திங்கள், 27 டிசம்பர், 2010

ஆண்குறியும் சிவலிங்கமும் .





நொரண்டு : ஈரோட்ல  விழாவா  ?.

நண்டு : ம் ...

நொரண்டு : இது சிசனா ?

நண்டு : ஆமாம் .

நொரண்டு :என்ன ஒன்னும் சொல்லாம ...ம் ...ம் ...னு ?

நண்டு : என்ன எதிர் பாக்கர .

நொரண்டு :மாரியம்மன் திருவிழா இந்த சிசனுல கொண்டாராங்களே ஏன் ?

நண்டு :உனக்கு எதப்பத்தி  தெரிஞ்சுக்கனும் .

நொரண்டு :இல்லப்பா மாரியம்மன் வழிபாடு பற்றி சொல்லேன் .

நண்டு : ம் ...

நொரண்டு :ஆனால்,ஒரு கண்டிசன் .

நண்டு :என்ன ? .

நொரண்டு :உன் பாணாயில் சொல்லு .மந்தவங்க மாதிரி வேண்டாம் .

நண்டு :நான் எப்பவும் நானாத்தான் பேசுவேன் .ஏன் என்ன ?

நொரண்டு :இல்லப்பா சிலர் ஆபாசமா பேசுகிறார்கள் அதான் .
நண்டு :புரியல ...!!!

நொரண்டு :அதாம்பா ,லிங்கத்த சொன்னா அது ஆண்குறியின் அடையாளம் அப்படி இப்படினு ...

நண்டு :இது பேச்சுரிமைக்கு ,கருத்துரிமைக்கு நாம் கொடுத்துவரும் மிகப்பெரிய மரியாதை .லிங்கம் மற்றவர்கள் சொல்வது போல ஆண்குறியை அடையாளப்படுத்துவது அல்ல .

நொரண்டு :அப்ப சிவன் உண்டுனு சொல்ல வரையா .

நண்டு :நான் கடவுள் விசயத்துக்கு வரலா .ஆனால் ,சிவலிங்க அடையாளத்திற்குப்பின் உள்ள விசயத்திற்கு வரேன் .

நொரண்டு :அப்ப லிங்க வழிபாடு சரிதானா .

நண்டு : சரியா,தவறா என்பதைப்பற்றி நான் பேசவரல .ஆனால் ,அவர்களின் வழிபாட்டில்  உள்ள தன்மைகளை விளக்குவதன் மூலம் ,அவர்களிடம் ஒரு விழிப்புணர்வையும் ,சரியான பாதைகளையும் தேர்ந்தெடுக்க ஒரு சிறு முயற்சியே .

நொரண்டு :ஆபாசம பேசராங்களே இது பகுத்தறிவா ?

நண்டு : நல்ல கேள்வி ,உங்களுக்கு  கடவுளின் மீதுள்ள நம்பிக்கையில் கடவுளின் மீது நம்பிக்கையில்லாதவர்களின் குரலை மட்டுமே கேட்டுக்கொண்டு அவ்வாறு சொல்லுகின்றீர் .ஆனால் ,உண்மையில் ஆத்தீகவாதிகள் சொன்னதைத்தான் நாத்தீகர்கள் அப்படியே சொல்கின்றனர் .ஆத்தீகர்கள் சொல்வது உங்களுக்கு ஒலிக்கும் ஓங்காரத்தில் மறைக்கப்பட்டுவிடுகிறது .

நொரண்டு :என்ன தான் இருத்தாலும் பகுத்தறிவாதிகள் பகுத்தறிவுடன் ஆபாச பேச்சை தவிர்க்கலாமே .என்ன தான் இருந்தாலும் இப்படி பேசுவது பகுத்தறிவா ? .கடவுள் இல்லை எனச்சொல்ல அறிவியல் ரீதியான பல வழிகள் இருக்க இன்னும் ஆபாசமாக பேசுவது நாகரிகமா ? .ஆபாசமாக பேசுவது ,எழுதுவது என்பதெல்லாம் அறிவுஜிவித்தனம் என ஒத்துக்கொண்டால் ,அவர்கள் ஆடை உடுத்துவது எதற்காக ? .ஆடை என்றது எதற்காக தொன்றியது என்பது அவர்களுக்கு தெரியாத ஒரு கூறா ? .இல்லை அது பற்றிய அவர்களின் அறியாமையா ? .

நண்டு :நல்ல கேள்விகள் தான் . நாகரிகத்தின் ஒரு அடையாளம் தான் ஆடை .இது எப்படி அவர்கள் பேசிவரும் ஆபாசத்தின் குறிகள் மறைக்கின்றதோ அதுபோலவே அது போலவே அவர்களின் எழுத்தும்,மொழியும் எழுத்து,மொழி  என்ற நாகரிகத்தில் அப்படிப்பட்ட வார்த்தைகள் கட்டாயம் தவிர்ப்பதே பண்புடைய தன்மை .அத்தகைய எழுத்துக்களே அறிவுப்பூர்வமானவை ,உயர்ந்தவை ,சிறந்தவை,மனிதனை மனிதனாக்குபவை .இப்படிப்பட்ட பேச்சு,எழுத்துக்களை தவிர்ப்பது அவர்களின் பண்பாக வேண்டும் .இல்லேயெனில் அப்படிப்பட்டவர்களைத் தவிர்ப்பது நமது பண்பாகவேண்டும்.
 
நொரண்டு :ம் ...லிங்க வழிபாடு பத்தி ஏதோ சொல்ல வந்த .

நண்டு :புதிய வெளிப்பாட்டின் குறியீடு.

நொரண்டு :புரியல

நண்டு :புதிய உதயத்தின் குறியீடு.

நொரண்டு :இன்னும் புரியல .

நண்டு :மேல இருக்க படத்த பார் .

நொரண்டு :யார் வரச்சது .

நண்டு :நான் தான் .

நொரண்டு :ஓ ........

நண்டு :படத்த நல்லா பாரு முதலில் .யார் வரஞ்சா என்ன .

நொரண்டு :ம் .......

நண்டு : புரிஞ்சுச்சா .

நொரண்டு :ம் ....நான் கேள்விப்பட்டதெல்லாம் .லிங்கம் ஆண்குறியின் அடையாளம் அப்படினு .

நண்டு :சரி கேள்விப்பட்டாய் அல்லவா ,அதோடு அதற்குப்பின்னால் உள்ள நிகழ்வுகளையும் தெரிந்துகொண்டாயா ? .உணர்ச்சி வசமா மட்டும் பேசத்தெரிஞ்சுப்பிட்ட .அதனால் அறிவ விட்டுட்டு தேடுர .என்ன சொல்ல .இயல்பைப்பற்றிய அறிவில்லாமல் இருக்க பக்குவப்படுத்தப்பட்டுள்ளாய் .எதுக்கொடுத்தாலும் .

நொரண்டு :விடுப்பா ,பெரிய இவன் மாதிரி பேசாத ,அதப்பத்தி நீ சொல்லவரத சொல்லு .

நண்டு :ஆதி மனிதன் ...



தொடரும் ....












. Download As PDF

சனி, 25 டிசம்பர், 2010

பன்றிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்




பன்றிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும்
காரணம்
நாய்கள் மேல் நோக்கி  பார்க்கும்
பூனைகள் கீழ்  நோக்கி  பார்க்கும்
பன்றிகள் மட்டும் தான் சரிசமமாய் பார்க்கும் .




--------


1.ஹலோ வெங்கடாசலம் இருக்காரா ?.

2.இல்லைங்க .ராங் நப்பருங்க .

1.நீங்க யாருங்க பேசரது ?

2.நான் கோபிங்க .

1.வெங்கடாசலத்த கூப்பிட்டா நீங்க ஏங்க எடுக்கிறீங்க  .

2 !!! ?.                                                                                


..........


சாப்பாடு சாப்பிடுவதை விட்டுவிட்டு 2 பன்றிகள் கடுமையான சண்டை போட்டுக்குச்சு .
விசாரித்ததில் .
ஒரு பன்றி இன்னென்றை பன்னி மாதிரி ஏன் சாப்பிடரனு சொல்லிடுச்சாம் .அதனால தான் சண்டை போடுதாம் .



..........


ஒரு கிலோமீட்டருக்கு மேல கியூ ரோட்டோரமா போய்க்கிட்டுருக்குது .காரில் சென்றுகொண்டிருந்த நம்மாளுக்கு ஒரே ஆச்சரியம் .சரி என்னானு  பாக்கலாமுனு கார வேகம ஓட்டிட்டுபோய் பாத்தா கியூவுக்கு முன்னாடி ஒரு சவ ஊர்தி மெதுவா போய்க்கிட்டிருக்கு .என்னானு பக்கத்தில போய் பாக்கலாம்னு கார ஒரு ஓரமா நிப்பாட்டிட்டு சவ ஊர்தி கிட்ட போய் பார்த்தார் . அதில 2 சவப்பெட்டிகளும் அதுக்கு மேல ஒரு நாயும் இருந்தது .நம்மாளுக்கு ஆச்சரியம் .என்னடா 2 சவபெட்டி இருக்கு நாய் ஒன்னும் இருக்கு என குழம்பி .அதற்கு அருகில் அமர்ந்திருந்தவரிடம் என்னங்கனு கேட்க .முதல் சவப்பொட்டிய காட்டி இது என் மனைவிங்க என்றார் சவ ஊர்தியில் அமர்ந்திருந்தவர் .எப்படிங்க இறந்தார் என நம்மாள் கேட்க இதோ இந்த நாய் கடிச்சிருச்சு அதனால் இறந்திட்டாங்க என்றார் .இன்னொரு சவப்பொட்டிய நம்மாள் பார்க்க .அத புரிந்துகொண்ட  அவர் அது என் மாமியாருங்க என்றார் .அவங்க எப்படி செத்தாங்க என்றதுக்கு .அவங்களையும் இந்த நாய் தாங்க கடிச்சுக்சு என்றார் .குழப்பத்துடன் திரும்பி காருக்கு வந்தார் நம்மாள் .ஏதோ ஒன்று மனதை உறுத்த திரும்ப சென்று ஏங்க உங்க நாய கொஞ்சம் கொடுக்கமுடியுமா என கேட்டார் .அதற்கு அவர் கொடுக்க நான் தயார் ,ஆனால் ,அதற்கு நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணனும் என்றார் .நம்மாளுக்கு ஒன்னும் புரியல .எங்க என்றார் .அதுக்கு பணிவ அவர் இந்த கியூ அது முடிஞ்ச பிறகு தானே உங்களுக்கு கொடுக்கமுடியும் என்றார் .









 ..........


அவசியம் இதைப் பாருங்க 

ஈரோடு வரும் பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு




.



. Download As PDF

வெள்ளி, 24 டிசம்பர், 2010

2 ம் தலைமுறை வலைப்பதிவர் விருதுகள் 2010 - 2G BLOGGER AWARDS 2010 -HURRY UP


வலைப்பூ எழுத்துக்களின்
2 ம் தலைமுறையை ஊக்குவிக்கும்
ஒரு சிறு முயற்சியாக 
2 ம் தலைமுறை வலைப்பதிவர் விருதுகள் 2010
அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விருதுகள் வலைப்பதிவர்களுக்கான விருதுகள் .

வலைப்பதிவர்களின் ஆகச்சிறந்த 2010 ம் ஆண்டின் பதிவுகளுக்கு தரும் ஒரு சிறு சிறப்பு இது அவ்வளவே.

கீழ்க்காணும் நான்கு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன .

1. படைப்பிலக்கியம் (கதை,கவிதை)
2. நகைச்சுவை (நகைச்சுவைகள் ,மொக்கைகள் )
3. கட்டுரைகள் (அறிவியல்,விழிப்புணர்வு,சுற்றுச்சூழல் )
4. திரை (திரைவிமரிசனம் ,திரை சார்ந்த கட்டுரைகள் )


ஒவ்வொரு பிரிவிலும் 5 படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு விருந்தினரால் முதல் பரிசுக்கான விருதினர் தேர்ந்தெடுக்கப்படுவர் .

முதல் பரிசாக விருதுடன் ருபாய் 300 சன்மானமாக  சமர்ப்பிக்கப்படும் . தேர்தெடுக்கப்பட்ட மற்ற நால்வருக்கும் தலா ருபாய் 75 சன்மானமாக  சமர்ப்பிக்கப்படும் .

வெளிநாட்டில் வெளியூரில் இருப்பவர்களுக்கு அவர்அவர்கள் கூறும் வழிகளில் விருதும் சன்மானமும் சமர்ப்பிக்கப்படும் .

விருதுகளும் சன்மானமும் 15.01.2011 அன்று வழங்கப்படும் .

வலைப்பதிவர்களிடமிருந்து  ஆகச்சிறந்த பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

வலைப்பதிவர் அனுப்பும் படைப்புகள்  01.01.2010 லிருந்து 23.12.2010 க்குள் வெளியிடப்பட்டதாக இருக்கவேண்டும் .

சொந்த படைப்பாக இருக்கவேண்டும் .

நடுவர்களும் படைப்புகளை அனுப்பலாம் .

படைப்புகளை twogbloggerawards@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவேண்டும்.

வலைப்பதிவர்கள் தாங்களின் ஆகச்சிறந்த படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 05.01.2011  .


வலைப்பதிவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் ஆகச்சிறத்த படைப்புகளை அனுப்பி சிறப்பிக்க  அன்புடன் வேண்டுகிறேன் .




இப்படிக்கு
அன்புடன்
நண்டு @நொரண்டு
ஈரோடு .






. Download As PDF

வியாழன், 23 டிசம்பர், 2010

நாளைய தமிழக முதல்வர் .


எனக்குத் தெரிந்தவரை நான் என் வாழ்நாளில் ஒரு பாமர காங்கிரஸ் தமிழரையும் இது வரை பார்த்ததே இல்லை .இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால் ஒரு ஏழை காங்கிரஸ்காரரை நான் இது வரை சந்தித்ததே இல்லை .அப்புறம் காங்கிரஸுக்கு எப்படி ஓட்டு விழுதுனா . தமிழகத்தில் உள்ள எந்த ஒரு காங்கிரஸ் தலைவரையும் நம்பியோ ஆதரித்தோ  இங்குள்ள யாரும் காங்கிரஸுக்கு ஓட்டுப்போடுவதில்லை .காங்கிரஸுக்கு ஓட்டு விழுவது நேரு குடும்பத்திற்கே தவிர இங்குள்ளவர்களின் மீது நம்பிக்கை வைத்து கிடையாது .

தமிழர்கள் காங்கிரஸின் மீது எத்தகைய நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதனை இங்கு கட்டாயம் கூறியே ஆக வேண்டும் .எனது அன்பர் வழக்கறிஞர் கி.சிதம்பரம் அவர்கள் சிங்களன் தமிழன் மீது வெறுப்புடன் ஒட்டாமல் இருக்க பல காரணங்கள் வெளிப்படையாக தெரிந்திருந்தாலும் மறைமுகமான பல காரணங்களின் ஒன்று எது தெரியுமா ?என கேட்டார் .சொல்லுங்கள் என்றேன் .அவர் சொன்னது எனக்கு ஆச்சரியத்தை தந்தது .அது என்னவெனில் ,இனப்பிரச்சனைக்கு முன்பு இலங்கையில் நாம் சாதாரணமாக ஒரு தமிழர் வீட்டிற்குள்( இது ஏழை வீடானாலும் ,பணக்கார வீடானாலும்) சென்று பார்த்தால் அங்கு சாமி படம் இருக்குதோ ,இல்லையோ கட்டாயம் நேரு ,இந்திராகாந்தி ஆகியோரின் படங்கள் இருக்கும் .அந்த அளவிற்கு அவர்கள் இந்தியத்தலைவர்களை விரும்பினர் .அதனாலும் சிங்களர்கள் இவர்கள் இந்திய விசுவாசிகள் நமக்கு என்றும் எதிரிகள் என்ற மனேபாவத்திலே பார்க்க ஆரம்பித்ததும் ஒரு காரணம் என்றார் . இலங்கையில் உள்ள தமிழனே அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த பொழுது இங்குள்ள தமிழன் எவ்வளவு நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளான் என்பதை காங்கிரஸ் எண்ணிப்பார்க்கவேண்டும் .காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் மக்கள். ஆனால், அதனை ஒருங்கிணைக்க இங்கு ஒரு மக்கள் தொண்டரும்  இல்லை .தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமானால் அப்படி ஒரு மக்களின்  தொண்டரை இனம்காண வேண்டும் .காமராஜர் போல .

தமிழகத்தில் கோஷ்டிக்குத் தலைவர்கள் ஆவதையும் ,அதன் மூலம் பதவிகளில் அமரத்துடிப்பதுமாக இருக்கும் மக்கள் தொண்டர்களைப் பார்த்து பார்த்து பாமரன், காங்கிரஸ் மீது உள்ள தனது அபிப்பராயத்தை மாற்றி மாற்றி இப்பொழுது அதை பணக்கார கட்சியாகவே பார்த்து ஒதுங்க ஆரம்பித்துவிட்டான் .இந்த நிலை மாற வேண்டும் . அப்பொழுது தான் "கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர, நாம் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபடுகிறோம். இது தாமதமானாலும், ஒருநாள் நாம் அதை செய்து முடிப்போம். இளைஞர் காங்கிரசில் உள்ள ஒருவர், வரும் காலத்தில் தமிழக முதல்வராக வரும் வாய்ப்புள்ளது,'' என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் பேசிய பேச்சு சாத்தியமாகும் .








. Download As PDF

புதன், 22 டிசம்பர், 2010

இசை மனிதனுக்கு ஏன் பிடிக்கிறது ?

இசை மனிதனுக்கு ஏன் பிடிக்கிறது ? என்பதற்கு விடை தேடிக்கொண்டிருக்கும் பொழுது எனது நண்பர் கிருஷ்ணன் சொன்னார் .இதைக்கேட்டு பாருங்க என .
இதைப்பற்றி கூறுவதை விட
இதை கண்ணாலும் காதாலும் கேட்டுப்பாருங்கள் .
கண்ணால் பார்த்துக்கொண்டு கேட்பதை விட கண்மூடி காதால் கேட்பதில் அதிக அழுத்தத்தை இசை நமக்கு தருவதை உணர்வீர்கள் .













இசை மனிதனுக்கு ஏன் பிடிக்கிறது ?
பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் .ப்ளிஸ் .



நன்றி : YouTube
&
BOND சகோதரிகள் .






.







. Download As PDF

வெள்ளி, 17 டிசம்பர், 2010

நரகமாக்கி


.






நகர்ந்து  நகர்ந்து
நகரமாகி
நகர்த்தி நகர்த்தி நரகமாக்கினான் .





.
Download As PDF

வியாழன், 16 டிசம்பர், 2010

உளவுத்துறையில் ஊழல்கள்

விக்கிலீக் ...எங்களை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற இறுமாப்புடன் இருந்த அனைத்து உலக உளவுத்துறைகளின் கர்வத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த ஒரு  சாதனை .

இதிலிருந்து  ஒவ்வொரு உளவுப்பிரிவுகளும் எவ்வாறு தவறுதலாக செயல்பட்டுக்கொண்டிருந்துள்ளன என்பதுவும் .இவ்வாறு இருந்த காரணத்தினால் தான் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட முடிந்துள்ளது என்பதையும்  அறிந்துகொள்ள முடிகிறது .

உளவுப்பிரிவுகள் என்று அரசியல் வயத்துடன் அரசியல் பார்வையுடன் அரசின் பார்வையுடன் செயல்படுகிறதோ அப்பொழுதே அங்கு ஊழல் மலிந்துவிடுகிறது .(இங்கு ஊழல் என்பது அரசியல் ஆதாயம் ஆகும்).இது மிகவும் தவறாக கொள்கை என்பதுடன் மக்களாட்சி தத்துவம் கொண்ட நாடுகளில் மக்களைக் காக்கும் பாங்கும் இதுவன்று .

ஒரு உறவுப்பிரிவு எப்படி இருக்கவேண்டும் என்பதை வள்ளுவர் மிக அழகாக விளக்கியுள்ளார் .

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.     589


உளவுத்துறை ஒன்று இருக்கின்றது என மக்கள் உணராதபடி இருக்கவேண்டும் .அதனுடன் மூன்றுவகையான உளவுகளில்  அடிப்படையில் உள்ள ஒற்றுமைகளை தெரிந்தெடுத்து அவைகளில் உள்ள  உண்மையைத் தெளிவுறவேண்டும் என்கிறார் வள்ளுவர் .

இங்கு கவனிக்கப்படக்கூடிய விசயம் என்னவெனில் தவறான மற்றும் ஊகத்திலான தகவலில் கவனம் செலுத்தி கற்பனைக்கு இடம் தந்து எந்த உளவின் முடிவும் இருக்கக்கூடாது என்பதுடன் உளவின் முடிவு ஆழ்ந்த பார்வையுடனும் கவனத்துடனும் இருக்கவேண்டும் என்கிறார்  வள்ளுவர் .




வள்ளுவர் அறியப்படவேண்டிய  உண்மைகள் ...
தொடரும் .....


. Download As PDF

புதன், 15 டிசம்பர், 2010

நண்பர் யார் சகோதரன் யார்

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ...

இந்த கூற்று உண்மைதாங்க .
(இங்கு பால் வித்தியாசம் பார்க்காமல் படிக்கவும் )

சகோதரன் என்றால் நம்மின் உணர்வில் ,உள்ளத்தில்,அன்பில்,பண்பில் ,பாசத்தில் ,நேசத்தில் ,சுகதுக்கங்களில் சமமாக  பகிர்ந்துகொள்ளும் ஒரு அனைத்துமான உறவு .

நண்பர் என்றால் என்ன லாபம் என உறவில் ஆதாயம் தேடும் அல்ப்பைகள்  அவ்வளவே .

என்னைப்பொறுத்தவரை சகோதரத்துவத்தையே விருப்புகிறேன்





. Download As PDF

செவ்வாய், 14 டிசம்பர், 2010

மிக்க மகிழ்ச்சி மஹிந்த ராஜபக்ச அவர்களே சிங்கள மொழியில் மாத்திரமே இனி தேசிய கீதம் பாடுங்கள் .


சிங்கள மொழியில் மாத்திரமே இனி தேசிய கீதம்! - மஹிந்த ராஜபக்ச .

மதிப்பிற்குரிய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச அவர்களே உங்களின் இந்த அறிவிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது .நான் இது போன்று மேலும் உங்களிட்ம் எதிர்பார்க்கின்றேன் .அதையும் செய்துவிடுங்கள் இலங்கையின் மதம் புத்தம் அதனால் மற்ற மதத்தினர் அனைவரும் உடனே புத்தத்திற்கு மாறவேண்டும் என்றும் .அனைத்து மத வழிபாட்டு மையங்களையும் புத்த பிக்குகளின் கையில் ஒப்படைக்கவேண்டும் என்றும் ஆணையிடுங்கள் .இது தான்  மிகசரியாக இருக்கும் .இதையும் செய்வீர்கள் என நம்புகிறேன் .


உங்களை நான் மிகப்பெரிய ராஜதந்திரி என நினைத்திருந்தேன் .ஆனால் தாங்கள் ஏன் இப்படி ஆகிவிட்டீர் என்றுதான் தெரியவில்லை .உலக நாடுகளின் பார்வைக்கு புலிகளை தீவிரவாதிகளாக ஆக்கி நீங்களும் உங்களின் முன்னவர்களும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி வந்தீர்கள் .அனைவரும் அதையே நம்பினார்கள் . நீங்கள் அனைத்து உரிமைகளையும் தமிழருக்கு தந்தாலும் அவர்கள் போராடுகின்றனர் என இத்தனை நாள் கூறிவந்தீர்  அதையும் அனைவரும்  நம்பினார்கள் .ஆனால் ,இப்ப சிங்களத்தில தான் தேசியகீதம் இலங்கையில் பாடப்படும் என அறிவித்து உங்களின் உண்மை முகத்தை  உலகிற்கு காட்டிவிட்டீரே ..இனிமே சர்வதேச சமுதாயத்தை எப்படி ஏய்ப்பீர்கள் ? .ஐ.நா .சபையில் எப்படி மனிதஉரிமைக்குரல் எழுப்பப்போகின்றீர்கள் ?.இத்தனை நாள் உங்களின் முன்னேர்கள் அணிந்திருந்த முகமூடியை நீங்கள் ஏன் கழட்டுனீர்கள் ? .


எது எப்படி இருந்தாலும் உம்மை  நான் பாராட்டுகிறேன் .ஏனெனில் ,என்ன சென்னாலும் சிங்கள அரசை ஒரு அரசு தன் பிரசைகளுக்கு இப்படியெல்லாம் செய்யுமா ? .அதுவும் சுதந்திர நாட்டில .தமிழர்கள் தான் தப்பு செஞ்சுக்கிட்டு வர்ராங்கனு தங்களின் விரோதப்போக்கை காட்டிவந்த உலக நாடுகளுக்கு தாங்களே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டீர் .குற்றவாளி  சிங்கள அரசு தான் என .சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக தாங்கள் அறிவிக்கப்பட இது ஒன்றே போதும் .அதனால் தான் என்னால்  தாங்கள்  பாராட்டப்படுகின்றீர் . விரைவில் விசரணைக்கு தயாராகுங்கள் .

மக்களிடம் தாங்கள் இப்பொழுது விதைத்துள்ள ஒரு விதை என்னை மிகவும் கவர்ந்துள்ளது .அது ,இந்த தேசிய கீதம் உனது அல்ல என்பது. ஒரு தேசிய கீதம் ஒருவனுடையது அல்ல  என்றால் அவன் தேசமும் அது அல்ல என்பது பொருள் . அப்படியெனில் தனது தேசத்தை அவன் சுட்டிக்காட்டிக்கொள்ள வேண்டும் அல்லவா.அப்பொழுது அவன் என்ன செய்வான் ? .விருட்சமாக வேர் ஊன்றுவான் . அதைத்தான் தமிழன் செய்யப்போகின்றான் .சோர்வுற்றிருந்தவனை வேர்விட்டு எழ வித்திட்ட உம்மை எமக்கு பிடிக்காமலா போகும் .

இருந்தாலும் ஒன்றை உம்மிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன் .ஹிட்லருடன் உம்மை ஒப்பிட நினைத்தேன் .ஆனால் ,அது முடியாமல் போனது .ஏனெனில்,என்ன இருந்தாலும் ஹிட்லர் ஒரு வீரன் . நீ ஒரு கோழை .ஒரு கோழையை ஒரு வீரனுடன்  எவ்வாறு ஒப்பிடுவது  .




.............


சர்வதேச மக்களே ...
உங்களிடம் நான் முறையிடுகின்றேன் ...
மனிதப்பிறப்பால் நாம் எல்லொரும் சகோதரர்களே ...
இது உண்மை என்றால் நான் கூறுவதை செவிமடுத்து கேளுங்கள் ...
உங்களின் நாட்டில் ,உங்களின் தாய் மொழியில் ,உங்களின் தேசிய கீதத்தைத் தானே நீங்கள் பாடுகின்றீர்கள் ...
இது உண்மை தானே ...
உங்களின் நாட்டில் ,உங்களின் தாய் மொழியில் ,உங்களின் தேசிய கீதத்தைத் பாடாதே என சென்னால் உங்களின் உணர்வு என்னவாக இருக்கும் ,நீங்கள் என்ன நினைப்பீர்கள் ,என்ன செய்வீர்கள் ...
சற்றே ஒரு நிமிடம் எனக்காக சிந்தியுங்கள்...
நம்மைப்போற்று  தானே தமிழனும்  மனிதன் ...
நாம் கற்பனை செய்யமுடியாத துயரத்தை அவன் கஷ்டப்பட்டு சுமக்கின்றானே ...இது முறையா ? ...ஞாயமா ? ...
சிந்திப்பீர் உலக சமுதாயமே ....
சகோதரர்களே 
ஒன்றுபட்டு குரல் கொடுப்போம் ...
இலங்கை அரசின் தமிழர் மீதான அடக்குமுறையை கைவிடச்செய்வோம் ...
அது வரை இலங்கையரசின் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டி போராடுவோம் ...
உலகெங்கும் ....
சர்வதேச சமுதாயமாய் ...


அனைத்து பதிவர்களும் இதற்கான கண்டனத்தை தங்களின் வலைப்பூக்களில் பதியுமாறு கேட்டுக்கொள்கிறேன் .




. Download As PDF

திங்கள், 13 டிசம்பர், 2010

புலிக்கொடிகளின் விடுதலைப்போர் தோல்வியில் முடிந்ததா ? .


வரலாற்றில் என்றும் புறக்கணிக்கப்பட்டதாகவே தமிழனின் அனைத்து நிகழ்வுகளும் இருந்துவந்துள்ளன.இன்றும் கூட தமிழன் தன் அடையாளங்களை கண்டு பதிந்து தெளிவுகொள்ளாமல் ,ஏதோ யாருக்கோ ,எதுக்கோ எதுவும் நடந்துமுடிந்தது போல கண்டும்காணாததுமாய் வாய்கிழிய  பேசிவருகிறான் .இனி ஒவ்வொன்றின் தன்மையையும் உண்மையையும் பதிந்து இனிவரும் சந்ததிக்கோனும் உருப்படியான வரலாற்றைக்கொடுக்கும் முயற்சியாக வேலூரிலிருந்து ஆரம்பிக்கின்றேன் .

நான் இதனை புலிக்கொடிகளின் விடுதலைப்போர் எனக்கொள்கிறேன் .அதற்கு காரணம் வெற்றிபெற்ற தமிழ்வேங்கைகள் வேலூரில் புலிக்கோடியேற்றி தங்களின் வெற்றியை அறிவித்ததுவே .

இந்தியவின் வரலாற்றுப்பக்கங்களில் மறுக்கப்பட்ட பல தமிழரின் போராட்டங்களில் வேலூர் புரட்சியும் ஒன்று .

ஆங்கிலேயர்களுக்கு முதன்முதலாக மிகப்பெரிய பாடத்தை கற்பித்த நிகழ்வு இது .

தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் மிகவும் ஒன்றுமையான இருப்பது கண்டு தங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டதற்கு அட்சாரமான சம்பவம் இது .

இது நடந்தது 1806 ஜூலை 10 .இதற்குப்பிறகு தான் இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 ல் நடந்தது .


இது நடந்ததற்கான காரணம் .சுருக்கமாக ,இந்திய சிப்பாய்களுக்கு ஆங்கில அரசு  “தோலினால் செய்யப்பட்ட தலைப்பாகை அணிய வேண்டும், மீசையின் அளவை குறைக்க வேண்டும், தாடி வளர்க்கக்கூடாது” போன்ற கட்டளைகள் இஸ்லாமிய சிப்பாய்களுக்கும் மற்றும் திருநீறு அணியக்கூடாது போன்ற கட்டளைகளை இந்து சிப்பாய்களுக்கும்,அனைவரும் மார்பில் சிலுவை போன்ற ஒன்றை தொங்கவிடவேண்டும் எனவும் ஆணை பிறப்பித்தது.இது சிப்பாய்கள் மத்தியிலும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது மட்டும் காரணம் அல்ல என்றாலும் ஆங்கிலேய தரப்பால் இதுவே கூறப்பட்டது .

வெகுண்ட சிப்பாய்கள் பாளையக்காரர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட தீர்மானித்தனர் .திப்புவின் குடும்பத்தினர் அனைவரும் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.அதனால் அங்கிருந்து ஆரம்பிப்பதுடன் அவர்களை மீட்டதாகவும் அமையும் என்பதால்  வேலூர் நகரம் புரட்சியின் மையப்பகுதியாக தேர்வானது .

அதனால் 1806 ஜூலை மாதம் 9 ஆம் தேதி  அங்கு நடைபெறவிருந்த திப்பு சுல்தானின் மகள்களில் ஒருவரின் திருமணத்தை காரணம் காட்டி, வேலூர் கோட்டையில் புரட்சிப் படையினர் குழுமினர். அடுத்த நாள் பத்தாம் தேதி காலை 2 மணிக்கு ஆரம்பமானது  தாக்குதல் .வலுவான இந்தியச் சிப்பாய்களினால்  மூன்றே மணிநேரத்தில் வேலூர் கோட்டை மீட்கப்பட்டது .ஆங்கிலேய தளபதிகள் கொல்லப்பட்டனர் .அங்கிருந்த வெள்ளையர்களில் 100 க்கும் அதிகமானேர் கொல்லப்பட்டனர்.திப்புவின் புலிக்கொடியை வெற்றியாளர்கள் வேலூர் கோட்டையில் ஏற்றினர் .

மிகவும் கடினமான அமைப்பாக திப்புவின் குடும்பத்தினர் வைக்கப்பட்டிருந்த இடம் அமைக்கப்பட்டிருந்ததால் அவர்களை மீட்பதில் கவனமாக புரட்சியாளர்கள் இருந்தனர் .அதற்கு நீண்ட நேரமும் ஆயிற்று .அதோடு ஆங்கிலேயர்கள் திருப்பித் தாக்கலாம் ஆதலால்  திப்புவின் குடும்பத்தினரை விடுவித்த உடன் கோட்டையைவிட்டு உடனே வெளியேற்றவேண்டும் என்ற  எண்ணத்தினால் கோட்டையின் கதவை தாழிடாவில்லை .

ஆற்காட்டிலிருந்து வந்த ரோந்து படையினர் கோட்டையில்  புலிக்கொடி கண்டு அதிர்ந்தனர் . பின் குதிரைப்படையுடன் மதியம் வத்து கோட்டைக்குள் திறந்திருந்த கதவின் வழியாக புகுந்து கோட்டையை கைப்பற்றியது .இதில் சுமார் 3000க்கும் மேலான புரட்சியாளர்கள் கொல்லப்பட்டனர் .பிடிபட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது .
புரட்சியை தூண்டியதாகக்கூறி திப்புவின் வாரிசுகளை கல்கத்தாவிற்கு இடம் மாற்றியது .
கல்கத்தாவில் திப்புவின் வாரிசுகள் இன்று வறுமையில் வாடுகின்றனர் .

சரி இந்த புலிக்கொடிகளின் விடுதலைப்போர் தோல்வியில் முடிந்ததா ?  என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும் .சிலர் இது தோல்வியில் முடிந்தது என்று கூறுவதுடன் அதற்காக கூறும் காரணங்கள் தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை .முதலாவது தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்படவில்லை.இரண்டாவது கோட்டை கைப்பற்றப்பட்டவுடன் அங்கிருந்த கஜானாவை உடைத்த சிப்பாய்கள் அதிலிருந்த பொருட்களை கொள்ளயடித்து ஓடிவிட்டார்கள் என்பது .இரண்டும் தவறு திட்டமிடே நடத்தப்பட்டதால் எளிதில் சில மணி நேரத்தில் கோட்டையை மீட்டனர் .ஆனால் ஆங்கிலேயர்கள் பெரிய படையுடன் வந்து நீண்ட நேரம் போராடியே பெற்றனர் . கஜானாவை கொள்ளயடித்து ஓடிவிட்டார்கள் என்பதுவெல்லாம் பொய் ஆங்கிலேயர்கள் இந்த புரட்சியை கொள்ளை என அரசியாருக்கு தெரிவுத்து  புரட்சியாளர்களை கேவலமாக சித்தரித்ததுடன் .கஜானாவில் இருந்ததை இங்கிருந்த ஆங்கிலேயர்களே பங்கிட்டு பகிர்ந்துகொண்டார்கள் என்பதுவே உண்மை .

இது நடந்து 51 ஆண்டுகள் கழித்து 1857ல்  நடந்த இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சிக்கும் இதே காரணம் சற்று வித்தியாசமாக கூறினர் ஆங்கிலேயர்கள் .

வேலூர் புரட்சியில் பங்குபெற்ற யாவரும் இன்றுவரை நினைத்துப்பார்க்கப்படவில்லை . இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி 1857 க்கு கொடுக்கப்பட்ட அளவு அங்கீகாரம் இதற்கு கொடுக்கப்படவில்லை .

வேலூர் புரட்சியின் நாயகர்களான ஷேக் காசிம், சுபேதார் ஷேக் காதம் ,ஜமேதார் ஷேக் ஹூசைன்  ஆகியோருக்கு உரிய மரியாதை  இதுவரை கொடுக்கப்படவில்லை .  அவர்கள் யாரேன்றே பலருக்குத்தெரியாது .  என்ன சொல்ல ?.

இந்த புலிக்கொடிகளின் விடுதலைப்போர்  இட்ட கனலும் மெல்லமெல்ல ஆங்கிலேயன் வெல்லமுடியாதவன் அல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயன் மேல் இருந்த பயத்தை போக்கச்செய்து விடுதலைப்போராட்டத்தில்  மக்களை பயமின்றி ஈடுபடவைத்தது .

அதனால் நாம் இன்று மகிழ்வாக இருக்கின்றோம் .அனைத்தையும் பெற்று .அனைத்தையும் மறந்து .ஆனந்தமாக .







. Download As PDF

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

ஏட்டப்பர்களே வாருங்கள்





ஒற்றைக்கோணலாய்
ஒற்றைப்பார்வை
பார்க்கும்
ஏட்டப்பர்களே
வாருங்கள் 

உலகு
பலப்பலவாக
பல கோணங்களில்
பலப்பலவாக
பார்க்கிறது

நாமும்
உலகை
பல பலவாக
பல கோணத்தில்
பளபளப் ஆக
பார்ப்போம் .



.


பலப்பல -மிகவும் பழைய





.
Download As PDF

வெள்ளி, 10 டிசம்பர், 2010

இனி நோபல்பரிசுக்கு குட்பை - கன்பூசியஸ்பரிசை போற்றுவோம்


இன்று  நோபல்  நினைவு  நாள் .
இவர் டைனமைட்டை உருவாக்கியவர்.
ஆயுதத்தயாரிப்பாளர் .
Bofors ன் உரிமையாளர் .
இவரின் கண்டுபிடிப்பால் கோடிக்கணக்கான மனிதர்கள் மண்ணில் புதைந்துள்ளார்கள் இன்றுவரை.

அவரின் உயிலின் படி நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றது .

அவரின் பரிசின் நோக்கம்  கண்டுபிடிப்புகள் தவறான வழிகளில் பயன்பட்டு மக்களை காவுவாங்கக்கூடாது என்பதுவே .

அவர் நோபல் பரிசை தோற்றுவித்ததன் நோக்கம் சரியானதாக இருந்தாலும் ,அதனை பல சமயங்கள் சரியாக கொடுக்கப்படவில்லை என்பதுவே பொதுவான கருத்தாக இருந்து வருகிறது .அப்பரிசு கொடுப்பதில் ஒரு குறுகிய பார்வை இருப்பதாகவே என்னால் அறியப்படுகிறது .

உலகு மார்க்ஸியத்தால் விரிவடைந்து வந்துகொண்டிருக்கின்ற  நிலையில் இப்பரிசு வழங்குவதில் முதலாளித்துவ ஆளுமை அதிகம் இருப்பதுடன்  முதலாளித்துவத்துக்கு எதிரான போக்கை மட்டுப்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு செயல்பட்டு வருவதாகவே உணர்கிறேன் .நோபல் பரிசுப்பட்டியலை பார்த்தாலே இதனை தெரிந்துகொள்ளலாம் .

அதோடு மேற்கத்தியவர்கள் மற்றும் மேற்கத்திய சிந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் அதனை ஆதரிப்பவர்களுக்கே முன்னுரிமை தரப்படுவதாகவும் உள்ளது .

உதாரணமாக காந்தியடிகளுக்கு இப்பரிசு கொடுக்கப்படாததை சொல்லலாம் . காந்திக்கு இப்பரிசு கொடுக்காததுக்கு  காரணம் அவர்கள் பல சொன்னாலும் ,அவர்கள் கட்டாயம் தந்திருக்கவே மாட்டார்கள் ,ஏனெனில் காந்தியின் சித்தாந்தத்தை அவர்கள் கண்டு அஞ்சியதே .காந்திக்கு பரிசு கொடுக்கப்பட்டால் காந்தியம் உலகம் முழுதும் 2 ம் உலகப்போர் முடிந்த சமயத்தில் பார்க்கப்பட்டிருக்கும் .அப்ப ஒரு குழப்பமான சூழல் உலகில் நிலவியது .அப்பொழுது காந்தியத்தை உலகநாடுகளுக்கு வெளிப்படுத்தினால் முதலாலித்துவ சிந்தனைகள் அடிபட்டுப்போய்விடும் .காந்தியம்  ஐரோப்பாவிலும் அமேரிக்காவிலும் மற்றைய நாடுகளிலும் எளிதாக பரவிவிடும் அதோடு காந்தி ஆசியாவிலும் மிகப்பெரிய மனிதராகிவிடுவார் .இந்தியப்பிரிவினையும் மறுபரிசீலனைக்கு  உட்படுத்தவும் படலாம் .இது எல்லாம் நடந்துவிட்டால் காந்தி உலக சிருஷ்டி ஆகிவிடுவார் .காந்திய உலகம் ஏற்பட்டாலும் ஏற்பட்டுவிடும் .இதுக்கு விடுவார்களா மேற்கத்தியவர்கள்.அதனால அதச்சொல்லி இதச்சொல்லி மலுப்பிட்டாங்க .

இப்பொழுது சீனா இனி நோபல் பரிசுக்கு குட்பை கன்பூசியஸ் பரிசை போற்றுவோம் என அமைதிக்கான ஒரு உன்னத பரிசை அறிவித்துள்ளது .இது வரவேற்கத்தக்கது .

எத்தனை நாளைக்குத்தான் உலகும் இந்த ஒத்த பரிசையே பெரிசா பேசிக்கிட்டு.நீங்களும் அவங்க மாதிரி யில்லாம பாத்துக்குங்க .இல்லைனா அடுத்த யாராவது இதே போல ஒரு பரிசை அறிவிப்பார்கள் .

இனி வரும் காலத்தில் ஏகப்பட்ட உலக பரிசுகள்  கொடுப்பது உறுதியாகிவிட்டது.அப்ப நோபல் பரிசு மற்றவற்றுடன் 10 தோட நீ ஒன்னு அத்தோட நான் ஒன்னு என்ற நிலைக்கு ஆளாகப்பட்டுவிடும் .இந்த மாற்றத்திற்கு அச்சாரம் போட்ட சீனாவை வாழ்த்தலாம் .

இறுதியா ,அமைதிக்கான ஒரு உன்னத பரிசை அறிவித்துள்ள சீனாவே அதனை கன்பூசியஸ் என்ற உன்னதரின் பெயரில் ஆரம்பித்தது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது .இனி தாங்கள் ஆசியாவில் அமைதி நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பீர்கள் என இதன் மூலம் நம்புகிறேன் .



. Download As PDF

புதன், 8 டிசம்பர், 2010

ஈரோட்டில் இளைப்பாறலாம் வாங்க 26 ல்



பொருமை மிகு
பதிவுலகப் பறவைகளே


மின்வெளியில்
வண்ணங்களாய்
எண்ணங்களை
மிளிரச்செய்யும்
நாம்
சற்றே
இளைப்பாற
சங்கமிக்கலாமே
ஈரோட்டில்
26 ல்

என
அன்புடன்
அழைக்கும்
உங்களின்
நண்டு @ நொரண்டு















மேலதிக விபரங்களுக்கு
பார்க்க

சங்கமம் 2010 – தயாராகுங்கள்!!!!



.




.
Download As PDF

திங்கள், 6 டிசம்பர், 2010

நாய்கள்,பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால் .




“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’

காந்தியைரை சந்தித்தபொழுது  டாக்டர் அம்பேத்கர் அவரிடம் முன் வைத்தவை கருத்துக்கள் இவை .இது 1931ல் நடந்தது .

மிகவும் உன்னதமான மனிதர் .

தனது வாழ்நாள் முழுதும் சமூக நீதிக்காகப் போராடிய ஒரு சமூக நீதிப் போராளி .

'அரசியலமைப்பின் பிதா'

நமது நாட்டின் முதல் சட்ட அமைச்சர் .

அண்ணலின் நினைவு நாள் இன்று .



வணங்குவோம்





இதையும்  பாருங்க


ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு 5.12.2010


. Download As PDF

வெள்ளி, 3 டிசம்பர், 2010

சிங்களம் காட்டுமிராண்டி மொழி யென்று


சிங்களா ...
உரக்கச்சொல்லுவேன்
உங்களிடம் நான்
உரக்கச்சொல்லுவேன்
உங்களின் மீது தவறில்லை
உங்களின் மொழியின் மீது தவறென்று
புத்தனின் புத்தத்தை
புதைத்து
புறமுதுகிடா மறவனை
புறமிருத்து கொன்று
கருவறையிலே தமிழினத்தை
கல்லறையாக்கி
மனிதனை மனிதனாக்கா
மாபதகஞ்செய்யும்
சிங்களத்தை
உரகச்சொல்லுவேன்
உலகம்
உறைக்கச்சொல்லுவேன்
காட்டுமிராண்டி மொழியென்று..







.
(இது மீள்வு  ) Download As PDF

மருத்துவர்களே குற்றவாளிகள்



அறுவைச்சிகிச்சை செய்யும்போது நோயாளி் பிழைக்காவிட்டாலும் அல்லது நோயாளிக்கு வேறு தீங்கு ஏற்பட்டாலும் மருத்துவர் தூக்கிலிடப்படுவர் அல்லது தண்டிக்கப்படுவர் என்ற அவலம்  இருந்து வந்ததால் மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை மருத்துவத்தினின்று விலகினர் 16 ம் நூற்றாண்டு வரை. மேலும் மிரட்டல் ,தாக்குதல் , கொன்றுவிடும் வழக்கங்கள்இருந்ததாலும் மருத்துவர்கள் அறுவைச்சிகிச்சை மருத்தும் செய்ய பயந்தனர் . மேலும் அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் அரசாங்கத்திலுள்ள உயர் அதிகாரிகளுக்கு முடிவெட்டல் மற்றும் முகச்சவரம் செய்தல் போன்ற பணிகளும் செய்யவேண்டும் என்ற கட்டளைக்கும் பணியவேண்டியிருந்தது.இதன் விளைவாக இத்துறை இழிவான செயல் என்று கருதவேண்டிய சூழ்நிலை ஏற்படவே இக்கலை அழிய நேரிட்டது . வேறு வேலை செய்யும் நாவிதர்கள் ,செருப்புத்தொழில்செய்பவர் தான் இந்தத் தொழிலை செய்தனர் .16ம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது .


பிரான்சில் ஏழை நாவிதக்குடும்பத்தில் 1510 ல் பிறந்த
ஆம்ரோஸ் பாரி என்பவரின் அயராத முயற்சியினால் அறுவைச்சிகிச்சை மருத்துவம் உயிர் பெற்று உயர்வு பெற்றது .

அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் குற்றவாளிகள்  அல்ல ,
அவர்கள் மக்களின் சேவகர்கள் என்ற உணர்வினை தனது அயராத நிகரில்லாத சேவையின் முலம்  உலகிற்கு உணர்த்தினார் .

ஆதலால்
ஆம்ரோஸ் பாரி அவர்கள்
அறுவைச்சிகிச்சை மருத்துவத்தின் தந்தை எனப்போற்றப்படுகிறார் .





இன்றைய மருத்துவத்துறையையும் ,மருத்துவர்களின் அர்ப்பணிப்பையும்
நினைத்துப் பார்க்கையில்...




. Download As PDF

வியாழன், 2 டிசம்பர், 2010

சோகம்






படிந்தவைகளை  அகற்ற அகற்ற

மீண்டும் மீண்டும்  படியும்  தூசுகள்

சோகம்





.
Download As PDF

திங்கள், 29 நவம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல் யார் குற்றவாளி


This Report for the year ended March 2010 has
been prepared for submission to the President
under Article 151 of the Constitution என்று ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் தணிக்கை குழு அறிக்கை லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. 

இங்கு நாம் கவனிக்கப்படவேண்டிய மிக முக்கியமான விசயம் எது எனில் Article 151 of the Constitution . நாம் முதலில் இதனை விரிவாக பார்ப்போம் .

Article 148 ன் படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படும் இந்திய தலைமைத்தணிக்கையாளர் பதவி மிகவும் அதிகாரம் நிறைந்ததும் ,பொறுப்பு மிகவும் அதிகம் கொண்டதுமான ஒரு பதவி .அதனால் தான் இவரை எளிதில் பதவி நீக்கம்  செய்யமுடியாத படி அரசியல் சாசனம் எழுதப்பட்டது . ஒரு தேர்தல் ஆணையர் , ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரை எவ்வாறு பதவி நீக்கம் செய்ய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதோ அத்தகைய நடைமுறைகள் கடைப்பிடித்து தான் இவரை பதவி நீக்கம் செய்ய முடியும் .நாடாளுமன்றத்த கூட்டி 2 சபையிலும் விவாதம் செய்து 3ல் 2 பங்குக்கு மேல் வாக்களித்து பிறகு குடியரசுத்தலைவரால் நீக்கப்படுவார் .அவ்வளவு முக்கியமான பொறுப்புள்ள பதவி .

இவரின் வேலை என்னானா  .மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை ஒரு தணிக்கையாளர் என்ற முறையில் தணிக்கை செய்யவார் .Article 150 ன் படி மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகள் அனைத்தும் ,தலைமைத்தணிக்கையாளரைக் கலந்தாலோசித்துக் குடியரசுத்தலைவர் வகுத்துக்கொடுக்கும் படிவத்தில் வைத்து வரப்பட்டு அதனை Article 151 ன் படி குடியரசுத்தலைவர் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் தாக்கல் செய்யவேண்டும் .

அவ்வாறு தாக்கல் செய்யப்படும் அறிக்கைகளில் ஏதாவது முறைகேடுகளோ அல்லது தவறுகளே இருந்தால் அவைகள் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் விவாதிக்கப்பட்டு பின் சம்மந்தப்பட்ட துறையினரிடமும் ,அதற்கு பொருப்பு வகிக்கும் அமைச்சரிடமும் விளக்கம் கேட்டு முறைகோடோ ,தவறோ இருந்தால் துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்க நாடாளுமன்றம் தகுந்த ஆவன செய்யவேண்டும் .அதில் பிரச்சனைக்குறிய அமைச்சர் ராஜினமா மற்றும் பிற நடவடிக்கைகள் அடங்கும் .
இது முழுக்க முழுக்க  Article 77 கூறும் இந்திய அரசின் அலுவலக செயல்பாடுகளில் வரும் .Article 77(4) இந்திய அரசின் அலுவல்களைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தம் முன்னர் கொண்டுவரப்பட வேண்டும் என்று கேட்கும் அதிகாரம்  ,எந்த நீதிமன்றத்துக்கும் மற்றும் வேறு எவருக்கும் கிடையாது  என்கிறது .


இப்ப ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கு வருவோம் ...

அரசியல் சாசன நெறிமுறைகள் இதில் கடைப்பிடிக்கப்படவேயில்லை என்பது தான் எனது வாதமே .

முதலில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை ஒரு தணிக்கையாளர் என்ற முறையில் இது சம்பந்தமாக இந்திய தலைமைத்தணிக்கையாளர்  வருடாவருடம் குடியரசுத்தலைவரிடம் தாக்கல் செய்திருக்க வேண்டும் .

இரண்டாவது அவைகள் நாடாளுமன்றத்தில் உடனே தாக்கல் செய்யப்பட்டு விவாத்த்திற்கு உட்படுத்தியிருக்க வேண்டும்

அதனை ஏன் 2003-04 இருந்து செய்யவில்லை .

நாட்டிற்கு இழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது தானே அவரின் அரசியல் சாசனப்படியான கடமை .அதற்குத்தானே அவ்வளவு கவுரவம் .எந்த நிமிடம் நாட்டிற்கு இழப்பு ஏற்படுகிறதோ அந்த நிமிடமே அவர் செயல் படவேண்டியது அவரின் ஜனநாயகப்பொறுப்பள்ளவா ? நாட்டை இழப்பின்றி கொண்டு செல்லவேண்டியது அவரின் அரசியல் சாசன கடமையல்லவா ?.

அதை செய்யாமல் விட்டதால் தானே  இவ்வளவு இழப்பு
அதை விடுத்து 2010 ல் ராசா மீது குற்றம் சுமத்துவது எவ்வாறு ஏற்புடையது என்று  எனக்குத்தெரியவில்லை.

உண்மையில் இந்த விசயத்தில் ஜனநாயகத்தூண்கள் அனைத்தும் இந்திய ஜனநாயகத்தையும் ,நமது அரசியலமைப்புச்சட்டத்தையும் கேலி செய்து அசிங்கப்படுத்தி வருகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது .

முறையான நடைமுறைகள் பின்பற்றமல் ஜனநாயக்க்கடமையை செய்யாமல் இழப்பு ஏற்பட  காரணமாக இருந்துள்ளது இந்திய தணிக்கைத்துறை .அதனை சரிப்படுத்த  எந்த  நடவடிக்கைகளையும் எடுக்காமல் நாடாளுமன்றத்தை முடக்கி... வேதனையாக உள்ளது .இது நிதி சம்பந்தப்பட்ட விசயம் பொறுப்புடன் அரசியல் வாதிகள் நடந்துகொள்ளவேண்டும் .
அல்லாது போனால் இதுவே முன்னுதரணமாகி ...
நஷ்டம் அரசியல்வாதிகளுக்கு அல்ல நாட்டிற்குத்தான் .

இங்கு அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது ஆனால் அது பற்றிய அறிவு இருக்கிறதா இல்லையா என்பதே எனது கேள்வியாக இப்பொழுது இருக்கிறது.

முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாத்தால் தான் இந்த இடுகை .

அதற்கு பலிகடா ஒரு அப்பாவித் தமிழன் என்பதோடு நமது ஜனநாயகமும் அரசியலமைப்புச்சட்டமும் என்பது தான் மிகவும் வேதனையாக உள்ளது . 




முறையான நடைமுறையின்றி யாரும் தண்டிக்கப்படக்கூடாது  .










. Download As PDF

ஞாயிறு, 28 நவம்பர், 2010

தமிழ்ச்சூடி.


வாழ்க நலத்துடன்

வளர்க  மொழியுடன்

சிந்தி  உணர்வுடன்

சிற  வளத்துடன்

சீர்படு  அறிவுடன்

செயல்படு மரபுடன்

ஒன்றுபடு இனத்துடன்

ஓங்கீயுயர்ந்த மாந்தனாய்

ஒல்காப்புகழ் தமிழனாய்.








 . Download As PDF

சனி, 27 நவம்பர், 2010

என் இன அவலம் அழ

.

ஓவியன்
நான்
வரையமுடியா
வேதனைகள் அவை.



கவிஞன்
நான்
எழுதமுடியா
வலிகள் அவை.



பாடகன்
நான்
பாடமுடியா
கண்ணீர் நதிகள் அவை.



எனக்கொரு இசைக்கருவி
கண்டுபிடித்து தாருங்கள்
மீட்பு குறிப்புடன்
பாணனாகி
என் இன அவலம் அழ.









. Download As PDF

வெள்ளி, 26 நவம்பர், 2010

கவிதையென்கிறார்கள் கவலையாய் போய்விடுகிறது

நான் எழுதும்
வார்த்தைகளை
கவிதையென்கிறார்கள்
கவலையாய் போய்விடுகிறது .

அடிபட்டு அடிபட்டு
சிதலமடைந்து
குக்கிப்போனதை
வார்த்தைகளில்
வெடித்து சிதறுகிறேன்
புதுப்பிக்க
உயிர்ப்பிக்க
இருப்பினும்
கவிதையென்கிறார்கள்
கவலையாய் போய்விடுகிறது .

உயிர்ப்பு
கவிதையாய்
மடிகிறதே  
என
கவலையாய் போய்விடுகிறது .








. Download As PDF

வியாழன், 25 நவம்பர், 2010

நீ மட்டும் ஏன் தமிழா இப்படி இறக்கின்றாய் ?

அந்த நீண்ட நெடுந் தெருவில்
துரத்திக் கொண்டு வந்த கும்பலின்
கோரப்பிடியினின்று  தப்ப
என்னை நோக்கி
ஓடி வந்தவளை
நினைத்துப் பார்க்கின்றேன்


உடைகளை கிழித்தன
வெறி கொண்ட நூறு கைகள் .
நிர்வாணமாகிக் கொண்டிருந்த அவள்
''ஐயோ... அம்மா... '' என்ற குரலுடன்
நிமிடத்தில் தீர்க்கப்பட்டாள் .

சகதியில் சொட்டும்
அவளின் இரத்தத்தில்
ஈக்கள் மொய்க்கும்
இன்னும் சில நிமிடங்களில்.

இதோ
காந்தி பாலத்தின் மேல் நான்
தமிழனைத் தேடி ஓடும்
கும்பலைப் பார்த்தபடி .

என்றென்றும்
என்றென்றும்
நீ மட்டும்
ஏன் தமிழா இப்படி இறக்கின்றாய் ?

...

என்றென்றும்
என்றென்றும்
நீ மட்டும்
ஏன் தமிழா இப்படி இறக்கின்றாய் ?

...

நான் மட்டும் எப்படி தப்பித்தேன் ?

முண்டங்களுக்கு 
என்றும்
வாழ்வுமில்லை
சாவுமில்லையே .





. Download As PDF

புதன், 24 நவம்பர், 2010

ஓர் இனத்தின் தீர்வென்பது


அழித்தொழிக்கும் எண்ணத்தை

அழித்தொழிக்கும்

பதரனைத்தும்  விதையாகும்

விதையில்லா

வீழ் நிலத்திலும்

நிறம் மாறி ஒலி மாறி

இடம் மாறி

வேறுவேறாகிலும்

இனமானம் மீதாகும்

வாழ்வாதாரம்

மொழியாட்ட நிறவாட்ட

போராட்ட

வெற்றியுடன்

அனைத்தும் அனைத்துமாய் 

மனித நேயமாய்

ஓர் இனத்தின் தீர்வென்பது .





. Download As PDF

திங்கள், 22 நவம்பர், 2010

மருத்துவபடிப்பு முற்றிலும் இலவசம் பெற்றோர்களே முன்பதிவுக்கு இன்றே முந்துங்கள்




நண்டு : என்ன நொரண்டு பையன எங்க கூட்டிட்டு போர .தறி ஓட்ட போலயா ? .ஓனர் ஒழுங்கா கூலா தர மாட்டேங்கராருனு சொல்லீட்டிருந்த ...

கூலி நொரண்டு :   அட உனக்கு விசயம் தெரியாதா .

நண்டு : என்ன ?

கூலி நொரண்டு : நீ பேப்பர் பாக்கலையா ...

நண்டு :என்ன செய்தி சொல்லு .

கூலி நொரண்டு : இனி +2 வரை ஆல் பாஸாம் .

நண்டு :அதனால

கூலி நொரண்டு :எப்படியும் எம்பையன பாஸ் ஆக்கீடுவாங்க

நண்டு :சரி

கூலி நொரண்டு : அவன் ஸ்கூலுக்கு போய் என்ன செய்யப்போரான் .

நண்டு : அதனால்

கூலி நொரண்டு : என் வேலையை பாத்துட்டு எனக்கு உதவியா இருக்கட்டுனு கூட்டீட்டு போரோன் .

நண்டு :அட நொரண்டு .+1 படிக்கும் பையன இப்படி ...நல்லா படிச்ச நம்மலாலே நாலு வார்த்தை தப்பில்லாமல் எழுத முடியல ...


------

சில நாட்கள் கழித்து

நொரண்டு :  எங்க நண்டு இவ்வளவு அவசரமா போற

நண்டு :அட விசயம் தெரியாத

நொரண்டு :என்ன ?

நண்டு :  நீ பேப்பர் பாக்கலையா ...

நொரண்டு :என்ன செய்தி சொல்லு .

நண்டு : மருத்துவபடிப்பு முற்றிலும்  இலவசம் பெற்றோர்களே முன்பதிவுக்கு இன்றே முந்துங்கள்  உடனே விரைக  ,உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை இன்றே முடிவு செய்யுங்கள் என கோல்மால் யுனிவர்சிடி அறிவிச்சிருக்கு

நொரண்டு :ஓ ...அப்படியா ...

நண்டு :முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமையாம் .

நொரண்டு :அட ...ஆமா  உன் பையன் இப்பத்தானே 3 வது  படிக்கரான் !!!! ????

நண்டு : அதனால தான்  முன் பதிவு செய்ய போரேன் .



-----



ஆசிரிய நொரண்டு : ஆல் பாஸ்னு யாரும் ஸ்கூலுக்கு வரமாட்டேங்கராங்க .

தலைமையாசிரிய நண்டு :  பள்ளிக்கு முதல் நாள் எல்லாரும் வந்தார்களே

ஆசிரிய நொரண்டு :  அவ்வளவு தான் இனி முழுப்பரிட்சைக்குத்தான் எல்லாத்தையும் பாக்க முடியும் .

தலைமையாசிரிய நண்டு :இப்ப வருகைப்பதிவு .

ஆசிரிய நொரண்டு : கல்வி அடிப்படை உரிமை .

தலைமையாசிரிய நண்டு : அதனால் .

ஆசிரிய நொரண்டு :  அது வருகைப்பதிவை கட்டாயப்படுத்தவில்லை .

தலைமையாசிரிய நண்டு : ஓ .

ஆசிரிய நொரண்டு : வந்தாலும் வராவிட்டாலும் கல்வி என்னும் அடிப்படை உரிமை காக்கப்படவேண்டும் .  

தலைமையாசிரிய நண்டு :  ?????


-------



நொரண்டு :இது எதுக்கு கொண்டு வராங்க ?

நண்டு :  சமுதாயத்தை நாசமாக்க .

நொரண்டு :....

நண்டு :  குலத்தொழிலை மறைமுகமாக வளர்க்க  .

நொரண்டு : ...

நண்டு : குட்டிச்செவரான இந்தியாவை உருவாக்க .








. Download As PDF

சனி, 20 நவம்பர், 2010

சீன நீர் ஓவியம் .

எவ்வளவு அழகான  கைவண்ணம்
காணெளியை கண்டு மகிழுங்கள் .



நன்றி  You Tube 




. Download As PDF

கலாச்சாரம் பண்பாடு மொழி



கலாச்சாரம் பண்பாடு பேசிவரும் இவ்வேளையில்

மொழியைப்பற்றி




மொழியில்

ஓசை  ஒரு கூறு ,

ஒலி  ஒரு கூறு ,

ஓசையின் ஒலி  ஒரு கூறு ,

எழுத்து  ஒரு கூறு ,

எழுத்தும் ஒலியும் ஓசையும் கொடுக்கும் கருத்து  ஒரு கூறு ,

கருத்து கொடுக்கும் பொருள்  ஒரு கூறு ,

பொருள் கொடுக்கும் இயக்கம் ஒரு கூறு ,

இயக்கத்தின் பொருண்மை ஒரு கூறு ,

பொருண்மையின் வெளிப்பாடு ஒரு கூறு ,

வெளிப்பாட்டின் தன்மை ஒரு கூறு ,

தன்மையில்  வடிவம்  ஒரு கூறு ,

வடிவத்தின் உரு ஒரு கூறு ,

உருவின் நிலைப்பாடு ஒரு கூறு ,

நிலைப்பாட்டின் அமைப்பு ஒரு கூறு ,

அமைப்பின் பயன்பாடு ஒரு கூறு ,

பயன்பாட்டின்  நீட்சி ஒரு கூறு ,

நீட்சியின் நிலைத்தன்மை  ஒரு கூறு ,

நிலைத்தன்மையின் செயல்பாடு ஒரு கூறு ,

செயல்பாட்டின் ஆக்கம்  ஒரு கூறு ,

ஆக்கத்தின் தொடர்ச்சி  ஒரு கூறு ,

தொடர்ச்சியில் பண்படுதல் ஒரு கூறு ,

பண்படுதலில் பழக்கம்  ஒரு கூறு ,

பழக்கத்தின் திரட்சி  ஒரு கூறு ,

திரட்சியின் ஆளுமை  ஒரு கூறு ,

ஆளுமையின் ஆதிக்கம் ஒரு கூறு ,

ஆதிக்கத்தின் எழுச்சி ஒரு கூறு ,

எழுச்சியின் மிச்சம்  ஒரு கூறு ,

மிச்சத்தின் எச்சம்  ஒரு கூறு ,

எச்சத்தின் வீரியம் ஒரு கூறு ,

வீரியத்தின் தேடல்  ஒரு கூறு ,

தேடலில் பயணம் ஒரு கூறு ,

பயணத்தின் பாதை ஒரு கூறு ,

பாதையின் பார்வை ஒரு கூறு ,

பாதையில் பார்வை ஒரு கூறு ,

பார்வையில் மாற்றம் ஒரு கூறு ,

மாற்றத்தின் மதிப்பு  ஒரு கூறு ,

மதிப்பின் வழிமுறைகள் ஒரு கூறு ,

வழிமுறைகளில் உண்மை  ஒரு கூறு ,

உண்மையின் தன்மை ஒரு கூறு ,

தன்மையின் மென்மை  ஒரு கூறு ,

மென்மையின் மேன்மை ஒரு கூறு ,

மேன்மையின் விரிவு  ஒரு கூறு ,

விரிவின் வாழ்வு ஒரு கூறு ,

வாழ்வின் உயிர் ஒரு கூறு ,

உயிரின் மொழி ஒரு கூறு .








.



(படங்கள் உதவி : Claudio Tomassini , நன்றி  )




. Download As PDF

வெள்ளி, 19 நவம்பர், 2010

நீ ஏன் கவிதை எழுதுகின்றாய் ?



நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?

நீ ஏன்
கவிதை எழுதுகின்றாய் ?

வீழ்த்த துடிக்கும்
வீணர்களின்
வாயடைக்க

ஊறு செய்யும்
மரப்பதரை
உணர்ச்சியூட்ட

காயம்பட்ட
கண்ணிமைகளுக்கு
களிம்பாக

உதிர்ந்த
உயர் வித்துகளுக்கு
உரமாக

குருதியில் துடிக்கும்
இனமானத்திற்கு
தோள் கொடுக்க

வீழா இனம்
மீளாத்துயர்
துடைத்தெரிய

நான்
எழுதுகின்றேன்  கவிதை

நான்
எழுதுகின்றேன்  கவிதை

இது நமக்கான
மொழியன்று
நம் மொழி

இது நமக்கான
இனமன்று
நம் இனம்

இது நமக்கான
எழுத்தன்று
நம் எழுத்து

என
எழுச்சி யூட்ட

நான்
கவிதை எழுதுகின்றேன்

நான்
கவிதை எழுதுகின்றேன்








. Download As PDF

புதன், 17 நவம்பர், 2010

அசுவமேத யாகம் செய்யலாம் வாருங்கள்







தசரதர்  :
  எனக்கு வயதாகி விட்டது ,என் தோளாற்றலால் பல நாடுகளை வென்றுவிட்டேன் .எனக்கு பின் ... வாரிசு இல்லாமல் ...

வசிஷ்டர் :  தங்களின் வார்த்தை கவலையளிக்கிறது மன்னா .

தசரதர்  :  அதற்கு அசுவமேத யாகம்  செய்யலாம்  வாருங்கள்  .

வசிஷ்டர் :  மகிழ்ச்சி  மன்னா . நீண்ட நாட்களாக கூறலாம் என்றிருந்தேன். தாங்களின் வாயாலே அது வந்துவிட்டது . செய்யலாம் மன்னா .

தசரதர்  : இன்றே  .

வசிஷ்டர் : அது...அது ...முடியாது மன்னா .

தசரதர்  :ஏன்... ?...

வசிஷ்டர் : அது ஒரு உடன்படிக்கை .

தசரதர்  :தெரியும் ...

வசிஷ்டர் : அதோடு இதை செய்விக்க தக்கவர் இராஜரிஷி  கலைக்கோட்டு முனிவர்.அவர் அங்க நாட்டில் உள்ளார் .

தசரதர்  : ம் ...ஏற்பாடு செய்யுங்கள் .






.



ரகு ராமன் கதை கேளுங்கள் - தொடரும் ...

(நன்றி : You Tube)


.





. Download As PDF

ஞாயிறு, 14 நவம்பர், 2010

எங்கே போய் முன்தோன்றிய மூத்த குடியாவது தமிழன்



நொரண்டு :  காந்தியடிகள் தமிழ் கற்றாரா ? ...

நண்டு : ....


நொரண்டு :  திருக்குறளை கற்பதற்காக ....

நண்டு : .....

நொரண்டு : ஏன் அமைதியா இருக்க .???

நண்டு :  ....

நொரண்டு : சரி அது இருக்கட்டும் . திருக்குறளை அதன் உண்மையை
தமிழ் கற்றால் தான் அறிந்துகொள்ள முடியுமா ? . மொழி்பெயர்ப்பு அதனை வெளிப்படுத்தாதா ?

நண்டு :ஆம் . அதிக கலைச்சொற்களை பயிலுதல் அதிக ஆழத்திற்கு இட்டுச்சொல்லும் . மொழிபெயர்ப்பு ....

நொரண்டு :  ஏன் ?

நண்டு : நான் மொழிபெயர்ப்பில் குறளை படித்ததில்லை .யாரவது தங்களின் மொழியில் குறளைப்படித்து பின் தமிழ் கற்று குறள் படித்தவரிடம் கேட்க வேண்டிய கேள்வி .

நொரண்டு : ஓ ...

நண்டு :ஆனால் தமிழில் கற்பது பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

நொரண்டு : கூறு .

நண்டு :

''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.''

என்ற குறளில்
தமிழ் தான் முன்தோன்றிய மொழி என்று கூறுவதன் மூலம்
அதனை கற்றபது தான் சிறப்பு என கூறுகின்றார் .

நொரண்டு :  ஓ...


நண்டு :மேலும் ,

''வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் தமிழ்தம் என்றுணரற் பாற்று.''

என்ற குறளின் மூலம்
தமிழ் கற்பதனால் உண்டாகும் பயனை கூறுகின்றார் .

நொரண்டு : என்ன பயன் ?

நண்டு :
தமிழ் , கற்றவருக்கு மழைபோல்
அனைத்தையும் கொடுக்கும் என்கின்றார் .

நொரண்டு : ஓ... இப்படியும் கூறியுள்ளாரா !!!


நண்டு :மேலும் ,

''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
''

என்ற குறளின் மூலம் ...

நொரண்டு : இதுக்கு



      

என்றும் ...


நண்டு :  சொல்லவருவதை சொல் .

நொரண்டு : அது வந்து
நான் பாத்த புத்தகத்திலெல்லாம்
''அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு போட்டுருக்கு
நீ
''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு
எடுத்திருக்க...

நண்டு :
அவர்கள் பார்வையே தவறு .திருவள்ளுவர் காலத்தில் சுத்தத்தமிழ் பயன்படுத்திவந்த பொழுது  அமிழ்து என்பது  ....பின்னாள் சேர்த்துக்கொண்ட ஒரு சொல் . சுருங்கக்கூறின் திருவள்ளுவர் காலம் தனித்தமிழ் காலம் . தனித்தமிழன் காலம் .


நொரண்டு : ஓ ...அப்படியா ..

நண்டு :
பின்னாள் சேர்த்தவர்கள் .அமிழ்து என்பது தமிழுக்கு முன்பு தோன்றியதுபோல் ஆக்கி . தமிழை பின்னுக்கு தள்ளினர் .அந்த ஒரு வார்த்தையைக்கொண்டே தமிழை கேவலப்படுத்திவிட்டனர் தமிழை ,தமிழனை ,தமிழ் பண்பாட்டை .அமிழ்து ,அமிழ்து,அமிழ்து ...என்று சொல்லிக்கொண்டே வந்தால்  தமிழ் என வருமென்றும் சொல்லி ஏமாற்றியதோடு . தமிழ் இனத்தையே  மடையர்களாக்குவதற்கு இலக்கியத்திலும் இதே கருத்தை புகுத்தி விளையாடிவிட்டனர் . எங்கும் . நீ அமிழ்தை ஏற்றுக்கொண்டால் தேவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் . தேவர்களை ஏற்றுக்கொண்டால் அவர்களின் அடிவருடிகளை உமக்கு முன்னவர்களாக ஏற்றுக்கொண்டுவிட்டாய் அவ்வளவே . இவ்வாறு ஒவ்வொன்றாய் ஏற்றுக்கொண்டு... எங்கே போய் முன் தோன்றிய மூத்த குடியாவது தமிழன். தெரிகின்றதா கபட நாடகம் .

நொரண்டு :  அட ...

நண்டு :
ஆனால் ,இடைச்செருகலுக்கு் குறள் மட்டும் மிகவும் கடினமாக இருந்ததால் மிகவும் கடினப்பட்டே ;ஆனால் ; அமைப்பை உடைக்கும் திறனற்று .அதனால் தான் இப்பொழுது நம்மால் எளிதில் அதனை அடையாளம் காணமுடிகிறது .குறளின் சிறப்பே இது தான் .இப்படியொல்லாம் நடக்கும் என நினைத்துத்தான் என்னவோ வள்ளுவர் குறள் வடிவத்தில் இயற்றினார் போலும் .

நொரண்டு : சரி ஏன் இத்தனை பீடிகை...குறளுக்கு விளக்கம் சொல் .

நண்டு :
தமிழ்தினும்
மிகவும் இனிமையான மகிழ்வைத்தரும்
தம் மக்கள் அதாவது தம்  குழந்தைகள்
இட்டும் ,தொட்டும் ,துழந்தும்
சிறு கையாள் அளாவப்பட்டு
குழைந்து எழு்தும் தமிழை பார்க்கும் பொழுது .

நொரண்டு : மழலை எழுத்தை கூழ் என்கின்றார் .

நண்டு :ஆம்

நொரண்டு : மழையை தமிழ் என்கின்றார்

நண்டு :ஆம்

நொரண்டு : 
இன்னைக்கு குழந்தைகள் தினம் ,
இது குழந்தைகளுக்கான குறள்  .
ஆகா..ஆகா



.


. Download As PDF

எனக்கு இதய நோய்

.




ஊரெல்லாம் புகை
மூச்சு விட முடியவில்லை
எனக்கு இதய நோய்




-----



ஒவ்வொரு கனவும் 
காண்பவன் கவலையறியாமல்
அதன் அதன் நகர்வில்




------



மிகப்பெரிய ஆறு
மிகப்பெரிய படகு
கடல் அறியா படகோட்டி




-----









. Download As PDF

வியாழன், 11 நவம்பர், 2010

மலர் படுக்கை

விரிந்த காரணத்திற்காக
எங்கும் சிதைக்கப்படும்
வதைபடும் வாழ்க்கையிலும்
எப்படி முடிகிறது
இவற்றால்
அழகாக
மணமாக
இருப்பிடம்
மறந்த பிரஞ்ஞையில்
சிரித்தபடி
மண்மீது
மலர்
படுக்கையாக.






.
. Download As PDF

வெள்ளி, 5 நவம்பர், 2010

புறக்கணிப்போம்



பட்டாசு  சத்தம் கேட்டு பயந்து நடுங்குது டோமி








நச்சு  காற்றில் பாடாய் படுது  நாரை 



நாம் தான் சுயநினைவில்லாதவர்களாக  மாறிவிட்டோம் .


இயற்கையுடன் இவைகளாவது   இயல்பாக வாழ

புகை கொண்டு  ஆடும்

இப் பண்டிகையை 
புறக்கணிப்போம்

மாந்த னாக .






சுற்றுச்சூழல்  மற்றும் பிற உயிரினங்கள்  பாதுகாப்பு மற்றும் நலத்தினை 
முன்னிட்டு  
நண்டு @ நொரண்டு 


.


.

. Download As PDF

வியாழன், 4 நவம்பர், 2010

வள்ளுவர் சமணர் என்பது மாபெரும் மடத்தனம்

.

நொரண்டு : வள்ளுவர் சமணரா ?

நண்டு :   வள்ளுவர் சமணர் என்பது
மாபெரும் மடத்தனம் . இதனை மக்களிடையே
இன்னும் மக்கள் மடையர்களாகவே நினைத்துக்கொண்டு வரலாற்றுபார்வை மற்றும் அறிவு சிறிதும் இல்லாமல் எப்படித்தான் எழுதிவருகின்றனரே தெரியவில்லை .
நீ நான் சொன்ன  குறள்களை படிச்சியா ?

நொரண்டு :நான் தான் சொன்னேன்ல ,
நீ பாட்டுக்க குறளைப்படினு நம்பரக்கொடுத்தினா .விளையாடுரையா .ஒன்னு புருஞ்சுக்க . நாங்க எல்லாம் பழத்தை உருச்சில்ல ஜிரணிச்சே கொடுக்க சொல்றவுங்க .

நண்டு :    அப்புறம் எதற்கு கேள்வி கேக்கற ?

நொரண்டு :சும்மாதான் ,திருவள்ளுவர் திருவள்ளுவர் னு பேசராங்க , பெரிய சிலையல்லாம் வச்சிருக்காங்க அதான் .
அத விடு வள்ளுவர் சமணரா ? பதில் சரியில்லையே .

நண்டு :   இதனை நான் பின்பு ஆதாரத்தோடு  நிருபிக்கிறேன் .
குறள்களை படினு சென்னேன் முதலில் படிச்சியா.

நொரண்டு :அந்த 3 மட்டும் போதுமா .

நண்டு :   அட அறிவுஜிவி , திருக்குறளை விமர்சிக்கவோ ,
பயன்படுத்தவோ , கேள்விகேட்கவோ விரும்பினால் முதலில்
நீ அதனை முழுமையாக , 1330 குறளையும் படிக்கவேண்டும் .

நொரண்டு :அவனவனுக்கு வேளையில்லையா . ஒரு குறளை பயன்படுத்தக்கூட எல்லாத்தையும் படிக்கச்சொல்லுவபோல .

நண்டு :   ஆம் .

நொரண்டு :அதான பாத்தேன் ,எங்கடா சொல்லலனு .

நண்டு :    அது தான் உண்மை .

நொரண்டு :அப்படி இல்லாது , எதையும் படிக்காம ஒரு குறளை விமரிசித்தால் ,பயன்படுத்தினால் ?


நண்டு :   4 குருடர்களும் யானையும் கதைதான் .

நொரண்டு :அப்ப ,இப்போ எல்லாம் அப்படித்தான்  பயன்படுத்தராங்கனு  சொல்லவர ,அது தானே?

நண்டு :    உன் கருத்திலும் உண்மை உண்டு .

நொரண்டு : சரி , நீ சொல்ற மாதிரியே படிக்கலாமுனு இருக்கோன் . அதுக்கு உரை நிறையாப்பேர்  எழுதியிருக்காங்களாம் . யாரை படிக்க .

நண்டு :   யாரைவேணாலும் படி . ஆனால் குறைந்தது 9 உரைகளையாவது படித்தல் நலம் .

நொரண்டு : வா..வா..ஒரு குறலே படிக்கமுடியல ..
9 உரையா ...என்ன ஆராய்ச்சி பண்ணி விருதா வாங்கப்போரேன் . இல்ல எனக்கு வேலைவெட்டித்தான் இல்லையா , எங்குடும்பத்தையார் பாப்பா... இதனால் எனக்கென்ன ஆகப்போது . இனி கேள்வியே இவன் கேக்கக்கூடாதுனு ப்ளான் பண்ணிட்டயா ?. இப்படி வெளியில சொல்லாத , திருக்குறளை எவனும் படிக்கவும் வரமாட்டான் , உன்னையும் ஒரு மாதிரி பாப்பாங்க .

நண்டு :  அதப்பத்தி எனக்கு கவலையில்லை .ஆனால் ,
முழுமையாக படித்தவரால் மட்டுமே திருக்குறளினையும்,
திருவள்ளுவரையும் ஓரளவிற்காவது தெரிந்துகொள்ள முடியும் .

நொரண்டு : அப்படினா திருக்குறளினை
முழுமையாக படித்தவர்களெல்லாம் முழுமைவாதிகளா ?

நண்டு :   .....

நொரண்டு : சரி அதவிடு  இன்னைக்கு எந்த  குறளுக்கு  விளக்கம்  தர்ரா ,அதையாவது  சொல் கேட்டுக்கரேன் .

நண்டு : 

"ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் ".


நொரண்டு :இதுக்கு எனக்கு அர்த்தம் தெரியும் .அது அரசன் ஒழுங்கா ஆளளைனா பசு பால் கொடுக்காது ,அந்தணர் ஓதுவதை மறப்பர் ...ஹ..ஹா..ஹ...சரிதானே ..எப்படி எங்களுக்கும் தெரியுமில ....நாங்க யாரு ...ஹ..ஹ..ஹா...

நண்டு :   போடா மடையா .போய் நூல் போட்டுக்க .

நொரண்டு : இதா திட்ரத  விடு  . பிரச்சனையாப் போகும் .
ம்... சரி உன் விளக்க உரை சொல்லு பார்க்கரேன் .


நண்டு : 

காவலன் காவான் எனின்
அரசு அரசாக உயர்வடையும் தன்மையும் ,
அதனால்  சிறப்படையும் நன்மை குறையும் ,
மக்கள் அரசுடன்  ஒத்துப்போகும் தன்மையில்  ,
தாங்கள் பின்பற்றும் ஒழுக்க நெறியில் குன்றுவர் .
ஒரே இடந்தில் தங்கி  தொழில் பார்க்கும் நிலை  இல்லாமல் போவதால்
தொழில் செய்பவர்கள் அதன் நுட்பமான வழிமுறைகளையும்,
தாங்கள் வழிவழியாக சேர்த்துவைத்து வந்த அறிவினையும்,
படிப்பினைகளையும்   மறப்பர் ,  என்கிறார் .

அதோடு இன்னும்  சொல்கிறார் அதிகமாக .




.







.


.......

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் ...தொடரும் .


.








. Download As PDF

புதன், 3 நவம்பர், 2010

இதெப்படி இருக்கு ...





.

நன்றி :You Tube




. Download As PDF

மிலோ என்னும் மாயை




 

நன்றி : You Tube


. Download As PDF

செவ்வாய், 2 நவம்பர், 2010

தமிழில் தமிழர்கள் கற்றது

நொரண்டு  :
''எனக்குத்தெரிந்து தமிழில் ஒன்னும் இல்லை '' என என் நண்பன் சொன்னான் ...

நண்டு : எதுக்கு இதப்பேசினிங்க ...

நொரண்டு  :ஏன்?

நண்டு : அப்பத்தான் அதுக்குத்தகுந்த விளக்கம் கொடுக்க முடியும் .

நொரண்டு  : தமிழ் மொழியின் சிறப்பு பத்தி நான் சொன்னதுக்கு ...அறிவார்ந்த விசயங்கள் தமிழில் இல்லை,அறிவை தமிழ் பிரதிபலிக்கவில்லை . தமிழில் அறிவியல் பார்வையில்லை ....

நண்டு : அப்படியில்லை , உண்மையும் அதுவல்ல . அப்படி ஆக்கப்பட்டு விட்டது பக்தி இயக்கங்களால் . தமிழ் மொழியே பக்தி இயக்கமாக ஆக்கிவிடப்பட்டுவிட்டபடியால் . அப்படி ஒரு மொழி பக்தி இயக்கமாகும் பொழுது அந்த மொழியில் பக்திப்பரவசம் மட்டுமே இருக்கும் .

நொரண்டு  : அப்படியா ?

நண்டு : இதைத்தான் வள்ளுவர்

> அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
> பிறவாழி நீந்தல் அரிது.

என்றார் .

நொரண்டு  :அப்படினா?

நண்டு :
''அறவாழி அந்தணன் என்பவனால் பிறவாழி நீந்தல் முடியாது
அவன்தாள் சேராமல் ''


நொரண்டு  : புரியல ...

நண்டு : அறத்தை மட்டுமே போதிக்கும் அந்தணர்களால்  அறக்கருத்துக்களைத்தவிர்த்து பிறவற்றை
போதிக்க முடியாது .


நொரண்டு  : இதிலிருந்து அவர் கூறும் செய்தி .

நண்டு : பிறவற்றையும் கற்கவேண்டும் .


நொரண்டு  : ஓ,
தமிழன் தமிழை இப்படித்தான் கற்றானா?. மற்றவற்றை கற்காமல் .


நண்டு : இப்படித்தான் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது .

நொரண்டு  : இப்பத்தான் எல்லாத்தையும் கற்கின்றானோ? .


நண்டு : இது   ஆங்கிலேயர்கள்    தந்தது .

நொரண்டு :  ஓ ,
அவ்வளவு அறிவுப்பசி தமிழர்களுக்கு...

நண்டு : அதனால் தான் ஆங்கிலத்தின் மீது தமிழனுக்கு அவ்வளவு ஆர்வம் .

நொரண்டு : ஆங்கிலேயர்கள் நமக்கு உருவாக்கிய கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி முறைனு சொல்றாங்களே ...

நண்டு :
இப்பவும் அப்படித்தான் கற்றுவருகின்றான் தமிழன் தமிழை .


நொரண்டு : அதனால் ?

நண்டு :நாம் உருவாக்குவோம் அறிஞர்கள்  கல்வி முறையை தமிழில்  .







.





.




. Download As PDF

திங்கள், 1 நவம்பர், 2010

புத்திசாலி தமிழனுக்கு அனுபவம் அவசியம் தேவை .

அனுபவம் அனைவருக்கும்  அவசியம் தேவை . ஏனெனில் அது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்று ; அது வாழ்க்கை அர்த்தத்தை புரியவைக்கும்;
நிபுணர் ஆக்கும் ; பயத்தை போக்கும்; பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ;
முக்கியமாக பிரமிக்கத்தக்க வகையில் உபயோகமாகி புத்திசாலி என பிரபலப்படுத்தும் . சரித்திரத்தில் நல்ல அனுபவசாலிகள் தங்களின் லட்சியங்களை சிரமம் இல்லாமல் முழுதிருப்தியுடன் நினைத்தபடி அடைந்துள்ளனர்  இதில் சந்தேகமேயில்லை . அதனால் தான் புத்திசாலி தமிழனுக்கு அனுபவம் அவசியம் தேவை . எனவே ,
அனைத்துத் தமிழர்களும் கரம் சேர்த்து சபதம் ஏற்ப்போம் ;
அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவேம்
நிச்சயம் உயர்வோம் புத்திசாலிகளாக .


நொரண்டு : எப்படி எனது பீடிகை ?

நண்டு : நன்றாக உள்ளது .இருந்தாலும் .....

நொரண்டு : என்ன இருந்தாலும் ...

நண்டு :இப்ப புத்திசாலிகளாகத்தான் நாம் அனைவரும் இருக்கின்றோம் .
தமிழர்களாகவும் ,தமிழ் உணர்வாளர்களாகவும் இருக்கின்றோம் .இதில் என்த வித மாற்றுக்கருத்துமில்லை . ஆனால் , தமிழைத்தான் செம்மைப்படுத்தாமல்
ஏதே சுயநலத்திற்காக நமது விருப்பம்போல் பயன்படுத்திவருகின்றோம் .

நொரண்டு :என்ன ... ?...

நண்டு :ஆம் ,மிகவும் கவலையாக உள்ளது .

நொரண்டு : என்ன கவலை ...

நண்டு :
அடுத்தவர்களை சொல்கின்றேன் .தமிழை தமிழாக பயன்படுத்து என்று . ஆனால்,நான் என்ன செய்கின்றேன் . அம்மா என்பதைக்கூட AMMA என்று தட்டச்சு செய்து ... எமது எண்ணங்களை ,ஆக்கங்களை வெளிப்படுத்த பிற மொழியினின்று தமிழை பிறப்பிக்கவைப்பதாகவே நினைக்கின்றேன் . அதுவும் ஒரு வழியில் சீரழிவாகவே ...

நொரண்டு : அப்படி ஏன் நினைக்கின்றாய் . அதை ஒரு கருவியாக பயன்படுத்துவதில் என்ன தவறு .

நண்டு : ஆம் ,மொழியை கருவியாகத்தான் பயன்படுத்துகின்றோம் . தமிழ் நமக்கு ஒரு கருவி தான் மொழியன்று என்ற நினைப்பில் வாழ்வதால் தான் இத்தகைய இடர் .கேடு .

நொரண்டு : ஓ...

நண்டு :நீ இந்த உரையாடலுக்கு முன் பீடிகை என்று ஒன்றை சொல்லியுள்ளாயல்லவா அதுவே மெய்ப்பிக்கும் தற்பொழுதைய தமிழின் நிலையை .

நொரண்டு :என்ன சொல்ற ..

நண்டு :

உனது ''பீடிகை'' யில்
அனுபவம் ,
அவசியம் ,
அத்தியாவசியமான,
அர்த்தத்தை ,
நிபுணர் ,
பயத்தை ,
பிரச்சினை,
பிரமிக்கத்தக்க ,
உபயோகமாகி ,
புத்திசாலி,
பிரபலப்படுத்தும் ,
சரித்திரத்தில் ,
அனுபவசாலிகள் ,
லட்சியங்களை ,
சிரமம் ,
முழுதிருப்தியுடன் ,
சந்தேகமேயில்லை ,
கரம் ,
சபதம் ,
நிச்சயம் ,
பீடிகை  ...
இவைகள் எல்லாம் வட சொற்கள் இவைகளை நீக்கிப்பார்
தமிழால் தமிழர்களுக்கு நீ சொல்ல வந்ததை ...

நொரண்டு :
இவைகள் தமிழ் இல்லையா ? ...என்ன சொல்ர

நண்டு :
அப்படி நான் சொல்லவில்லை .
தமிழ் இலக்கணம் , வரலாறு கூறுகின்றது .

நொரண்டு :
என்னப்பா ஒன்னுமே புரியவில்லை .இப்படியே பாத்தா எப்படிப்பா ...


நண்டு:சில குழப்பங்கள் உள்ளன .

நொரண்டு : ஆமாம் ,ஆமாம் ... அனுப்புனர் ,பெருநர் ,மடப்புரம் , பழனி,நடத்துனர்,இப்படி ற,ர,ன,,ஞ,ந,ல,ள,ழ,ண- க்கள் பயன்படுத்தும் போது ....

நண்டு : அட கருவியாக பயன்படுத்துகின்றாய் .இதில் என்ன பிழைகள் காணும் பிழைப்பு ,புத்திசாலி தமிழன் தான் நீ .

நொரண்டு : அட போப்பா ....:

நண்டு:  இருந்தாலும் தமிழை சரளமாக பயன்படுத்துவதில் சில இடர்கள் ...

நொரண்டு :
''ஸரல்'' என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்ததுதேனே சரளமாக ...

