புதன், 18 பிப்ரவரி, 2009

பதிவுகளும், வரலாறும்.

.
எனது வலைப் பதிவை படித்த சில நண்பர்கள் என்னிடம் எத்தனையோ பிரச்சனைகள்
இருக்கும்பொழுது

அயோத்தி விவகாரம்-இது உண்மை -இது முடிவு -என்ற

இப்பதிவைக்கு காரணம்
கேட்டார்கள்.


அவர்களுக்கு…


இது
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு
வழக்கறிஞர்கள் நடத்திய
இலக்கிய காலாண்டிதலில்
வெளிவந்த பதிப்பின்
மறு வெளியிடலே.


வழக்கறிஞர்களாகிய எங்களுக்கு மற்றவர்களைவிட
சமூகப் பொறுப்புகள்
மிக அதிகம்.
மற்றவர்களைப் போன்று
எம் போன்றோர் ஒரு விசயத்தை
ஏனோ, தானோ என்றுபார்க்க முடியாது, எழுத முடியாது.

விருப்பு, வெறுப்பற்று
எந்தவித இசத்திற்கும் ஆட்படாமல் நடுநிலையுடன்
மதமாச்சர்யங்கள் கடந்த
மனித நேயத்துடன் இருந்தால் மட்டுமே எமது எழுத்துக்களை புரிந்துகொள்ளமுடியும் .


மதவாதம்,
பிரிவினைவாதம்,
தீவிரவாதம்
ஆகியவை
எங்கிருந்தாலும்,
எவ்வடிவில் இருந்தாலும்,
எவரிடம் இருந்தாலும்,
எவரிடம் இருந்து வந்தாலும்
அதனை
வேரறுக்கவேண்டும்
என்பதுவே
எமது பதிவு.


பொய்மைகளையும்,
சுரண்டலையும்,
அடக்குமுறைகளையும்,
மூடத்தனத்தையும்,
அறியாமைகளையும்
அகற்ற
எம்போன்றோர்
விழிப்புடன்
எப்பொழுதும்
எந்நிலையிலும்
செயல்பட்டுக் கொண்டே இருப்போம்...


வழக்கறிஞர்களாகிய நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை
நடத்தி வரும் இவ்வேலையில்,


நோயில் வாடினும், நொடிப்பொழுதும் தமிழர் நலன் மறவா
தமிழினக் காவலர்
இனமானத்தலைவர்
மாண்புமிகு தமிழக முதல்வர்
கலைஞர்
அவர்களும்,

தமிழே,
தமிழ்மொழியே,
தமிழரே,
தந்தை பெரியாரே
என
தனக்கென வாழா
தன்மானத் தமிழர்
மானமிகு கி. வீரமணி
அவர்களும்,

இது தமிழின் காலம்,
ஆனால்
ஈழ தமிழினமோ கலக்கத்தில்
என
தினம், தினம்
வாடி, வாடி
பல்வேறு போராட்டங்களில்
தமிழர் வாழ்விற்காக
தம்மை ஈடுபடுத்தி போராடிவரும்
ஐயா பழ.நெடுமாறன், டாக்டர் இராமதாஸ், தொல்.திருமா, வை.கோ
மற்றும்
பல்வேறு தமிழ்இன உணர்வாளர்களும், மாணவர்களும்,
தொழிலாளிகளும்
மற்றும்
லட்சோப லட்ச தமிழ் இதயங்களும்,

வழக்கறிஞர்களாகிய நாங்களும்


ஈழ மக்களின் விடியலுக்காக
தம்மால் முடிந்த அளவிற்கு
முழுமையாக போராடிவரும் இவ்வேலையில்,


அப்பாவி தமிழ்மக்களின்
அவலம் நீடித்துவரும்
நிலையில்,


எம்மைச் சந்தித்த வழக்கறிஞர் நண்பர்கள் சிலர்,

பொதுத் தேர்தல் வரும் இவ்வேலையில் பா.ஜ.க. அயோத்தி விவகாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில்,
ஈழ மக்கள் விடியலுக்கு ஒட்டுமொத்த தமிழகமே திரண்டிருக்கும் இவ்வேலையில்
சந்தடிசாக்கில்
மதவாதம்
இங்கு
மேலும் வேரூண்டிவிடக்கூடாது.
எனவே,
அயோத்தி விவகாரம்
-இது உண்மை, இது முடிவு -கட்டுரையை புத்தகமாக வெளியிட வேண்டும் என வேண்டினர்.
முழுவதும் புத்தகமாக வெளிவர சில நாட்களாகும் என்பதாலும்,
தற்பொழுது
மேலும் சில நண்பர்கள் படிக்க ஏதுவாக இருக்கும் என்பதாலும்
எமது கட்டுரையின் ஒரு பகுதியை வெளியிட்டேன்.

இதுவே காரணம் .எனது கட்டுரையைப் படித்த
கற்றறிந்த வழக்கறிஞர் நண்பர்கள்
சிலர்
எஸன்ஸ் ஆக இருக்கிறது
சர்பத்தாக மாற்றிக் கொடுத்தால்
மிகவும் நன்கு
ஆழமாகப் புரிந்துகொள்வோம் என்றார்கள்.அவர்களுக்கு....


எனது எழுத்தின் எழிமைப்படுத்திய வடிவம்தான் தாங்கள் படித்தது. இருந்தாலும், என்னால்
முடிந்த அளவிற்கு முயற்சிக்கின்றேன்.
தாங்களும் முயற்சிக்கவும்.


சரி கட்டுரைக்கு வருவோம்………..பதிவுகளும், வரலாறும்.


( அயோத்தி விவகாரம்
-இது உண்மை
- இது முடிவு .
........ 2-ம் பகுதி)முழு முழுப் பூசணிக்காய்கள்
சோற்றில் அல்ல
ஆற்றில் ...
ஆங்காங்கே
ஆங்காங்கே
நதிக்கரைகள் நெடுகிலும்
நதிக்கரைகள் நெடுகிலும்
மறைக்கப்பட்டு இருப்பது கண்டு
உலகமே வாயடைந்து நின்றது.


"முற்றிலும்
கபட தந்திரங்கள் வழியாக
நமது நாட்டின் ஆதிக்கத்தைக் கைப்பற்றிய அந்நிய நாட்டினர் நமக்குப் போதித்துத் தந்த வரலாறு
வேறு வகையிலானது.
அவர்கள் வந்த பின்னர்தான் இந்த நாட்டிலே கலாச்சாரம் நாகரிகம் எல்லாம் உருவாயினவாம்!
அதன் முன்னர் இங்கு அனைவரும் கிஞ்சிற்றும் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாய் இருந்தார்களாம்!
ஐந்தாயிரம் வருடத்திய பழமையுடைய எகிப்து, பாபிலோனியா ஆகிய நாகரிகங்கள் பற்றிக்
கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? எகிப்தைச் சேர்ந்த ஃபரோவர்கள் நிர்மாணித்த, பேருருவமாய்
அமைந்திருக்கின்ற 'பிரமிடு'களும்
ஊறு, உரூக முதலிய இடங்களில் அமைந்த மாபெரும் தேவாலயங்களின் மிச்சசொச்சங்களும் இந்த
நாகரிகங்களின் நினைவுச் சின்னங்களாய்த் திகழ்கின்றன. ஆனால் நமதென்று சொல்ல இதிகாசங்கள்
மட்டும்தான். அவற்றை அடிப்படையாகக் கொண்டு பாக்கும்போது இரண்டாயிரம் மீறினால்,
இரண்டாயிரத்து ஐநூறு வருடத்திற்கும் மேலான பழமை நமது நாகரிகத்திற்கு இருக்கிறதென்று
உரிமை கொண்டாட முடிந்திருக்காது.

கடந்த ஐம்பது அல்லது அறுபது வருடங்களுக்கு முன்னர்தான் இந்த நிலைமையில் ஒரு மாறுதல்
ஏற்பட்டது. வைதீக நாகரிகத்தை இங்கே கட்டி வளர்த்த ஆரியர்களின் வருகைக்கு ஆயிரத்தி ஐநூறு
வருடங்களுக்கு முன்னரே பாரதத்தில் மிகவும் மகத்தானதொரு நாகரிகம் நிலைபெற்றிருந்தது.
அந்தக் காலகட்டத்தின் மிகவும் முன்னேற்றமடைந்த நாகரிகமாய்த் திகழ்ந்திருந்தது அது. மிகப்
பெரிதாகவும் இருந்திருக்கிறது.
சிந்து நதிக்கரையோரங்களிலேதான் அது வளர்ந்து மலர்ந்தது.
ஏறத்தாழ முவாயிரம் வடங்களுக்கு முன்னர் அது முற்றிலும் அழிந்து மண்ணிற்கடியிலே
புதையுண்டு போயிற்று. 1921-ஆவது ஆண்டிலேதான் இவை முதன் முதலாக மொகஞ்சதாரோ, ஹரப்பா
ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன."


உண்மை .....முடிவை நோக்கி.......தொடரும்....


.

Download As PDF

4 கருத்துகள் :

மண்சட்டி சொன்னது…

அன்பின் நண்பரே..
உங்களை பற்றிய முழுவிவரம் அறிய ஆவல்..

கட்டுரைகள்... பதிவுகள்..பாதிப்பினை ஏற்படுத்தியதால்...இந்த கருத்துரை..

அன்புடன் மண்சட்டி

Muniappan Pakkangal சொன்னது…

A settlement dating back to more than 2500 years has been found in Aathichchnalloor & is under Archaeolgical exploration.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மண்சட்டி யாருக்கு ...

எமது பதிவுகள் ..
பாதிப்பைத்தரும் பதிவுகளா ...!!...?
என்ன பாதிப்பை எப்பதிவு தந்தது
என்பதனை வெளிப்படையாக
தெரிவிக்கவும் .

நண்டு @நொரண்டின் நோக்கம்
பாதிப்பினை ஏற்படுத்தும்
பதிவுகளை வெளியிடுவதல்ல .

ஒன்றை
பார்த்தோ ,படித்தோ ,கேட்டோ
தன்னை பாதிக்கின்றது என்று
கூறுவதினின்று விலகிவர வேண்டும் .

ஒன்று நம்மை பாதிப்பதால்
ஏற்படுவது யாது ?

முதலில் அதனால் நமக்கு உள்ள
ஆதாயத்தையே நாம் பார்க்க
ஆரம்பிக்கின்றேம் .


அது நமது
கருத்தியலில் இருந்தாலும் சரி ,
வாழ்வியலில் இருந்தாலும் சரி
அல்லது
நமது
முன் முடிவுகளில் இருந்தாலும் சரி .

அப்படி பார்க்கும் பொழுது
ஒன்று
அதன் மீது நமக்கு
உடனே பிடிப்பு வருகிறது ,
தெளிவு போல் ஒரு தோற்றம் உருவாகிறது,
அது ஒரு புலகாங்கித்த்தை ஏற்படுகிறது

அல்லது

அதன் மீது நமக்கு
உடனே வெறுப்பு வருகிறது ,
கோபம் உருவாகிறது,
காழ்ப்புணர்ச்சி ஏற்படுகிறது .

இவை இரண்டில்
எது ஏற்ப்பட்டாலும்
நாம் நமது இயல்பான நிலையிலிருந்து
பிறழ்ந்து விட்டிருப்போம் .

அதனால் ,
அதன்மீது பயணப்பட்டு
பிறகு நாம் நமது
சுயத்தை இழந்து விடுவோம் .

ஆதலால் ,
எவை ஒன்றிலிருந்தும்
நாம்
அதனின்று பெறும் கோவைகளினின்று


ஏதோ தவறான பாதையில்
தற்பொழுது இருப்பதாக உணரும் பட்சத்தில் அதனின்று
திருந்த வேண்டும்

அல்லது

நமக்கு தெரியாதவைகளை
அதனின்று
கற்றுக்கொள்ளவேண்டும் .

இதுவே

நண்டு @நொரண்டின் நோக்கம் .---சுயத்தை இழப்பவன்
சுதந்திரமானவனாக முடியாது -----மேலும் ,
தங்களைப்பற்றிய விபரங்கள் முழுவதையும்
கூறவும் .

அது தானே சரி .

நன்றி ..
நண்டு

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

அன்பு நண்பர்
Muniappan Pakkangal -க்கு
தங்களின் தகவலுக்கு நன்றி .
அது சம்பந்தமாக மேலும் விவரங்கள் அனுப்பினால்
பயனுள்ளதாக இருக்கும் .

நண்டு .

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "