சனி, 21 பிப்ரவரி, 2009

நாட்டுடமையாக்கலும் -பெரியாரும்

.


இலக்கியவாதிகளின் எழுத்துக்கள்
மற்றும்
நாட்டுக்கு உழைத்த நல்லோர்கள்
மற்றும்
தேசியவாதிகளின்
உடைமைகள் ,எழுத்துக்கள்
ஆகியவைகள்
நாட்டுடமையாக்கப்படுவதற்கும்

சிந்தனையாளர்களின் எழுத்துக்கள்
நாட்டுடமையாக்கப்படுவதற்கும்

நிறைய வேறுபாடுகள் உண்டு .


ஒரு சிந்தனையாளராக பெரியாரை நினைக்கும் எவரும் அவரின் எழுத்துக்களை
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவேமாட்டார்கள்.
ஏனெனில் நாட்டுடமையாக்கல் என்றால்
என்ன என்பது பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே தெரியும் .


பாமரத்தனமானவர்களின் பார்வைக்கு ....


பெரியாரின் எழுத்துக்கள்
அழிந்து வருகிறது
அதனின்று அதனை காப்பாற்ற
நாட்டுடமையாக்கப்படுவதல் மட்டுமே முடியும்
என்ற நிலையில்,
மற்றும்
பெரியாரின் எழுத்துக்கள்
மக்களால் அறியப்படவேயில்லை
எனவே
நாட்டுடமையாக்கப்படுவதால் மட்டுமே
மக்கள் மத்தியில் அறியப்படவைக்க முடியும் அப்பொழுதுதான்
அது சாத்தியமாகும்
என்ற நிலையில்
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தால்
அது மிகவும் நியாயமாக இருக்கும் .
தவிர்த்து,
பெரியாரின் கொள்கைகள்
அனைத்தும் உயிர்ப்புடன்
உள்ள நிலையில்
அவர் ஆரம்பித்த
அனைத்தையும்
அவரின் அன்பினைப்பெற்ற
அவரின் நேரடியான
அன்பர்களால்
நிர்வகிக்கப்பட்டும் ,
செலுமைப்படுத்தப்பட்டும்
வரும் நிலையில்
பெரியாரின் எழுத்துக்களை
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைப்பது்

பாமரத்தனமாக உள்ளது .

பெரியாரை பெரியாராக மட்டுமே பார்க்கவும்.
அடையாளமாக பார்ப்பது பாமரத்தனமாகும் .


.
.

Download As PDF

6 கருத்துகள் :

vimalavidya சொன்னது…

oK SIR ! NO BODY REALLY FOLLOWING Periyar.then >>?The so called DK >>Dravidar Kalagam except doing propaganda of Periyar writings and speeches they are involve in petty politics either with DMK OR AIDMK..What is the use of them??They have no time to do propaganda of rational thinking among people.So if the " nationalization" pave the way for low prices of his books it can be done.--selvapriyan

Muniappan Pakkangal சொன்னது…

Everyone has forgotten Periyar & there is nothing to be done to remember him.

benza சொன்னது…

ராமசாமி பெரியார் ... இவரை பற்றி அறுபது ஆண்டுகளாக திராவிட கழக அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் எழுதிய வற்றையே நுலகங்களில் கண்டோம்

பெரியார் எழுதிய எதையுமே காணவும் இல்லை தேடவும் இல்லை

பெரியாரின் எழுத்துக்களை பரப்ப அவரது கொள்கைகளில் ஈடுபட்டோர் எத்தனிகாதவரை என்னை போன்ற நாடு நிலையானோர் கவனியார் தானே

குறள் தமிழில் இருந்தாலும் அது உலகத்துக்கு என்று எழுதபட்டது
ஓர் இடத்திலாவது குறுகிய பார்வையில் ''தமிழ்'' என்றோ ''தமிழா'' என்றோ காணமுடியாது
எம்மை பரந்த நோக்கில் மனித சமுதாயத்தையே ஒரே சீராக பார்க்க வழி வகிகின்றது
மூனா வரதராஜன் தமிழில் எழுதினாலும் அவரது அறிவுரைகள் பொதுவானவை மட்டும் அல்ல அவை மனித குலத்தை மேம்படுதுபவை
பிற இனத்துக்கு எதிராக ஒருபோதும் ஒரு வசனமேனும் எழுதப்படவில்லை