நண்டு :
நீ சென்ன ''ஸரல்'' என்பது சமஸ்கிருத சொல் ,''சரளமாக ''என்பது
தமிழ் சொல் .

நொரண்டு :என்ன ?

நண்டு :
வட சொல் வேறு , சமஸ்கிருத சொல் என்பது வேறு .

நொரண்டு : எப்படி ?...

நண்டு :தொல்காப்பியர்
'' இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே
.'' -என்றும் ,
''வடசொற் கிளவி ,வடவெழுத்து ஒரிஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
சிதைந்தன வரியினும் இயைந்தன வரையர்
'' -என்றும் ,
மிக அழகாக கூறியுள்ளார் .
சமஸ்கிருதம் இங்கு வந்ததிலிருந்து இன்றுவரை செழுமையாகத்தான் உள்ளது .அப்படியிருக்க தொல்காப்பியர் ''சிதைந்தன வரியினும் இயைந்தன வரையர் '' என்கின்றார் .

நொரண்டு : ஓ....அப்படியா ?

நண்டு : காமம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம் .

நொரண்டு : ஆமாம் ,காமம் .

நண்டு : அது தமிழ் சொல் .

நொரண்டு : ஓ ... சரி அதவிடு .
கடந்த 30 ம் தேதி சின்னாளப்பட்டி கடந்த பொழுது உன் ஞாபகம் வந்தது .

நண்டு : ஏன் ?

நொரண்டு : இல்ல ,நமக்காக பல சிரமங்கள் பட்டு நமது தேசத்துக்கு சுதந்திரம் வாங்கித்தந்த மகாத்மா அவர்களின் பெயரால் இயங்கிவரும் பல்கலை சின்னாளப்பட்டியில் உள்ளது .

நண்டு : அது காந்தியாரின் கட்டளையல்ல ..

நொரண்டு : என்ன ?

நண்டு : காந்தியத்தை ஊட்டாமல் ,காந்தியை உணவாக மட்டுமே ஊட்டும் எதிலும் காந்தி இருக்கப்போவதில்லை .

நொரண்டு : என்ன உளருகின்றாய் ?

நண்டு : உண்மை உடனே புரியாது .

நொரண்டு : எது ....

நண்டு : அனைத்து கல்வி நிலையங்களும் வியாபார நோக்கத்தில் செயல்படுகிறது . அதில் கற்றுத்தரும் கல்வியும் உணவுக்கான கல்வியாக உள்ளது .எங்கும் அப்படியே .

நொரண்டு : அப்படித்தானே இருக்க முடியும் .'' தாயும் சேயுமே யானாலும் வாயும் வயிறும் வேறு வேறு தானே ''இந்த பழமொழி தெரியும் தானே .

நண்டு : ஆம், தாயால் பேசும் மொழியும் பயிலும் மொழியும் புத்திசாலி தமிழனுக்கு வேறு வேறு தான் .










                   
. Download As PDF

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

முட்டாள் மடையன் மூடன்களிடம் பொய்கூறாதீர்கள் மதவாதி்களே

நொரண்டு :  மதவாதி்களின் சேட்டைகள் வரவர தாங்க முடியல  .

நண்டு : ம் ...ம் ...

நொரண்டு : .இறைவனை நினைத்தலும், வாழ்த்துதலும் , அவன் நெறி நின்றலும் செய்தார் தான்  வீடு பெறுவர் எனகூறி  சமுதாயத்தை  ஏமாற்றி அவர்களை மடையர்களாக்கி, மதவாதிகளாக்கி கடைசியில்  அதித குணம் கொண்ட இளைஞர்களை தீவிரவாதிகளாக்கி சமுதாயத்தை சீரழிக்கின்றனர் ....

நண்டு : இப்பொழுது மட்டுமல்ல எக்காலத்திலும் அவர்கள் அப்படித்தான் .

நொரண்டு :ஓ ..

நண்டு : அதற்குத்தான் வள்ளுவர்

'' பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். ''


என்ற குறளில் சூடு போடுகின்றார்

நொரண்டு :அப்படியா .

நண்டு : ஆம்


நொரண்டு : உன் கருத்துரை

நண்டு :


'' பொறிவாயில் ஐந்தவித்தான் தான் நீடுவாழ்வார் என பொய் கூறாதீர்

ஒழுக்க நெறியில்  நின்பவர்கள்  தான்  நீடுவாழ்வார்கள்
''



நொரண்டு : பொருள் ..

நண்டு :  நீ ஏற்கன வே மதவாதி்கள் கூற்றாக சொன்னதுதான் 'பொறிவாயில் ஐந்தவித்தான் '  என்பதற்கு விளக்கம்.

நொரண்டு : சுருக்க கூறு ..

நண்டு : ''கடவுள் வழியிலே நின்றவர்கள் தான் நீடுவாழ்வார் என பொய் கூறாதீர் .''

நொரண்டு : அப்ப வள்ளுவர் ''பொய் கூறாதீர்கள் மதவாதி்களே '' என்கின்றார்

நண்டு : அதுமட்டுமல்லாமல்  ,இப்படி பொய் சொல்லியோ  நீங்க  ஒழுக்கம் கெட்டு  ,நீதி நெறி தவறி வாழரீங்க .சமுதாயத்தையும்  சீரழிக்கிறீங்க . அப்பாவிகளை பாடாய் படுத்திரீங்க .இனி இப்படிப்பட்ட பொய்யெல்லாம் கூறாது வாழ முயற்சி செய்யுங்க .எங்காளை விடுங்க என்கிறார் 

நொரண்டு : ஓ .ஆமா ,மடையர்கள் என்று யாரை சொல்கிறாய் .

நண்டு :  நம் தமிழர்களைத்தான்  .

நொரண்டு :  ....

நண்டு : மடத்தில் ஒழுகும் தமிழன் மடையன் .

நொரண்டு :  ஓ.

நண்டு : மட விசுவாசம் கொண்டு   மடத்தில் முடங்கிக்கிடப்பவன்   மூடன்.

நொரண்டு : அப்ப முட்டாள் என்பவன் .

நண்டு : இதையெல்லாம் அறிந்து ,புரிந்து ,தெரிந்து வாழாமல்  ,இனத்திற்குள்ளே முட்டிக்கொண்டு அடுத்தவனுக்கு காவு ஆகும் மந்தை போன்ற உன்னைப்போன்றவர்கள் .

நொரண்டு :  ம் ...

நண்டு :

மடையனும் மூடனும் மடத்திலே .

முட்டாள் மட்டும்  தெருவிலே .













. Download As PDF

வியாழன், 28 அக்டோபர், 2010

நாத்திக சொத்தைகளே கேளுங்கள் .





ஊரிலிருந்து வந்த தாத்தா ,
என்ன செய்யர? என படித்துக்கொண்டிருந்த என்னை கேக்க .
 தாத்தா திருக்குறளுக்கு உரை எழுதறத்துக்காக படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன் .
அதுக்கு அவர் தம்பி ,நல்ல விசயம் தான் ;ஆனா,திருக்குறளை வள்ளுவர் எந்த சூழலில் எழுதினார் தெரியுமா. அதத்தெரிஞ்சுக்கோ முதல்ல .அதையும் அவர் குறளாக்கியுள்ளார் தெரியுமா   என புதிர்போட்டார் .
சொல்லுங்க என்றேன் .
செம்பான் ,செம்பானு ஒருத்தன் இருந்தான் அவன் வாழ்ந்த காலத்தே நாத்திகவாதம் தழைத்தெழ ஆரம்பித்திருந்தது. அவன் ஏதெச்சையாக அந்தக்கோஸ்டியில் சேர்ந்தான் .அது அவனுக்கு அனுகூலமான சில உபயங்களை அளித்தது .அவன் மெல்லமெல்ல பேமஸ் ஆனான் .பணமும் தாராளமாக கிடைத்தது. அதையோ பொழப்பாக்கிக்கொண்டான் . அதனால் ,அந்தக்கால கட்டத்தில், அரசனிடம் அவனுக்கு மரியாதை இருந்ததால் அரசனின் அபிமானத்தைப்பெற கடவுள் ஒருவன் உண்டு என புலம்ப ஆரம்பித்தான் .நாளாக ,நாளாக அரசனனுக்கு அனுக்கமாகி அவரவருக்கு ஒவ்வொரு கடவுள்கள் என்றான் .ஒரு நிலையில் தன்னை திரும்பிப்பார்த்தான் .எப்படி நம்மால் இவ்வளவு உயரமுடிந்தது ? என பகுத்தறிவேட சிந்தித்தான் .ஏதோ ஒன்று தான் இதற்குக்காரணமாக இருக்கமுடியும் என முடிவு செய்தான் .பின் கடவுளுக்கும் எமக்கும் பிரச்சினையில்லை என சற்று இழுத்தான். இப்படி நாத்திகத்தனத்தினால் உயர்ந்து பிறகு நாத்திகம் பேசியே ஆத்திகக்கூட்டத்தில் ஆத்திகநாத்திகனாகி ஆதாயம் பார்த்து அளப்பரிய ஆளாகிவிட்டான்.அவனை ஒரு நாள் திருவள்ளுவர்
சந்தித்தார்.அவனை தெரிந்துகொள்கின்றார் . உடனே அவனைப்பார்த்து அடே மடையா முதலில் பற்றற்றான் என்ற பற்றினை பற்றினாய் .உண்மையில் அப்பற்றினைப்பற்றுவது அதனை இது போல் விடுவதற்கு அன்று அது மடத்தனத்திற்கொல்லாம்  தலையான மடத்தனம் என நகையாடி

''பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு''

என பாடினார் தெரிஞ்சுக்கோ என்றார் .
நிலை உயரும்பொழுது ,தன் நிலை துறப்பவரை எவ்வாறு வள்ளுவர் சாடுகின்றார் பாத்தாயா .இப்ப எல்லா நாத்திகமும் இப்படித்தான் இருக்கு .திருவள்ளுவர் சொல்றத எவன் கோக்குரானுக .வாய் கிழிய திருவள்ளுவர் ,திருவள்ளுவருனு மட்டும் சொல்லுவானுங்க சொத்தப்பசங்க என்று குண்டைப்போட்டு  பொக்கைவாயில் நமட்டுச் சிரிப்புடன் என்னைப்பார்த்தார் .
என்னையும் உண்மை சுட்டது .
பற்றற்றான் என்று பகுத்தறிவுப்பற்றை பற்றவேண்டும் ,அப் பகுத்தறிவுப்பற்றைப் பற்றுவது மட்டும் சிறப்பல்ல அதனை விடாமல், மற்றவர்கள் பற்றுவதற்கும் முன்னேடியாகும் படி, பற்றவேண்டும் .




.


வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ....
மீள்வு ...தொடரும் ...
.










.
.
. Download As PDF

செவ்வாய், 26 அக்டோபர், 2010

இடைவெளிப்பயணம்


.




ஒன்றி லிருந்து

ஒன்றிற்கு தாவும்

நிதர்சன நேரம்

கடக்கும்

ஒழிந்த

மவுன தூரத்தில்

திசைமாறிப்போகும்

வெளிப்பாடு

எங்கும் தெரியாமல்

தட்டுத்தடுமாறி

மீண்டும் மீண்டும்

தோன்றும்

நிலைமாற்றத்தில்

ஒன்றும் தெரியாமல்

சமன்பாட்டிற் கடங்கா

வடிவம் உருவம் 

மாறி மாறி

முதலும் முடிவும் 

முடிவிலியாய்

என்

இடைவெளிப்பயணம்















.
Download As PDF

திங்கள், 25 அக்டோபர், 2010

எதிர்மறை எண்ணங்கள்




எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறையாய் வரும்பொழுது
எதிர்மறையில் சில எண்ணங்கள்
எழாமல் இருப்பதில்லை.

வளைந்து வளைந்து
பாதை சென்றாலும்
பாதை பாதையினின்று
வளைந்து சென்றதில்லை .

வளமான பாதையில்
சுழல நினைத்தாலும்
சுழலும் பாதையில் சுகம்கண்டதால்
வளமான வாழ்விற்கு வக்கில்லை.

எப்பொழுதும் எல்லோர்க்கும்
எப்பொழுதும்  வாய்ப்பதில்லை
எப்பொழுதென்பது  எப்பொழுது என்றாலும்
எப்பொழுதென்பது  எப்போதும் இங்கில்லை.

சோக ரேகை
மனதினில் தோன்ற
சோம்பல் ரேகை
முகத்தில் தொலைவதில்லை .

மறக்கும் எண்ணம்
நினைவினில் தோன்ற
நினைக்கும் எண்ணம்
மறப்பதை தொலைப்பதில்லை.

எதற்காகவோ வாழ்வு என்றாலும்
எதற்காக வென்பதே
நமக்காகும் போது
நமக்கா வென்பது ஏதும் இங்கில்லை.

இல்லை யென்பது
இங்கில்லை யென்றாலும்
இல்லை இல்லாமல்
இங்கொன்றும் இல்லை .

எண்ணிய எண்ணங்கள்
எதிர்மறை யென்றாலும்
எதிர்மறை எண்ணங்கள்
எண்ணாமல் முடிவதில்லை.











.





.
Download As PDF