அரசியல் அறிவும்,பார்வையும் சிறிதும் இல்லாத அரசியல்கட்சிகளின் நிர்வாகிகளால் இந்தியா என்றும் ஆளப்பட்டுவருகிறது.
அரசியல் என்பது M.P,M.L.A ஆவது தான் என்பது இன்றைய நிலையாகிவிட்டது.
அரசியல் கட்சிகளும்,அதன் பிரதிநிதிகளும் அரசியல்கோட்பாட்டில் ஒரு அங்கம் மட்டுமே என்பதனைக்கூட அறியாத தலைவர்களையே நாம் இன்றும் அரசியலில் பார்க்கின்றோம்.
அதற்காக இவர்களால் தினமும் நடத்தப்படும் அரசியல்நாடத்தைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது .இதற்கு பதில் இவர்கள் சினிமாவில் நடிக்கப்போவதே நல்லது.ஏனெனில்,இவர்கள் தற்பொழுது நடிக்கும் இந்த வீதிநாடகத்தை விட சினிமாவில் நல்ல தொழில்நுட்பத்துடன் எப்பெக்டாக நடிக்கமுடியும் என்பதோடு மிகச்சிறந்த திரைப்படத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்த புண்ணியமும் கிடைக்கும்.
தேசிய அரசியல் இப்படி இருக்க
தமிழ்நாட்டில் மாநில கட்சிகள் தற்பொழுது தங்களின் நிலையை உறுதிப்படுத்தும் ஒரு களமாக உள்ளாட்சித்தேர்தலை பயன்படுத்தியிருக்கிறது .அதனால் தமிழக கட்சிகள் தங்களின் பலத்தினை அறிந்துகொள்வதோடு. இதை ஒரு அளவாக வைத்துக்கொண்டே ஒரு 20 ஆண்டுகளை பயணித்துவிடும்.சில கட்சிகள் இந்த தேர்தலிலிருந்து ஓரங்கட்டப்பட்டும் விடும்.
மேலும் மக்கள் கட்சிசார்ந்து ஓட்டளிப்பதால் தேர்ந்தெடுக்கப்படுவது என்பதும் கட்சி சார்ந்தே இருப்பதனால் மிகவும் பலவீனமான ஒன்றாகவே அமையும்.இதனால் உள்ளாட்சியில் மக்களுக்கு ஒரு பலனும் இருக்காது.
எனவே,மக்கள்
இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளை பார்க்காமல் வாக்களிக்க முடியாத சூழலை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தியுள்ள நிலையில்,
இனிவரும் காலங்களின் இதுபோன்ற உள்ளாட்சித்தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் சுதந்திரமாக உள்ளூர் தேர்தலாக தங்களுக்குள் தாங்களே தேர்தெடுத்துக்கொள்ளும் விதத்தில் அமையும் வண்ணம்செயல்படவேண்டும்.
அதற்கு மக்கள் தற்பொழுது தங்களின் முன் நிற்கும் நபர்களின் தனித்தன்மையை மட்டுமே பார்த்து,அவர் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது சுயேச்சையாக இருந்தாலும் சரி அவர்களுக்கே வாக்களித்து வெற்றிபெறச்செய்யவேண்டும்.
அப்படி வாக்களித்தால் தான் உண்மையில் இது மக்களின் வெற்றியாக இருக்கும் .
இல்லாதுபோனால் இது மக்களுக்கு ஒரு அரசியல் பின்னடைவாகவே அமையும் .
ஆம்,அரசியலில் ஒரு அங்கமாக இயங்கவேண்டிய மக்கள்
அரசியல் கட்சி உறுப்பினனாக தொடரும் அவலம் நீடிக்கும் .
அதனால் என்றும் மக்களே வெற்றிபெறவேண்டும்.
எனவே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு ? என்பது நமது கையில் தான் உள்ளது.
நம்ம ஊருல நம்ம கூட இருக்கும் நமக்கான நல்லவரை அறிந்துகொள்ளமுடியாத,தேர்தெடுக்கத்தெரியாத நபராக இருக்கக்கூடாது. இது பண்பான மனிதருக்கு அழகல்ல.
அதனால்
அனைவரும் வாக்களிப்போம்,
மக்களுக்காக உழைப்பவர்களுக்கு.
மேலும் ... இவற்றையும் பார்க்க ...
