் என்பது உண்மை .

ஆகவே ,
ஈரோடு
மற்றும்
Mhow -ல்
சுப்ரீம் கோர்ட் கிளைகளை
அமைக்க அரசிடம்
கோரிக்கை வைக்கிறேன் .
தாங்களும்
கோரிக்கைகள் வைக்க வேண்டுகிறேன் .


எனவே ,
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணை , சட்டமேதை அம்பேத்கார் பிறந்த மண்ணை
மதிக்கவேண்டும் ,
அவர்களின் புகழினை பரப்ப வேண்டும் ,
அவர்களின் கொள்கை கோட்பாடுகளை வளர்க்கவேண்டும்
என்ற எண்ணமுள்ள
ஒவ்வொரு மனிதரும்
அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன் .


காந்திக்கும் அப்படியே ...



என
நண்டு .


.


.


.

Download As PDF

திங்கள், 1 ஜூன், 2009

வெளிநாட்டினர் என தாக்குவது ஏன் ?

.


குடும்பம் - அரசின் அடிப்படை அலகு .
தனி மனிதன் - ஆரம்பம் .
நாடு அதன் அதிகார வரம்பெல்லை .

தற்பொழுதுள்ள அரசுகள் எதுவும்
குடும்பம் என்ற அமைப்பைப் பார்ப்பதேயில்லை.

மாறாக நிறுவனங்களையே பார்த்துக்கொண்டுள்ளன .

உலகில் இன்று ஏற்பட்டுள்ள
கொடும் பொருளாதார நெருக்கடிக்கும்
இனி ஏற்படப்போகும் கடுமையான பல நெருக்கடிகளுக்கும்
இதுவே முதல் மற்றும் முடிவான காரணமாக அமையப்போகிறது .

உலகில் குற்றவியல் மற்றும்
பிற சட்டங்கள் யாவும் பெரும்பாலும் தனி மனிதனை நோக்கி மட்டும் செயல்படும் நிலையில் ,
நிறுவனங்கள் அதனின்று தப்பி
குடும்பம் என்ற அமைப்பை சுரண்டி ,சீரழித்து
அரசு என்ற அமைப்பினை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன.
அரசுகளும் இதனை உணராமல்
நிறுவனத்தன்மையினால்
தவறான பாதையில் கண்மூடித்தனமாக
சென்றுகொண்டுள்ளன .
இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் நிலையில்
பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு தவிக்கும்
அல்லது
பொருளாதார நெருக்கடி கண்டு
அஞ்சும் குடும்பத்தின்
குரல்வளை இருக்கத்திற்கு
ஆளாகும் தனிமனிதர்கள்
(குறிப்பாக இளைஞர்கள் )
சமுதாயக்காற்றினால் ஒன்றிணைந்து
வெளிப்படுத்தும் சிறு எதிர்ப்பே
ஆஸ்திரேலியா
மற்றும்
பிற நாடுகளி்ல் ,மாநிலங்களில்
பிற நாட்டினர் ,இனத்தினர் ,மாநிலத்தினர்
என பாகுபாடு பார்த்து
தாக்குதல்கள் .

இப்படி உலகம் முழுவதும் தாக்குதல்கள்
அதிகரித்துவரும் நிலையில்
அரசுகள்
இப்படிப்பட்ட விசயங்களில்
அரசியல் கலக்காமல்
அணுகுவது தான்
சிறந்த நாகரிகமான நடவடிக்கையாக இருக்கும் .
அது தவிர்த்து அரசியலாக்க முயன்றால்
அப்படி முயல்பவர்கள்
மனித குலத்தை நாசம் செய்பவர்களாவார்கள் .

மேலும் ,
அரசுகள் தங்களின் தவற்றை
திருத்திக்கொள்ளாமல்
சட்ட நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் மட்டுமே
அடிப்படையான பிரச்சனை
தீர்ந்து விடுவதில்லை .
அடிப்படையான பிரச்சனையை
சரி செய்வது சற்று கடினம் தான்
எனினும்
அதனை முதலில் செய்யவேண்டும்
அதனைச்செய்யாமல் இருக்கும்
எந்த அரசும்
அதன் அதிகாரவரம்பெல்லையை
சிதைக்க தானே வழிவகுக்கும் அரசாகிவிடும் .


.

Download As PDF

செவ்வாய், 24 மார்ச், 2009

கைதிகள் சார்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வேண்டுகோள்.

.

எனக்குத் தெரிந்து
சிறையில்அடைக்கப்பட்டுள்ளவர்கள் எந்தத்தேர்தலிலும்
ஓட்டுப்போட்டதாகத்தெரியவில்லை. தேர்தலில்
நிற்கஅனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால்
அவர்களின்
ஜனநாயக உரிமையான ஓட்டுப்போடும் உரிமையானது இன்றுவரை கிடைக்கப்பெறவில்லை.
ஏன் இந்த பாரபட்சம் என்று தெரியவில்லை.
ஒரு வாக்கிற்காக
ஒரு வாக்குச் சாவடி அமைத்துள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் தேர்தல் ஆணையம்
லட்சக் கணக்கான நபர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பினை கொடுப்பதில்லை?
அவர்களும் பிரஜைகள் தானே. மற்றவர்களைப் போல் அவர்களுக்கும்
ஓட்டுப்போட உரிமையுள்ளதுதானே. அப்படியிருக்க
ஏன் அந்த வாய்ப்பினை
தேர்தல் ஆணையம் தருவதில்லை?

ஒவ்வொரு பிரஜையும் கட்டாயம் ஓட்டுப்போட வேண்டும். ஓட்டுப் போடாதவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றெல்லாம் கூறும்
தேர்தல் ஆணையம்
ஓட்டுப்போடதயாராகஇருக்கும்அவர்களை ஏன் கண்டுகொள்ளவில்லை.

அனைத்து பிரஜைகளையும் வாக்காளர்களாகச்சேர்க்க
கடும் நடவடிக்கை எடுத்து வரும் தேர்தல் ஆணையம்,
எத்தனை கைதிகளை இன்றுவரை வாக்காளர்களாகச் சேர்த்துள்ளது. அதற்கு என்ன முயற்சி எடுத்துள்ளது.
அனைத்து பிரஜைகளுக்கும்
வாக்கு உத்தரவாதம்
தருவது
தேர்தல் ஆணையத்தின்
தலையான கடமையல்லவா?

