சனி, 23 ஜூலை, 2011

ஒரு இணைய தமிழ் புரட்சி தேவை ...ஒன்று சேருங்கள் ...தமிழ் இணைய உலகில் ஒரு நல்ல முயற்சி...
அனைவரும் அவரவர் நிலையில் தங்களின் பங்களிப்பை செய்யலாமே  .

............................................

எதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள் ..

இந்த பதிவை எவளவு தூரம் கவனிக்கக் போகிறீர்களோ அல்லது  அனைவரிடமும் சேர்க்க போகிறீர்கள் என்று தெரியவில்லை .எத்தனை பேர் இதில் இணைய முன் வந்து நிற்க்க போகிறீர்களோ தெரியவில்லை .ஆனால் தயவுசெய்து ஒரு 5 நிமிடம் ஒதுக்கி படியுங்கள் .  http://www.ewow.lk/ தளம் பற்றியது .
கல்வி ,வேறு தொழில் நடவடிக்கைகளுடன் இதையும் இயக்குவதால் எம்மால் முழுநேரமாக தனியாக செய்ய முடியாது . ஆனால் அனைவரும் நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினால் முடியும் .

ஒரு சமூகத்தின்/மொழியின் வளர்ச்சி அதன் பரிணாம வளர்ச்சியில் தான் இருக்கிறது . அந்த அந்த காலத்திற்கு ஏற்ப மாற்றம் அடைந்து வளர்ச்சியடையவேண்டும் .இணையத்தில் தமிழை தொகுப்போம் .

ஒரு சமூகம் வளர்ச்சி அடைய அந்த சமூகத்திலேயே இருந்து நன்றாக வந்தவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பு மிக மிக முக்கியமானது .ஆனால் எம் சமூகத்தில் உள்ளவர்கள் வளர்ந்தவுடன் தன் சமூகத்தை திரும்பி பார்ப்பதில்லை என்ற எண்ணமே நிலவுகிறது . முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம் .மிகவும் பின் தங்கி இருக்கிறோம் .நிச்சயம் ஒரு இணைய தமிழ் புரட்சி தேவைப்படுகிறது. அதற்கான வேண்டுகோள் பதிவு இது .ஒன்று சேருங்கள் .

இணையம் என்பது எதிர்காலத்தில் ஏழை ,பணக்காரர் வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க போகும் ஒன்று . உலக விடயங்களை தெரிந்து வைத்திருப்பதன் மூலமும் பகுத்தறிவை வளர்ப்பதன் மூலமுமே எமது சமூகத்தை வளர்க்க முடியும் . அனைவருக்கும் அனைத்திலும் அடிபப்டை அறிவு இருக்க வேண்டும் .கல்வித்தளம் /விழிப்புணர்வு தளம் என்று எந்த வகையிலும் வைத்திருக்கலாம் .

முதலில் வெறுமனே அறிவியல் கட்டுரைகளை மட்டுமே நானும் எனது நண்பன் பிரபுவும் எமது வலைப்பதிவுகளில் கிடைக்கும் நேரங்களில் படித்தவற்றை பகிர்ந்து /எழுதி வந்தோம் . அறிவியல் விடயங்கள் தமிழில் இணையத்தில் தேடினால் கிடைக்க வேண்டும் என்பதே எமது ஒரே நோக்காக இருந்தது .இருவரும் எழுதியதை இணைத்து ஒரு தளமாக்கி தொடர்ந்து எழுவது தான் நோக்காக இருந்தது .

ஆனால் பொதுவாக பார்த்தபோது அறிவியல் விடயம் மட்டுமன்றி கல்வி தொடர்பான எதுவுமே இணையத்தில் தமிழில் இருக்கவில்லை .வளர்ச்சி என்றால் அது அறிவியலில் மட்டுமல்ல எல்லா விடயத்திலும் இருக்க வேண்டும் என்று தோன்றியது .