Tweet |
|
25 கருத்துகள் :
ரைட்டு
மறக்காமல் வாக்களிப்போம்...
// அதற்கு மக்கள் தற்பொழுது தங்களின் முன் நிற்கும் நபர்களின் தனித்தன்மையை மட்டுமே பார்த்து,அவர் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது சுயேச்சையாக இருந்தாலும் சரி அவர்களுக்கே வாக்களித்து வெற்றிபெறச்செய்யவேண்டும்.//
மிக சரியான பதிவு .. அழுத்தமானதும் கூட ...
//அதனால்
அனைவரும் வாக்களிப்போம்,
மக்களுக்காக உழைப்பவர்களுக்கு.//
வாக்களிப்போம் வருங்காலத்திற்காக..
வாக்களிப்பின் விழிப்புணர்வு பதிவிற்க்கு நன்றி நண்பரே..
அனைவரும் வாக்களிப்போம்,
மக்களுக்காக உழைப்பவர்களுக்கு.
நல்ல பதிவு..
வாழ்த்துக்கள்.
//அனைவரும் வாக்களிப்போம்,
மக்களுக்காக உழைப்பவர்களுக்கு.//
நிச்சயம் நல்ல மனிதர்களுக்கு வாக்களிப்போம்.
************
நண்பர்களே இதையும் பாருங்களேன்.
வேட்பாளரைத் தத்தெடுத்த அரசியல் கட்சி!
நன்றி.
மக்களைச் சிந்திக்கும் வண்ணம் விபரித்திரீர்கள் காத்திரமான இந்தப்பதிவு பலருக்கும் போய்ச் சேரட்டும்!
தெரிந்த முகங்களாகவே இருப்பார்கள் என்பதால்,கறாராக, நன்கு செயல்படக்கூடிய, நல்லவர்களை தேர்ந்தெடுப்பது நமது கடமை,வாக்களிப்பது ந்மது உரிமை,கடமை.பதிவுக்கு நன்றி.
அதற்கு மக்கள் தற்பொழுது தங்களின் முன் நிற்கும் நபர்களின் தனித்தன்மையை மட்டுமே பார்த்து,அவர் எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது சுயேச்சையாக இருந்தாலும் சரி அவர்களுக்கே வாக்களித்து வெற்றிபெறச்செய்யவேண்டும்.//
உண்மையான கருத்து நண்பரே
வாக்களிக்கும் அனைவரும் இதனை உணரவேண்டும் .
//
அதனால்
அனைவரும் வாக்களிப்போம்,
மக்களுக்காக உழைப்பவர்களுக்கு.
//
very correct ....
நல்ல பதிவு நண்பா
நல்ல பதிவு..
kandippaga potruvom
உள்ளாட்சி தேர்தலில் நம்மால்
நல்லவராகக் நம்பப் படுபவர்களுக்கே
ஓட்டு என்பது சரியான முடிவு
புலவர் சா இராமாநுசம்
ம்
பகிர்வுக்கு நன்றி சகோ! மறக்காமல் வாக்களிப்போம்.
நீங்கள் சொல்வது சரி
உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளகளைப் பொறுத்தவரை
நேரடித் தொடர்புள்ளவர்களாகவே உள்ளர்கள்
என்வே நீங்கள் சொல்கிறபடி நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பது
கடினமான விஷய மில்லை
தெளிவூட்டும் பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 11
ரைட்டு.
த.ம.12
நமக்காக உழைப்பவர்களை தேடுவோம்!தேடிப்பிடிப்போம்!
வாக்களிப்பது நமது உரிமை.அதை நல்ல விதமாக பயன் படுத்தினால் நன்மை நமக்குதானே?
நல்ல பகிர்வு. நன்றி.
உங்கள் ஓட்டு கவனிக்கப்படுகிறது! யாருக்கு அளித்தாலும் பரவாயில்லை: உள்ளாட்சித் தேர்தலில் மறவாமல் ஓட்டளிக்கவும்!
நல்ல கருத்துப் பதிவு.
அனைவரும் வாக்களிப்போம் லாயர் சார்..
Well stated.
Beware - The elementary and basic tenets of democracy are sought to be sullied and polluted by power greedy political parties ... Elections to local bodies must be fair and free and the educated must show the way to a deeper and richer democracy ...
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "