ரத்தமும் சதையுமாக ஒரு மனிதன் இவ்வாறு பூமியில் வாழ்ந்தார் என்றால் வரும் தலைமுறையினர் அதை நம்புவது கடினம் - ஐன்ஸ்டீன்
நொரண்டு : வணக்கம் நண்டு .
நண்டு : வாங்க நொரண்டு .
நொரண்டு : காந்திஜி பிறந்தநாள் இன்று.
நண்டு : என்ன செய்தி ?
நொரண்டு : ஒன்னுமில்ல காந்தியப்பத்தி கேக்கலாம்னு வந்தேன் .
நண்டு : என்ன தெரிஞ்சுக்கணும் .
நொரண்டு :மகாத்மா காந்திக்கு பின் இந்தியாவில் காந்தியம் என்ன ஆனது?. காந்தியம் இன்னும் இருக்கிறதா ,தொடர்கிறதா ? இல்லை...
நண்டு : மிக நல்ல கேள்விகள் . காந்தியம் தொடர்கிறது என்பதுவே உண்மையும் நடப்பும்
நொரண்டு :தொடர்கிறதா !!!!!!
நண்டு : ஆம் .
நொரண்டு : எவ்வாறு ?
நண்டு : உலகில் உள்ள ,ஒவ்வொரு மனிதர்களின், இதயத்திலும் ,மலர்ந்து மலர்ந்து ,மிகப்பெரிய மிகப்பெரிய சக்தியாக ...
நொரண்டு : உலகில் உள்ள ஒவ்வொரு இதயத்திலும் ... புரியல ?
நண்டு : காந்தியம், இந்தியாவைத்தாண்டியும் பயணித்துக்கொண்டு , பயனடையவைக்கின்றது உலக சமுதாயத்தை .
நொரண்டு : புரியல ?.
நண்டு : ஒபாமா தெரியுமா .
நொரண்டு : என்ன கிண்டலா ...அவரை தெரியாதவங்க உலகத்தில் இருக்கமுடியுமா...
நண்டு : காந்தியத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் மிகச்சிறந்த காந்தியவாதியாகவும் உருவெடுப்பார் என்பது எனது கருத்து .
நொரண்டு :மகாத்மா காந்தி சமாதியை பார்வையிட்ட அவர் அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் “அன்பு, சகிப்புத் தன்மை, அமைதி மூலம் இந்த உலகையே மாற்றிய மகாத்மாவை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்துள்ளோம். அவர் மறைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர் ஏற்றி வைத்த ஒளி, இந்த உலகுக்கே இன்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பு எழுதினார்.
நண்டு : ஆம்,அந்தளவிற்கு காந்தியின் மீது பற்றுக்கொண்டவராக திகழ்கின்றார் .
நொரண்டு :நல்லது .
நண்டு : மார்ட்டின் லூதர் கிங் ...
நொரண்டு :" Why We Can't Wait " என கூவியவர்.
நண்டு : நெல்சன் மண்டேலா ....
நொரண்டு :'' Only free men can negotiate; prisoners cannot enter into contracts. Your freedom and mine cannot be separated '' என்றவர்.
நண்டு : சுந்தர்லால் பகுகுணா
நொரண்டு : "முதல், இரண்டாம் உலகப் போர்கள் ஐரோப்பிய நாடுகளின் தீராதப் பேராசைப் பசியால் உருவானது. மூன்றாம் உலகப் போரென்று ஒன்று வந்தால், அது நீரைப் பங்கிடுவது குறித்துதான் எழும்." என்ற "பசுமை போராட்ட வீரர்'
நண்டு : சிவராம் காரந்த் .
நொரண்டு : 93 வயது வரை ஊர் ஊரா சமுதாயப் பணிகள் செய்த சமுதாயப் பணிகள் செய்த கன்னட நாவாலாசிரியர்.
நண்டு : Harivallabh Parikh .
நொரண்டு :மக்கள் நீதிமன்றம் இவரை அடையாளப்படுத்தும் .
நண்டு : பிரேம் பாய்
நொரண்டு :1971-72 இல் 5 லட்சம் வங்காளம் அகதிகள் மத்தியில் இவர் ஆற்றிய பணியை மறக்கமுடியுமா ?.
நண்டு : "மரங்களை கட்டிபிடித்துகொள்!"
நொரண்டு :சாந்தி பிரசாத் பட், கௌர தேவி என்ற இயற்கை மனிதங்கள்.
நண்டு : Narayan Desai
நொரண்டு :அகிம்சை படையின் அமைதிப்போராளியாயிற்றே.
நண்டு : ஜெயப்பிரகாஷ் நாராயண்
நொரண்டு : Emergency யை உடைத்து காந்தி தேசத்தை காத்த வித்தகர்.இவரை மறந்தவர் ஜனநாயகத்தை அறியாத மூடராவார்.
நண்டு : வினோபா பாவே
நொரண்டு :காந்தியின் ஆன்மீக வாரிசு, ஏழைகளுக்கு நான்கு மில்லியன் ஏக்கர் நிலத்தை சேகரித்து தானமாக தந்த துறவி .
நண்டு : பாபா ஆம்தே
நொரண்டு :பூவுக்குள் மலரை வைத்தவர் .
நண்டு : அன்னா ஹசாரே
நொரண்டு : சொல்லவும் வேண்டுமோ ????
நண்டு : கிருஷ்ணம்மாள்-சங்கரலிங்கம் ஜகன்னாதன்
நொரண்டு : காந்திய கொள்கைகளுக்காகவும், நிலமற்ற தலித்துகளுக்காகவும் சேவை செய்யும் நாகப்பட்டினத்து காந்தியவாதி.
நண்டு : ஈரோட்டைச்சேர்ந்த ...
நொரண்டு : இரு ....இவர்களை எல்லாம் ஏன் குறிப்பிடுகின்றாய் ?.
நண்டு : இவர்களின் வாழ்க்கைப்பாயணத்தை படித்தைப்பார்த்தாலே நன்கு புரியும் . இவர்களின் சேவைகள் அனைத்தும் காந்தியத்தின் நன்மைகள் அனைத்தும் மக்கள் பூரணமாக அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே என்பதனை ,அதனால்...
நொரண்டு :ஓ...அப்படியா ....இப்படிப்பட்ட பல உன்னதர்கள் தோன்றிக்கொண்டே இருந்தாலும் காந்தியைப்பற்றிய பார்வை மங்கலாகவே இருக்கிறதே ,காந்தீயம் பரவாமல் இருக்க எது தடையாக உள்ளது ,அதற்கான காரணங்கள் என்ன ?.
நண்டு : மூன்று விசயங்கள் தடையாக உள்ளது .
நொரண்டு : எவை அவை ?.
நண்டு : முதலாவதாக காந்தியைப்பற்றியும்,காந்தியத்தைப்பற்றியுமான அறியாமை ,இரண்டாவதாக காந்தியத்தை வேண்டுமென்றே புறக்கணிக்கும் அரசியல் கேட்பாட்டு அபத்தங்கள் ,மூன்றாவதாக மகாத்மா காந்தி என்னும் மாயை.
நொரண்டு : ம் ...இந்த மூன்றுமே அறியாமை தானே ?
நண்டு : முதலாவது ஆழ்ந்த அறிவும்,பார்வையும் இல்லாதவர்களால் மேற்கொள்ளப்படுவது , இரண்டாவது கற்பிக்கப்பட்ட கற்பிதம் .முதலாவதான அறியாமையை அகற்றிவிட முடியும் .இரண்டாவதின் வாழ்வு சார்ந்த முரட்டு மூடத்தை காலம் தான் படிப்படியாக உணர்த்தும்.
நொரண்டு :அவர்கள் அவர்களுக்குள்ளே திருத்தப்பட வேண்டியவர்கள் அப்படித்தானே .ஆமாம் .அப்படிப்பட்ட அவர்கள் யார் ?.
நண்டு : ஏன் கேட்கிறாய்?
நொரண்டு :அடையாளப்படுத்தப்பட்டால் திருத்தப்படுதல் எளிதாகும் அல்லவா அதற்காக ?
நண்டு : அன்னா ஹசாரேயின் போராட்டத்திற்கு ஆதரவுதவர்களில் முதன்மையானவர்கள் யாரென்று சொல்லமுடியுமா ?
நொரண்டு : ம் ....
நண்டு : காந்தியை பனியாவிற்கு ஆதரவாளராக பார்ப்பவர்கள் யாரென்று உன்னால் கூறமுடியுமா ?.
நொரண்டு :தெரியல ?.
நண்டு : ம் ....
நொரண்டு :குழப்பாதே.எனக்கு காந்தியைப்பற்றியும், காந்தியத்தைப் பற்றியுமான அறியாமை பற்றி முதல்ல சொல்லு.அத புரிஞ்சுட்டு ,பிறகு அடுத்தத புரிய முயற்சிக்கின்றேன் .
நண்டு : இன்று நம்மவர்கள் காந்தியவாதிகளுக்கு கொடுக்கும் மரியாதையை, காந்திக்கும்,காந்தியத்திற்கும் கொடுக்க முன்வராததினின்று ...
.
மாயை ...தொடரும் ......
.