வியாழன், 8 மே, 2014

ஜாதி ,மதம், தீண்டாமை X சமச்சீர்கல்வி .


இன்று சமச்சீர் கல்வி என்றால் என்னவென்று ஓரளவிற்கு தெரியவந்துவிட்டது.ஆனால்,இன்னும் கல்வி சம்பந்தமாக விழிப்பு வரவில்லை.அதுவும் ஒரு ஜனநாயக நாட்டில் எத்தகைய கல்வி இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு அரசியல் தளத்தில் முதலில் இருக்கவேண்டும் என்பதுவே முக்கிமான ஒன்றாகும் .

இன்றைக்கு நமக்கு சமச்சீர் கல்வி என்பதை விட பொதுக்கல்வியே மிகவும் அவசியமான கட்டாயமான ஒன்று.  ஆனால்,இதன் தேவை மற்றும் அவசியம் பற்றி எந்தவித கவலையும்,பார்வையும் இல்லாமல் மக்களும், சமத்துவம் , சகோதரத்துவம்,பகுத்தறிவு ,முதலாளி,தொழிலாளி ,ஒடுக்கப்பட்டவர் என , எதையாவது கூறிக்கொண்டு ,அனுதினம் ,போராட்டத்தில் குதித்து, தாங்களை மக்களின் காவலர்களாக காட்டிக்கொள்ளும் ,அனைத்து கட்சிகளும், இருப்பது அறியாமையிலா? இல்லை ,அனைத்திலும் பாசிச குணம் புகுந்துவிட்டதாலா ? என்பது ஆராயக்கூடிய விசயமாக உள்ளது .
அறியாமையில் என்றால் உணர்த்தலாம்,
பாசிசம் என்றால் துரத்தி துடைப்பதைத்தவிர்த்து வேறு வழியே கிடையாது .

தீண்டாமை ஒழிப்புக்காக காந்தி,பெரியார்,அம்பேத்கார் மற்றும் பல பெயர் தெரிந்த,தெரியாத தலைவர்கள் மற்றும் முகம் தெரியாத ,பாதிக்கப்பட்ட அனைவரின் உயிர்,உழைப்பு ,கஷ்டம் மற்றும் கனவிற்கு மருந்தாக உள்ளது தான் நமது அரசியலமைப்பு கூறும் கல்வி என்ற அடிப்படை உரிமை. அப்படிப்பட்ட அடிப்படை உரிமையான கல்வியில், பொதுக்கல்வி முக்கியமான காரணியாக இருந்து நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு மேலும் உயர்வு சேர்க்கிறது என்றால் அது மிகையாகாது .

அடிப்படை உரிமை கல்வி என்னும் பொழுது ,
அனைத்து கல்வி நிலையங்களையும் ,அரசே நடத்த வேண்டும்.
அது தான் சரி,அது தான் சட்டமும் கூறுகிறது.
அப்படி அரசே ஏற்று நடத்தும் பொழுது ,
அண்மைப்பள்ளியில் தான் அனைவரும் படிக்கவேண்டும் .
அப்பொழுது தான் அனைவரும் ஒரே குடையின் கீழ் படிப்பர்.
அப்படி குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கும் பொழுது ,
குழந்தைகளின் மனதில் எத்தகைய ஜாதி மதபோதங்களும் இல்லாத  காரணத்தினால்,அவர்கள் இயல்பாகவே,  தாங்கள் எந்தவித ஜாதி ,மத , தீண்டாமை பேதமின்றி,ஒருவருடன் ஒருவர்,நன்றாக பழகி,
ஒரே தன்மையினராக வளர்வர்.
இவ்வாறு ஜாதி மத போதமின்றி ,தங்களுக்கிடையே ,தீண்டாமை என்னும் பாவங்கள் இன்றி ,ஒத்த மாணாக்கர்களாய் வளர்வர்.
அவ்வறு அவர்களை வளர்த்தெடுப்பதன் மூலம் தான் ஜாதி,மத,தீண்டாமை என்னும் கொடுமைகளை  சமுதாயத்திலிருந்து மாய்க்கமுடியும்.

அதை விடுத்து
நாம் ஜாதியை,மதத்தை மரமாக பள்ளியில் வளரவிட்டு ,
பின் அதனை சமுதாயத்தில் வெட்ட நினைப்பது முட்டாள் தனமாகும் ,
5 ல் வளையாதது 50 ல் வளையாது .

ஜாதி,மத போதம் ஒழியவேண்டும், தீண்டாமை ஒழிய வேண்டும் என நினைக்கும் மக்களின் காவலர்கள் இதனை  உணர்ந்து உடனே பொதுக்கல்வி என்னும் அனைவருக்குமான தரமான ஒரே கல்வியை அமுல்படுத்த இணைந்து போராட வேண்டும் .

ஜாதி ,மதம் ஒழிந்தால்,வேற்றுமை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்.
தீண்டாமை  என்ற அறியாமை அகன்றுவிடும் .






குழந்தைகளை பாருங்கள் .....

அவர்களிடம் அன்பு என்ற ஒன்றைத்தவிர்த்து வேறு எதுவும் இருப்பது இல்லை .

நாமாவது
குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்
குழந்தைகளை  குழந்தைகளாக வளர்ப்போமாக .




.
சற்றே மாற்றத்துடன் இது ஒரு மீள்வு.
 அசலை இங்கே  பார்க்க.
Download As PDF

10 கருத்துகள் :

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கடைசி வரிகள் சிறப்பு! அப்படியே உருவாக்கினால் நீங்கள் சொல்வது சாத்தியப்படும்! நன்றி!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கடைசி வரிகள் சிறப்பு! அப்படியே உருவாக்கினால் நீங்கள் சொல்வது சாத்தியப்படும்! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஜாதி இரண்டொழிய வேறில்லை
என்பது ஏட்டளவில் நின்று விடாமல்
நடைமுறையில், மக்கள் மனத்தில் வளரவேண்டும் நண்பரே

Unknown சொன்னது…

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Unknown சொன்னது…

சிந்திக்க வேண்டிய பதிவு! ஆனால், இன்றைய அரசியல் வாதிகள்
செய்ய விடமாட்டார்கள் என்பதே உண்மை நிலை!

Unknown சொன்னது…

ம் ம்!
த ம 3

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை...

சிந்திக்க வேண்டிய உண்மை...

Unknown சொன்னது…

கல்லூரிவிடுதிகளில் மாணவர்களிடையே சாதி சங்கம் வைக்கும் அளவிற்கு வந்து விட்டார்கள்...சென்னையில் நடந்தவை அனைவருக்கும் தெரிந்திருக்கும்!

G.M Balasubramaniam சொன்னது…

ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் வளர கல்வியின் தேவையை நான் பல முறை எழுதி இருக்கிறேன் கூடிய விரைவில் சுட்டியினை பகிர்கிறேன் /வாழ்த்துக்கள்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - சிந்தனை அருமை - செயல் படுத்த வெண்டிய சிந்தனை - ஆனால் அவ்வளவு எளிதல்ல - உடனடியாகத் துவக்கப்பட வேண்டிய சிந்தனை - பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "