புதன், 30 செப்டம்பர், 2015

இனி சாவிகள் பிறக்கப்போவதில்லை ..
காலம்
கடத்துகின்றன
பொருட்களை
ஒன்றிலிருந்து ஒன்றிற்கு

சாவிகளை
மரணக்குழிக்குள்  தள்ளி
சபித்து
சாம்பலாக்கி விட்டன
கடவுச்சொற்கள்

அண்டா ...கா... கக்கும்
அபுக் கா குக்கும்
திறந்து விடு  சீசேம்
இனி
சாவியல்ல
கடவுச்சொல்


காலம்
கடக்க வைக்கின்றன
கருத்துக்களை
ஒன்றிலிருந்து ஒன்றுக்கு

நேற்று சாவி
இன்று  கடவுச்சொல்

இனி
சாவிகள்
இங்கு பிறக்கப்போவதும் இல்லை
பூட்டுக்களை
பூட்டப்போவதும்  இல்லை
திறக்கப்போவதும்  இல்லை


சாவிகள் சாவிகள்  ஆக
கடந்து போகிறது  காலம்  .இங்கு  இனி
சாவிகளுக்கும் வேளையும்  இல்லை
சாவி வேலையும் இல்லை


கடவுச்சொல்
சாவியும் இல்லை
சாவியாவதும் இல்லை.
அ.சொ.பொ .
( வேளை - காலம்  )
.
Download As PDF

சனி, 5 செப்டம்பர், 2015

என் பிரியமானவர்களே

.
.

.

அடைகாக்கப்படயென
அடைகாக்கப்பட
வந்தவன் நான்.
அடைகாக்காமல்
என்னருகில்
ஏதேதோ வெளித்தள்ளி
உருமாற்றுகின்றீர்கள் .
எங்கனம்
அடைகாக்கப் போகின்றீர்கள் ?
சுவாசம் மட்டும் சுவாசமாய்
சுவாசிக்கும் பொருள் சூனியமாய்
உடலும் உயிரும்
மிதவை ஒலிஒளியாய்
குரல் தீனமாய்
ஓட்டிற்குள் அடையாய்
நான்.
அடைகாக்காவிட்டாலும் பரவாயில்லை
என் பிரியமானவர்களே
ஓட்டை உடைக்கும்
மந்திரம் மட்டும் சொல்லிக்கொடுங்கள்
முட்டையிட வைக்கும் வேலை
எனக்களிக்கப்பட்டுள்ளது .

.

.

.
.
Download As PDF