வெளிநாட்டில் உள்ளவர்கள்கூட ஓட்டுப்போடும்போது,
உள் நாட்டில் இருந்து கொண்டு வேடிக்கை பார்க்க வைப்பது சரியான ஜனநாயக நெறிமுறையா?

எனவே,
இப்பதிவின் மூலம்
தேர்தல் ஆணையத்திடம்
நான் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால்,
இந்த தேர்தலாவது
சிறையில்அடைக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுக்கும் உரிமை உண்டு என்பதனை கருத்தில் கொண்டு,
அவர்களுக்கும்
ஓட்டுப்போட வாய்ப்பினை ஏற்படுத்தி,
அவர்களையும்
தேர்தலில் பங்குபெற
வழி வகைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

-இப்படிக்கு நண்டு.

ஒரு ஜனநாயக நாட்டில்
தேர்தல் என்பது
அனைத்து தரப்பினரின் எண்ணங்களின்
பிரதிபலிப்பாகவே
இருக்கவேண்டும்.

இம்மண்ணில்
பிறந்த
எந்த குடிமகனுக்கும்
அவனின்
ஜனநாயக உரிமைகள்
எச்சூழலிலும்,
எப்பொழுதும்,
எங்கேனும்,
எவராலும்
பாதிக்கப்பட்டாலும், மறுக்கப்பட்டாலும், சுரண்டப்பட்டாலும்,
அதற்காக
ஜனநாயக வாதிகள் ஒருமித்து குரல் கொடுப்பர்
என்பது திண்ணம்.

எனவே,
இப்பதிவினைப் படிக்கும் ஒவ்வொருவரும்
தங்களின்
ஜனநாயக குரலினை
தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்பீர்கள்
என்ற உறுதியில்
நண்டு.

.

Download As PDF

செவ்வாய், 17 மார்ச், 2009

குற்றவாளிகள் தேர்தலில் நிற்பது சரியா ?

.

ஏன் நிற்கக்கூடாது .
அரசியலமைப்பில்
கொடுக்கப்பட்ட உரிமைகள்
எதற்காகவும் ,எப்பொழுதும் ,
யாருக்கும் ,யாரும் தடுக்கக்கூடாது .
இதில் கவனிக்கப்படவேண்டியது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு
அவர்களின் குற்றங்கள் இருக்கிறதா என்பதுவே .
அது அரசியலமைப்பை சிதைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.
அதுதவிர்த்து
மற்ற சமுக குற்றங்களை காரணம் காட்டக்கூடாது .
ஆனால் ,
அவர் குற்றம் செய்தவர் .
சமுகத்திற்கு இவர் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவர் ,
தேவையில்லாதவர் .
எனவே ,
இவரை தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை மக்களிடையே
தேர்தல் ஆணையம் தான் ஏற்படுத்தவேண்டும் .
அது அவர்களின் கடமை.
அதைத்தவிர்த்து
குற்றப்பிண்ணனியை காரணம் காட்டி மக்களுக்கு செய்யவேண்டிய கடமையினின்று தேர்தல் ஆணையம்
தப்பித்துக்கொள்ள பார்க்கிறது.
யார்,யார் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கூறும் தேர்தல் ஆணையம் யார்,யாருக்கு
ஓட்டுப்போடக்கூடாது என்றும் மக்களுக்கு போதிக்கவேண்டும் ,
கூற வேண்டும்.
இவர் இத்தகைய குற்றப்பிண்ணனி உடையவர் என்பதனை
வாக்குச்சீட்டிலும் ,வாக்குச்சாவடியிலும் தெரியும்படி ஏற்பாடு செய்தல் வேண்டும் .
மேலும் ஏன் ஓட்டுப்போடக்கூடாது என்றும் தெளிவாகவே தெரிவித்தால்
எந்தக்கட்சியும்
குற்றப்பிண்ணனியுள்ளவர்களை
தேர்தலில் நிறுத்தாது
தவிர்க்கும் .
இது தவிர்த்து குற்றப்பிண்ணனியுள்ளவர்களுடைய தேர்தலில் நிற்கும் ஜனநாயக உரிமையை தேர்தல்
ஆணையம் தனது கடமையினின்று தவறி ,
தடுக்கக்கூடாது .
அவர்கள் நிற்பது சரிதான் ,
அவர்களை தேர்ந்தெடுப்பதுதான்
தவறு .
தேர்ந்தெடுக்க வைப்பது தான்தவறு .

.
Download As PDF

சனி, 21 பிப்ரவரி, 2009

நாட்டுடமையாக்கலும் -பெரியாரும்

.


இலக்கியவாதிகளின் எழுத்துக்கள்
மற்றும்
நாட்டுக்கு உழைத்த நல்லோர்கள்
மற்றும்
தேசியவாதிகளின்
உடைமைகள் ,எழுத்துக்கள்
ஆகியவைகள்
நாட்டுடமையாக்கப்படுவதற்கும்

சிந்தனையாளர்களின் எழுத்துக்கள்
நாட்டுடமையாக்கப்படுவதற்கும்

நிறைய வேறுபாடுகள் உண்டு .


ஒரு சிந்தனையாளராக பெரியாரை நினைக்கும் எவரும் அவரின் எழுத்துக்களை
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவேமாட்டார்கள்.
ஏனெனில் நாட்டுடமையாக்கல் என்றால்
என்ன என்பது பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே தெரியும் .


பாமரத்தனமானவர்களின் பார்வைக்கு ....


பெரியாரின் எழுத்துக்கள்
அழிந்து வருகிறது
அதனின்று அதனை காப்பாற்ற
நாட்டுடமையாக்கப்படுவதல் மட்டுமே முடியும்
என்ற நிலையில்,
மற்றும்
பெரியாரின் எழுத்துக்கள்
மக்களால் அறியப்படவேயில்லை
எனவே
நாட்டுடமையாக்கப்படுவதால் மட்டுமே
மக்கள் மத்தியில் அறியப்படவைக்க முடியும் அப்பொழுதுதான்
அது சாத்தியமாகும்
என்ற நிலையில்
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தால்
அது மிகவும் நியாயமாக இருக்கும் .
தவிர்த்து,
பெரியாரின் கொள்கைகள்
அனைத்தும் உயிர்ப்புடன்
உள்ள நிலையில்
அவர் ஆரம்பித்த
அனைத்தையும்
அவரின் அன்பினைப்பெற்ற
அவரின் நேரடியான
அன்பர்களால்
நிர்வகிக்கப்பட்டும் ,
செலுமைப்படுத்தப்பட்டும்
வரும் நிலையில்
பெரியாரின் எழுத்துக்களை
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைப்பது்

பாமரத்தனமாக உள்ளது .

பெரியாரை பெரியாராக மட்டுமே பார்க்கவும்.
அடையாளமாக பார்ப்பது பாமரத்தனமாகும் .


.
.

Download As PDF

புதன், 18 பிப்ரவரி, 2009

பதிவுகளும், வரலாறும்.

.




எனது வலைப் பதிவை படித்த சில நண்பர்கள் என்னிடம் எத்தனையோ பிரச்சனைகள்
இருக்கும்பொழுது

அயோத்தி விவகாரம்-இது உண்மை -இது முடிவு -என்ற

இப்பதிவைக்கு காரணம்
கேட்டார்கள்.


அவர்களுக்கு…


இது
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு
வழக்கறிஞர்கள் நடத்திய
இலக்கிய காலாண்டிதலில்
வெளிவந்த பதிப்பின்
மறு வெளியிடலே.


வழக்கறிஞர்களாகிய எங்களுக்கு மற்றவர்களைவிட
சமூகப் பொறுப்புகள்
மிக அதிகம்.
மற்றவர்களைப் போன்று
எம் போன்றோர் ஒரு விசயத்தை
ஏனோ, தானோ என்றுபார்க்க முடியாது, எழுத முடியாது.

விருப்பு, வெறுப்பற்று
எந்தவித இசத்திற்கும் ஆட்படாமல் நடுநிலையுடன்
மதமாச்சர்யங்கள் கடந்த
மனித நேயத்துடன் இருந்தால் மட்டுமே எமது எழுத்துக்களை புரிந்துகொள்ளமுடியும் .


மதவாதம்,
பிரிவினைவாதம்,
தீவிரவாதம்
ஆகியவை
எங்கிருந்தாலும்,
எவ்வடிவில் இருந்தாலும்,
எவரிடம் இருந்தாலும்,
எவரிடம் இருந்து வந்தாலும்
அதனை
வேரறுக்கவேண்டும்
என்பதுவே
எமது பதிவு.


பொய்மைகளையும்,
சுரண்டலையும்,
அடக்குமுறைகளையும்,
மூடத்தனத்தையும்,
அறியாமைகளையும்
அகற்ற
எம்போன்றோர்
விழிப்புடன்
எப்பொழுதும்
எந்நிலையிலும்
செயல்பட்டுக் கொண்டே இருப்போம்...


வழக்கறிஞர்களாகிய நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை
நடத்தி வரும் இவ்வேலையில்,


நோயில் வாடினும், நொடிப்பொழுதும் தமிழர் நலன் மறவா
தமிழினக் காவலர்
இனமானத்தலைவர்
மாண்புமிகு தமிழக முதல்வர்
கலைஞர்
அவர்களும்,

தமிழே,
தமிழ்மொழியே,
தமிழரே,
தந்தை பெரியாரே
என
தனக்கென வாழா
தன்மானத் தமிழர்
மானமிகு கி. வீரமணி
அவர்களும்,

இது தமிழின் காலம்,
ஆனால்
ஈழ தமிழினமோ கலக்கத்தில்
என
தினம், தினம்
வாடி, வாடி
பல்வேறு போராட்டங்களில்
தமிழர் வாழ்விற்காக
தம்மை ஈடுபடுத்தி போராடிவரும்
ஐயா பழ.நெடுமாறன், டாக்டர் இராமதாஸ், தொல்.திருமா, வை.கோ
மற்றும்
பல்வேறு தமிழ்இன உணர்வாளர்களும், மாணவர்களும்,
தொழிலாளிகளும்
மற்றும்
லட்சோப லட்ச தமிழ் இதயங்களும்,

வழக்கறிஞர்களாகிய நாங்களும்


ஈழ மக்களின் விடியலுக்காக
தம்மால் முடிந்த அளவிற்கு
முழுமையாக போராடிவரும் இவ்வேலையில்,


அப்பாவி தமிழ்மக்களின்
அவலம் நீடித்துவரும்
நிலையில்,


எம்மைச் சந்தித்த வழக்கறிஞர் நண்பர்கள் சிலர்,

பொதுத் தேர்தல் வரும் இவ்வேலையில் பா.ஜ.க. அயோத்தி விவகாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில்,
ஈழ மக்கள் விடியலுக்கு ஒட்டுமொத்த தமிழகமே திரண்டிருக்கும் இவ்வேலையில்
சந்தடிசாக்கில்
மதவாதம்
இங்கு
மேலும் வேரூண்டிவிடக்கூடாது.
எனவே,
அயோத்தி விவகாரம்
-இது உண்மை, இது முடிவு -கட்டுரையை புத்தகமாக வெளியிட வேண்டும் என வேண்டினர்.
முழுவதும் புத்தகமாக வெளிவர சில நாட்களாகும் என்பதாலும்,
தற்பொழுது
மேலும் சில நண்பர்கள் படிக்க ஏதுவாக இருக்கும் என்பதாலும்
எமது கட்டுரையின் ஒரு பகுதியை வெளியிட்டேன்.

இதுவே காரணம் .



எனது கட்டுரையைப் படித்த
கற்றறிந்த வழக்கறிஞர் நண்பர்கள்
சிலர்
எஸன்ஸ் ஆக இருக்கிறது
சர்பத்தாக மாற்றிக் கொடுத்தால்
மிகவும் நன்கு
ஆழமாகப் புரிந்துகொள்வோம் என்றார்கள்.



அவர்களுக்கு....


எனது எழுத்தின் எழிமைப்படுத்திய வடிவம்தான் தாங்கள் படித்தது. இருந்தாலும், என்னால்
முடிந்த அளவிற்கு முயற்சிக்கின்றேன்.
தாங்களும் முயற்சிக்கவும்.


சரி கட்டுரைக்கு வருவோம்………..



பதிவுகளும், வரலாறும்.


( அயோத்தி விவகாரம்
-இது உண்மை
- இது முடிவு .
........ 2-ம் பகுதி)



முழு முழுப் பூசணிக்காய்கள்
சோற்றில் அல்ல
ஆற்றில் ...
ஆங்காங்கே
ஆங்காங்கே
நதிக்கரைகள் நெடுகிலும்
நதிக்கரைகள் நெடுகிலும்
மறைக்கப்பட்டு இருப்பது கண்டு
உலகமே வாயடைந்து நின்றது.


"முற்றிலும்
கபட தந்திரங்கள் வழியாக
நமது நாட்டின் ஆதிக்கத்தைக் கைப்பற்றிய அந்நிய நாட்டினர் நமக்குப் போதித்துத் தந்த வரலாறு
வேறு வகையிலானது.
அவர்கள் வந்த பின்னர்தான் இந்த நாட்டிலே கலாச்சாரம் நாகரிகம் எல்லாம் உருவாயினவாம்!
அதன் முன்னர் இங்கு அனைவரும் கிஞ்சிற்றும் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாய் இருந்தார்களாம்!
ஐந்தாயிரம் வருடத்திய பழமையுடைய எகிப்து, பாபிலோனியா ஆகிய நாகரிகங்கள் பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? எகிப்தைச் சேர்ந்த ஃபரோவர்கள் நிர்மாணித்த, பேருருவமாய்
அமைந்திருக்கின்ற 'பிரமிடு'களும்
ஊறு, உரூக முதலிய இடங்களில் அமைந்த மாபெரும் தேவாலயங்களின் மிச்சசொச்சங்களும் இந்த
நாகரிகங்களின் நினைவுச் சின்னங்களாய்த் திகழ்கின்றன. ஆனால் நமதென்று சொல்ல இதிகாசங்கள்
மட்டும்தான். அவற்றை அடிப்படையாகக் கொண்டு பாக்கும்போது இரண்டாயிரம் மீறினால்,
இரண்டாயிரத்து ஐநூறு வருடத்திற்கும் மேலான பழமை நமது நாகரிகத்திற்கு இருக்கிறதென்று
உரிமை கொண்டாட முடிந்திருக்காது.

கடந்த ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்னர்தான் இந்த நிலைமையில் ஒரு மாறுதல்
ஏற்பட்டது. வைதீக நாகரிகத்தை இங்கே கட்டி வளர்த்த ஆரியர்களின் வருகைக்கு ஆயிரத்தி ஐநூறு
வருடங்களுக்கு முன்னரே பாரதத்தில் மிகவும் மகத்தானதொரு நாகரிகம் நிலைபெற்றிருந்தது.
அந்தக் காலகட்டத்தின் மிகவும் முன்னேற்றமடைந்த நாகரிகமாய்த் திகழ்ந்திருந்தது அது. மிகப்
பெரிதாகவும் இருந்திருக்கிறது.
சிந்து நதிக்கரையோரங்களிலேதான் அது வளர்ந்து மலர்ந்தது.
ஏறத்தாழ முவாயிரம் வடங்களுக்கு முன்னர் அது முற்றிலும் அழிந்து மண்ணிற்கடியிலே
புதையுண்டு போயிற்று. 1921-ஆவது ஆண்டிலேதான் இவை முதன் முதலாக மொகஞ்சதாரோ, ஹரப்பா
ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன."


உண்மை .....முடிவை நோக்கி.......தொடரும்....


.

Download As PDF

புதன், 28 ஜனவரி, 2009

விளையாட்டை விளையாட்டாக பார்க்க முடியாது ..எப்பொழுது ?

.


விளையாட்டைக்கூட யாரும் விளையாட்டாகப் பார்ப்பதில்லை என்று நாம் சில சமயங்களில்
சலித்துக்கொள்கிறொம் .
ஆனால் ,விளையாட்டை விளையாட்டாக பார்க்க முடியாது .
எப்பொழுது ?

வரலாற்றை நோக்க ...

சைப்ரஸ் என்பவர் விளையாட்டுகளின் மூலம் பாரசிக மக்களை பேரெழுச்சி பெறச்செய்ததிலிருந்தே
விளையாட்டுகள் ஏன் ? என்பதற்கு பதில் கிடைத்தது.
சைப்ரஸைப் பின்பற்றி ஸ்பார்ட்டா தேசமும் இளம் சிறார்களுக்கு உணவு ,உடை, தங்குமிடம்
கொடுத்து சிறந்த வீ்ரர்களை உருவாக்கி நாட்டை காத்தனர் .
பிறகு ஏதன்ஸ் விளையாட்டில் சுதந்திர கருத்தை புகுத்தியதால் விளையாட்டு வேறு பல
வடிவங்களையும் ,போர்முறையினின்று மாறுபட்டு சில கூறுகள் தன்னுள் பெற்றது.பிறகு ரோம்
கிரேக்கத்தை வீழ்த்தியது .அது விளையாட்டை விளையாட்டாக பார்த்த சுதந்திர சுகத்தால்
ரோமானியர்கள் சோம்பேறிகளானதால் டியூடானிக் மரபினர் ரோமை வேன்றனர் . ரோம்
டியூடானிக் ஆட்சி காலத்தில் இருந்த பொழுது ஆங்காங்கே மரம் வெட்டுதல் ,கதிர் அறுத்தல்
போன்ற போட்டிகளைத்தவிர்த்து விளையாட்டு வீரம் காணும் நிலை இல்லாமல் இருந்தது .

இந்தியா இன்று்ம் ரோம் டியூடானிக் ஆட்சி காலத்தில் இருந்த பொழுது எப்படி இருந்ததோ
அதே நிலையில் இருந்து வருகிறது.விளையாட்டைப்பற்றியோ , எப்பொழுது விளையாட வேண்டும்
என்பது பற்றியோ இங்கு யாரும் யோசிப்பதில்லை .

ஜனநாயக நாடுகள் தங்களிடையே விளையாட்டு போட்டி நடத்தும்போது கிழ்க்கண்ட அம்சங்களை
காணத்தவறும் பொழுது விளையாட்டை விளையாட்டாக பார்க்க முடியாது மக்கள் தவிப்பர் .
மக்கள் மனரீதியக பாதிக்கப்படுவர் .

ஜனநாயக நாடுகள் தங்களிடையே விளையாட்டு போட்டி நடக்கும்போது காணவேண்டிய அம்சங்கள்
1.போட்டி நடத்தும் நாட்டில் அல்லது கலந்து கொள்ளும் நாடுகளில் ஏதாவதொன்றில் உள்நாட்டுக்கழகம்

2..போட்டி நடத்தும் நாட்டில் அல்லது கலந்து கொள்ளும் நாடுகளில் ஏதாவதொன்றில்
உள்நாட்டுப்புரட்சி

3..போட்டி நடத்தும் நாட்டில் அல்லது கலந்து கொள்ளும் நாடுகளில் ஏதாவதொன்றில் உள்நாட்டு
அடக்குமுறை

4.போட்டி நடத்தும் நாட்டில் அல்லது கலந்து கொள்ளும் நாடுகளில் ஏதாவதொன்றில் சர்வதிகார
ஆட்சி மற்றும் சர்வதிகார அரசியல் போக்கு

5.போட்டி நடத்தும் நாட்டில் உள்நாட்டுப்பாதுகாப்பில் அச்சம்

மேற்கூறிய அம்சங்களை பார்க்காது விளையாட்டு போட்டிகளில் பங்குபொறும் மற்றும் அதனை
அங்கிகரிக்கும் நாடுகள் தங்கள் நாட்டிற்கு சுதந்திரத்தைப்பெற்றுக்கொடுத்த உன்னத தலைவர்களை
அவமதித்த நாடுகள் ஆகும் .ஜனநாயக பாதையினின்று தவறான பாதையில் பயணிக்கும்
அரசினைக்கொண்ட நாடுகள் ஆகும் .


.

Download As PDF

சனி, 10 ஜனவரி, 2009

உலகிற்கு உடனடியான தேவை -புதிய பொருளாதாரக்கொள்கைகளும்,கோட்பாடும்.

.

நண்டு :நேத்து 6 மணி நேரம் நின்னும் பெட்ரோல் கிடைக்கல ...

நொரண்டு :அது தான் இன்னைக்கு சரியாயிருச்சில்ல ....

நண்டு : ஆ...மா...ம்.... ,பெட்ரோலியத்துறை ஊழியர்கள் போராட்டம் அறிவித்த உடனே இப்ப
செய்த மாதிரி ,அப்பவே.. உடனே இராணுவத்தை பணியில் ஈடு்படுத்தியிருத்தால் ...நல்லா
இருந்துதிருக்கும் ..ஏன் மக்களை கஷ்டப்படுத்தராங்க ....

நொரண்டு :எந்த போராட்டமும் நியாயமான முறையில் ,நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து
உறுதியான கொள்கைபிடிப்புடன் சரியான நேரத்தில் சரியான பாதையில் சரியாக
ஆரம்பிக்கப்படவேண்டும் .ஒரு குழுவினர் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக
போராடிக்கொண்டிருக்கும் போது ,அதுவும் பொதுநலனை கருத்தில் கொண்டு போராட்டகளத்தில்
இருக்கும் பொழுது தங்களின் சுயநலத்திற்காக பொதுநலப் போராட்டத்துடன் சேர்வது போல்
தோற்றத்தை ஏற்படுத்தி தங்களின் சுயநலத்தை மேம்படுத்திக்கொள்ள முற்படும் எத்தகைய
போராட்டமும் தோல்வியைத் தழுவும் .போராட்டங்கள் பொதுமக்களின் நன்மைக்காக எனி்ல் பொதுமக்களே
முன்வந்து அதனால் ஏற்படும் இன்னல்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வர் .ஆனால்
.சுயநலப்போராட்டத்தினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதை ஒரு போதும்
ஏற்றுக்கொள்ளமுடியாது. அப்படிப்பட்டது ஜனநாயக குற்றமாகும் .

நண்டு : ஜனநாயகம் , ஜனநாயகம் என்கின்றாயே ..ஜனநாயக நாடுகளில் ஏற்பட்டு்ள்ள
பொருளாதாரச்சிக்கல்களுக்கு காரணம் என்ன ?

நொரண்டு :என்னைக்கேட்டால் ...தற்போதுள்ள பொருளாதாரக்கொள்கைகளும்,கோட்பாடுகளும்
காலாவதியாகிவிட்டது என்பதுவே . முற்றிலும் செயலிழந்துவிட்ட
பொருளாதாரக்கொள்கைகளையும்,கோட்பாடடு்களையும் வைத்துக்கொண்டு ஒப்பேத்தப்பார்க்கின்றோம்
.இன்றைய காலகட்டத்திற்கு உகந்த ஒரு சரியான பொருளாதாரக்கொள்கையும்,கோட்பாடும் இல்லை
என்பதுவே உண்மை. ஏன் ..அது பற்றிய சிறு விழிப்புணர்வு துளி கூட நம்மிடம் இல்லாமல்
இருப்பதுதான் மிகவும் கவலையாக உள்ளது . அதனால் தான் உலகில் பல நாடுகள் பல்வேறு
இன்னல்களையும் ,சிக்கல்களையும் ,மிகப்பெரிய பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றது .இது
வருந்தத்தக்க ஒன்றாகும் .இன்றுள்ள பொருளாதாரக்கொள்கைகள்,கோட்பாடுகள் அனைத்தையும்
குப்பையில் போட்டு விட்டு புதிய பொருளாதாரக்கோட்பாட்டை ஏற்படுத்தி அதன் வழியில் புதிய
பொருளாதாரக்கொள்கைகள் வகுத்து அதன்படி செயல்படலே உலகிற்கு நன்மை பயக்கும் .

நண்டு : அப்படியெனில் ...

நொரண்டு :தோல்வியடைந்த எதுவும் புதிய பயணத்திற்கு அடித்தளமிடமுடியாது .பாதைபோல்
தெரியும் ,பயணிக்க முடியாது .இங்கு தோல்வியடைந்ததை பழுதடைந்ததாக நினைத்து
அதையே ஏதோ செய்து முன் செல்வதுபோல் செல்வதால் மீண்டும் , மீண்டும் தோல்வியடைந்தே
வீழ்கிறேம் .உலக பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்றால் ,ஏதோ இருப்பதில்
மாற்றத்தை ஏற்படுத்தி சரிசெய்ய நினைப்பது தவறு .அபத்தமானது . மீண்டும் , மீண்டும்
தோல்வியே பரிசாக கிடைக்கும் . உண்மையில் உலக பொருளாதார ஏற்றத்திற்கு புதிய
பொருளாதாரக்கொள்கைகளும்,கோட்பாடுமே தற்பொழுது உடனடியான தேவையாக உள்ளது .


நண்டு : ....புதிய பொருளாதாரக்கோட்பாட்டையும் ,அதன் வழி ஏற்படும் புதிய
பொருளாதாரக்கொள்கையையும் ,அதனால் உலகில் மனிதகுலத்திற்கு ஏற்படும் உயர்வையும்
....புதிய பொருளாதார உலகையும் .. நினைத்து ...

.

Download As PDF

வியாழன், 8 ஜனவரி, 2009

உலக மகா சோம்பேறிகளும் - மனிதக்கழிவுகளும் ...

.


...... கருத்துரையிடும் தோழர்களே .......
......கருத்துரையிடும் முன் தாங்கள்
" பெரியாரையும் ","மார்க்சையும்" -
"கட்டாயம் " படித்திருத்தலே நலமாக இருக்கும்
என நினைக்கின்றேன் ...
விருப்பமுள்ளவர்களுக்கு நான் உதவ தயார்...
...எனது இ.மெயில் முகவரி : NORANDU.RA.AR@GMAIL.COM ...


நண்டு : உன்னை பார்க்க நேத்து ராத்திரி 10 மணிக்கு வந்தேன் ,தூங்க
போய்ட்டேனு சொன்னாங்க , எழுப்பச்சொன்னேன், தூங்க போன பிறகு எழுப்பக்கூடாதுனு செல்லிருக்கியாம் . வந்துட்டேன் ..
ஏன் சீக்கிரமா தூங்கபோற ....


நொரண்டு : சீக்கிரமாவா ..?..என்ன பேசற ...நீ....... முதலில் இயல்பான வாழ்க்கை
வாழ்வதற்க்கு தேவையான அறிவைப்பெற பழகிக்கொள் .
தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று . ஒருவர் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கவேண்டும் .
அதுவும் கும்மிருட்டில் .

நண்டு : நைட் லேம் கூட இல்லாமல ..

நொரண்டு : ஆம் ... நாம் இருண்ட இடத்தில் உறங்கும்போது நமது உடலில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது .அது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது எப்படி காற்றிலிருந்து நாம் ஆற்றல் பெறுகின்றோமோ, அதுபோல இருட்டில் உறங்கும்போதும் ஆற்றல் பெறுகின்றேம் .அந்த ஆற்றல் நமது இயக்கத்திற்கு மிகவும் அவசியமானதாகும் .

நண்டு : அப்படி தூங்கினா சோம்பேறித்தனம் தான் வரும்

நொரண்டு :சோம்பேறித்தனமுனு சொல்லாதே ...சோம்பேறித்தனம்னா என்னான்னு உனக்கு தெரியுமா ?
....

நண்டு : நீயே சொல்லு ...

நொரண்டு : மூளையை பயன்படுத்தாதது தான் சோம்பேறித்தனம் .மூளையை பயன்படுத்தாதவர்கள் தான் சோம்பேறிகள். உலகில் சோம்பேறிகள் தான் இன்று அதிகம் .சோம்பேறிகளை அதிகம் கொண்ட நிறுவனங்கள் தான் இங்கு அதிகம் .


நண்டு : நீ ஒருவர் செய்யும் வேலையை கேலி செய்கினறாய் ....

நொரண்டு : அப்படியி்ல்லை ...நான் என்றும் உழைப்பை மதிப்பவன் . ஆனால் , சிலர் செய்யும் வேலைகளைத்தான் குறிப்பிடுகின்றேன். அவர்களுடைய வேலையை நான் உழைப்பாக நினைப்பதில்லை . உழைப்பின் வகையில் ஏற்றுக்கொள்ள மாட்டேன் .உழைப்பு என்பதுஉண்மையை நோக்கி செல்வது , உண்மையில் சேர்வது ,நன்மை பயப்பது ,நலம் தருவது.

நண்டு : கூறு .....

நொரண்டு : மதசம்பந்தமான செயல்கள் செய்பவர்கள் செய்யும் அனைத்து வேலைகளும் அப்படிப்பட்டது தான்.
( நேரடியாகவும் இருக்கலாம் .மறைமுகமாகவும் இருக்கலாம் ).

நண்டு : புரியவில்லை ...


நொரண்டு : எங்க பூக்கடை ஆயாவ எடுத்துக்க, கோவில் தெருவில் பூ விக்குது .60 வருசமா . ஆயாவுக்கு இதுதான் தொழில் . ஆயாவிற்கு தெரிந்ததெல்லாம் பூ வாங்கறது ,கட்டறது ,விக்கறது .
இதை மேலோட்டமாகப்பார்த்தால் இது ஆயாவின் வாழ்வு சம்மந்தப்பட்ட ஒன்றாக இருக்கலாம் .
ஆனால் ,அவரின் வாழ்வு எந்த சிந்தனையும் இல்லாமல் ஒரேபோக்கில் சென்றதைக்கண்டுதான் வருந்துகிறேன் .மேலும் , அவரின் மனித வளத்தை எடுத்துக்கொள்வோம் எவ்வளவு வீணாகிவிட்டது,வீணாகிக் கொண்டிருக்கிறது .இப்படித்தான் மனித வளத்தை அனைவரும் கழிவுகளாக்குகின்றனர். யாருக்கும் பிரயோசனம் இல்லாமல்.
மதங்கள் மனித வளங்களை .... எப்படியொல்லாம் கழிவுகளாக்குகின்றது பார் எவ்வளவு மனித வளங்களை ...
ஆயாகிட்ட ,என்ன சென்னாலும்.. கேட்க மறுக்கிறது .. இதவச்சித்தான் என் மகனை ஆளாக்குனேன் ..காலம் போயிருச்சி ...கடைசி காலம் ஆண்டவனுக்குனு சொல்லி...ஒய்வெடுக்க மறுக்கிறது...
பொதுவாகவே ,ஒருவர் எத்தொழிலைச்செய்தாலும் அதில் தொடர்ந்து ஒரு முன்னேற்றமும் காட்டாமல்- காணமல்- விரும்பாமல்- குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டி- காலம் தள்ள நினைப்பவர்கள்- மூளையைப்பயன்படுத்தாமல், சிந்திக்காமல் ,ஏன், எதற்கு இதைச் செய்கிறேம் , சரிதானா என்ற உணர்வே இல்லாமல் வருமானம்வருகிறது ,பொழப்புநடக்கிறது, பிரச்சனையில்லை
,இதுவே போதும் என்ற நினைப்பில் தொழில் செய்பவர்கள் அனைவரும் உலகில் மிகச்சிறந்த சோம்பேறிகளே .அவர்கள் வேலை செய்யும் இடங்களில் கட்டாயம் சுரண்டல் இருக்கும். மேலும் ,மூடநம்பிக்கைகளும், முட்டாள்தனமும் அவர்களிடம் மண்டிக்கிடக்கும். மேலும்உலகில் மிகச்சிறந்த சோம்பேறிகள் தங்களின் வேலையால் மூடநம்பிக்கையையும்,முட்டாள்தனத்தையும் உரமிட்டு வளர்க்கின்றனர் . இப்படிப்பட்டவர்களை நீ பொதுவாக பரவலக எல்லா துறைகளிலும் காணலாம். அவர்களெல்லாம்

உலகில்மிகச்சிறந்தசோம்பேறிகள் ஆவார்கள் .

இதில் மதசம்பந்தமான வேலைகள் செய்பவர்கள்

"உலக மகா சோம்பேறிகள் ".

நண்டு : ..சரி ..தூக்கத்துக்கு வா ...

நொரண்டு : தூங்கி எழும் பொழுது ஏற்படும் அயர்ச்சியானது நமது உடலை உழைப்பிற்கு தயாராக அயத்தமாக்கும் செயல் ஆகும் .அதை அதிகப்படுத்த சிறு நடை 30 நிமிடம் போட்டுப்பார் ..
அன்று முதல் உனது கையில் நீ ....

நண்டு : ... எனது கையில் நானக...
... இன்றிரவே 8 மணிநேரம் தூங்கச்செல்கிறேன் .....
....நீங்களும் தானே ...?..
....ஆமா ..நாமே தூங்கிக்கிட்டு இருந்தா
சோம்பேறிகள் இல்லா உலகை எப்ப பார்க்கறது ...





.

Download As PDF

செவ்வாய், 6 ஜனவரி, 2009

மந்நை மந்தையாய் மடையர்களும் - சொர்க்கவாசல் திறப்பும்.


.


நொரண்டு : நீ யாரையாவது கூப்பிட்டு ...அவரை டே மடையான்னு சென்னா ...அவர் என்ன
செய்வார் ?

நண்டு : பைத்தியம் ,லுசு -னு அடிச்சி துவைச்சி ... ஏன் ...என்னாச்சு ..

நொரண்டு :ஆனா ,அவர்களைஅவர்களே நாங்கள் மடையர்கள் ,முட்டாள்கள் என கூறிக்கொண்டு திரியும்
இடத்திற்கு கூட்டிச்செல்கிறேன் வா ...

நண்டு : என்ன விளையாட்டா.. ஆச்சரியமா இருக்கே ..உண்மையாலுமா..

எங்க ? !!!..எப்போ ..? !!! .. எங்கு ?...


நொரண்டு :உலகெங்கும் உள்ளனர் ..சரி , உனக்கு அதிக அலைச்சல் வேண்டாம்
...வா,.கடைவிதிக்கு ...


நண்டு : அங்கபோய் ...


நொரண்டு :நான் காட்ற இடத்தில நீ இன்னைக்கி ராத்திரி போய் நில்லு .அங்கு மந்நை மந்தையாய் மாக்கள் நின்று கொண்டும் ,கதவு திறக்கும்போது தாங்கள் மடையர்கள் மடையர்கள் என உறுதிப்படுத்திச் செல்வதையும் காணலாம் .

நண்டு :....( நொரண்டு கூட்டிச்சென்ற இடம் ..கடைவிதியில் உள்ள பெருமாள்
கோவில்..)....

( ... இன்று சொர்க்கவாசல் திறப்பாம்.... )


நொரண்டு :உண்மையில் ,யாராவது பேச்சுவாக்கில் கூட உனக்கு அறிவிருக்கா எனக்கோட்டால் கூட
எப்படி கோபம் அனைவருக்கும் வருகிறது (வர வேண்டும்).

உலகெங்கும் ,அவரவர் வழிபாட்டு தலங்களுக்கு செல்பவர்களைப் பார்க்கும் பொழுதும் ,அது சம்பந்தமான ஊர்வலங்கள் , நிகழ்ச்சிகளில் சுற்றி திரிபவர்களை பார்க்கும்பொழுதும் ,மதத்தில் ஏதொதோ செய்பவர்களை பார்க்கும் பொழுதும் அவர்களை அவர்களே" நாங்கள் மடையர்கள் ... சுத்த மடையர்கள் ,நாங்கள முட்டாள்கள் ...அடி முட்டாள்கள் " என கூறிக்கொண்டே செல்வதாகவே நான்
உணர்கின்றேன் . உண்மையும் அது தானே..

அப்படிப்பட்ட கூட்டங்களைப் பார்த்து ....சிறிதும் சுயசிந்தனையில்லாமல்
வாழப்பழக்கப்பட்டு போலி வாழ்க்கை வாழ்ந்துவரும் இவர்களைப்பார்த்து .....


''ஏ ..மனிதர்களே ...திருந்துங்கள் ..."

''ஏ ..மனிதர்களே ...திருந்துங்கள் ..."

''ஏ ..மனிதர்களே ...திருந்துங்கள் ..."


என கூப்பாடு போட தோன்றுகிறது .

நண்டு :. ...எத்தகைய மடையர்கள் கூட்டத்தில் நாம் . ..என்ற நினைப்பில்..


...சுயசிந்தனையுடைய மனிதர்கள் கூடும் கூட்டத்திற்கு என்றாவது ஒரு நாள்
நொரண்டு கூட்டிச்செல்வார் என்ற எண்ணத்தில் .....





.

Download As PDF

வெள்ளி, 2 ஜனவரி, 2009

இடைத்தேர்தலை தடுப்பது எப்படி ?

.


நண்டு : திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயிக்கப்போவது யார் என்று கூற முடியுமா ?

நொரண்டு : எனக்கு யார் ஜெயிக்கிறார்கள்,யார் தோற்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை .ஆனால் ,ஜனநாயகம் முற்றிலும் தோற்றுக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தோன்றுகிறது .

நண்டு :புரியவில்லை .......

நொரண்டு :இடைத்தேர்தல் என வந்துவிட்ட உடன் ஆளும் கட்சியும் ,எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு சூழலுக்கு ஏற்ப அணிகள் அமைத்துக்கொண்டு் அங்கு வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முனைவது சரியான பாதைதான். ஆனால் ...

நண்டு : ஆனால் ..என்ன ..?


நொரண்டு : மிகப்பெரிய ஜனநாயகநாட்டில் நடக்கும் எந்தத் தேர்தலிலும் வன்முறையை கையாலும் கட்சிகள் ஜனநாயகநாட்டில்
கட்சிகளாக இருக்க தகுதியுடையவை அல்ல.
கலைஞரும் , ஜெயலலிதாவும் கட்டளையிட்டால் அவர்களின் கட்சிகளி்ல் அதன்படி மட்டுமே நடக்கும் தொண்டர்கள் மட்டுமே உண்டு . அவர்கள் எந்தப்பிரச்சனையும் வரக்கூடாது என கட்டளையிட்டால் ..இப்படியா நடக்கும் .
தாங்கள் ஜெயித்தால் மகேசன் தீ்ர்ப்பு என்றும் , தோற்றால் பணநாயகம் என்று
கூறிக்கொள்ளப்போகிறார்கள் .
அப்படியிருக்க வன்முறைக்கு காரணம் எதுவாக இருக்கும் ?
அது ஒன்று தி.மு.க அல்லது அ.தி.மு.க என மட்டுமே மக்கள் சிந்திக்க வேண்டும் .
மாறாக மூன்றாவதாக மற்ற எந்த கட்சியையும் மக்கள் ஒருபோதும்
நீனைத்துப்பார்க்கக்கூடகூடாது என்பதுவேயாகும்.
இது ஒருவகையான பாசிஸ்ட் கொள்கையாகும்.
இவற்றை மக்கள் ஒருபோதும் அங்கிகரிக்கவே கூடாது .

நண்டு : மக்களா ... சரி..வேறு ஏதாவது மாற்று ....

நொரண்டு :பொதுவாக இடைத்தேர்தலின் போது தான் இத்தகைய செயல்கள் அதிகம் நடக்கிறது.ஆனால், பொதுத்தேர்தலில் இவ்வளவு நடப்பதில்லை .எனவே பொதுத்தேர்தலில்தேர்ந்தெடுக்கும் முறையி்ல் மாற்றங்கள் கொண்டுவருவதன் முலம் இடைத்தேர்தலை தடுத்துவிடமுடியும் .

நண்டு : இடைத்தேர்தலை தடுக்க எத்தகைய மாற்றங்களை தேர்தலில் கொண்டு வரலாம் என நினைக்கின்றாய் ..ஏதாவது சில யோசனைகள் கூறலாமே.

நொரண்டு : ம்.. என்னைக்கேட்டால் ...ஒவ்வொரு கட்சியும் இரண்டு நபர்களை வேட்பாளராக நியமிக்கவேண்டும் . முதன்மை வேட்பாளராக ஒருவர் ,மற்றவர் முன்னிலை வேட்பாளர் .இருவருக்கும் ஒரேசின்னத்தில் தனித்தனியாக வாக்குச்சீட்டுகள் அளிக்கப்படவேண்டும் .இருவர் பொற்ற வாக்குகளும்
எண்ணப்படவேண்டும்.ஆனால் ,முதன்மை வேட்பாளர்கள் பொற்றவாக்குகளின் அடிப்படையில் மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்படவேண்டும் . முதன்மை வேட்பாளர் இறந்தாலே அல்லது அப்பதவியினின்று தன்னை விடுவித்துக்கொண்டாலோ முன்னிலை வேட்பாளர் அவருக்குப்பதில் நியமிக்கப்படவேண்டும். இப்படிமுன்னிலை வேட்பாள ர் நியமிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் அவர் இறந்தாலே அல்லது அப்பதவியினின்று தன்னை விடுவித்துக்கொண்டாலோ அடுத்து அதிக வாக்குகள் வாங்கிய கட்சியின்
முதன்மை வேட்பாளருக்கு அப்பதவி போய்விடவேண்டும் .
இப்படிப்பட்ட ஒரு சட்டதிருத்தத்தை தேர்தல் கமிசன் கொண்டுவருவதன் மூலம் இடைத்தேர்தலே வராமல் தடுத்துவிடமுடியும் .

நண்டு : ...இடைத்தேர்தலற்ற ---புதிய பொதுத்தேர்தலை கற்பனை செய்து பார்க்கிறேன் ...

.

Download As PDF