செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இசையை ரசிக்கவைக்கும் மனப்பிழவு நோய் .

ஊரே எருஞ்சுக்கிட்டிருந்தப்ப பிடில் வாசிச்சானாம் ஒரு மன்னே அது போல இருக்குது ஓ வேலை .எப்பப்பாத்தாலும் பாட்ட கேட்டுக்கிட்டே இருக்க .என்னப்பா... என சக தோழர்கள் கடித்துக்கொண்டதை பார்த்து சிரிப்பதா அல்லது உண்மையை சொல்லி திருத்துவதா என யோசித்த வேளையில் என்னிடமே தீர்வுக்கு வந்தனர் இருவரும் .

----------

மேற்கண்ட இசையை நண்பர் அனுப்பி கேட்டுப்பார் என்றார் .
இயற்கை இயற்கையாகவே கொடுக்கப்பட்ட (நம்பிக்கை) இனிய இசை தான் .ஆனால், இதைக்கேட்ட அனைவரும் மிகவும் ரசித்ததாக கூறினர் .


.............


இசையை வெறுமனமே ரசிக்கும் நபர்கள் அனைவரும் மனப்பிழவு நோய் என்னும் நோயால் ஆட்பட்டுள்ளவர்களே .
ஒவ்வொரு சுயநல மனமும் சதா இசையினால் சமுதாயத்துடன் இணைய மறுக்கும் தனது இருப்பை உடைக்கிறது ,இந்த வெற்றிடத்தில் மறைகிறது ..............................
மனப்பிழவு - சரியான வார்த்தை தான் .
பிழவு என்பது பல அர்த்தம் கொண்ட ஒரு சொல் .
பிளவு என்னும் பதத்திலிருந்து வேறுபட்டது  .
மனப்பிழவு நோய்க்கு இன்னும் சரியான ஆங்கில வார்த்தை உருவாக்கப்படவில்லை.

.............................


நன்றி : YouTube
.
Download As PDF

வியாழன், 3 பிப்ரவரி, 2011

மீனவ தோழர்கள் செய்யவேண்டியது
மிகவும் வேதனைக்குரிய நிகழ்வுகள் ,தமிழக மீனவர்களை சிங்கள அரசால் தாக்கப்படுவதும் ,படுகொலை செய்யப்படுவதும் ஆகும் .இந்நிகழ்வுகள் 1983 ல் இருந்து நடந்து வந்தாலும் யாரும் மீனவர்களின் உண்மையான குரலை கேட்காமலே வந்துள்ளதால் இன்று 500க்கும் அதிகமான நம் தமிழர்களை கொலைசெய்துள்ளனர் சிங்கள கடல் ரௌடிகள் .சிங்கள ரௌடிகளால் முதல் தமிழன் தாக்கப்பட்டபோதே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை தமிழ் சகோதரர்களை இழந்திருக்கமாட்டோம் .

இன்று அரசியலுக்காக கூவும் அண்டங்காக்காய்களுக்கு சிங்கள வெறியர்களால் உயிரிழந்த முதல் தமிழன் யாரேன்றும்,அவர் பெயர் என்னதென்றும் தெரியுமா ?.என்று ,எப்படி நடந்தது என்ற விபரங்களாவது தெரியுமா ? .அப்பொழுது இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ,சிங்கள அரசுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்க முற்பட்டனர்  என்ற கேள்விகளுக்கு பதில் உண்டா ...இப்படியாக உள்ளது நம் தமிழர்களின் நிலை .

இதற்கு தீர்வு ,

மீனவ தோழர்கள் செய்யவேண்டியது,
1.வரும் தேர்தலில் ,மீனவர் குரல் சட்டசபையில் அனுதினம் ஒலிக்க தங்களின் பிரதிநிதிகளை அவர்களே அனுப்பவேண்டும் .

2.அனைவரும் சுயேச்சையாகவே தேர்தலில் போட்டியிடவேண்டும் .

கட்சிகள் செய்யவேண்டியது .

அனைத்துக்கட்சிகளும்  மீனவ சுயேச்சைகளை ஆதரிக்கவேண்டும் .மீனவ தோழர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்க வழிவிடவேண்டும் .

மற்றவர்கள்  செய்யவேண்டியது .

மீனவர்களை ஆதரித்து,தங்களின் கட்சி வேட்பாளர்களை மீனவர்களுக்கு எதிராக நிறுத்தாத கட்சிகளுக்கே ஆதரவு என்ற கொள்கையில் மற்றவர்கள் உறுதியாக இருக்கவேண்டும் ...மீனவர்களை  ஆதரிக்காத கட்சிகளை ஒட்டுமொத்த தமிழினமே ஒதுக்கவேண்டும் .
இது நடந்தால் தான் தண்ணீரில் இனி  கண்ணீர் இன்றி தமிழன் பாதுகாக்கப்படுவான் .
.
  

Download As PDF