புதன், 4 செப்டம்பர், 2013

கீதை ... எது உண்மை ? .


பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்களா?

பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையிலே எங்கே சொல்லப்பட்டுள்ளது என்று சில அரை குறைகள் உளறுகின்றன. எதைச் சொன்னாலும், எழுதினாலும் ஆதாரத்துடன் செய்வதுதான் திராவிடர் கழகத்துக்காரர்களின் அணுகுமுறை. 
இதுவரை தெரிந்திராதவர் களுக்கு, அறிந்திராதவர்களுக்கு இதோ ஆதாரம் கீதை (அத்தியாயம் 9 - சுலோகம் 32).
பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள்
மாம் ஹி பார்த்த வ்யாபாச்ரித்ய யேஸ்பி ஸ்யு: பாப - யோனய:
ஸத்ரியோ வைச்யாஸ் - ததா சூத்ராஸ் - தேளு பி யாந்தி பராங்கதிம்
                  --------------------------------"விடுதலை” 3-9-2013



&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7



मां हि पार्थ व्यपाश्रित्य येऽपि स्युः पापयोनयः ।
स्त्रियो वैश्यास्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम् ॥९- ३२॥

மாம் ஹி பார்த² வ்யபாஸ்²ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: |
ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம் || 9- 32||

ஹி பார்த² = ஏனெனில் பார்த்தா
ஸ்த்ரிய: வைஸ்²யா: ஸூ²த்³ரா: = பெண்களாயினும் எந்த வர்ணத்தவராயினும்
ததா² = அதே போல
பாபயோநய: = பாவிகளானாலும்
யே அபி ஸ்யு: = எவர்களாக இருந்தாலும்
தே அபி மாம் வ்யபாஸ்²ரித்ய = அவர்களும் என்னை தஞ்சமடைந்து
பராம் க³திம் யாந்தி = மேலான கதியை அடைகிறார்கள்

பாவிகளென்னைப் பணிவாராயினும்,
மாதரேனும், வைசியரேனும்,
சூத்திரரும் பரகதி பெறுவார்.



பார்க்க 
ஒன்பதாம் அத்தியாயம்
 http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-9



 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


ஒன்னுமே புரியல  ...எது உண்மை. 


 தெரிந்தவர்கள் பகுத்தறிந்து சொல்லுங்கள்  .




.



Download As PDF