கால்பந்து விளையாட்டு மட்டுமன்று,
விளையாட்டு மட்டுமேயன்று,
விளையாட்டு மட்டுமேயாக மட்டும் கிடையாவே கிடையாது ...
கால்பந்தை
' விளையாட்டு ' என்ற பதத்தில் மட்டும் வைத்துப்பார்க்கக்கூடாது .
அது மிகப்பெரிய தவறு ...
கால்பத்து என்பது
கூலி உழைப்பாளிகளின் ஆன்ம வெளிப்பாடு ஆகும்...
எங்களின் கைகளில் நீங்கள் உண்கின்றீர்கள் .
அதற்காக எங்களின் கைகளை நீங்கள் கட்டிப்போட்டாலும்,
வெற்றியை நாங்கள் எங்களின் கால்களில் மூலம் அடைகின்றோம் ....
இது கால்பந்தின் அடிப்படை .
கால்பந்து கூலிகளின் கனவு .
குடிசைவாசிகளின் ஆறுதல்.
உண்மையான கால்பந்தாட்ட வீரர் பணத்திற்காக விளையாட மாட்டார் .
அப்படி விளையாடுபவன் கால்பந்தாட்ட வீரனில்லை ,
அவன் கால்பந்து விளையாடத்தெரிந்தவன்,
கால்பந்தின் ஆன்மாவை கொன்றவன் ஆவான்.
கால்பந்தானது வெவ்வேறு வடிவங்களில் தற்போது விளையாடப்பட்டுவருகிறது...
Tweet |
|