நண்டு : வணக்கம் நொரண்டு.
நொரண்டு : வாங்க நண்டு.
நொரண்டு : ஒன்னும் இல்லை,டெல்லி அரசியல் இன்று ஒன்றும் இல்லையானு பார்த்தேன்
நண்டு : ம் ...
நொரண்டு : என்ன ? ம் ...
நண்டு : சொல்ல வந்தத சொல்லு.
நொரண்டு : ''அரவிந்த் கெஜ்ரிவால் பைத்தியக்கார முதல்வனுசுஷில் குமார் ஷிண்டே ''
நண்டு : சரி அதனால் என்ன ?.
நொரண்டு : அதபத்தி ...
நொரண்டு : அப்புறம்
நண்டு : சொல்லு .
நொரண்டு : '' வினோத் குமார் பின்னி
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர், சர்வதிகாரி என .. ''
நண்டு : அதனால என்னப்பா ?.
நொரண்டு : இல்லப்பா , உண்மையில் அவர் எப்படிப்பட்டவர்னு கேட்க வந்தேன்.
நண்டு : நான் என்னத்த சொல்ல ,
நொரண்டு : சட்டத்தை மீறியே செயல்படராருனு சொல்ராங்களே. அதப்பத்தி.
நண்டு : அதப்பத்தி ...சட்டம் தன் கடமையை செய்யும்னூ அவருக்கு தெரியும்.
நொரண்டு : வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாடகம் ஆடுகிறார் என கூறுவது பத்தி
நண்டு : நாடகம்னா ஆடித்தானே ஆகனும்.
நொரண்டு : என்னப்பா எதக்கேட்டாலும் இப்படியே சொல்ர.
நண்டு : சரி , விசயத்துக்கு வரேன்,
அரவிந்த் கெஜ்ரிவாலும் சரி ஆம் ஆத்மி கட்சியினரும் சரி ,மிகவும் தூய கரங்களுடன் பொதுத்தொண்டாற்ற வந்தவர்கள் .
நொரண்டு : ம்...
நண்டு : காந்தி கூட தனது நடவடிக்கைகளுக்காக அதிகம் விமரிசிக்கப்பட்டுள்ளார்.வெற்றி பெற்ற பின் புரிந்துகொள்ளப்பட்டுள்ளார்.
நொரண்டு : ம்...
நண்டு : அரவிந்த் கெஜ்ரிவாலும் சரி ,ஆம் ஆத்மியினரும் சரி ,சில பேச்சுக்களிலும்,நடவடிக்கைகளிலும் மாற்றம் காணவேண்டும்.மற்றபடி சரியாகத்தான் இயங்குகிறார்.
நொரண்டு : அப்படியா .
நண்டு : மக்கள் அவர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த ஸ்தானத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் ...மக்களை தொந்தரவு செய்யாமல் ...
நொரண்டு : ஓ...அதனால் தான் நீ அவர்களின் மக்களை தொந்தரவு தரும் செயல் குறித்து
நண்டு : அது ....ம் ...அரசியல்...அவர்கள் இன்னும் படிக்கவேண்டிய பகுதி அதிகம் என்பதால் ,அதனை பிறகு பார்ப்போம்.
நொரண்டு : ம்...
நண்டு : இன்னும் இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது எனில் ,நல்லவர்கள் நாட்டில் இருப்பதால் தான்.அவர்களை வெளிக்கொணர்ந்த விசயத்தில் அன்னாவிற்கும்,ஆம் ஆத்மிக்கும் நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
நொரண்டு : ஆமாம் ,அது ஒவ்வொரு இந்தியனின் கடமையும் கூட.
நண்டு : அரசியல் பொய்யர்கள் ,அரசியல் சர்வதிகாரிகள்,அரசியல் கொள்ளையர்கள்,அரசியல் திருடர்கள்,மற்றும் அரசியல் பித்தலாட்டக்காரர்கள் மத்தியில் நல்லவன் ஒருவன் அரசியல் பொய்யனாக, ,அரசியல் சர்வதிகாரியாக,அரசியல் கொள்ளையனாக,அரசியல் திருடர்னாக,மற்றும் அரசியல் தெரியாதவனாக தெரிவது இயல்புதான்.
நொரண்டு : ஓ...
நண்டு : இந்தியாவிற்கு ஆம் ஆத்மியினரின் சேவை மிகவும் அவசியமான ஒன்றாகும் .
நொரண்டு : எதற்கு.
நண்டு : ஆளும் வர்கத்தினருக்கு இவர்கள் தான் சிம்ம சொப்பனம்.
நொரண்டு : அதனால் என்ன ...?
நண்டு : அதனால்,ஆளும் வர்கத்தினர் மக்களிக்கு எதிராக என்றும் செயல்பட முடியாது.
நொரண்டு : தெளிவா... உதாரணம் ஒன்னுடன் சொல்லு.
நண்டு:ம்....உதாரணத்திற்கு...ஒடுக்கப்பட்ட, நலிந்த சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதுபோல் ஆளும்வர்க்கத்தினர் செயல்பட்டால்,அதனை ஒடுக்கும் வல்லமை இவர்களிடம் தான் உண்டு.
நொரண்டு : ம் ...புரியுது ...புரியுது.
நண்டு : மற்ற கட்சிகள் என்றும் ஆதாய அரசியலை மேற்கொள்வதால் அவர்களை நம்ப முடியாது.
நொரண்டு : சரி தான் ... அப்ப நீ ...
நண்டு :எனக்கு நேரமச்சு நான் வரேன் ...மற்றதை பிறகு விரிவா பேசலாம்.
படம் நன்றி கூகுள் மற்றும் இணையம்.