செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

திராவிட நூலென்பதால் ... ...

.
திருக்குறளின் பேரால் திராவிட மக்களின் பெருமையை,திராவிடரல்லாத மக்களுக்கு உணரச்செய்ய
முடிகிறது ...
எவ்வளவோ ஆபாசமான நூல்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெருமையில் 100ல் 1 பங்கு பெருமைகூட
நமது திருக்குறளுக்குக் கொடுப்பதில்லை ...
திருக்குறளுக்கு அத்தகைய பெருமையில்லாமல் போனதற்குக் காரணம் .இது ஓர் திராவிட நூல்
என்பது தான் ...
இன்ன காரியங்களால் இன்ன வாஸ்துக்கு இன்ன குணம் ஏற்படும் என்று கூறுவதுதான் விஞ்ஞானம்
.விஞ்ஞானத்திற்கு ஏற்ற கருத்து தான் பிரத்யக்ஷ அனுபவத்திற்கும் பின்விளைவுக்கும் ஏற்றதாக
அமையக்கூடியது .தத்துவார்த்தம் கூறத்தேவையில்லாத கருத்துத்தான் விஞ்ஞானத்திற்கேற்ற
கருத்தாகும் .தத்துவார்த்தம் பேசுவதெல்லாம் பெரிதும் தம்முடைய
சாமர்த்தியத்தைக்காட்டிக்கொள்ளச் சிலர் செய்யும் பித்தலாட்டம் என்றுதான் நான்
கூறுவேன்.திருக்குறளில் அத்தகைய த்த்துவார்த்தப் பித்தலாட்டத்திற்கு இடமேயில்லை...
அதில் கூறப்பட்டுள்ள கொள்கைகளை நாம் பொது நெறியாகக் கொள்வது அவசியம் ...
நமக்கு வேண்டிய முழு அறிவையும் கொடுக்கக்கூடியதாக ஒரு நூல் வேண்டுமானால் அது
திருக்குறள் தான் என்பதை நீங்கள் தெளிவாக உணருங்கள் .உணர்வது மட்டும்மல்ல,நன்றாக மனத்தில்
பதிய வையுங்கள் ...
திருக்குறள் நூல் ஒன்றே போதும் இந்நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை உண்டாக்க ...
100 ரூபாய்க்கும் ,200 ரூபாய்க்கும் 'டெக்ஸ்ட்' புத்தகங்கள் வாங்கிப் படித்து
மடையர்களாவதைவிட 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல்
என்றுதான் கூறுவேன் .திருக்குறள் ஒன்றே போதும் .உனக்கு அறிவு உண்டாக்க ;ஒழுக்கத்தைக்
கற்பித்துக் கொடுக்க;உலகஞானம் மேற்பட.அப்படிப்பட்ட குறளைத்தான் நாம் இதுவரை
அலட்சியப்படுத்தி வந்திருக்கின்றோம்...
அனைவரும் திருக்குறளைப்படித்து அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழவேண்டும் என்பது தான்
எனது ஆசை.
..........
சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கழகம் சார்பில் 14.3.48-ல் நடைபெற்ற 3வது
திருவள்ளுவர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அருமைவாய்ந்த சொற்பொழிவிலிருந்து
... சில துளிகள் ... அவ்வளவே.



.



.


. Download As PDF

திங்கள், 22 பிப்ரவரி, 2010

ப்ளாக்கர் உலகமும் -பழகா நட்பும் .

ஜெகநாதன் has left a new comment on your post "நம்மில் நாம் பிறப்போம் ,வாழ்வை வசந்தமாக்குவோம்.":

நண்டு@நொரண்டுதான், நான் தேடிக்​கொண்டிருந்த​டோமி என்று தெரியாமல் போயிற்று.
3 வரிகள் மட்டும் எழுதும் ​டோமியிடமிருந்து இப்படி வித்யாசமான ​செறிவான ​சிந்தனைகளைப் படிக்க சுவாரஸியமா இருக்கு!

தொடர்ந்து நடப்போம்!



Posted by ஜெகநாதன் to நண்டு @ நொரண்டு at February 22, 2010 6:56 AM


இதைப்படித்ததும் எனக்கு கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட உணர்ச்சி ஒத்த நட்பு தான் கண்முன் காட்சியானது .

பாண்டிய நாட்டில் பண்டைக்காலத்தில் பிசிராந்தையார் என்ற அருந்தமிழ்ப்புலவர் வாழ்ந்துவந்தார் .அப்புலவர் சான்றாண்மைப் பண்புகள் ஒருங்கமைந்த ஆன்றோராக விளங்கினார் .பிசிராந்தையார் பாண்டிய நாட்டில் வாழ்ந்த காலத்தே சோழவள நாட்டை கோப்பெருஞ்சோழன் என்பவர் ஆண்டு வந்தார் .அவர் தமிழில் பெரும் புலமையுடையவர் .'புல மிக்கவரை புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம்' என்பது பழமொழி .சோழனுடைய தமிழ்ப்பற்றினால் புலவர் பெருமக்கள் அவர் அன்பிற்குறிய நண்பர்களாய் அல்லும் பகலும் அவரை விட்டகலாது அவர் உடன் உறைந்தனர் . பாண்டிய நாட்டுப் பைந்தமிழ் புலவர்களின் வாயிலாக பிசிராந்தையாரின் பெருமையை அறிந்தார் கோப்பெருஞ்சோழன் .அவரைக்கண்டு அளாவளாவ்வேண்டும் என்ற வேட்கை சோழனுக்கு உண்டாயிற்று .அது பின்னர் சோழனின் உள்ளத்தில் பெருநட்பாய் மலர்ந்து மணம் வீசலாயிற்று .

கோப்பெருஞ்சோழன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு துன்ப நிகழ்ச்சியால் ஏற்பட்டவிருந்த பெரிய மானக்குறையை தவிர்க்க ,மானம் இழந்து உயிர் வாழ விரும்பாத சோழன் தனது ஆட்சிப்பொறுப்பைத் துறந்து இழிவைப்போக்கிக்கொள்ள வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தார் .காவிரியாற்றங்கரையில் வடக்கிருக்க இடங்கள் வகுக்கப்பட்டன.அப்போது சோழன்,'பிசிராந்தையார் என் ஆருயிர் நண்பர் .அவரும் என்னுடன் வடக்கிருக்க வருவார் .அவருக்கு எனக்குப் பக்கத்தில் இடம் ஒதுக்கி வைக்கவும் ' என ஆணையிட்டான் .அதுகேட்ட ஏனைய புலவர்கள் வியப்புற்று ,'அரசே! பாண்டி நாடு தொலைவில் உள்ளதே .பிசிராந்தையாரை தாங்கள் ஒருமுறைகூடக் கண்டதும் இல்லை;பழகியதும் இல்லையே! நீங்கள் இருவரும் கேள்வியளவிலேயே நட்புக்கொண்டீர் .அவ்வாறு இருக்க எவ்வாறு வருவார்?' என ஐயமுற்று உரைத்தனர் .அதுகேட்ட சோழன் 'புலவர் பெருமக்களே ! ஐயம் வேண்டாம் .நாங்கள் கேள்வியளவிலேயே நட்புக்கொண்டாலும் எங்கள் நட்பு மிகவும் உறுதியானது.நிச்சயமாக வருவார்.ஆதலால் அவருக்கு ஓர் இடம் ஏற்படுத்துங்கள்,'என்று கூறிக்கொண்டிருக்கும் போதே பிசிராந்தையார் அவர்கள் முன் வந்து நின்றார் .அது கண்டு அனைவரும் திகைத்து நின்றனர் .மன்னர் உரைத்த உரை பழுதாகாமல் அங்கு சேர்ந்தபிசிராந்தையாரின் உணர்ச்சி ஒத்த நட்பின் திறத்தினை பலவாறு பாராட்டினர் .

இதனை கண்ணகனார் என்னும் புலவர்

' பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங் கென்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே ' -

என்ற அழகிய செந்தமிழ்ப்பாடலைப் பாடி அவர்கள் நட்பின் பெருமையை பாராட்டினார் .

கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட உணர்ச்சி ஒத்த நட்புரிமையே தமிழகத்தில் நட்புக்கு இலக்கியமாக போற்றப்பட்டு வருகின்றது .

இதனை நான் கல்லுரி்களில் பயின்ற காலத்தே இப்படியெல்லாம் இருந்திருக்கமுடியுமா என ஐயுற்றேன் .புலவர்களின் பொய்யுரைகளில் இதுவும் ஒன்று என நகைத்ததும் உண்டு .ஆனால் ,அதற்கு மாறாக புலவர்கள் உரை என்றும் பழுதாகாது என்பதனை நான் ப்ளாக் ஆரம்பித்த பிறகு காலம் உணர்த்தியது .

அப்படி எனக்கு உணர்த்திய ஒன்றைத்தான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் படித்தது .

நான் 'அட்டக்கத்தி 'என்ற எனது மற்றொரு ப்ளாக்கில் 'டோமி 'என்ற பெயரில் 'கவிதைபாடும் நேரம் 'என்று சிற்பாக்கள் வடித்துவந்தேன் .அதில் அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது .
சிற்பா என்றால் ,இது தமிழ்க்கவிதை வடிவில் ஒரு வகை
- எளிமையான கவிதை நடை
- மூவடி
- "தத்துவம்",'உணர்ச்சி", சார்ந்தது
- இலக்கணம் தவிர்த்தது
- இயல்பானது
- இயற்கை யானது.

உதாரணத்திற்கு

'அறிய முடியாது
குருடர்களால்
அழகிய மே மரப்பூக்கள் '

இதற்கு பல அர்த்தங்கள் .
அப்படித்தான் வடிவமைக்கடுவது சிற்பா .
ஒரு சில .
முதலாவதாக நேரடியான பொருள் நேரடியாகவே உள்ளது .
2வதாக ப்ராய்டு, 'குருடர்களால் சிவப்பு நிறத்தை அறிய முடியாது ' என்பார் .அது இதில் உணர்த்தப்பட்டுள்ளது .
3வதாக மே பூக்கள் சிவப்பு நிறத்தது எனில் கம்யூனிம் அதன் குறியிடாக , அறிவற்ற மனிதர்களால் கம்யூனிசத்தைப்பார்க்க முடியாது .அவர்கள் குருடர்களே ....
இப்படி அடுக்கிக்கொட்டே போகலாம் அவரவர் ....
இப்படியாக நான் சிற்பாக்கள் வடித்துவந்தபொழுதுகளில்
ஜெகநாதன் ,முனியப்பன் பக்கங்கள் ,மற்றும் பேராசிரியர் குணசேகரன் ஆகியோர் நண்பர்களானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் .
அட்டக்கத்தியில் இவர்கள் என்றால்
நண்டு@நொரண்டில் vimalavidya ,பழமைபேசி,
பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அம்மா அவர்கள் goma,cheena (சீனா) ,
Starjan ( ஸ்டார்ஜன் ) ,அண்ணாமலையான்,நேசமித்ரன்,துபாய் ராஜா ,
Maximum India ,Prince Ennares Periyar,செல்வ ராயன் ,veeraa,லோகு ,
நட்புடன் ஜமால் ,தேவன் மாயம் ,பேநா மூடி,பிரியமுடன்...வசந்த் ,
கட்டபொம்மன் ,க.பாலாசி ,வித்யாசாகர் ,அகல்விளக்கு ,
பிரியமுடன் பிரபு ,V.A.S.SANGAR மற்றும் benzaloy ஆகியோர் நண்பர்களானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் .
இவர்கள் அனைவரும் எனது பழகா நண்பர்கள் . இவர்களுடனான எனது நட்பு பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் கொண்ட உணர்ச்சி ஒத்த பழகா நட்புக்கு இணையானது .இவர்கள் அனைவரும் எனக்கு கோப்பெருஞ்சோழன் ஆவார்கள் .




.


.


.

. Download As PDF

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

நம்மில் நாம் பிறப்போம் ,வாழ்வை வசந்தமாக்குவோம்.

.


.
.

இன்றைக்கு அவசர உலகத்தில் நாம் அனைவரும் இருக்கின்றேம்.மிகவும் பிசியா இருக்கின்ற இந்த காலகட்டத்தில் நாம் நமது வாழ்க்கையில் தவறவிட்ட இழந்துவிட்ட விசயங்கள் பல.அவை எவைஎவை என்பதைக்கூட நம்மால் யோசிக்க நேரமில்லாமல் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.இப்படி ஓடிக்கொண்டிருக்கின்ற நாம் தவறவிட்டதில் முதன்மையான ஒன்றுநமது உடல்நலம் .மற்ற எதைத்தவறவிட்டாலும் காலத்தில் நம் தவற்றை நாம் சரிசெய்துகொள்ளமுடியும் .ஆனால் உடல் அப்படியானது இல்லை .அவைகள் அவைகளுக்கு என்று
காலத்தை வகுத்துக்கொண்டு இயங்குவன .அவைகளுக்கு உண்டானதை நாம் அவைகளுக்கு உண்டான போது செய்யவில்லை என்றால் அவைகளும் நமக்குண்டானதை உண்டான போது செய்யாது .அப்பொழுது தான் நாம்
நம்மைப்பார்க்கின்ற சூழல் ஏற்படுகின்றது அப்பொழுது நோயாளியாக நாம் .அப்பொழுது நாம் நம்மை நொத்துகொள்வதுடன் நம்முள்ளே நாம் எதிரியாகின்றோம் .அது சில சமயங்களில் பலரை குற்றவாளிகளாகக்கூட மாற்றிவிடுகிறது .(ஒரு உதாரணம்: தற்கொலை ).சரி இதனின்று
தற்காத்துக்கொள்ள ஏதாவது வழியுண்டா எனில் ,உண்டு ,அதிலும் மிக எளிமையான செலவேயில்லாத ஒரு வழி உண்டென்றால் அது நடைபயிற்சி என்றால் மிகையாகாது .

நடைபயிற்சி என்றால் எல்லா நடையும் நடைப்பயிற்சியாகா.குறிப்பாக உடல் நலம்காக்கும் நடைப்பயிற்சி எனில் அதிலும் நோயைத் துரத்த தினமும் காலையில்,அதுவும் அதிகாலையில் பொழுது புலருவதற்கு முன் ஒரு ஜில்லுனு காத்து அடிக்கும் (எங்க ஊரில்-ஈரோட்டில் 4.30-யிலிருந்து 5.30 மணி வரைக்கும அடிக்குது) அப்பொழுது நல்ல காலணி (ஷூவே சரியானது , சைஸ்சும் சரியானதாக இருக்கவேண்டும்) அணிந்து மாசற்ற சுத்தமான சுற்றுப்புறச்சுழலில் எந்த சுமையும் இல்லாமல் தொடர்ந்து தினம் நடை மேற்கொள்ளவேண்டும் .
இவ்வாறு நடையில் ஈடுபட்டவுடன் ,நடக்க ஆரம்பித்த விநாடியில் இருந்து எங்கும், எதற்காகவும் நிற்காமலும்,யாருடன் எந்த பேச்சும் பேசாமலும்,யாரைப் பார்த்து எந்தவித சைகையும் செய்யாமலும், கைகளை நன்றாக சௌகரியமாக அசைத்து,கால்களை அது எவ்வளவு சௌகரியமான தொலைவு எடுத்து வைக்க
முடியுமோ, அவ்வளவு மென்மையாக எடுத்து வைத்து, நெஞ்சை நிமிர்த்தி மூச்சுக்காற்றை மிகவும் சுதந்திரமாக எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ஆழ்ந்த சுவாசத்துடன் உள்வாங்கி ,அதிக நெளிவுகளற்ற நேரான பாதையில் கால்களை, காலையில் எடுத்து வைத்தால்,அந்த நாளை நமக்குள் நாம் எடுத்து வைத்துக் கொண்டவராவோம்.மேலும்,நடை பயிற்சி முடிந்த பிறகு ஒரு 10 நிமிடம்
மிகவும் ரிலாக்ஸாக அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு பிறகு மற்ற வேலையைப் பார்க்கவேண்டும்.

தினமும் குறைந்தது 30 நிமிடம் நாம் நடைபயிற்சிக்காக நேரத்தை ஒதுக்கினாலே போதும். டிரிட்டபிள் டிசீஸ்கள் எதுவும் நம்மை அண்டாது.பரம்பரை வியாதிகள் எட்டிப் பார்க்கவே பார்க்காது.மன அழுத்தம்,மன இருக்கம்,இரத்த அழுத்தம்,மாரடைப்பு,சர்க்கரை நோய்,சிறுநீரக நோய்,தசைப்பிடிப்பு,கை கால் வலி,அலர்ஜி சம்பந்தமான நோய்கள், மூச்சு சம்பந்தமான அனைத்து
நோய்கள்,அசதி,சோம்பல்,எரிச்சல்,சளி,தோல் நோய்கள் இப்படி பல நோய்களை எந்தவித மருந்து,மாத்திரைகளும் இல்லாமல்,அதற்கான எந்தவித பத்தியமும் இல்லாமல் நடையைக்கட்ட வைக்கமுடியும் நமது நடையினால்.மேலும் முகம் பொழிவு பெறும்,உடல் தோற்றம் வடிவமாகும், தொப்பை வராது,இருந்தாலும் குறையும்,மேனி மினுமினுக்கும்,உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி
உடல் தூய்மையாகும்.அதைவிட நமது உடலும், முளையும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு அன்றைய நாளை நமதாக்கும் .

நடைபயிற்சியினை தினமும் நாம் மேற்கொண்டால் நம்மில் நாம் பிறப்பதை தினமும் உணரலாம்.எனவே,எனவே,நடைப்பயிற்சி மேற்கொள்ளுவோம்.

நம்மில் நாம் பிறப்போம் ,வாழ்வை வசந்தமாக்குவோம்.


.


.

.


.

Download As PDF

திங்கள், 15 பிப்ரவரி, 2010

தூரிகைத்தென்றல் ...

............................................... '' தன் தீட்டல் ''..........................

நான் தான் ...நான் தான் ...நான் தான் ...






.................................................. '' கடற்கரை''...........................


இது மகாப்ஸ் .......






...................................................'' பிறப்பு ''...........................







..................................................... '' கானகம்''........................






...............................................'' யானை மலை''.......................

( அதாங்க மதுரைக்குப் பக்கத்தில இருக்குள்ள ,இப்பக்கூட ஏதே செய்தியில அடிபட்டுச்சுள்ள அது தான் )

மீதி இன்னொரு நாளைக்கு , சரியா ...புடுச்சுருக்கா ....சந்தோசம் ...

வணக்கம் .

என
அன்புடன்
நண்டு .






.





.

. Download As PDF

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தமிழ்த்தாயின் அன்பான வேண்டுகோள் ...

ததமிழ்த்தாய் : தம்பி என்மனம் நோக பேசிவிட்டான் எனது மகன்.
நண்டு : அம்மா ,நீங்க ?
தமிழ்த்தாய் : நான் நொரண்டுவின் அம்மா .
நண்டு : வாங்க அம்மா ,வாங்க ,வணங்குகின்றேன் .என்ன ...
நொரண்டுவின் தமிழ்த்தாய் : மகனே ,நொரண்டு என்னை என் மகன் மனம் நோக பேசிவிட்டான்.
நண்டு : ஓ,அப்படியா ,அவன் நொம்ப நல்லவனாச்சே .
நொரண்டுவின் தமிழ்த்தாய் : ஆமாம் ,இல்லையென்று சொல்லவில்லை ....ஆனால் ,ஆனால் ....
நண்டு : என்ன சொல்லவர்ரீங்க அம்மா ?
நொரண்டுவின் தமிழ்த்தாய் : என்மனம் நோக பேசிவிட்டான் ....
நண்டு : இருந்தாலும் அவன் உங்களின் மகனில்லையா ?
நொரண்டுவின் தமிழ்த்தாய் :இருந்தாலும் ... அவன் என் மகனே இல்லை .
நண்டு : அப்படி சொல்லாதீர்கள் .
நொரண்டுவின் தமிழ்த்தாய் : இல்லை இல்லை அப்படியில்லை . அவன் என்னை திட்டியதைப்பார்த்த
எனது மற்ற புதல்வர்கள் அவனின் உடமைகளை ஆதங்கத்தில் சேதப்படுத்திவிட்டார்கள் .அதற்காக
போலிஸில் கேசு போட்டிருக்காங்க .
நண்டு : ஓ அப்படியா ...
நொரண்டுவின் தமிழ்த்தாய் : ஆம் ,அதற்காக போலிஸில் அவர்களின் மிது நடவடிக்கை எடுத்துள்ளது .
நண்டு : அது தானே சட்டம் .அது தான் சரி.
நொரண்டுவின் தமிழ்த்தாய் : இருக்கலாம் .எனினும் இவன் செய்த குற்றத்திற்காக என்னிடம்
மன்னிப்பு கோட்டுவிட்ட காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கல . ஆனால்,என்னால் தான் எனது
சகோதரர்கள் ஆதங்கப்பட்டுவிட்டார்கள் அதனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம்
என்று கூறுவதுதானே ஒரு பொறுப்புள்ள சகோதரனின் உண்மையான சகோதர பாசமாகும் .அது
தவிர்த்து சட்டம் தனது கடமையைச்செய்யட்டும் என தான் மட்டும் தனது தவற்றிலிருந்து
தப்பித்துக்கொண்டால் போதுமா? தனது சொல்லால் பாதிக்கப்பட்ட தனது சகோதரர்களைப்பற்றி
எந்தக்கவலையும் படாமல் துயரங்களை அனுபவிக்கட்டும் என நினைக்கும் இவனை எப்படி எனது
மகனேன்று ஏற்றுக்கொள்வது .
நண்டு : ஓ ....ஓ....அம்மா வள்ளுவர் ..
நொரண்டுவின் தமிழ்த்தாய் : என்னப்பா செல்ரார் ...
நண்டு :
'பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். '' என்கின்றார் .
நொரண்டுவின் தமிழ்த்தாய் : அப்பா எனக்கு ஒன்றும் தெரியாது .அதுக்கு என்னப்பா அர்தம்.
நண்டு : அம்மா ... பயனில்லாத சொற்களை பேசுபவனை ஒரு தாய் மகன் என்று கூறமாட்டால்
.தனக்குப்பிறந்த பதர் என்றே கூறுவாள் .
நொரண்டுவின் தமிழ்த்தாய் : ஆமாப்பா ,ஆமாம் .இவன் பதர் தான் .இவன் இப்படி பேசுவதற்கான
காரணம் அவன் சேந்துள்ள கூட்டம் . அவனது நண்பர்கள் சிலர் தொடர்ந்து என்னை இப்படி
அவமானப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள் .அதனால் தான் இவனும் என்னை திட்ரான் .இதை
யாருமே கண்டுக்க மாட்டேங்கராங்க . ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன் .இனி யாரும்
எம்மை திட்டாதீர்கள் . நானே நொத்து போயிருக்கேன் .
நண்டு : அம்மா ...நொரண்டுகிட்ட சொல்றேன் ... ஆவன செய்வான் என எதிர்பார்க்கின்றேன் .

.



.



.

..


வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -தொடரும் ....

..


.

Download As PDF