புதன், 28 ஜனவரி, 2009

விளையாட்டை விளையாட்டாக பார்க்க முடியாது ..எப்பொழுது ?

.


விளையாட்டைக்கூட யாரும் விளையாட்டாகப் பார்ப்பதில்லை என்று நாம் சில சமயங்களில்
சலித்துக்கொள்கிறொம் .
ஆனால் ,விளையாட்டை விளையாட்டாக பார்க்க முடியாது .
எப்பொழுது ?

வரலாற்றை நோக்க ...

சைப்ரஸ் என்பவர் விளையாட்டுகளின் மூலம் பாரசிக மக்களை பேரெழுச்சி பெறச்செய்ததிலிருந்தே
விளையாட்டுகள் ஏன் ? என்பதற்கு பதில் கிடைத்தது.
சைப்ரஸைப் பின்பற்றி ஸ்பார்ட்டா தேசமும் இளம் சிறார்களுக்கு உணவு ,உடை, தங்குமிடம்
கொடுத்து சிறந்த வீ்ரர்களை உருவாக்கி நாட்டை காத்தனர் .
பிறகு ஏதன்ஸ் விளையாட்டில் சுதந்திர கருத்தை புகுத்தியதால் விளையாட்டு வேறு பல
வடிவங்களையும் ,போர்முறையினின்று மாறுபட்டு சில கூறுகள் தன்னுள் பெற்றது.பிறகு ரோம்
கிரேக்கத்தை வீழ்த்தியது .அது விளையாட்டை விளையாட்டாக பார்த்த சுதந்திர சுகத்தால்
ரோமானியர்கள் சோம்பேறிகளானதால் டியூடானிக் மரபினர் ரோமை வேன்றனர் . ரோம்
டியூடானிக் ஆட்சி காலத்தில் இருந்த பொழுது ஆங்காங்கே மரம் வெட்டுதல் ,கதிர் அறுத்தல்
போன்ற போட்டிகளைத்தவிர்த்து விளையாட்டு வீரம் காணும் நிலை இல்லாமல் இருந்தது .

இந்தியா இன்று்ம் ரோம் டியூடானிக் ஆட்சி காலத்தில் இருந்த பொழுது எப்படி இருந்ததோ
அதே நிலையில் இருந்து வருகிறது.விளையாட்டைப்பற்றியோ , எப்பொழுது விளையாட வேண்டும்
என்பது பற்றியோ இங்கு யாரும் யோசிப்பதில்லை .

ஜனநாயக நாடுகள் தங்களிடையே விளையாட்டு போட்டி நடத்தும்போது கிழ்க்கண்ட அம்சங்களை
காணத்தவறும் பொழுது விளையாட்டை விளையாட்டாக பார்க்க முடியாது மக்கள் தவிப்பர் .
மக்கள் மனரீதியக பாதிக்கப்படுவர் .

ஜனநாயக நாடுகள் தங்களிடையே விளையாட்டு போட்டி நடக்கும்போது காணவேண்டிய அம்சங்கள்
1.போட்டி நடத்தும் நாட்டில் அல்லது கலந்து கொள்ளும் நாடுகளில் ஏதாவதொன்றில் உள்நாட்டுக்கழகம்

2..போட்டி நடத்தும் நாட்டில் அல்லது கலந்து கொள்ளும் நாடுகளில் ஏதாவதொன்றில்
உள்நாட்டுப்புரட்சி

3..போட்டி நடத்தும் நாட்டில் அல்லது கலந்து கொள்ளும் நாடுகளில் ஏதாவதொன்றில் உள்நாட்டு
அடக்குமுறை

4.போட்டி நடத்தும் நாட்டில் அல்லது கலந்து கொள்ளும் நாடுகளில் ஏதாவதொன்றில் சர்வதிகார
ஆட்சி மற்றும் சர்வதிகார அரசியல் போக்கு

5.போட்டி நடத்தும் நாட்டில் உள்நாட்டுப்பாதுகாப்பில் அச்சம்

மேற்கூறிய அம்சங்களை பார்க்காது விளையாட்டு போட்டிகளில் பங்குபொறும் மற்றும் அதனை
அங்கிகரிக்கும் நாடுகள் தங்கள் நாட்டிற்கு சுதந்திரத்தைப்பெற்றுக்கொடுத்த உன்னத தலைவர்களை
அவமதித்த நாடுகள் ஆகும் .ஜனநாயக பாதையினின்று தவறான பாதையில் பயணிக்கும்
அரசினைக்கொண்ட நாடுகள் ஆகும் .


.

Download As PDF

சனி, 10 ஜனவரி, 2009

உலகிற்கு உடனடியான தேவை -புதிய பொருளாதாரக்கொள்கைகளும்,கோட்பாடும்.

.

நண்டு :நேத்து 6 மணி நேரம் நின்னும் பெட்ரோல் கிடைக்கல ...

நொரண்டு :அது தான் இன்னைக்கு சரியாயிருச்சில்ல ....

நண்டு : ஆ...மா...ம்.... ,பெட்ரோலியத்துறை ஊழியர்கள் போராட்டம் அறிவித்த உடனே இப்ப
செய்த மாதிரி ,அப்பவே.. உடனே இராணுவத்தை பணியில் ஈடு்படுத்தியிருத்தால் ...நல்லா
இருந்துதிருக்கும் ..ஏன் மக்களை கஷ்டப்படுத்தராங்க ....

நொரண்டு :எந்த போராட்டமும் நியாயமான முறையில் ,நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து
உறுதியான கொள்கைபிடிப்புடன் சரியான நேரத்தில் சரியான பாதையில் சரியாக
ஆரம்பிக்கப்படவேண்டும் .ஒரு குழுவினர் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக
போராடிக்கொண்டிருக்கும் போது ,அதுவும் பொதுநலனை கருத்தில் கொண்டு போராட்டகளத்தில்
இருக்கும் பொழுது தங்களின் சுயநலத்திற்காக பொதுநலப் போராட்டத்துடன் சேர்வது போல்
தோற்றத்தை ஏற்படுத்தி தங்களின் சுயநலத்தை மேம்படுத்திக்கொள்ள முற்படும் எத்தகைய
போராட்டமும் தோல்வியைத் தழுவும் .போராட்டங்கள் பொதுமக்களின் நன்மைக்காக எனி்ல் பொதுமக்களே
முன்வந்து அதனால் ஏற்படும் இன்னல்களை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வர் .ஆனால்
.சுயநலப்போராட்டத்தினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதை ஒரு போதும்
ஏற்றுக்கொள்ளமுடியாது. அப்படிப்பட்டது ஜனநாயக குற்றமாகும் .

நண்டு : ஜனநாயகம் , ஜனநாயகம் என்கின்றாயே ..ஜனநாயக நாடுகளில் ஏற்பட்டு்ள்ள
பொருளாதாரச்சிக்கல்களுக்கு காரணம் என்ன ?

நொரண்டு :என்னைக்கேட்டால் ...தற்போதுள்ள பொருளாதாரக்கொள்கைகளும்,கோட்பாடுகளும்
காலாவதியாகிவிட்டது என்பதுவே . முற்றிலும் செயலிழந்துவிட்ட
பொருளாதாரக்கொள்கைகளையும்,கோட்பாடடு்களையும் வைத்துக்கொண்டு ஒப்பேத்தப்பார்க்கின்றோம்
.இன்றைய காலகட்டத்திற்கு உகந்த ஒரு சரியான பொருளாதாரக்கொள்கையும்,கோட்பாடும் இல்லை
என்பதுவே உண்மை. ஏன் ..அது பற்றிய சிறு விழிப்புணர்வு துளி கூட நம்மிடம் இல்லாமல்
இருப்பதுதான் மிகவும் கவலையாக உள்ளது . அதனால் தான் உலகில் பல நாடுகள் பல்வேறு
இன்னல்களையும் ,சிக்கல்களையும் ,மிகப்பெரிய பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றது .இது
வருந்தத்தக்க ஒன்றாகும் .இன்றுள்ள பொருளாதாரக்கொள்கைகள்,கோட்பாடுகள் அனைத்தையும்
குப்பையில் போட்டு விட்டு புதிய பொருளாதாரக்கோட்பாட்டை ஏற்படுத்தி அதன் வழியில் புதிய
பொருளாதாரக்கொள்கைகள் வகுத்து அதன்படி செயல்படலே உலகிற்கு நன்மை பயக்கும் .

நண்டு : அப்படியெனில் ...

நொரண்டு :தோல்வியடைந்த எதுவும் புதிய பயணத்திற்கு அடித்தளமிடமுடியாது .பாதைபோல்
தெரியும் ,பயணிக்க முடியாது .இங்கு தோல்வியடைந்ததை பழுதடைந்ததாக நினைத்து
அதையே ஏதோ செய்து முன் செல்வதுபோல் செல்வதால் மீண்டும் , மீண்டும் தோல்வியடைந்தே
வீழ்கிறேம் .உலக பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்றால் ,ஏதோ இருப்பதில்
மாற்றத்தை ஏற்படுத்தி சரிசெய்ய நினைப்பது தவறு .அபத்தமானது . மீண்டும் , மீண்டும்
தோல்வியே பரிசாக கிடைக்கும் . உண்மையில் உலக பொருளாதார ஏற்றத்திற்கு புதிய
பொருளாதாரக்கொள்கைகளும்,கோட்பாடுமே தற்பொழுது உடனடியான தேவையாக உள்ளது .


நண்டு : ....புதிய பொருளாதாரக்கோட்பாட்டையும் ,அதன் வழி ஏற்படும் புதிய
பொருளாதாரக்கொள்கையையும் ,அதனால் உலகில் மனிதகுலத்திற்கு ஏற்படும் உயர்வையும்
....புதிய பொருளாதார உலகையும் .. நினைத்து ...

.

Download As PDF

வியாழன், 8 ஜனவரி, 2009

உலக மகா சோம்பேறிகளும் - மனிதக்கழிவுகளும் ...

.


...... கருத்துரையிடும் தோழர்களே .......
......கருத்துரையிடும் முன் தாங்கள்
" பெரியாரையும் ","மார்க்சையும்" -
"கட்டாயம் " படித்திருத்தலே நலமாக இருக்கும்
என நினைக்கின்றேன் ...
விருப்பமுள்ளவர்களுக்கு நான் உதவ தயார்...
...எனது இ.மெயில் முகவரி : NORANDU.RA.AR@GMAIL.COM ...


நண்டு : உன்னை பார்க்க நேத்து ராத்திரி 10 மணிக்கு வந்தேன் ,தூங்க
போய்ட்டேனு சொன்னாங்க , எழுப்பச்சொன்னேன், தூங்க போன பிறகு எழுப்பக்கூடாதுனு செல்லிருக்கியாம் . வந்துட்டேன் ..
ஏன் சீக்கிரமா தூங்கபோற ....


நொரண்டு : சீக்கிரமாவா ..?..என்ன பேசற ...நீ....... முதலில் இயல்பான வாழ்க்கை
வாழ்வதற்க்கு தேவையான அறிவைப்பெற பழகிக்கொள் .
தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று . ஒருவர் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கவேண்டும் .
அதுவும் கும்மிருட்டில் .

நண்டு : நைட் லேம் கூட இல்லாமல ..

நொரண்டு : ஆம் ... நாம் இருண்ட இடத்தில் உறங்கும்போது நமது உடலில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது .அது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது எப்படி காற்றிலிருந்து நாம் ஆற்றல் பெறுகின்றோமோ, அதுபோல இருட்டில் உறங்கும்போதும் ஆற்றல் பெறுகின்றேம் .அந்த ஆற்றல் நமது இயக்கத்திற்கு மிகவும் அவசியமானதாகும் .

நண்டு : அப்படி தூங்கினா சோம்பேறித்தனம் தான் வரும்

நொரண்டு :சோம்பேறித்தனமுனு சொல்லாதே ...சோம்பேறித்தனம்னா என்னான்னு உனக்கு தெரியுமா ?
....

நண்டு : நீயே சொல்லு ...

நொரண்டு : மூளையை பயன்படுத்தாதது தான் சோம்பேறித்தனம் .மூளையை பயன்படுத்தாதவர்கள் தான் சோம்பேறிகள். உலகில் சோம்பேறிகள் தான் இன்று அதிகம் .சோம்பேறிகளை அதிகம் கொண்ட நிறுவனங்கள் தான் இங்கு அதிகம் .


நண்டு : நீ ஒருவர் செய்யும் வேலையை கேலி செய்கினறாய் ....

நொரண்டு : அப்படியி்ல்லை ...நான் என்றும் உழைப்பை மதிப்பவன் . ஆனால் , சிலர் செய்யும் வேலைகளைத்தான் குறிப்பிடுகின்றேன். அவர்களுடைய வேலையை நான் உழைப்பாக நினைப்பதில்லை . உழைப்பின் வகையில் ஏற்றுக்கொள்ள மாட்டேன் .உழைப்பு என்பதுஉண்மையை நோக்கி செல்வது , உண்மையில் சேர்வது ,நன்மை பயப்பது ,நலம் தருவது.

நண்டு : கூறு .....

நொரண்டு : மதசம்பந்தமான செயல்கள் செய்பவர்கள் செய்யும் அனைத்து வேலைகளும் அப்படிப்பட்டது தான்.
( நேரடியாகவும் இருக்கலாம் .மறைமுகமாகவும் இருக்கலாம் ).

நண்டு : புரியவில்லை ...


நொரண்டு : எங்க பூக்கடை ஆயாவ எடுத்துக்க, கோவில் தெருவில் பூ விக்குது .60 வருசமா . ஆயாவுக்கு இதுதான் தொழில் . ஆயாவிற்கு தெரிந்ததெல்லாம் பூ வாங்கறது ,கட்டறது ,விக்கறது .
இதை மேலோட்டமாகப்பார்த்தால் இது ஆயாவின் வாழ்வு சம்மந்தப்பட்ட ஒன்றாக இருக்கலாம் .
ஆனால் ,அவரின் வாழ்வு எந்த சிந்தனையும் இல்லாமல் ஒரேபோக்கில் சென்றதைக்கண்டுதான் வருந்துகிறேன் .மேலும் , அவரின் மனித வளத்தை எடுத்துக்கொள்வோம் எவ்வளவு வீணாகிவிட்டது,வீணாகிக் கொண்டிருக்கிறது .இப்படித்தான் மனித வளத்தை அனைவரும் கழிவுகளாக்குகின்றனர். யாருக்கும் பிரயோசனம் இல்லாமல்.
மதங்கள் மனித வளங்களை .... எப்படியொல்லாம் கழிவுகளாக்குகின்றது பார் எவ்வளவு மனித வளங்களை ...
ஆயாகிட்ட ,என்ன சென்னாலும்.. கேட்க மறுக்கிறது .. இதவச்சித்தான் என் மகனை ஆளாக்குனேன் ..காலம் போயிருச்சி ...கடைசி காலம் ஆண்டவனுக்குனு சொல்லி...ஒய்வெடுக்க மறுக்கிறது...
பொதுவாகவே ,ஒருவர் எத்தொழிலைச்செய்தாலும் அதில் தொடர்ந்து ஒரு முன்னேற்றமும் காட்டாமல்- காணமல்- விரும்பாமல்- குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டி- காலம் தள்ள நினைப்பவர்கள்- மூளையைப்பயன்படுத்தாமல், சிந்திக்காமல் ,ஏன், எதற்கு இதைச் செய்கிறேம் , சரிதானா என்ற உணர்வே இல்லாமல் வருமானம்வருகிறது ,பொழப்புநடக்கிறது, பிரச்சனையில்லை
,இதுவே போதும் என்ற நினைப்பில் தொழில் செய்பவர்கள் அனைவரும் உலகில் மிகச்சிறந்த சோம்பேறிகளே .அவர்கள் வேலை செய்யும் இடங்களில் கட்டாயம் சுரண்டல் இருக்கும். மேலும் ,மூடநம்பிக்கைகளும், முட்டாள்தனமும் அவர்களிடம் மண்டிக்கிடக்கும். மேலும்உலகில் மிகச்சிறந்த சோம்பேறிகள் தங்களின் வேலையால் மூடநம்பிக்கையையும்,முட்டாள்தனத்தையும் உரமிட்டு வளர்க்கின்றனர் . இப்படிப்பட்டவர்களை நீ பொதுவாக பரவலக எல்லா துறைகளிலும் காணலாம். அவர்களெல்லாம்

உலகில்மிகச்சிறந்தசோம்பேறிகள் ஆவார்கள் .

இதில் மதசம்பந்தமான வேலைகள் செய்பவர்கள்

"உலக மகா சோம்பேறிகள் ".

நண்டு : ..சரி ..தூக்கத்துக்கு வா ...

நொரண்டு : தூங்கி எழும் பொழுது ஏற்படும் அயர்ச்சியானது நமது உடலை உழைப்பிற்கு தயாராக அயத்தமாக்கும் செயல் ஆகும் .அதை அதிகப்படுத்த சிறு நடை 30 நிமிடம் போட்டுப்பார் ..
அன்று முதல் உனது கையில் நீ ....

நண்டு : ... எனது கையில் நானக...
... இன்றிரவே 8 மணிநேரம் தூங்கச்செல்கிறேன் .....
....நீங்களும் தானே ...?..
....ஆமா ..நாமே தூங்கிக்கிட்டு இருந்தா
சோம்பேறிகள் இல்லா உலகை எப்ப பார்க்கறது ...





.

Download As PDF

செவ்வாய், 6 ஜனவரி, 2009

மந்நை மந்தையாய் மடையர்களும் - சொர்க்கவாசல் திறப்பும்.


.


நொரண்டு : நீ யாரையாவது கூப்பிட்டு ...அவரை டே மடையான்னு சென்னா ...அவர் என்ன
செய்வார் ?

நண்டு : பைத்தியம் ,லுசு -னு அடிச்சி துவைச்சி ... ஏன் ...என்னாச்சு ..

நொரண்டு :ஆனா ,அவர்களைஅவர்களே நாங்கள் மடையர்கள் ,முட்டாள்கள் என கூறிக்கொண்டு திரியும்
இடத்திற்கு கூட்டிச்செல்கிறேன் வா ...

நண்டு : என்ன விளையாட்டா.. ஆச்சரியமா இருக்கே ..உண்மையாலுமா..

எங்க ? !!!..எப்போ ..? !!! .. எங்கு ?...


நொரண்டு :உலகெங்கும் உள்ளனர் ..சரி , உனக்கு அதிக அலைச்சல் வேண்டாம்
...வா,.கடைவிதிக்கு ...


நண்டு : அங்கபோய் ...


நொரண்டு :நான் காட்ற இடத்தில நீ இன்னைக்கி ராத்திரி போய் நில்லு .அங்கு மந்நை மந்தையாய் மாக்கள் நின்று கொண்டும் ,கதவு திறக்கும்போது தாங்கள் மடையர்கள் மடையர்கள் என உறுதிப்படுத்திச் செல்வதையும் காணலாம் .

நண்டு :....( நொரண்டு கூட்டிச்சென்ற இடம் ..கடைவிதியில் உள்ள பெருமாள்
கோவில்..)....

( ... இன்று சொர்க்கவாசல் திறப்பாம்.... )


நொரண்டு :உண்மையில் ,யாராவது பேச்சுவாக்கில் கூட உனக்கு அறிவிருக்கா எனக்கோட்டால் கூட
எப்படி கோபம் அனைவருக்கும் வருகிறது (வர வேண்டும்).

உலகெங்கும் ,அவரவர் வழிபாட்டு தலங்களுக்கு செல்பவர்களைப் பார்க்கும் பொழுதும் ,அது சம்பந்தமான ஊர்வலங்கள் , நிகழ்ச்சிகளில் சுற்றி திரிபவர்களை பார்க்கும்பொழுதும் ,மதத்தில் ஏதொதோ செய்பவர்களை பார்க்கும் பொழுதும் அவர்களை அவர்களே" நாங்கள் மடையர்கள் ... சுத்த மடையர்கள் ,நாங்கள முட்டாள்கள் ...அடி முட்டாள்கள் " என கூறிக்கொண்டே செல்வதாகவே நான்
உணர்கின்றேன் . உண்மையும் அது தானே..

அப்படிப்பட்ட கூட்டங்களைப் பார்த்து ....சிறிதும் சுயசிந்தனையில்லாமல்
வாழப்பழக்கப்பட்டு போலி வாழ்க்கை வாழ்ந்துவரும் இவர்களைப்பார்த்து .....


''ஏ ..மனிதர்களே ...திருந்துங்கள் ..."

''ஏ ..மனிதர்களே ...திருந்துங்கள் ..."

''ஏ ..மனிதர்களே ...திருந்துங்கள் ..."


என கூப்பாடு போட தோன்றுகிறது .

நண்டு :. ...எத்தகைய மடையர்கள் கூட்டத்தில் நாம் . ..என்ற நினைப்பில்..


...சுயசிந்தனையுடைய மனிதர்கள் கூடும் கூட்டத்திற்கு என்றாவது ஒரு நாள்
நொரண்டு கூட்டிச்செல்வார் என்ற எண்ணத்தில் .....





.

Download As PDF

வெள்ளி, 2 ஜனவரி, 2009

இடைத்தேர்தலை தடுப்பது எப்படி ?

.


நண்டு : திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயிக்கப்போவது யார் என்று கூற முடியுமா ?

நொரண்டு : எனக்கு யார் ஜெயிக்கிறார்கள்,யார் தோற்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை .ஆனால் ,ஜனநாயகம் முற்றிலும் தோற்றுக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தோன்றுகிறது .

நண்டு :புரியவில்லை .......

நொரண்டு :இடைத்தேர்தல் என வந்துவிட்ட உடன் ஆளும் கட்சியும் ,எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு சூழலுக்கு ஏற்ப அணிகள் அமைத்துக்கொண்டு் அங்கு வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முனைவது சரியான பாதைதான். ஆனால் ...

நண்டு : ஆனால் ..என்ன ..?


நொரண்டு : மிகப்பெரிய ஜனநாயகநாட்டில் நடக்கும் எந்தத் தேர்தலிலும் வன்முறையை கையாலும் கட்சிகள் ஜனநாயகநாட்டில்
கட்சிகளாக இருக்க தகுதியுடையவை அல்ல.
கலைஞரும் , ஜெயலலிதாவும் கட்டளையிட்டால் அவர்களின் கட்சிகளி்ல் அதன்படி மட்டுமே நடக்கும் தொண்டர்கள் மட்டுமே உண்டு . அவர்கள் எந்தப்பிரச்சனையும் வரக்கூடாது என கட்டளையிட்டால் ..இப்படியா நடக்கும் .
தாங்கள் ஜெயித்தால் மகேசன் தீ்ர்ப்பு என்றும் , தோற்றால் பணநாயகம் என்று
கூறிக்கொள்ளப்போகிறார்கள் .
அப்படியிருக்க வன்முறைக்கு காரணம் எதுவாக இருக்கும் ?
அது ஒன்று தி.மு.க அல்லது அ.தி.மு.க என மட்டுமே மக்கள் சிந்திக்க வேண்டும் .
மாறாக மூன்றாவதாக மற்ற எந்த கட்சியையும் மக்கள் ஒருபோதும்
நீனைத்துப்பார்க்கக்கூடகூடாது என்பதுவேயாகும்.
இது ஒருவகையான பாசிஸ்ட் கொள்கையாகும்.
இவற்றை மக்கள் ஒருபோதும் அங்கிகரிக்கவே கூடாது .

நண்டு : மக்களா ... சரி..வேறு ஏதாவது மாற்று ....

நொரண்டு :பொதுவாக இடைத்தேர்தலின் போது தான் இத்தகைய செயல்கள் அதிகம் நடக்கிறது.ஆனால், பொதுத்தேர்தலில் இவ்வளவு நடப்பதில்லை .எனவே பொதுத்தேர்தலில்தேர்ந்தெடுக்கும் முறையி்ல் மாற்றங்கள் கொண்டுவருவதன் முலம் இடைத்தேர்தலை தடுத்துவிடமுடியும் .

நண்டு : இடைத்தேர்தலை தடுக்க எத்தகைய மாற்றங்களை தேர்தலில் கொண்டு வரலாம் என நினைக்கின்றாய் ..ஏதாவது சில யோசனைகள் கூறலாமே.

நொரண்டு : ம்.. என்னைக்கேட்டால் ...ஒவ்வொரு கட்சியும் இரண்டு நபர்களை வேட்பாளராக நியமிக்கவேண்டும் . முதன்மை வேட்பாளராக ஒருவர் ,மற்றவர் முன்னிலை வேட்பாளர் .இருவருக்கும் ஒரேசின்னத்தில் தனித்தனியாக வாக்குச்சீட்டுகள் அளிக்கப்படவேண்டும் .இருவர் பொற்ற வாக்குகளும்
எண்ணப்படவேண்டும்.ஆனால் ,முதன்மை வேட்பாளர்கள் பொற்றவாக்குகளின் அடிப்படையில் மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்படவேண்டும் . முதன்மை வேட்பாளர் இறந்தாலே அல்லது அப்பதவியினின்று தன்னை விடுவித்துக்கொண்டாலோ முன்னிலை வேட்பாளர் அவருக்குப்பதில் நியமிக்கப்படவேண்டும். இப்படிமுன்னிலை வேட்பாள ர் நியமிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் அவர் இறந்தாலே அல்லது அப்பதவியினின்று தன்னை விடுவித்துக்கொண்டாலோ அடுத்து அதிக வாக்குகள் வாங்கிய கட்சியின்
முதன்மை வேட்பாளருக்கு அப்பதவி போய்விடவேண்டும் .
இப்படிப்பட்ட ஒரு சட்டதிருத்தத்தை தேர்தல் கமிசன் கொண்டுவருவதன் மூலம் இடைத்தேர்தலே வராமல் தடுத்துவிடமுடியும் .

நண்டு : ...இடைத்தேர்தலற்ற ---புதிய பொதுத்தேர்தலை கற்பனை செய்து பார்க்கிறேன் ...

.

Download As PDF