.
குழந்தைகளுக்கு விடுமுறை .
ஒரு மாதம் பெரிய தொந்தரவு.
லீவே விடக்கூடாது .
இப்படித்தான் அனேக பெற்றோர்கள் நினைக்கின்றோம் .
குழந்தைகளுக்கு விடுமுறைவிடுவது நமக்கெள்ளாம் பெரிய அவஸ்தையாகவே படுகிறது . ஆனால், குழந்தைகளுக்கு அது தான் ஜாலி .பள்ளிக்கூடம் ஒரு சிறைச்சாலையே, உண்மையில் அனைத்துக்குழந்தைகளும் அப்படித்தான் நினைக்கின்றனர் .அப்படி நினைக்காத குழந்தை ஏதோ ஒரு மனேநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கவேண்டும் .
குழந்தைகளை நன்றாக ஆராய்ந்ததில் பிறந்தது முதல் 2 வருடங்கள் குழந்தைகள் தங்களின் பார்வையையும், புரிதலையும்செலுமைப்படுத்திக்கொள்கின்றன
(இக்காலகட்டத்தில் தான் பெற்றோர்களின் பங்கு மற்றும் செயல் மிகவும் முக்கியமாக அதன்அறிவுத்தளத்தினை ஆக்கிரமிக்கிறது ).2- லிருந்து 5 வயது வரை குழந்தைகள்மேலும் பார்வையையும் ,புரிதலையும் செரிவுபடுத்துகின்றன ,
சூழலுடன் தொடர்பினை ஏற்படுத்தும் அளவிற்கு அதன் செயல்பாடு வளர்கிறது .
குழந்தைகள் 5 வயதிற்குப்பின் ,5 வயதிற்குள் தன்னுள் ஏற்றுக்கொண்ட விசயத்தில்பயணித்து 12 வது வயதில் அதனை முன்னிருத்தி கால் வைத்து ,தொடர்ந்து ,பிறகு16 வது வயதினின்று அதன்வழி சமூகத்திற்குள்நுழைகின்றனர்
அதுவரை அவர்கள் சுதந்திரமானவர்களாகவே உணர்கின்றனர்
இதுவே ,குழந்தைகள் தங்களின் வாழ்க்கை பயணத்தினை ஆரம்பிக்கும் பாதையாக உள்ளது .
எனவே ,
இக்காலகட்டத்தில் எப்போதும் குழந்தைகளிடம் பயம் காட்டாதீர்கள் . அவர்கள் அச்சப்பட்ட மனேநிலையில் வளரஆரம்பித்து விடுவார்கள் . குழந்தைகளிடம் வீரம் பற்றியும் பேசாதீர்கள், உன்னால் முடியும் போன்ற அவர்களால் முடியாது என்ற விசயங்களில் பொய் கூறாதீர்கள் .அது அவர்களிடத்தில் தாழ்வு
எண்ணத்தை ஏற்படுத்திவிடும் .குழந்தைகளிடம் உங்களின் சாகசங்களையோ குறைகளையோ கூறாதீர்கள் . அது அவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் .குடும்ப விவகாரங்களையோ, கஷ்டநஷ்டங்களையோ அவர்களுக்கு தெரியுமாறு வைத்துக்கொள்ளாதீர்கள் .நமது கஷ்டம் குழந்தைகள் உணர்ந்தால் தான் நம்போல் ஆகாமல் சிறப்பானவராக வருவர் என்பது தப்பெண்ணம்.
குழந்தைகளுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணாதீர்கள் .அது அவர்களை பெரியவர்களுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணி இது பெரியவங்க சமாச்சாரம் என்ற அச்சத்துடன் வளரஆரம்பித்து விடுவார்கள் (நாமெல்லாம் அப்படி வளர்ந்தவர்கள் என்பதால் தான் செக்ஸ் விழிப்புணர்வு இல்லாமல் வளரஆரம்பித்து அச்சப்பட்டு, அவஸ்தைப்பட்டதை ஒவ்வொருவரின் கடந்த காலமும் கூறும்).அவர்களை எதார்த்தமாக வளர விடுங்கள் . அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள் .அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலையே கூறுங்கள் .தெரியவில்லையெனில் நூலகத்திற்கு சென்று
தெரிந்துகொள்ளலாம் என்று கூறுங்கள். அரைகுறைபதிலை கூறாதீர்கள் .உங்களின் எதுவையும் (கருத்து, கொள்கை, இப்படி..) அவர்களுக்குப்புகுத்தாதீர்.
அவர்களின் கண்களில்படும் எல்லாம் அவர்களுக்கு புதிர்தான் .விடைகளை அவிழ்த்துவிடுவதுதான் நாம் செய்யவேண்டிய வேலை .கற்றுக்கொள்வது அவர்களின்இயல்பான செயல் .
கற்றுக்கொள்ளவேண்டும் என நாம் பரிதவிக்கக்கூடாது .வீண்.
ஒன்றைமட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் .
குழந்தைகள்பிறக்கும்பொழுதோபலவிசயங்கள்அவர்களுக்குஆணையிடப்பட்டிருக்கின்றது .
அது
"சுவாசி உடல் இயங்கும் ".
"உண் உடல் வளரும் ".
"வளர உணவு தேவை ".
இதுபோன்று ...பல...
இதில் "வளர உணவு தேவை " என்பதுதான் தற்பொழுது நமது குழந்தைகளின் குறும்புகளுக்கும் ,சேட்டைகளுக்கும் காரணம் .மனிதன் ஆரம்பத்தில் உணவிற்காக அலைந்து, திரிந்து, ஓடி, கண்டுபிடித்து ,போராடி பொற்று, பின் உண்டு ,மகிழ்ந்து, அயர்ந்தான் .காலப்போக்கில் உணவினை சேமித்து வைத்து உண்பதால்-அலைந்து ,திரிந்து ,ஓடி, கண்டுபிடித்து,போராடி பொற்று, பின் உண்ணாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடுதான்
குழந்தைகள் செய்யும் அனைத்தும் .
அதனால் குழந்தைகள் குறும்பு செய்கின்றன என கோபம் கொள்ளாமல் அவர்களை அப்படியே அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள்.அப்படிவிடும் பட்சத்தில் அவர்களுக்கு இடப்பட்ட கட்டளை தீர்க்கப்பட்டு அவர்களை அடுத்த
நிலைக்கு தானே உந்திச்செல்லும். இல்லாதுபோனால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அன்னியப்பட்டேபோவீர்கள் .
குறும்பு செய்கின்றது என்பதற்காக டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ், நீச்சல் என
உங்களிடமிருந்து அவர்களை பிரித்தீர்களெனில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடினால் உங்களிடம் அந்நியமாக நடந்து கொள்வார்கள் .அதனால் பயனேதும் இல்லை .
ஆதலால் ,
குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருங்கள் .
அவர்களின் வாழ்வை அவன்களே முடிவு செய்யட்டும் .
நீங்கள் மீறினால் ,அவர்களும் மீறுவார்கள் .ஜாக்கிரதை .
எனவே ,
குழந்தைகளை பாரமாக நினைக்காதீர்கள் .
அவர்களின் சேட்டைகளை அனுபவியுங்கள் .
அவர்களை உற்று கவனியுங்கள் .
அதிலுள்ள அறிவுப்பசியை கண்டுபிடியுங்கள் .
அதற்கு உதவுங்கள் .
''சுதந்திரமே அறிவு " -என முதலில் உணருங்கள் .
நாம்மில் அதிகப்பேர் இன்னும் குழந்தைகள் தான் . அப்படியிருக்க நம் குழந்தைகளை ஏன்
பெரியவர்களாக்க எண்ணுகின்றீர்கள் .
.
.
.
.
Tweet |
|