பிராமண இனத்தை பழித்து இழிவுபடுத்துவதை
நியாயப்படுத்த முற்காலத்தில் திராவிட மக்களை அவர்கள் புறக்கணித்தார்கள் ஆதலால் அவர்களை இப்போது நாம் ஒதுக்கிவிட்டு நாமே எமது மக்கள் பலத்தை பாவித்து அரசியலில் வெற்றி காண்போம்
என்பதையே பெரியார் தனது கொள்கையாக
கொண்டுள்ளார் என்றே எனது சிற்றவு காண்கின்றது

இப்பார்வை சரியாகின் பெரியார் தேசத்து போகிஷம் இல்லை

பிழையாயின் தயை செய்து என்னை திருத்தவும் ... நன்றி

தமிழ் ஓவியா சொன்னது…

பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்காததற்குக் காரணம் என்ன?


தமிழின் தலைசிறந்த அரசியல் விமர்சகரும், அறிஞர் பெருமகனுமான எஸ்.வி.ராஜதுரை அவர்கள் நாட்டுடைமையாக்கும் பட்டியலில் பெரியாருக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்று கேள்வியெழுப்பி இருக்கிறார்.

பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமா என்பது பற்றிய வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆகவே அதுபற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு உதாரணத்தை மட்டும் சுட்டிக்காட்டலாம்:-

நாட்டுடைமை ஆக்கப்படும் நூல்களின் பட்டியலில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் நூல்களும் அறிவிக்கப்பட்டபோது -

அவரது பெயரால் நூலகமும் - அறக்கட்டளை ஒன்றும் நடத்தி வரும் அவரது மரபுரிமையினர்,

"உ.வே.சா. நூல்களை எங்களது அறக்கட்டளையே வெளியிட்டு வருகிறது. மற்றவர்கள் வெளியிட்டால் அதிலே பிழைகள் மலியக்கூடும். ஆகவே உ.வே.சா. நூல்களை பிழையின்றி - திரிபுகள் திருத்தமின்றி - அவர் சொன்னது சொன்னபடி வெளியிட பதிப்புரிமை எங்களிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே செயல்படும் அறக்கட்டளை இது. எனவே நாட்டுடைமை ஆக்கவேண்டாம்" என்று மறுப்புத் தெரிவித்தார்.

அதனால் உ.வே.சா.வின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படாமல் கைவிடப்பட்டது.

அதுபோலத்தான் பெரியார் உயிரோடிருந்த காலத்தில் அவரது நூல்களையும் - இயக்கப் பிரச்சார நூல்களையும் வெளியிடுவதற்காக ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை அவர் தொடங்கினார். அவரது நூல்கள் அனைத்தும் 1920களிலிருந்து அவர் ஆற்றிய பேருரைகள் - எழுதிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமே தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான நூல்களை அது வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல; அவரது நூல்களையும் அவர் கண்ட இயக்கத்தின் பகுத்தறிவு நூல்களையும் நகர்வுப் பத்தகக் காட்சி அமைத்து - ஆண்டு முழுவதும் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று மக்களிடம் சேர்ப்பித்து வருகிறோம்’ என்கிறார்கள் பெரியார் கண்ட திராவிடர் கழகத்தின் கறுஞ்சட்டைப் படையினர்!


--------------- நன்றி:- "முரசொலி"

pukalini சொன்னது…

நான் பெரியாரை நிறையப் படித்துள்ளேன். விடயம், இப்பொழுது எத்தனை பேர் படிக்கிறார்கள்? ஏன் அந்த மந்தம்? யாரல் வந்தது? ஏன் இன்னமும் இந்தத் தொய்வு?

என் வாசிப்பு சொன்னது…

"நாட்டுடமை ஆக்க தகுதியில்லாத பெரியாரியம்!"


எங்களுக்கு இருக்கின்ற ஓர் அச்சம், தயக்கம் எல்லாம் யார் வேண்டுமானாலும் பெரியார் புத்தகத்தை வெளியிடலாம் என்று சொல்லி அவருடைய சொற்களைப் புரட்டி மாற்றிப் போட்டு விட்டால் இப்பொழுது ராமாயணத்திலே ஒரு பதிப்பிலே வந்ததுகூட, அடுத்த பதிப்பிலே இல்லை- எடுத்து விடுகிறார்களே! அதுபோன்ற நிலை பெரியாருக்கு, பெரியாரின் எழுத்து, பேச்சு நூல்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலைதான். எங்களுக்கு இப்பொழுதுகூட பெரியாருடைய நூல்களை நாட்டுடைமையாக்கி, பணம் பெறவேண்டும் என்ற எண்ணம் எல்லாம்கூட ஒன்றும் கிடையாது."

என்னும் ´மானமுள்ளவர்´ பெரியார் எழுத்துக்களை தாராளமாக நாட்டுடமையாக்கிக் கொள்ளுங்கள். ஆனால், இரண்டு நிபந்தனைகள் என்கிறார். அந்த நிபந்தனைகளையும் கொஞ்சம் பாருங்கள்.

ஒன்று, பெரியாருடைய நூல்களை நாட்டுடைமையாக்கிய பிறகு அதிலே இருக்கிற ஒரு சிறு சொல், புள்ளி, கமாவைக்கூட மாற்றக்கூடாது- மாற்றினால் அங்கே பெரியார் இருக்க மாட்டார். திரிபுவாதம் நுழைந்துவிடும்.

இரண்டாவது, நாட்டுடைமையாக்கப்படுகின்ற பொழுது பெரியார் கொள்கையை ஏற்ற ஒரு அரசாங்கம் இருக்கும் பொழுது எல்லோரும் பெரியார் நூல்களை வெளியிடுவார்கள்.

இரண்டு காரணங்களும் எப்பேர்பட்ட சிந்தனை? பெரியார் மறைந்து 36- ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் பெரியாருடைய எழுத்துக்கள் அச்சடப்படாதவை ஏராளமானவை இருக்கின்றன. இந்நிலையில் ´மானமுள்ளவர்´ புள்ளி, கமாவை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார். புள்ளி, கமாவில் திரிபுவாதம் வந்து விடும் என்று சொல்பவருக்கு....

இதே நிபந்தனைகளை வைத்து தமிழக அரசிடம் பெரியாருடைய எழுத்துக்களை நாட்டுடமையாக்கச் சொல்லலாமே! எதற்கு போலித்தனமான வார்த்தைகள்? பெரியாரின் சிந்தனையை மறைத்து வைத்துக் கொண்டு அல்லது எதையும் அச்சுக்குள் அனுப்பாமல் தன்னுடைய ´வாழ்வியல் சிந்தனை´களை பரப்பிக் கொண்டிருக்கும் ´மானமுள்ளவரு´க்கு காமக்களையோ, புள்ளிகளையோ பாதுகாக்கும் யோக்கியதை எப்படி இருந்து விடக்கூடும்? அப்படி பாதுகாக்கும் உரிமையை யார் கொடுத்தார்கள்?

இந்த கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க ´நாங்களெல்லாம் மானமற்று, சுரணையற்று போய்விட்டோமே´ என்று குமுறுவதா? "இதே நிலை நீடிக்குமானால்..." என பொங்கி எழுந்து எச்சரிக்கை விடுவதா?

பெரியாரின் வாரிசுக்கள் என்று சொல்லிக் கொள்ளும் கலைஞரின் தராதரம் இன்று எந்த அளவில் தரம் தாழ்ந்து போய்கிடக்கிறது என்பதையும், இடக்கு மடக்கான போலித்தனங்களையும், தன்னுடைய தனிப்பட்ட விரோத உணர்வுகளையும் இலக்கியத்தில் கூட திணிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கதுமல்லாமல், பெரியாரிய எழுத்துக்களை ´மானமுள்ள´ சிலரின் சொந்த நலன்களுக்கு பங்கம் ஏற்படாதிருக்க பெரியாரியத்தின் தரத்தை தாழ்த்தவும், இழிவுபடுத்த முயலும் முயற்சியாகவே நாம் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

எழுத்தாளர் சுந்தரராமசாமியின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கும் முயற்சியால் ஈ.வெ.ரா. ராமசாமியின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கும் தகுதியில் இல்லை என்பதை காட்டுவதாக எடுத்துக் கொள்வதா? இல்லை தகுதிகள் பெரியாரியத்திற்கு இருக்கிறது. நாட்டுடமையாக்கிவிட்டால் சிலரின் வயிற்றுப்பாட்டுக்கு திண்ணடாட்டமாகிவிடும் என்பதால் நாட்டுடமையாக்கும் தகுதி எங்களுக்கு இல்லை என்னும் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் தைரியம் இருக்கிறதா?

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=976

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "