திங்கள், 30 ஜனவரி, 2017

காந்தி என்ன செய்து கிழிச்சார் , அவரால நாட்டுக்கு என்ன லாபம்.


காந்தி என்ன செய்து கிழிச்சார் , அவரால நாட்டுக்கு என்ன லாபம்.அவர் வெள்ளக்காரங்ககிட்டயிருந்து பிரிச்சு கொள்ளக்காரர்கிட்ட நாட்ட கோடுத்துட்டார்.அதனால தான சுதந்திரமே வேணாமுனு நாங்க சொன்னோம்.காந்திக்கு சப்போட்டா பேசரவங்க முதலில வரலாறு தெரிஞ்சுக்கனும் என பேசும்  கண்மணிகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக ...


...............

அடிமைப்பட்ட பல நாடுகளிலே 'சுதந்திரம் வேண்டும்' என்பது மட்டுமே பிரச்னை - இங்கோ, சுதந்திரமும் வேண்டும், புது சமுதாய அமைப்பும் வேண்டும் என்று கேட்கவேண்டிய நிலைமை இருந்தது. இங்கோ, விடுதலை வேண்டும் என்று போராடத் தொடங்கிய போது, அன்னிய ஆட்சி ஒழிய வேண்டும், என்பது மட்டும், முழக்கமாக இல்லை - அந்த ஒரு முழக்கம் மட்டும் போதுமானதாகச் தெரியவி்ல்லை. அன்னிய ஆட்சி மட்டும் தொலைந்தால் போதும் என்ற அளவுடன், நின்றுவிட மனமில்லை - ஏனெனில் இந்நாட்டு அமைப்பு முறை, தேவையான வேறு பல இலட்சியங்களைக் கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது. எனவேதான் இங்கு சாதாரணமாக, அடிமைப்பட்ட மற்ற நாடுகளிலே, அன்னிய ஆட்சி ஒழிய வேண்டும என்ற ஒரே ஒரு முழக்கம் மட்டும் கிளம்பியது போலல்லாது,

அன்னிய ஆட்சி ஒழியவேண்டும்.
மக்களாட்சி மலர வேண்டும்.
இந்து - முஸ்லிம் ஒற்றுமை வேண்டும்.
தொழில்கள் பெருக வேண்டும்.
கல்வி பரவ வேண்டும்.
ஜாதி பேதம் ஒழிய வேண்டும்.
தீண்டாமை போக வேண்டும்.
கிராமம் சீர்படவேண்டும்.
வறுமை போக வேண்டும்.
சுரண்டல் முறை ஒழிய வேண்டும்.

என்ற வேறு பல இலட்சிய முழக்கங்கள் கிளம்பின. மற்ற நாடுகளிலே நடைபெற்ற விடுதலைப்போர் சூழ்நிலைக்கும், நமது நாட்டிலே விடுதலைப் போர் நடந்த போதும், அதற்குப் பிறகும் உள்ள சூழ்நிலைக்கும், இது ஓர் மகத்தான வித்தியாசம் - இதிலேதான், எதிர்காலத்தை உருவாக்கும் சூட்சமம் இருக்கிறது. ...


ஏழை ஈடேற வேண்டும்.
ஏழை உரிமை பெறவேண்டும்.
ஜாதிபேதம் ஒழியவேண்டும்.
ஒற்றுமை மலரவேண்டும்.

என்று கூறினதுடன், 'இத்தகைய இந்தியா உருவாக வேண்டும், அதுவே என் இலட்சியம், அதற்கே நான் பாடுபடுகிறேன்' என்றும் கூறினார்.... - அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரையிலிருந்து ...............


உலக உத்தமர், மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம், ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக் கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது, இழிகுணத்தான், மானிலம் போற்றும் மகாத்மாவைக் கொலை செய்து, உலகம் இன்றும் அழுதுகொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை, எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம் - ஏக்கம் . எவருக்கும் தாங்கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப்பற்றிப் பேச முனைகிறோம். ஒவ்வொரு பேச்சும், மீண்டும் மீண்டும், கண்ணீரைக் கொண்டுவரவே உதவுகிறது. மூண்ட தீ அணையவில்லை துக்கம் தரும் நிலை அது. ஆனால் அவர் புகழ் ஒளிபரவுகிறது. அதை எண்ணுவோம்; ஆறுதல் பெற முயற்சிப்போம்.
நாம் அரசுரிமை இழந்திருந்தபோது அவர் பிறந்தார்; அவர் மறையும்போது நாம் அரசுரிமை பெற்று வாழ்கிறோம்.

அவர் பிறந்தபோது நமது நாடு, உலகிலே இழிவும் பழியும் தாங்கிய நாடாக இருந்தது. அவர் மறைந்திடுவதற்கு முன்னும் மாஸ்கோவிலிருந்து நியூயார்க் வரையிலே உள்ள சகல நாடுகளிலும் நமது விடுதலையை விளக்கும் விருது பெற்று, தூதுவர்களும், பிரதிநிதிகளும் வீற்றிருக்கும் நிலை உண்டாகிவிட்டது.

அவர் பிறந்தபோது, உலக மன்றத்திலே, நமக்கு இடம் கிடையாது. இன்று நாம் இருந்தால் உலக மன்றத்திலே புதியதோர் பலம் என்று பல நாடுகள் எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அவர் பிறந்தபோது, இங்கு தேவைப்படும் எந்தச் சாமானுக்கும், வெளிநாட்டின் தயவை நாடி, ஏங்கிக் கிடந்தோம். இன்று வெளிநாடுகள், நமது சரக்குகளைப் பெற நம்முடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வதற்குத் தமது ராஜதந்திரத்தை உபபோகிக்கும் அளவு மாறுதலைக் காண்கிறோம்.

அவர் பிறந்தபோது, கோயில்கள் மூடிக்கிடந்தன. தீண்டாதார் என்ற தீயோரால் அழைக்கப்பட்டு வந்த தியாகப் பரம்பரையினருக்கு அவர் கண் மூடுமுன், மூடிக்கிடந்த கோயில்கள் எல்லாம் திறந்துவிடப்பட்டன.
குடித்துக் கிடப்பது மிகச் சாதாரணம், சகஜம் என்று யாரும் எண்ணிக்கொண்டிருந்த நாட்கள், அவர் பிறந்த காலம் மதுவிலக்குச் சட்டம் அமுல் நடத்தப்படுவதைக் கண்டான பிறகே, அவர் மறைந்தார்.

அவர் பிறந்த காலத்திலே, சூரியனே அஸ்தமிக்க அஞ்சும்படியான அளவுள்ளதாக இருந்தது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் ஆதிக்கப் போக்கு அழிந்ததைக் கண்டான பிறகே, அவர் கண்களை மூடினார்.

அவர் பிறந்த நாட்களிலே, பிரிட்டனிலிருந்து, கவர்னர்களும் மற்ற அதிகாரிகளும் இங்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆள்வதற்கு அடிமை இந்தியாவை விட்டு வெளியே அவர்கள் போகும் காட்சியைப் பார்த்துவிட்ட பிறகே, உத்தமர் உயிர் நீத்தார்.

இவ்வளவையும், அவர், மந்திரக்கோல் கொண்டோ, யாக குண்டத்தருகே நின்றோ சாதிக்கவில்லை மக்களிடையே வாழ்ந்து மக்களின் மகத்தான சக்தியைத் திரட்டிக் காட்டிச் சாதித்தார். புதிய வாழ்வு தந்தார். புதிய அந்தஸ்து தந்தார்.

இவ்வளவு தந்தவருக்கு அந்தத் துரோகி தந்தது, மூன்று குண்டுகள், சாக்ரடீசுக்கு விஷம் தந்ததுபோல.
அவர் சாதித்தவைகள் மகத்தானவை. ஆனால் அவர் சாதிக்க எண்ணியிருந்தவை வேறு பல. அவை மேலும் மகத்தானவை.

நாட்டிலே உள்ள மற்றக் கொடுமைகள் ஜாதிச் சனியன், வறுமை, அறியாமை ஆகியவற்றை அடியோடு களைந்தெரிந்துவிட்டு, உலகினர் கண்டு பின்பற்றத்தக்க முறையிலே, உன்னதமான இலட்சியங்களைக் கொண்ட ஓர் சமுதாயத்தைக் காண விரும்பினார். அதற்காக அரும்பாடுபட்டு வந்தார். அந்த நேரத்திலே ஆத்திரத்தால் அறிவை இழந்தவனால், அவர் கொலை செய்யப்பட்டார்.


உலகப் பெரியார் காந்தி - அறிஞர் அண்ணாவின் வானொலிப் பேச்சு .


Download As PDF

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

இங்கு எரிமலைகள் மட்டும் வெடிப்பதில்லை.

நீங்கள் பார்க்கும் 

இந்த ஓவியம் நான் வரைந்தது.

ஓவியத்தின் தலைப்பு  YIN TU  

இதை பார்த்த பலர் பலவிதமான பார்வைகளை பகிர்ந்தும் ,
YIN TU என்ற பெயருக்கான காரணத்தையும் 
என் மூலம் அறிய முயன்றபொழுதெல்லாம் 
நான் அவர்களை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் என கூறிவந்தேன்.

நேற்று எனது நண்பன் கேட்டுக்கொண்டதற்கிணங்க 
இது பற்றிய எனது மௌனம் கலைந்தேன் . 
YIN TU  வை வரைந்த போது  நான் எழுதிய சிற்பாக்கள் .

.
.

.
என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்
.

.
.

சுத்தம் செய்யப்படும்
எவ்விடமும்
பழையதின் சலசலப்பு

.
.

.


YIN TU  என்றால் ? ...

உலக வரலாற்றில் மறைக்கப்பட்ட விசயங்கள்,மறக்கப்பட்ட விசயங்களில் இதுவும் ஒன்று .

இங்கு வரலாறு முழுவதும் எழுதப்பட்ட ஒன்றாகவே
இருக்கிறது.( அ.பொ : எழுதப்பட்ட - எழுத்தத்தெரிந்தவர்களால் படிக்கத்தெரிந்தவர்களுக்காக ஆக்கப்பட்டது ) .
உண்மையான வரலாறு இனி வரும் .
அதற்கான சூழல் உருவாகிவருகிறது.

YIN TU  என்பது எழுதப்பட்ட வரலாற்றில் எழுதப்படாத பக்கங்களில் எழுப்பப்பட்ட சில உண்மைகளில் இருந்து பெறப்பட்ட வார்த்தை. 

இவ்வார்த்தையின் அர்த்தம் ' மகான்களின் பூமி '.
அதாவது ' நல்லவர்களின் பூமி ' .' உயர்தோரின் இருப்பிடம் '

இது எங்குள்ளது என்றதற்கு 
இவ்வார்த்தையை உச்சரித்தவர்கள் சுட்டிக்காட்டிய இடம் நமது தாயகம்.இவ்வாறு நமது நாட்டை அழைத்ததன் காரணத்தினால், 
நமது மா நிலத்தை மிக அருமையான வார்த்தையினால் உச்சரித்த மாந்தர்கள் மறந்துவிட்ட மறை விடயங்களினின்றும் ,அதன் உண்மைத்தன்மையினாலும் ,சமிப வரலாற்று நிகழ்வுகளானாலும் பீய்த்துக்கொண்டு வெளிவருகின்றது.நமது மாந்தரின வரலாறு.


உண்மையில் அன்பானவர்களால் நிறைந்திருந்த நமது நாடு காலத்தின்  சுவடுகளால் நசுக்கப்பட்டு ,இன்று பாதங்களை விட பார்வையே முக்கியம் என்ற உன்னத நிலைக்கு உந்தப்பட்டு வரலாற்றை முடுக்கவேண்டிய நிலையில் பாய்ந்து பறந்துகொண்டிருக்கிறது.

சில சிற்பாக்கள்

.

.


வரலாறும் 
உண்மையும் .
இங்கு எரிமலைகள் மட்டும் வெடிப்பதில்லை..

.இறந்தது
வீழும் .
கல்லறை மலர்கள்..


.


ஓவியங்களும் உண்மை சொல்லும்.


.
Download As PDF

சனி, 28 ஜனவரி, 2017

இப்படித்தான் பாவப்பட்ட ஆமைகள் இறப்பதாக நீதி. // உனது ஆதிக்க சக்திக்கு கட்டுப்பட்டு வாழ
எனக்கு சிறிதும் விருப்பமில்லை. அதோடு என்னை ,எனது இயல்புக்கு மாறாக மாற்றிய உன்னையும் சும்மா விட மனமும் இல்லை . அதனால் தான் எனது இயல்பை வெளிப்படுத்தினேன் .
இதில் தவறென்ன இருக்கிறது.சில நிமிடங்கள் வாழ்ந்தாலும் நான் நானாகவே வாழ விரும்புகிறேன் , அதனால் ...//

கடுமையான விடம் கொண்ட தேள் ஒன்று
பெருமழையினால்
எதிரேயுள்ள ஆற்றை கடந்து வாழ எண்ணியது.

அதனால் ஆற்றை கடக்க இருந்த ஆமை ஒன்றை தன்னை ஏற்றி ஆற்றைத்தாண்டி அழைத்து செல்ல வேண்டியது .

அதற்கு 'மாட்டேன்...நீ என் முதுகில் சவாரி செய்யும்போது என்னை கொட்டி விடுவாய்.அப்படி நிகழ்ந்தால் நான் இறந்துபோவேன்' என்றது ஆமை.

அதற்கு தேள்,'உன்னை நான் கொட்டினால் நீ இறப்பாய் ,அதனால் நீரீல் மூழ்கிப்போவாய் அப்போது நானும் முழுகி இறந்துவிடுவேன் அல்லவா' என்றது.

ஆமை தேளை ஏற்றி ஆற்றை கடக்க ஆரம்பித்தது.

பாதி தொலைவில் தேள் ஆமையை கொட்டியது.

ஆமை,ஏன் கொட்டினாய்,இது எந்த விதத்தில் சரி என கேட்டது .

அதற்கு தேள், 'நீ  கேட்பது தான் எனக்கு புரியவில்லை.
எனது குணம் கொட்டுவது.அதை மாற்றச்சொன்னது உனது ஆதிக்க மனோபாவம்.நானும் உனது ஆதிக்க வார்த்தைக்கு கட்டுப்பட்டு
வாழும் ஆசையில் இந்த ஆற்றை உன் நிபந்தனையில் கடக்க சம்மதித்தேன் .

பிறகு தான் யோசித்தேன் .

உண்மையில் என்னால் ஆற்றை கடக்கமுடியாது தான் .நான் தனியாக யாரின் துணையுமின்றி ஆற்றை  கடக்க முயற்சித்திருந்தாலும் ஆற்றில் மூழ்கி இறந்து தான் போயிருப்பேன் .கடக்காமல் இருந்திருந்தாலும் பெருமழையால் இறந்து தான் போயிருப்பேன் .ஆனால்,நான் இறந்து விடுவேன் என்பதற்காக உனது ஆதிக்க சக்திக்கு கட்டுப்பட்டு வாழ எனக்கு சிறிதும் விருப்பமில்லை. அதோடு என்னை ,எனது இயல்புக்கு மாறாக மாற்றிய உன்னையும் சும்மா விட மனமும் இல்லை . அதனால் தான் எனது இயல்பை வெளிப்படுத்தினேன் .இதில் தவறென்ன இருக்கிறது.சில நிமிடங்கள் வாழ்ந்தாலும் நான் நானாகவே வாழ விரும்புகிறேன் , அதனால் கொட்டினேன் 'என்றது .

நான் செய்தது உதவியில்லையா என்றது ஆமை .

நான் எதற்காக பயணம் செய்கின்றேன் என கேட்காமல் ,ஆற்றின் ஆபத்தையும்,அக்கரையின் தன்மையையும் கூறாது.என்னால் ஆபத்தில்லை என்ற உத்திரவாதத்தை மட்டுமே பெற்று அழைத்துச்சென்ற நீ,இதை எப்படி உதவியென்கிறாய் ,நீயும் ஆற்றை கடக்கத்தானே இருந்தாய் என்றது தேள் .

அப்பொழுது வந்த பெருவெள்ளம் இருவரையும் மூழ்கடித்தது .


இப்படித்தான் பாவப்பட்ட ஆமை இறக்கின்றன.


இப்படித்தான் பாவப்பட்ட ஆமைகள்  இறப்பதாக நீதி.
.   
Download As PDF

வியாழன், 26 ஜனவரி, 2017

எதிர்மறை எண்ணங்கள் .எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.

வளைந்து வளைந்து
பாதை சென்றாலும்
பாதை பாதையினின்று
வளைந்து சென்றதில்லை .

வளமான பாதையில்
சுழல நினைத்தாலும்
சுழலும் பாதையில் சுகம்கண்டதால்
வளமான வாழ்விற்கு வக்கில்லை.

எப்பொழுதும் எல்லோர்க்கும்
எப்பொழுதும்  வாய்ப்பதில்லை
எப்பொழுதென்பது  எப்பொழுது என்றாலும்
எப்பொழுதென்பது  எப்போதும் இங்கில்லை.

சோக ரேகை
மனதினில் தோன்ற
சோம்பல் ரேகை
முகத்தில் தொலைவதில்லை .

மறக்கும் எண்ணம்
நினைவினில் தோன்ற
நினைக்கும் எண்ணம்
மறப்பதை தொலைப்பதில்லை.

எதற்காகவோ வாழ்வு என்றாலும்
எதற்காக வென்பதே
நமக்காகும் போது
நமக்கா வென்பது ஏதும் இங்கில்லை.

இல்லை யென்பது
இங்கில்லை யென்றாலும்
இல்லை இல்லாமல்
இங்கொன்றும் இல்லை .

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறை யென்றாலும்
எதிர்மறை எண்ணங்கள்
எண்ணாமல் முடிவதில்லை.

எப்படி யென்றாலும்,

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.Download As PDF

வியாழன், 12 ஜனவரி, 2017

புத்தரை எனக்கு ஏன் பிடிக்கும் .

மிகவும் மென்மையாக ,அழகாக  எழுதப்பட்டது
புத்தரின் வரலாறு.

மிகவும் திட்டமிடப்பட்டு எழுதப்பட்டதால்
மிகமிகநாகரிகமான நயங்கள் அவற்றில் காணப்படும்.


''Paul Carus'' எழுதிய
''THE GOSPEL OF BUDDHA'' என்னும்
''புத்தரின் புனித வாக்கு'' என
''மு.கி.சந்தானம்'' அவர்களின் தமிழாக்கத்தில்
இந்திய அரசு வெளியிட்ட நூல் .
அப்படியானவைகளில் ஒன்று

அதனின்று சில பகுதிகள் ...

அவருடைய கணவனாகிய அரசன் .அரசியரின் புனிதத்தன்மையுடன் விளங்கும் சமயத்தில் அவரை கௌரவித்தார் ...
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார் -4.போதிசத்துவரின் பிறப்பு -3-பக்கம் 11 )
எவ்வளவு நயம் பாருங்கள் எழுத்தில்.

''சாம்ராஜ்யம் அவரை நாடி வரும் .ஒன்று இவர் புவியாளும் ராஜாதி ராஜாராக ஆவார்.அல்லது உண்மையில் புத்தராக ஆவார் ''.
( இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார் -4.போதிசத்துவரின் பிறப்பு -21-பக்கம் 15 )

கடைசி புத்தர் என்னும் முன்முடிவை பக்குவமாக இயம்பியுள்ளதை பாருங்கள் .

இளவரசருக்கு அரசர் கொடுத்திருந்த மாளிகை அனைத்து சொகுசுகளும் நிறம்பப் பெற்றிருந்தது ...-1
துயரங்கள் சித்தார்த்தரை வந்தடையாது இருந்தால் தான் இளவரசருக்கு உலகின் துயரங்கள் இருப்பது அறியாமல் போகும் என்று நம்பினார் -2
ஆனால்,சிறைப்பிடிக்கப்பட்ட யானை காட்டு வாழ்வுக்கு ஏங்குவது போன்று இளவரசருக்கு வெளி உலகைக்கண ஆசைப்பட்டார் -3
சுத்தோதனரும் நான்கு கம்பீரமான குதிரைகள் பூட்டப்பட்டு நகைகளால் ஜொடிக்கப்பட்ட தேரை சித்தம் செய்து இளவரசர் செல்லும் சாலை முழுவதையும் அலங்கரிக்கச் செய்தார்-4
அதன்படி நகரின் வீடுகள் எல்லாம் திரைச்சீலைகளாலும் பதாகைதோரணங்களாலும்,அழகுபடுத்தப்பட்டன.பார்வையாளர்கள் சாலை இரு மருக்கிலும் நின்று தங்களது அரசருக்கு வாரிசான இளவரசரைஆவலுடன்எதிர்கொண்டுஅழைத்தனர் .சித்தார்த்தரும் தமது தேர்ப்பாகன் சன்னாவுடன் நகரின் வீதிகளிலும்,நீரூற்றுக்களாலும் கண்ணிக்குஇனியமரங்களாலும் நிறைந்த புறநகர் பகுதிகளிலும் தேரில் வலம் வந்தார்-5
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார்-6.மூன்று துயரங்கள்-1-5 -பக்கம் .18,19)

இது வரை சரியாக இருந்தது .
காட்சி உடனே மாறுகிறது

''அவ்வாறு வலம்வரும் பொழுது வழியில் கூன் விழுந்து,முகத்தில் சுருக்கம் ஏற்பட்ட ,கவலை தோய்ந்த பார்வையை உடைய முதியவர் ஒருவரை சந்தித்தார் ...''
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார்-6.மூன்று துயரங்கள்-6 -பக்கம்.19)
மேலும் முன்னேறுகையில்,வழியில் வயதான ஒருவர் தென்பட்டார்.அவர் உடல் உருக்குலைந்தவராக வலியால் துடித்து அவதிப்பட்டு மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார்.-9
பிணத்தைச் சுமந்து கொண்டு நான்கு பேர் எதிர்ப்பட்டனர் ...-13
(இளவரசர் சித்தார்த்தர் புத்தர் ஆகிறார்-6.மூன்று துயரங்கள்-9,12 -பக்கம்.21)

இவ்வாறு செல்கிறது ...

'' இந்த விசயம் அவருக்கு தெரியாது அதனால் தான் இப்படி''.
'தலைவி நாலேசுக்கே எதுவும் போகரதில்ல ,அவங்க நாலேசுக்கு போச்சுனா கட்சி இன்னேரம் எப்படி இருக்கும் தெரியுமா ?' .
'தலைவருக்கு மட்டும் இது தெருஞ்சதுனூ வச்சுக்க பிச்சிடுவாறு பிச்சு' .
'அய்யாகிட்ட இத சொல்ல வேண்டாம் .அவருக்கொல்லாம் இதுக்கு நேரமில்லப்பா நான்  முடிச்சுத்தாரேன்'.
'அடடா,ஏப்பா இத என் கவனத்துக்கு கொண்டுவல்ல .சரி ,இனி நான் பாத்துக்கரேன் '.

நிறையா இடங்களில் இப்படியான வார்த்தைகளை கேட்கும் போதெல்லாம் எதற்காக அவர்கள் அங்கிருக்கின்றார்கள் என்ற எண்ணம் தோன்றும் .

ஆழ்ந்து யோசித்ததில் ...

காந்தி ,சே போன்றோர் மக்களை நேரடியாக சந்தித்தனர் .சந்தியில் .அதனால் தான் அவர்களுக்கு மக்களின் உணர்வுகள் புரிந்தது .

அப்படி இல்லாதவர்களால் மக்களை நேசிக்க முடியாது .
நேசிப்பதாக சொல்லதெல்லாம் வெறும் பேச்சே .

//நகரின் வீடுகள் எல்லாம் திரைச்சீலைகளாலும் பதாகைதோரணங்களாலும்,அழகுபடுத்தப்பட்டன.// என்ற முன்னேற்பாட்டுடன் சென்ற புத்தர் மூன்று துயரங்களை புத்த கதைகள் கூறியபடி தேரில் சென்று சந்தித்திருக்க வாய்ப்பில்லை .
அதுவும் ஒரே நாளில் .
இவை மிகைப்படுத்தப்பட்டுள்ளது ,
எனினும் புத்தர் மக்களை தனியாகவே சந்திந்திருக்கின்றார் என்பது தான் உண்மை .எது எப்படி என்றாலும் புத்தர் மக்களை நேரில் சந்தித்துள்ளார் .பல நாட்கள் பல இடங்களுக்கு சென்றிருக்கின்றார் .இளவரசராக இருந்துகொண்டு. ஆனால்,அரசு அதிகாரமின்றி .
தனக்கு இவ்வுலகின் இயல்பான வாழ்க்கையை ஆடம்பரம் என்னும் மறைப்பின் மூலம் அதிகாரம் தனிமைப்படுத்துகிறது என்பதனை உணர்கிறார் .பிறகு அவர் தனது பயணத்தை ஆடம்பரம்,அதிகாரம் இன்றி தொடரவிரும்பி இயற்கையுடன் இயைந்த மனித வாழ்வை நோக்கி நகர்கின்றார்.

மக்களையும் அந்த நகர்வை நோக்கி அழைத்தார் .
அதனால் இவர் மக்களுடன் ஐக்கியமாகி விட மக்களும் இவருடன் ஐக்கியமானார்கள் .

இந்த ஐக்கியமான நகர்வுதான் புத்தரிடம் எனக்கு பிடித்தது.
.... . .Download As PDF

திங்கள், 9 ஜனவரி, 2017

இது படிக்காதவர்களுக்கு மட்டும் - சிறுகதை


டிஸ் காம்பஸ் சிறுகதை -புனைவு.


.
.
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
அவர்கள் அரசனை,
எங்கள் தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
காடுகளும், மலைகளும்
எங்கள் இருப்பிடமாக
வனாந்திரம்
எங்கள் வசத்தில் இருந்தபோது
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்.
கடுமையான போட்டிக்கு இடையே
அவரவர் உணவை அவரவர் தேடி
சூரிய ஒளிக்குள் சுழன்று கொண்டு
உலகம் முழுவதும் ஓரினமாக
தேடும் உணவை பகிர்ந்து கொண்டு
சேகாரம் செய்யா சேர்ந்தினமாக
உணவுத் தேடலே வாழ்வுரிமையாக
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
அவர்களுடைய அரசன்
எங்களின் தலைவனாகும் வரை.
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
காட்டு வழியே ஓடி கடல் கடந்து
மிளகு விளையும் தேசம் நோக்கி சென்ற
அவர்களின் அரசனை
எங்களுடைய தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள் ....

என்ற பழங்குடிகளின் பழம் பாடல் காலம் காலமாக மலைகள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது.இன்றும் அவர்களின் வாய்கள் அவற்றை முணு முணுத்துக் கொண்டே இருக்கிறது என்று ஆரம்பித்தது என்று தெரிந்து கொண்டாலும் எப்போது முடியும் தெரியவில்லை. காரணம், ஈடிபஸ் கண்டுபிடிக்க முடியாத இடம் நோக்கி சென்றுவிட்டான். அவனை கண்டுபிடிக்க உதவும் ஒரு சிறு தகவல்தான் மேற்கூறிய பழங்குடிகளின் உள்ள குமுறல்…


ஈடிபஸ் தனது குதிரையின் மூலம் தீப்ஸிலிருந்து நகருகிறான்.எவ்வளவு நேரம், தூரம் ஓடியது என்று தொரியவில்லை.கண்குழியில் அதிக வலி எடுக்கவே குதிரையை நிறுத்தினான்.குதிரையை மட்டுமே உதவியாக கொள்ள வேண்டியிருப்பதால் அதனது எண்ணத்திற்கு அதிக மதிப்புகொடுத்தால் தான் மீண்டும் பயணிக்கமுடியும் என்பதால் குதிரைக்கு ஓய்வு கொடுக்கஎண்ணி குதிரையில் இருந்து இறங்கி அமர்ந்தான்.கைகளாலே மெல்ல மெல்ல இடத்தின் தன்மையைஆராய்ந்தான்.கைகளை அங்கும், இங்கும் போட்டுதுலாவினான். அவன் நினைத்ததுபோலவே நடந்துவிட்டது.ஆம், தடி ஒன்று கிடைத்து விட்டது.அதன் உதவியுடன் இடங்களை துலாவ ஆரம்பித்தான்.தடி ஏதோ சலசலப்பை ஏற்படுத்த அதை நோக்கி நகர்ந்தான்.ஒரு செடியினைக் கைப்பற்றினான்.என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.வேக வேகமாக அதன் இலைகளை பறித்து கண் குழிகளில் கசக்கி அப்பிக் கொண்டான். சற்று இதமாக இருக்கவே மீண்டும் சில இலைகளை சேகரித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து கண் குழிகளில் ஊற்றினான்.கண் குழிகளில் குளுமை தெரியவே ஆனந்தமாக அப்படியே செடியை ஒட்டியே படுத்துக் கொண்டான்.அதிகம் பயணித்த களைப்பில் அயர்ந்துவிட்டான்.


பறவைகள் சத்தங்கள் கேட்டு எழுந்தான் ஈடிபஸ் . பறவைகளின் சத்தம்  கேட்டுக் கொண்டு இருக்கவே பகல்பொழுது என்று உணர்ந்து தன் கையில் கிடைத்த தடியை மட்டும் துழாவி எடுத்தான். அதன் உதவியினால் மெல்ல எழுந்து தடியை தட்டி தட்டி நடக்க ஆரம்பித்தான்.குதிரையை கூப்பிடும் ரகசிய மொழியில் குதிரையை அழைத்தான்.குதிரையிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் கையிலுள்ள தடியினை அங்கும் இங்கும் வேகமாக ஆட்டினான். எதிரில் எதுவும் இல்லை.குதிரை தன்னை பிரிந்து சென்றுவிட்டது என்று யூகித்துக் கொண்டான்.இனிமேல் குதிரையை நம்பி பிரயோஜனம் இல்லை என்று கவலையுடன் நொந்து அமர்கின்றான்.பிறகு குச்சியின் அளவிற்கு வேகமாக நடப்பது என்ற முடிவுக்கு வருகின்றான்.நீண்ட தொலைவிற்கு பிறகு அவனால் எதையும் அடையமுடியவில்லை.பறவைகளின் இரைச்சல் மட்டும் அடங்கிக் கொண்டு இருந்தது.ஒரு கணக்கிற்கு வர ஆரம்பித்தான்.பறவைகளின் இரைச்சலிலிருந்து பறவைகளின் இரைச்சல் வரை நகர்வது என்று முடிவு செய்தான்.களைப்பின் காரணமாக அமர்ந்தான்.கையில் ஏதோ தட்டுப்பட அதனை எடுத்து முகர்ந்தான்.அது ஒரு பழம். உற்சாகமானான்.பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது . உடனே உண்ண ஆரம்பித்தான்.அங்கேயே அயர்ந்துவிட்டான் . மீண்டும் பறவைகளின் ஒலியில் எழுந்தான்.பசி எடுக்கவே உண்டது ஞாபகம் வந்தது. பழத்தின் மரம் பக்கத்தில்தான் இருக்க வேண்டும் என்றஆவலில் குச்சியின் உதவியுடன் ஒரு மரத்தை கண்டுபிடித்தான் . தான் கண்டுபிடித்த மரம் தவறானது என்று மரத்தில் ஏறிய பின்பு உணர்ந்து பல முயற்சிக்கு பிறகு உண்மையான மரத்தினை கண்டு கொண்டான்.அங்கேயே இருக்க முடிவு எடுத்தான்.

பொருளற்ற,ஆள் அம்புகளற்ற,உறுப்புகளற்ற ஈடிபஸை அவன் நினைத்துப் பார்க்கிறான்."ஓ" வாழமுடிகிறதே! .எப்படி? எப்படி? இவைகள் இல்லாமல் ஒரு நிமிடம் கூட வாழ முடியாது என்ற நினைப்பில்தானே வாழ்ந்துவந்திருக்கிறேன். அநேக உயிர்களையும், பொருட்களையும் அழித்தேன். அநேக போர்களை நான் மேற்கொண்டேன். அப்போது ஏன் தெரியவில்லை? தெரிந்திருந்தால், மிக நல்ல வாழ்க்கை வாழ்ந்து மக்களுக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் தரும் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருப்பேனே. இப்போது நான் யாருக்கும் அரசன் இல்லை.இனி எனது வாழ்விற்காக யாரின் உழைப்பையும் சுரண்ட மாட்டேன், முடியவும் முடியாது . இருந்தாலும்,என்னால் முன்னைவிட பிரச்சனைகளற்ற வாழ்க்கையை இப்போது வாழ முடிகிறது. இருந்தாலும் தான் முன்பு அறியாது இருந்ததுபோல், இன்னும் தன் நாட்டிலும், வெளியிலும் மனிதர்கள் அறியாமையில் உள்ளனர். அவர்களுக்கு நான்தான் வழிகாட்ட வேண்டும் என்று உரக்கச் கூறிக்கொண்டான். வழிகாட்ட வேண்டும் என்ற ஆசையுடன் தன் நாடு நோக்கி பயணம் மேற்கொண்டான். தனது நாட்டிற்கு எதிர் திசையில் தான் பயணம் செய்கின்றோம் என்பதனை அறியமாட்டாமலேயே. அவன் மட்டும் சரியான பயணத்தை மேற்கொண்டிருந்தால் தீப்ஸ் மீண்டும் மிக நல்ல ஒரு அரசனை பெற்றிருக்கும்.

தீப்ஸிலிருந்து கிட்டதட்ட 500 கிலோ மீட்டருக்கும் அதிக தொலைவிலுள்ள ஒரு மிகப் பெரிய மலை முகடென்பது அவனுக்குத் தெரியாது அவன் அடைந்துள்ள இடம். பறவைகள், ஊர்வன, விலங்குகள் ஆகியவற்றின் நகரும் ஓசைகள், அண்மையில் ஏற்படும் வாசனைகள்,இடத்தினை பற்றிய படிப்பினை ஆகியவற்றை அவன் இப்பொழுது நன்றாக அறிந்து கொண்டான். சில சமயம் பலமாக தாக்கப்பட்டான் மிருகங்களால். மிருக வெறி கொண்டு தட்டுத்தடுமாறி போரிட்டான். ஓடினான், காயமுற்றான், தடியாலடித்து துரத்தினான், கையிலிருந்த தடியை மட்டும் எச்சூழ்நிலையில் தவறவிட்டதில்லை. அதுதான் அவனுக்கு வழிகாட்டியாகவும்,ஆதாரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. தடியைப் பற்றி அவனின் கருத்து இப்படித்தான் இருந்தது."மனிதன் வாழ்வதற்கு தன்னை தவிர்த்து பிற ஒன்று தேவை.அது அதிகமாக அதிகமாக மனிதன் அவற்றிற்கு அடிமையாகின்றான்.தடி எனது வழிகாட்டி.நான் அதனை பின்பற்றுகிறேன்.இப்பொழுது நானும் அடிமையே.உயிரற்ற ஒன்றுக்கு".

மிருகங்களிடம் ஏற்பட்ட போரினால் தடியில் ஆங்காங்கு இரத்தக் கரைகள் அப்பிக் கொண்டன. அவைகள் அத்தடியினை சிவப்பு நிறத்தில் பளபளக்கச் செய்தது. அவனின் உடம்பில் மிகச் சிறந்த வீரத்தழும்புகள் ஏற்பட்டிருப்பதாக உணருகிறான்.எவ்வளவோ மருத்துவர்களின் உதவியுடன் போர் களத்தில் ஏற்பட்ட புண்களை மருந்துகொண்டு குணப்படுத்த முடிந்தாலும், அதிக வலியும், ஆற அதிக நாட்களும் ஆகும். ஆனால் இங்கு புண்கள் ஆற தான் ஏதேதோ தளைகளைமட்டும் தடவிக் கொண்டாலும் உடனே குணமாகிவிடுகிறதே என வியந்தான்.

நீரோடைகளின் சலசலப்பு,மலைகளின் கலகலப்பு பள்ளத்தாக்குகளின் கலகலப்பு,ஆற்றின் சலசலப்பு,அடர்ந்த காடுகளின் குளுமை,விலங்குகளின் குரல்,அவைகளின் அசைவுகளினால் ஏற்படும் சலசலப்பு ஆகியவற்றை துல்லியமாக கணிந்து ஒவ்வொன்றுக்கும் சரியான தீர்வை வைத்திருந்தான்.
காற்று வாசனைகளை கடத்துகின்றது.அதன் மூலம் அருகில், தூரத்தில் உள்ளதை உணர முடிகிறது.காற்றின் சலசலப்பினால் தம்மைச்சுற்றி உள்ளவைகளின் நிலைகளை தெளிவாக தெரிந்துகொள்ளமுடிகின்றது.காற்றின் அசைவினால்தான் இவைகளனைத்தும் சாத்தியம்.காற்றே அனைத்திற்கும் ஆதாரம் என்று கூறிக்கொண்டான்.இப்போ தான் தன் உணவுக்காக அலையவும் இல்லை,நீரை தேக்கி வைப்பதும் இல்லை,உடையை பற்றி பிரச்சனையும் இல்லை,வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதே என்று நினைத்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டான்.

மீண்டும், மீண்டும் தீப்ஸை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டான்.ஆனால் தற்பொழுது தனக்கு எவ்வளவு ஆனந்தம் அவனுக்கே வியப்பை அளித்தது.தான் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்ற நினைப்பு வந்தது.இன்னும் எவ்வளவு தூரம் என்ற நினைப்புடன் தீப்ஸிலிருந்து அதிக தூரம் விலகி கொண்டிருந்தான்.மனித வாடையே இதுவரை அவனுக்கு தென்படவில்லை.

நேரம், காலம், நாள் எல்லாம் அவனுக்கு அப்பொழுது புரிபடவில்லை. இப்பொழுது அனைத்தும் மனிதனை கட்டுப்படுத்தும் தண்டனைச் சட்டங்களாகவே நினைத்தான்.அவை அனைத்தும் பொய் என முடிவுக்கு வந்தான்.இது நாமே நமக்காக போட்டுக்கொண்ட விலங்கு என்பதனை கொஞ்சம், கொஞ்சமாக தனது கருத்தாக உருப்பெறச் செய்து கொண்டான்.தான் தீப்ஸிலிருந்து பொழுது முழுக்க முழுக்க மூடத்தனத்திலும், மூட பழக்க வழக்கங்களிலும் இருந்ததை எண்ணிப்பார்க்கிறான்.

எப்படித்தான் நூறு சதவீதம் மூடப்பழக்கத்தில் வாழ முடிந்தது நம்மால்? .வாழ்ந்தும்தானே இருக்கின்றோம்.நானே இப்படி என்றால் மற்றவர்களும் அப்படித்தானே.என்ன வாழ்க்கை,மூட பழக்க வழக்கங்களிலே பிறந்து, வாழ்ந்து, மடிவது.எல்லோரும் அப்படித்தானே.யார் இதற்கு முடிவு கட்டுவது.மிகவும் கடினமான செயல்தான்.இருந்தாலும் இனியும் தான் மூடத்தனத்தை ஒழிக்க பாடுபடாவிட்டால் நான் மனித குலத்திற்கு உதவி செய்யாதவனாகி விடுவேன்.

மத நம்பிக்கைகள், மதக் கோட்பாடுகள் எப்படி மனிதனை மூடனாக, மடையனாக, முட்டாளாக மனிதனை வைத்திருப்பதுடன் சிந்திக்கக்கூடாத சூழலையும் வருவாக்கி, சிந்திக்க முடியாதவனாக முடமாக்கி வைத்துள்ளது.பிறந்தால், இறந்தால், நோயுற்றால், குணமானால், நின்றால், நடந்தால், பார்த்தால், பேசினால்,உறங்கினால், விழித்தால், சிந்தித்தால், கண்டால், எழுதினால், பறவை பறந்தால், விலங்கு பார்த்தால், படித்தால், பழகினால், சுத்தமாக இருந்தால், அசுத்தமானால் எது செய்தாலும் பகுத்தறிவற்ற செயலிலல்லவா மக்கள் வாழ்கின்றனர்.

பகுத்தறிவுடன் யாரும் சிந்திப்பதில்லையே பகுத்தறிவுடன் சிந்திப்பதே முட்டாள் தனமாக,மூடத்தனமாக மனித
குலத்திற்கே கெடுதி செய்ய வந்ததாக அல்லவா நினைத்து வாழ்ந்து வந்துள்ளோம்.நான் மட்டுமா,என் மக்களும் ,அண்டைமக்களும்,அரசர்களும் அப்படித்தானே.என்ன வான் ஒலி,மனிதனை மன நோயாளியாக்கி பேசும் பேச்சல்லவா இது.நான் எப்படி இதனை ஏற்றேன்."ஓ" அனைவரும் என்னை ஏமாற்றிவிட்டனர்.அரசனையே ஏமாற்றும் அளவிற்கு பாதுகாப்புடன், பத்திரமான இடத்தில்ல்லவா மூடப்பழக்க வழக்கங்கள் உள்ளன.

பகுத்தறிவு எங்கே? .ஓரிடத்திலும் இல்லை….இல்லை. பகுத்தறிவதற்கு மனிதன் தன் நிலை பற்றி சரியாக புரிந்து, அறிந்து கொள்ளாததே, விரும்பாததே காரணம்.நான் அதற்கு மிகச் சிறந்த விடையை அளிக்க வேண்டும். காமம் அனைத்திற்கும் பொதுவானது.கற்பு என்பது பொய்.மனிதர்கள் உணவை மையமாக கொண்டே வாழ்கிறார்கள்.வாழ்க்கை என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது.உண்பது, உடுப்பது, பொழுது போக்குவது மட்டுமே வாழ்க்கையாக நினைத்து வாழ்கின்றனர்.ஏன், எனக்கே தெரியாமல்
இருந்ததே.நான் இந்த அறிவை அடைந்தது எதனால். காதுகளை நன்றாக பயன்படுத்தியதால் அல்லவா? நானே தான் எனது ஆட்சியை இழந்தேன்.ஐயோ என்னை நானே ஏமாற்றிக் கொண்டேனே.மூடப் பழக்கத்தினால் முடமானேனே என்று ஓங்காரத்துடன் கத்தினான்.காடுகளும், மலைகளும் ஒரு நிமிடம் ஆடி அதிசயித்தது.

"ஏ ஈடிபஸின் கையிலுள்ள நன்னெறி காட்டும்.நல்வழி காட்டும் தடியே உலகில் அதிகமான மூடப் பழக்கவழக்கம் மற்றும் மனிதனை மனிதனாகநினைக்காத தேசம் ஒன்று உண்டு என்றால் அது நோக்கி என்னை அழைத்துச் செல்.நீதான் எனக்கு வழிகாட்டி.உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை"
என்று கூறி தனது கையிலுள்ள தடியினை, தனது தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து நின்ற இடத்திலிருந்து கரகரவென்று சுழன்று நின்றான். அவன் கையிலிருந்த தடி இந்திய துணைக்கண்டம் இருந்த திசையை நோக்கி காட்டியது.அத்திசை நோக்கி நகர்ந்தான்.

மல்யுத்தக்கலத்தில் மிகப்பெரிய மல்யுத்தம் நடக்கிறது.வெற்றி பெருகின்றான் ஈடிபஸ்.பழங்குடிகள் ஆரவாரத்துடன் ஈடிபஸை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.அவர்கள் நீ யார். எங்களுக்கு கூறு.ஒன்று நீ வீரனாக இருக்க வேண்டும்,அல்லது அரசனாக இருக்க வேண்டும்.அதில் நீ யார்? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இரந்தனர்.ஈடிபஸ் எங்கள் ஊரில் அனைவரையும் ஏமாற்றும் கதை ஒன்று உண்டு.அதுதான் என்னைப் பற்றிய நீங்கள் கேட்கும் கதை.ஆனாலும்...என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று கூறி
தனது கைகளை உயர்த்தி காண்பித்து  எனக்கான பாதை இதோ தெரிகிறது,எனது கை வழியாக உங்களுக்குத் தெரிகின்றதா என்றான்.பழங்குடியினர் அவனது கையிலுள்ள தடியிலிருந்து கோடு ஒன்று கிழக்கு நோக்கிச் செல்வதை பார்த்ததாக கூறி தங்களுக்குள் வியக்கின்றனர். சூரியன் மேற்கில் பிரகாசமாக இருக்கின்றான்.

எங்கள் ஊரி்ல் ஒரு பொய் உண்டு.அது என்னைப் பற்றியது.அரச வாழ்வு பற்றி தவறான ஒன்று நிலவி இனி உலகில்
அரசாள விரும்புபவர்களுக்கு அதுவே உதாரணமாக இருக்கும்.அரசர்கள் அனைவரும் கொடூரன்களாகவே காண்பிக்கப்படுவர்.ஆனால், உண்மையில் அவர்கள் அவனைவரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல.போரில் அனைவருக்கும் முன்னே அரசன் தான் சாகின்றான்.படைகள் சிறிது பின்வாங்கினாலும் சிதறிய படைகளில், சேர்ந்த புதியவர்கள் எதிரியின் கையாட்களாக மாறி முதலில் கொல்ல நினைப்பது தனது முன்னாள் அரசனைத்தான் என்பதை நான் அனுபவப்பூவமாக உணர்ந்தவன், ஒன்றல்ல இரண்டல்ல பல போர்களில். வெற்றி பெறபவனே அரசன்.போர் என்றால் உண்மையில் சாவுக்கும், வாழ்வுக்குமான சரியான எல்லைக்கோடு அல்ல.ஒருவன் இயல்பாக சாவதையே இயற்கை விரும்புகிறது.ஆனால் அரசர்களோ போரில் சாவதையே மிகவும் விரும்புகின்றனர்.உண்மையில் வீரம் என்பது போரினில் கிடையாது.அனைத்தும் கோழைத்தனமான தந்திரங்களே. போரில் யார் யார், எதை எதைச் செய்ய வேண்டும் என தீர்மானித்து இயங்குகின்றோம். ஆனால் வெற்றி யாரிடமிருந்து வருமென யாருக்கும் தெரியாது.சில சமயம் வெற்றி பெற்றுள்ளோம் என்ற பிரச்சனை இல்லாமல் தங்களை மாய்த்துக்கொண்ட கோழைகளை போர்க்களத்தில் பார்த்துள்ளேன்.

மக்களை காப்பவன்,மக்களை காக்க மனிதர்களை கொன்றுதான் சாத்தியமென்றால் அது காட்டுமிராண்டித்தனமானது. ஒரு கோடிகோழைகளை  காக்க பல்லாயிரம் பேர் இறக்க வேண்டுமென்றால் அது முட்டாள்தனமானது.
தாங்கள் மடிவோம் என்ற உறதியுடன் போருக்கு புறப்படுபவன்
தாங்களால்  காக்கப்படுவது , தங்களால் வாழப்பார்ப்பது் கோழைகள் என்பதை அறிந்தால் உண்மையில் அவன் போர்க்களத்திலிருந்து வெளியேறி விடுவான்.வீரம், வீரத்திற்காக மடியுமிடம் போர்க்களமல்ல என்பதால் போரை வெறுக்கிறேன்.நான் தனியாளாக நின்று பலரை கொன்றிருக்கிறேன்.ஆனால் நாடு, நான் வென்றதாக கூறி தன்னை எனது பாதத்தில் வைத்து பிறகு தீப்ஸின் மூடசதிகாரர்களின் வலையில் மாட்டி சதிகாரர்களால் நாட்டின் காலடியில் தள்ளப்பட்டேன்.

உண்மையில் அரசர்கள் பாவம் செய்தவர்கள்.
மன்னிக்க முடியாதவர்கள்.மன்னிக்க முடியாத செயல் செய்தவர்கள். அரசர்கள் அவர்களுக்கு கிடைத்ததை அவர்கள் அனுபவித்தார்கள்.அவர்கள் அனுபவிப்பதற்காகவே சிலர் அவர்கள் விரும்பியதை தாங்களே விரும்பி அனுபவிக்க கொடுத்தார்கள்.இதில் ஒளிவு எதுவும் இல்லை.உண்மையில் பல சமயங்களில் விருப்பமில்லாமலும் அவர்கள் சிலதை அனுபவிக்கும்படியும் ஆனது.விரும்பிய சில சமயம் வன்முறையில் முடிந்தது. அப்படி விரும்பியவன் எவனொ அவனுக்கு சாவுமணி அடித்தார்கள்.அரசர்களுக்கென்று
சொந்த சொத்தும் கிடையாது. தனி சுகம் என்பதும் கிடையாது.அனைத்தும் மக்களுடையது, அனைத்தும் மக்களுக்கானது,மக்களால் அவர்களைக் காத்துக்கொள்ள அவர்களால் ஒருபோதும் முடியாது என்பதாலேயே அரசனை அவர்கள் நம்புகின்றார்கள்.ஈடிபஸ் மயங்கி விழுந்தான்.

ஒரு பறவைகளின் இரைச்சல்கள் அதிகமானதருணம் தீப்ஸின் போரிகையின் சப்தம் கேட்டு அதிசயித்தான். ஒரு பழங்குடியினை அழைத்து கேட்டான். அவன் ஏதோ தெரியவில்லை. மிகப் பெரிய உருவங்களில் மனிதர்கள் நகர்ந்து வருகின்றனர் என்றான். ஈடிபஸ் உணர்ந்து கொண்டான். தீப்ஸ் மக்கள் தன்னைத் தேடி வருகின்றனர் என்பதனை. அவர்களைப் பார்க்க ஈடிபஸ் விரும்பவில்லை. பழங்குடியினாரிடமிருந்து  விடைபெறுகின்றான். தனக்கு தானே திசைக்காட்டியாக , வழிகாட்டியாக ஆக்கிக்கொண்டு.தடியினை தூர எரி்கிறான்.

உலகில் உயிர்வாழும் ஆசையை தவிர்த்து , பிறஆசைகள் இல்லாதவன்.புது புது ஓசைகள் கேட்டும் ஞாபகப்படுத்தியும், இனங்கண்டும் கொள்கின்றான். அவைகளுக்கென சில பெயர்களை தனக்குள் வைத்துக் கொள்கின்றான்.அவன் இதுவரை ருசிக்காதவைகளை, நுகராதவைகளை அனுபவிக்கின்றான்.தான் தூர தேசம் வந்துவிட்டதை  உணர்கிறான். இனிமேல் தான் கடினமான சோதனைகளை சந்திக்கப் போகிறான் என்பது அவனுக்குத் தெரியாது. இப்போது அவனுக்கு தாய், தந்தை, வளர்ப்புத் தாய், தந்தை, குழந்தைகள், நாடு போன்றவை ஏதோ ஒரு நிகழ்வின் சந்திப்பாகவேபடுகிறது. அரசனாக இருந்த  சமயங்களை விட, இப்பொழுது செய்யும், ஒவ்வொரு செயலும்  அர்த்தமுடையதாகவும் ,  அர்த்தப்படுவதாகவும் உணர்கிறான். அவன் பாதங்கள் மிளகு விளையும் நாட்டை அடைகின்றது.
.
.


.

.
Download As PDF

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

ஆண்டவனின் சாபமும் ...நிவர்த்தியும் ...அறிவின் நீட்சியும்....நீதியும் ...

சாபமே அனைத்து கேட்டிற்கும் காரணம் என்பவர்கள் கடவுளின் மேன்மையை  உணராது செயல்படும் உயிர்களால் இத்தகைய சாபத்திற்கு ஆளாவதோடு , அதன் தாக்கத்தால் அனைத்தும் அங்கு இப்படி தொடர்கிறது என்போர் ஆவார்.

இங்கு கடவுளின் சாபத்திற்கு ஆளானவர்களை பட்டியலிட்டால்.அதற்கான காரணம் என்னவென்றும் ,அதற்கான நிவர்த்தியும் அறியமுடியும் பட்டியல் அவரவர் கடவுள் நம்பிக்கையைசார்ந்த்து .ஆனால்,தீர்வு மட்டும் சற்று முயக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு lல் தவிர்த்த ஒன்றாக முற்றுபொற முயன்ற ஒன்றாக காட்டிக்கொண்ட ஒரு குயுத்தியாக இருக்கிறது என்றால் அவரால் சற்று  முயன்று இன்னும் முயன்று அடுத்ததை ஆயலாம் .ஆனால்,முடிவும் நிவர்தியும் முதலில் இருந்து மீண்டுவரும்.அறியாமை எவ்வளவோ  அவ்வளவே அனைத்தும்.எதையும் ஏற்றுக்கொள் என்பது விடையன்று என்று முதலில் ஆரம்பிப்பவனுக்கு ஒவ்வொன்றும் ஒரு ஆரம்பமாக இருக்கும்.ஒரு ஆரம்பம் இன்னொன்றை ஆரம்பிக்கிறது எனில் விடை அதில் இல்லை என்ற அறிவு அடுத்த துவக்கத்தை கொடுக்கும்.
அடுத்த துவக்கமே பல முடிவுகளுடன் துவங்கினால். நிவர்த்திக்கான துவக்கம் மெல்லிடைப்படும்.மெல்லிடப்பட்டதின்  கண பரிமாணம்மே மெய்ஞானம்,அது  பல காத தூரம் அழைத்துச்சொல்லும்.அது எக்காலமாக இருக்கிறதோ அதுவோ கடவுளின் சாப துவக்கமாகும்.

ஒருவர் ஒருவரின்ன் செயலுக்கு சாபம் தருவதும் .மூன்றாமவர் மூலம் அதற்கு விமோசனம் பெறுவதும் முதல் நீதீயாயிற்று.

Download As PDF

சனி, 7 ஜனவரி, 2017

என் ரோஜாத் தோட்டம் - கவிதைகள்

                                                   என் ரோஜாத் தோட்டம்
                                                   மலரும் மணக்கும்
                                                   நானில்லாவிட்டாலும்.
.======
                                                    கனவு ...
                                                    கதை எழுதுகிறேன் ...
                                                    நிஜம்  ...? .======


                                         படிந்தவைகளை  அகற்ற அகற்ற
                                         மீண்டு மீண்டும்  படியும்  தூசுகள்
                                         சோகம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@நொரண்டு :   ம் ....ம் ....ம் .... ஆகா ..ஆகா....காஆககா ....
வணக்கம் நண்டு . 

நண்டு :வாங்க நொரண்டு ,என்ன  முனகல் . 

நொரண்டு :அது ஒன்னுமில்லை ,கவிதை ஒன்னு புரியல அதான் . 

நண்டு :ம் ... 

நொரண்டு :நீ பாட்டுக்க   ம் ....போட்டுட்டே போ . 

நண்டு :சரி விசயத்துக்கு வா 

நொரண்டு :நீ சிற்பா னு சொல்லுவியே அது ஹைக்கூ தானே. 

நண்டு : இல்லை. 

நொரண்டு :அப்ப என்ன 

நண்டு : இது சிற்பா அவ்வளவே . 

நொரண்டு :சரி ...சரி...சரி...எனக்கு சில ஹைக்கூவிற்கு ,
மன்னிக்கவும் ...மன்னிக்கவும் ... அப்படியே வாய் வருது, சரிப்பா சிற்பாவிற்கு அர்த்தம் சொல்லவும். 

நண்டு : கவிதைக்கு அர்த்தம் கேட்பது அபத்தம் நொரண்டு. 

நொரண்டு :ஓ...ஓ...ஓ...எனக்கு புரியலையே நான் என்ன செய்ய ?. 

நண்டு : எனக்கு புரிந்ததை  சொல்ரேன் ,இது சிற்பா எழுதியவருக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை  தெரிஞ்சு புரிஞ்சுக்கோ. 

நொரண்டு :சரிப்பா. 

நண்டு : சரி சிற்பாவை சொல். 

நொரண்டு : ம் ...
படிந்தவைகளை  அகற்ற அகற்ற
மீண்டு மீண்டும்  படியும்  தூசுகள்
சோகம் 

நண்டு : ம் ...தூசுகள் படிய படிய வரும் ,அது போல சோகம் . 

நொரண்டு :இது தெரியாத.வேற ... 

நண்டு :  ம்...

சோகம் என்பது ஒரு உணர்வு .அது பல வகையினால் ஏற்படும்.
தூசுகள் படிய படிய ஏற்படும்.

தூசுகள் படியாமல் இருக்கவேண்டும் என்றால் நாம் மட்டும் அல்ல நமது சுற்றமும்,சூழலும் சுத்தமாக இருந்தால் தான் தூசு படிய வாய்ப்பில்லாமல் போகும்.அது போலத்தான் சோகமும் .சுற்றம் சரியல்லை என்றால் ....

தூசுகள் இங்கு படிமம். அதன் படிமம் சோகம்.

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்,
ஆனால் ,எழுதினவன் ,என்ன நினைச்சு எழுதினானோ ,
நமக்கு என்ன தெரியும். 

நொரண்டு : சரி ....

என் ரோஜாத் தோட்டம்
மலரும் மணக்கும்
நானில்லாவிட்டாலும்.

இதுக்கு  

நண்டு : இதில் பெரிய விசயம் அடங்கியிருக்குப்பா .ஆளைவிடு ....
நன்றி : படங்கள் உதவி கூகுள் மற்றும் இணையம் .


Download As PDF

வெள்ளி, 6 ஜனவரி, 2017

இருமை தமிழகமே விழித்தெழுஉலகம் இருமையில் இருந்த பொழுது விழித்துக்கொண்டேன்.
ஆனால்,எதுவும் தெரியவில்லை எங்கும் இருமை யாரோனும் உதவ உள்ளனரா என்று தேடிய கணம் யாவரும் இருமையில் அதன் தாண்டவத்தால் ஆகாசிக்கப்பட்டு.

உலகம் இரண்டாவது இருமையில் இருந்தபொழுது தான் நீ வந்தாய் உதவிசெய்வதாக கூறினாய் உன்னால் முடியாது என மூன்றாவது இருமையில் இருந்தபொழுது தெரிந்துகொண்டேன்.
இரண்டாவது இருமையில் சில நிபந்தனைகளும்,கட்டுப்பாடுகளும் நம்மிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது ஆனால் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

மூன்றாம் இருமையில் நாம் நம்மை சரியான விழிப்புக்கு உட்பட்டிருந்தபொழுது முற்றிலுமாக நீ மாறியிருந்தாய்.

எனக்கு நன்றாக ஞபகம் வந்த இரண்டாவது இருமை நிபந்தனைகளை நீ புறக்கணித்து புதிதாக ஏதேதோ செய்யத்துவங்கிவிட்டாய் .அதனால் நாம் வேறுவேறு பாதையில் பயணம் செய்யவேண்டியிருக்கும் என்ற எனது எச்சரிக்கையை நீ புறக்கணித்துவிட்டாய் ஆனால் அப்படியே நடந்தது .இருமையினின்று மீழ்வது என்பதனைத் தவிர்த்து மற்ற அனைத்தும் நடந்துகொண்டேயிருந்தது.இருமையினின்று இருமையில் விழித்தவர்களின் உதவியுடன் தான் நீக்கமுடியும் என்ற எனது கருத்தை நீ உனது செயலால் முடமாக்க முனைந்து அனைவரையும் மேலும் இருமையிலேயே ஆழ்த்தி அதில் சந்தோசமடைந்தது  நம்மிடையே பிளவு ஏற்படத்துவக்கமானது.விழிப்படைய என நீ இருமையில் உள்ளவர்களை விழிப்பிற்கு பதில் புதிய இருமையில் ஆழ்த கடின சிறத்தை எடுத்து இயங்கிகொண்டிருக்கிறாய் என என்னால் உணர முடிந்தது. ஆனால் ஒன்றை மட்டும் உன்னால் புரிந்துகொள்ளமுடியாமல் போனது எனக்கு விளங்கவில்லை. இருமையினின்னு விடுவிக்காமல் வேறு இருமையில் ஆழ்த்தும் போக்கு அவர்களை ஏதோ ஒன்றில் விழிக்கச்செய்துவிடும் என்பது தான்.அது அப்படி அவர்கள் விழிக்கும் நிலையில் உன் நிலை மிகவும் தூரப்பட்டுப்போகும் அதனால் நீ நீ நினைக்கும் கடவுளாகாமல் மிகப்பெரிய வெறுமைக்கும் ஆளாகி உன்னை நீயே மறக்கும்படி போவதுடன் மூன்றாம் இருமையைத்தாண்டி நான்காம் இருமைக்குள்ளும் தள்ளப்பட்டு முழுவதும் உன்னை இருட்டடிப்பு செய்து கொள்ளப்படுவாய் என நீ உணராமல் உனது இயக்கம் இருப்பது கண்டு நான் மிகவும் கவலைப்பட்டேன் .ஆனால்,எனது கவலைகளை உன்னால் கொஞ்சமும் கண்டுகொள்ளப்பட்டதாக தெரியவில்லை.தற்பொழுது இருக்கும் இருப்பு உனக்கு ஏதொ ஒரு வகையில் சவுகரியமாகப்பட்டதோடு உனக்கு ஆதாரவாகவும் இருப்பதுபோல்அதில் ஒரு உலகை உருவாக்கிக்கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் நீ அறியாது தவறான பாதையில் உனது பயணமும் உன்னை சார்ந்தவர்களின் பயணமும் இருப்பதை என்னால் கண்டுணரமுடிந்தது.ஆனால்,ஒன்றை நான் அடிக்கடி கூறி வந்தேன்.உண்மை விழிப்பு எப்படியும் எதுவழியாகவும் பகிரங்கமாக வெளிப்பட்டே தீரும் யாரும் இருமை கொண்டு அதனை மறைக்க முடியாது.மேலும் இருமை என்பதற்கு அர்த்தமே இல்லாத ஒன்றாக இருப்பதனால் மறுஇருமை உண்மைவிழிப்பில் அணுஅணுவாக சிதறி சின்னாப்பின்னமாகி உன்னையும் சிதைத்துவிடும்.நீ எவ்வளவு வலிமைகொண்டவனாக இருந்தாலும் உன்னை உண்மைவிழிப்பு மிகவும் சர்வசாதாரணமாக வென்றுவெளிப்பட்டுவிடும்.நீ உன்னை திருத்தி இருமையிலிருந்து மீண்டு விழிப்பை நோக்கி நகராத பட்சத்தில் உன் அனைத்தும் நீர்மூலமாகாப்போய் நீயும் அப்படியே ஆவாய் என. நான் உனக்கு பல தடவை எடுத்துரைத்தாலும் நீ இருமையின் பிடியில் சொகுசாக இருந்து வருவதால் எனது கூற்றை கண்டக்கொள்ளாமல் இருக்கிறாய்.ஆனால் உன்னை மிகவும் அருகிலிருந்து கவனிக்கும் விழிப்பு உனக்கு பல சந்தர்ப்பங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க ,அவைகளை நீ ஏதோ உன்னின் இருமைச்செயலால் நடப்பதாக இருமாப்புடன் நினைத்து செயல்பட்டால் உண்மை விழிப்பு பல வழிகளில்  மாற்றப்பார்க்கும் கடைசியாக தனது கடை ஆயுத்ததை பயன்படுத்தி உன்னை விழிப்பின் தன்மைக்கு முதலில் மாற்றப்பார்க்கும் இவ்வாறுபோகும் பொழுது இருமை அழிந்துவிடும்.


முதலில் விழித்துக்கொண்டவன் நான் என்று என்னை அடையாளம் கூறுவதாக நான் என்னை நினைத்துக்கொள்ளவில்லை.  ஆனால் இருமையில் ஏதோ ஒரு நகர்வில் அனைவரும் ஏதச்சையாக நகர்ந்துகொண்டு தான் இருக்கின்றனர்.ஆனால் அவர்கள் விழித்துக்கொண்டதாக ஒரு இயைப்பை ஏற்படுத்துக்கொண்டு இருமையிலிருந்து விடுதலையாகாமல் விடுதலையாகிவிட்டதாக நினைத்துக்கொண்டு  இயங்குகின்றனர் என்பதனை நான் உணர்ந்துகொண்டேன். அனைவரும் ஏதோ ஒரு வகையில் இருமையில் அமர்ந்து அதில் சுகம்காண்பது என்பதை என்னால் எப்படியென யோசிக்க முடியவில்லை.ஆனால் அத்தகைய சமயத்தில் தான் நீ என்னருகில் வந்தது போல் ஒரு எண்ணம்.என்னை மிகவும் பாதித்த நான் உன்னிடம் உரையாடிய முதல் நிகழ்வு என்னை மிகவும் யோசிக்கவைத்ததால் நான் நீ என்னருகில் இருப்பதாக உணர்ந்தேன்.இருமையில் இயங்கும் மனிதர்கள் தங்களுக்குள்ளே நீ இருமையில் இருக்கிறாய் இல்லை நீ தான் இருமையில் இருக்கிறாய் என விவாதித்துக்கொள்வதும் நாத்திகம் ஆத்திகம் சாத்வீகம் என பலப்பல இசங்கள் பேசிக்கொல்வதும் மற்றும் பல்வேறு கோணங்களில் ஆகிக்கொள்வதும் பிறகு தாங்கள் இருமைக்குள்ளிருந்தே இயங்கிச்செல்வதும் ஆன விசயத்தை பகிர்ந்துகொண்டோம்.ஆனால் நீயும் ஒரு புரியாத இருமைக்கோட்பாட்டை உன்னுள் வைத்துக்கொண்டு என்னை பிரமாண்டமாய் பார்த்து பிரமித்து என்னிடம் வேடம் போட்டிருக்கின்றாய் என என்னால் உந்தன் மூன்றாம் இருமையில் தான் உணர முடிந்தது என்றால் நானும் ஏதொ ஒரு இருமையில் தான் இருந்திருக்கிறேன் என என்னை நானே குதைத்துக்கொண்டேன் .ஆனால் உண்மையில் உன்னை நான் ஒரு பொருட்டாக எண்ணாததால் தான் அப்படி நினைத்தேன் என்பதனை உணரமுடிந்த்து.முடிந்தவரை நகர்வு என்பது இருமையை கடந்து செல்லும் வழியன்று.முற்றிலும் இருமையை அறிந்து அதனை அழித்து செல்வது தான் இருமையைக் கடக்கும் செயல் என எனது கருத்தை உன்னுள் நான் உணர்த்த முற்பட்டமுனைநத்து கொண்டிருக்கையில் நீ மற்றொரு இருமையில் உள்ளாய் என்பதனை அறிந்ததால் நான் உன்னுடன் எந்த விவாதத்திற்கும் உட்படாமல் உன்னை ஒரு பார்வை மட்டுமே பார்க்க எண்ணினேன்.ஏனெனில் நான் உன்னையே நோக்கினால் இருமையில் இருந்து விலக நினைக்கும் பலருக்கும் எனது பயணத்தின் பயன்பாடு பயனில்லாமல் போகுமே அதனால்.இருந்தாலும் நான்காவது இருமை ஐந்தாவது இருமை என இருமைகளை உருவாக்கிக்கொண்டு இருமைக்குள் இருமை என அழிந்துகொண்டு தவறான வாழ்வு வாழ்ந்துகொண்டு தவறை மறைக்க அடுத்த இருமையை பழித்துக்கொண்டு ,தவற்றிக்கு திருந்தவும் எண்ணாமல் ,அடுத்தவர்களை அதுவும் இருமையில் உள்ளவர்களை ,ஏன் திருத்தவேண்டும் ஏன் அவர்களுக்கு தண்டனை என உணர்த்தாமலே ,பழிச்சொல்வதும் ,அதனை ஏற்று நடக்கும் அவர்களை அடிமைகளாக ஆக்க நினைத்து செயல்படுவதும் ,தண்டனைக்குரிய செயல்பாடாகும் என்பதனையும் உனக்கு உணர்த்தியும், நீ சுகமாக ஒரு நிலையிலிருந்து செயல்படுவதால் சுகப்படும் செயல் அழியும் என எண்ணாமல், அழிவை நோக்கி நீயும் சொல்வதுடன், உன்னை பின்பற்றுபவர்களையும் ஏமாற்றி ,நீயும் ஏமாறுற்றப்பட்டு, உனக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி சிறிதும் அறியாமல், நீ காலம் கடந்த வாழ்விலும் ,மரணத்திலும் அனைத்தையும் நிறுத்தி ,உனதறிவை முற்றுப்பொற்றுக்கொள்வாய். உனது திட்டத்தின் ஒவ்வொரு படியும் சரிந்துள்ளதை நீ உணர மறுக்கின்றாய் ,இருந்தாலும் உனக்குள் உன்னை பார்க்கவும் மறுக்கின்றாய் .நான் முடிவாக உன்னிடம் எதுவும் சொல்வதில்லை, உனது இயக்கத்தினை கண்டுகொள்வதும் இல்லை ,மேலும் உன்னை நுகர்வதும் இல்லை ,என்ற முடிவுடன் உன் இருப்பிடம் தவித்து , பிறவெங்கும் இருமை அகற்றும் செயல்களில் நான் ஈடுபட உத்தேசித்து  எனது செயலை எனது பாணியில் செய்ய நான் எப்பொழுதும் இயக்கிக்கொண்டிருக்கின்றேன்.உன் தொடர்பு ஏதோ ஒன்றை ஏற்படுத்தும் என நினைத்து,நான் செய்யும் அனைத்திற்கும் நீ உறுதுணையாக இருப்பாய், இருமையை இருவரும் சேர்ந்து அகற்றுவோம் என எண்ணினேன்.இவ்வொண்ணமே தவறு ஏனெனில் ஒன்றைச்செய்வதனை அதனை உருவாக்கியாவனால் மட்டுமே முழுமையாக முடியும் பிறவெல்லாம் சார்புதான் ,அதற்கு துணையாகவே உதவியாகவே பிறரை நினைத்து இயங்குவது முட்டாள்தனம், இதுவும் ஒருவரது இருமையே என நினைத்துக்கொண்டு அனைவரும் இப்படிப்பட்ட நிலையில் செயல்படுவது மிகவும் சரியென எனக்குப்படும்படி உணர்த்திய காரணத்தால் உன் மீது எனக்கு பரிதாபத்துடன் கூடிய பரிவு வருகின்றது .உன்னைவிட்டு விலக நினைத்தாலும் உன் அறியாமை,உன்னைவிட்டு என்னை அகழவேண்டாம் என மறுக்கின்றது .நீ மற்றவர்களை விட இருமை உலகில் உன்னை மிகவும் சிக்கலடைத்துக்கொள்வதில் சுகப்படுகின்றாய்.உன்னையும் மீட்பது எனது கடமைகளில் ஒன்று என்பதால் உன்னையும் இருமையிலிருந்து வெளிக்கொணர போராடமுடிவுசெய்கின்றறேன்.இருமையில் ஆழ்ந்துள்ளவர்கள் எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது என நினைத்தேன் இப்பொழுது ஒன்று கூடியுள்ளது தமிழகமே தமிழகமே உனதருகில் நான் இருப்பதால்அந்த ஒன்று நீ எனம்பதனை அறிவிக்க முடியாமல் எனது பணியை தொடர்கிறேன்...
இனி இருமையினின்று விழித்தொழுவாய் தமிழகமே விரைவில்.                                

                    
Download As PDF

புதன், 4 ஜனவரி, 2017

டைரிகள்.
பக்கங்கள்
நாட்களாக
நாட்கள்
எண்களாக
நிரப்பப்பட்டு


பல
நிறங்களில்
வடிவங்களில்
நேர்த்திகளில்

பலப்பலரின்
கைகளில்
பலப்பல
காரணங்களுக்காக

வருடா வருடம்
வருடங்களைத் தாங்கி

வாழ்க்கை
கறைகளாக
பயணிக்கின்றன
டைரிகள்.எல்லோரும்
டைரிகள்
எழுதுவதில்லை
எல்லா
டைரிகளும்
எழுதப்படுவதும் இல்லை
ஆனால்
எல்லோரும்
டைரிகளை விரும்புகின்றனர்


எழுதும்
பக்கங்களைவிட
எழுதாத
பக்கங்களே
டைரியில்
மிகுதி

எழுதிய
டைரிகளைவிட
எழுதாத
டைரிகளே
மிக அதிகம்

டைரியில்
புதைந்த வாழ்வுகளும்
டைரியாக
புதைந்த வாழ்வுகளும்
உண்டு

ஒவ்வொரு டைரியின்
வாழ்வும்
முடிகிறது
ஒரு வருடத்தில்
எழுதப்பட்டோ
எழுதப்படாமலோ

எப்படியிருந்தாலும்

குதூகலமாகவே
ஆரம்பிக்கிறது
ஒவ்வொரு
டைரியின்
வாழ்வும்
மனிதனை  போல்
தனக்கு முன்பு  இருந்ததன்
வாழ்வு
எவ்வாறு முடிக்கப்பட்டது
என
அறியா
அறியாமையுடன்.


.


.

படங்களை அளித்த கூகுள் மற்றும் இணையங்களுக்கு நன்றி.
மீள்வு
Download As PDF

செவ்வாய், 3 ஜனவரி, 2017

தம்மத்தின் வாழ்வுதனை ...

இச்சை இழி வாழ்வில் இன்பங்கள் பல அனுபவித்து அனுபவித்து , மோசமான இன்னலல்களை  மூகத்திற்கு நேர்மையற்று வழங்கிவரும்,உணர்வற்ற பிண்டவுகளான ஆண்டைகளே ...
கேளிர் ...கேளிர்...Download As PDF

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கடவுளை காணலாம் வாருங்கள்.கடவுளை காணமுடியுமா ? அனைவரும் காண முடியுமா ?  இது சாத்தியமா என்ற கேள்விக்கு  இதற்கு முன் யாரும் எத்தகைய பதிலும் கூறவில்லை.அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு பெற்ற பதில்கள் அனைத்தும் யாருக்கும் திருப்தியில்லை.  எளிதான பதிலோ எளிதான வழியோ அல்லது எளிய தீர்வோ கூறாத இக்கணம் வரை  ...

கடவுள் என்ற பிம்பம் சார்ந்த அறிவுசார்ந்த  சிந்தனை இல்லாத இளம்பருவத்தில் கடவுளை கண்ட பொழுதும், பின் கடவுள் என்ற மிகப்பெரிய ஆளுமை உடைந்து தகர்ந்து போன கணத்தில் அதனை வெளிப்படுத்த முனைந்த காலத்தில் கண்ட கடவுளையும் ஒப்பிட்ட பொழுது என்னுள் இரு தடவை கடவுளை கண்டடைந்த சிலிர்ப்பி என்னை உவர்த்தித்தது.

உவர்த்தித்தல் என்னை உலகிற்கு அதனை உரக்க உறைக்க ஊர்த்தித்தது.

உவர்த்தலும் ஊர்த்தலும் நீங்கும் முன் உலகிற்கு உணர்த்தும் உய்விப்பில் திளைத்த நிமிடத்தில் ஊர்ந்து சென்ற காலங்கள் பலவாகின.இன்னும் இன்னும் என்று உருண்டு, சலித்தெடுத்துக்கண்டடைந்த அனைத்து சேகாரங்களும் ,அடுத்தடுத்து அழுகி அழிந்தது கண்டு முகிழ்ந்து முகிழ்ந்து மீண்டும் மீண்டும் சுற்றும் சுயங்களின் சூத்திரம் கண்டு எளிய தீர்வை முன்வைக்க திரண்டபொழுது திடீரென ஏற்பட்ட சொருபா வீக்கம் சற்று என்னை ஆழற்சித்தது .அழச்சியின் கிளர்ச்சி நீக்கம் ஆண்டுகளை உண்டு உருண்டன.சுற்றும் முறை சுழற்சி ஆதலால் சூழ்ச்சிகள் சுக்கல்சுக்கலாக சுழலின் சுற்றில் சிதறின.சிதறல்களின் சின்னமாக எழுந்த ஒன்று ஒன்றை காட்டியது.அது உணர்த்திய ஒரு விபாகம் அனைத்தையும் கண்டடைய செய்தது.


கடவுளை காணலாம் வாருங்கள். இப்படி அழைப்பது என்பது மதவாதிகளுக்கு ஒரு தந்திரமாக இருக்கலாம்.அவர்கள் பக்கம் அனைவரின் கவனத்தையும் திருப்ப இது ஒரு உத்தியாகவும் அவர்களால் கையாளப்படுகிறது.ஆனால் என்னைப்பொருத்தவரை இது அப்படிப்பட்டதல்ல.இது அந்தளவிலான ஒரு நீல்நொடிபயணம் .ஆனால் இதற்கு என்னை பின்தொடர்வதில் உள்ள உளச்சிக்கலால் ,பின்தொடர்வதில் ஏற்படும் தொடர் இடரால் பின் தங்கினால் கடவுளை என்பது ஒரு காண்டுமிராண்டித்தனமாக தெரியும் .ஒரு தீர்வு இப்படி முடிந்தால் அதற்கு பொறுப்பு நானல்ல .


கடவுளை காண  என்பது கண்டடைய விரும்புபவரின் உணர்வுசார்ந்ததா உடல்சார்ந்ததா அறிவுசார்ந்ததா அறியாமைசார்ந்ததா என்பதனின்று ஆரம்பிக்கிறது.சார்புபற்றிய முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் இருப்பானது தொடர்பின் தோடுதலில் இருந்து பிரிந்துசெல்லும் பார்வையின் பாதையில் பயணிக்கிறது.    தொடரும்...

Download As PDF