மேற்கு உலகில் அறியப்பட்ட முதல் சிந்தனைச்சூரியன்
சாக்கிரட்டீசு.
மேற்குலகு அவரிடம் பெற்ற சிந்தனைச்சுரம் இன்னும் தீரவில்லை.
அது இன்னும் கனன்றுகொண்டிருக்கிறது .
ஆனால் ,
அரசு பற்றி சிந்திக்கவைத்த சிந்தனையாளருக்கு அரசு கொடுத்த பரிசு என்ன?
மரணம்.
அன்பால் உருவான மாமனிதர்
இயேசு கிறித்து .
அனைவரின் மீதும் பாகுபாடின்றி பிதாவாக பாசம் காட்டிய பண்பாளர் .
இவர் விட்டுச்சென்ற அன்பின் பாதை இன்னும் நீண்டுகொண்டே இருக்கிறது.
ஆனால்,
பண்பை போதித்த அன்பாளருக்கு அதிகார உலகு கொடுத்த பரிசு என்ன ?.
மரணம்.
அறிவை,அன்பை போதித்தவர்களுக்கு அதிகார வர்க்கம் கொடுக்கும்
பரிசு தான் மரணதண்டனை .
மரணதண்டனை கொடுக்குமளவிற்கு
அவர்கள் செய்ததென்ன என சிந்தித்தால்
அவர்கள் மனிதகுல உயர்வுக்காகவும் ,மனித குல உரிமைக்காகவும் போராடினார்கள் .
அதற்கான தங்களின் கருத்துக்களை மக்களிடையே எடுத்துவைத்தனர் .
இது தான் அவர்கள் செய்தது.
இதை குற்றம் என்றது அரசு , இது எப்படி குற்றமாகும் ?.
மக்கள் உரிமையில்லாதவர்களாகவே இருக்க விரும்பினர் ஆள்பவர்கள்.
அதற்கு எதற்கு மரணதண்டனை ?
அவர்களின் கருத்துரிமையை,அவர்களின் குரலை அடக்குவதன் மூலம்
மனித குலம் உரிமை பெறுவதை தடுத்துவிடலாம் என நினைத்தது அரசுகள்.
அதற்கு அவர்களை ஒரேயடியாக அழித்துஒழித்துவிட்டால்
அவர்களின் குரல் ஒழிக்காது என்ற தப்பான எண்ணத்தில்
கருத்துரிமையை கொல்ல தனிமனிதனின் உயிரைப்பறித்தலின் மூலம் சாத்தியமாகும் என்ற முட்டாள்தனமான நினைப்பில் மனித உயிர்களின் மகத்துவம் தெரியாத மட அரசுகளால் செய்யப்பட்ட மனிதகுல படுகொலைகள் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனை .
எங்கெல்லாம் பேச்சுரிமை,எழுத்துரிமை பறிக்கப்படுகிறதோ,
அங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்பட்டு வருகிறது என்பதையும்,
அங்கு மிகப்பெரிய மனிதகுல மோசடிகள் நடந்துவருகிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம் .
எங்கெல்லாம் உரிமைகள் பறிக்கப்படுகின்றதோ
அங்கு மரண தண்டனைகள் கட்டாயம் இருக்கும்.
எங்கெல்லாம் மனித உரிமைகளை மதிக்காதவர்களே உள்ளார்களே
அங்கெல்லாம் மரணதண்டனையை ஆதரிப்பவர்கள் இருப்பார்கள் .
மனிதகுல மோசடிகளை அரசுகள் செய்யாத பட்சத்தில்
தண்டனைகள் என்ற பேச்சுக்கே அங்கு இடமிருக்காது .
குற்றங்களும் நிகழாது.
என்னைக்கேட்டால் ,
மரண தண்டனை என்பது முதலில் ஒரு தண்டனையே இல்லை என்பது தான்.
சாவே வராத நிலையில் சாவை கொடுத்தல் என்பதை ஒரு தண்டனையாக எடுத்துக்கொள்ளலாம்.
இங்கு அப்படியா இருக்கிறது .
மரணத்திப்போகும் மனிதனுக்கு
அதனை தண்டனை எனக்கொடுத்தல் என்பது
மிகவும் முட்டால்தனமன ஒன்றல்லவா.
என்றோ சாகப்போரான்,
அது இன்றாயிருந்தால் என்ன ? .
நாளையாய் இருந்தால் என்ன ?.
மேலும்,
இது இயற்கை விதிகளுக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும்.
எனக்குத்தெரிந்து எந்த விலங்கினமும்
தங்களுக்குள் மரணத்தை தண்டனையாக தந்து கொள்வதில்லை .
ஆனால் ,படித்து ,பண்பேறிய,நாகரிக மனிதன் செய்வதென்ன ? .
தொடரும் ...
.
Tweet |
|