அதற்காக உருவாக்கப்பட்ட தளம் தான் இது :: http://www.ewow.lk/

இந்த தளத்தில் இணைந்து ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்ய  விரும்புவர்கள் info@ewow.lk தொடர்புகொள்ளவும் .

இதன் உள்ளடக்கங்கள்::எந்த பகுதிக்கும் பங்களிப்பு செய்யலாம் .

கல்விப்பகுதி : இரசாயனவியல் ,பௌதீகவியல்  பாட பகுதிகள் வீடியோ வடிவில் விளங்கப்படுத்தபட்டுள்ளன .: இவை இன்னும் சேர்க்க வேண்டும் .எங்கிருப்பவர்களும் இவற்றை படித்துக்கொள்ளலாம் .

தமிழில் இயங்கவில் ஆவர்த்தன அட்டவணை 

ஏன்? எதற்கு ? : ஏன் என்ற கேள்வி மிகவும் முக்கியமானது .இந்த பகுதியை தொகுத்து வருகிறோம் .உங்களுக்கு தெரிந்தவற்றை மூலத்தை குறிப்பிட்டு பகிரலாம்.

சுகாதார கல்விகளையும் வீடியோ வடிவில் தொகுத்துள்ளோம் .வீட்டில் இருப்பவர்களுக்கு நோய்கள் எப்படி ஏற்படுகிறது ?அதை தடுப்பது பற்றி சுகாதார விழிப்புணர்வுக்காக எழுதப்படுகிறது .ஆக்கங்கள் கேள்வி பதில்களாக உள்ளது .
  
அனைவரும் அடிப்படை சட்டங்கள் தெரிந்திருக்கக் வேண்டும் என்ற நோக்கில் சட்டங்கள் பற்றிய விடயங்களை தொகுக்கிறோம் .மனித உரிமை சட்டங்களையும் தொகுக்கலாம் .

தமிழ் ஆவணப்படங்களும் செய்து வருகிறோம் .

அது தவிர வரலாறு ,தொழிநுட்பம் ,நாகரிகம் என பல விடயங்கள் தொகுக்கப்பட்டு வருகிறது .ஆனால் நாம் அவற்றை வழங்கு விதமும் தொகுக்கும் விதமும் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் .

எமக்கு தெரிந்தவற்றை மற்றயவர்களுக்கு தமிழில் கற்பிப்போம்,மற்றவர்களுக்கு தெரிந்ததை நாம் தெரிந்துகொள்வோம். தானாக இணையத்தில் தமிழ் சேர்ந்துகொண்டிருக்கும் .

நண்பர்களுடன் ,சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தாலே உதவியாக இருக்கும் .. இப்படியான பணிகளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களை இந்த செய்தி போய் எட்டினால் போதுமானது .
..................................

மிக நல்ல முயற்சி சுதர்சன்

தொடரட்டும் உங்களின் இந்த நற்பணி .

வாழ்த்துக்கள்.
அனைவரும்  பங்களிப்பை தருவீர்கள் என நம்புகிறேன்.  

நன்றி

என
அன்புடன்
நண்டு@நொரண்டு .


.Download As PDF

28 கருத்துகள் :

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

மிக மிக நல்ல முயற்சி.. கண்டிப்பாக என் ஆதரவுகள் உண்டு.. மேலும் பரவச்செய்கிறேன் இத்தகவலை , முகபுத்தகத்தில் எம் குழுமத்தில், Buzz , கூகுள் + ல்..

எம் குழுமத்திலும் விஞ்ஞானி ஐயா திரு ஜெயபாரதன் அவர்கள் நல்ல பல உபயோகமான தகவல்கள் தந்துகொன்டிருக்கிறார்கள்..

பாராட்டும் வாழ்த்தும்..

சுதர்ஷன் சொன்னது…

மிக்க நன்றி ..இதன் முக்கியத்துவம் உணர்ந்து உங்கள் பதிவில் இடம் ஒதுக்கியமைக்கு/பகிர்ந்துகொண்டமைக்கு :-)

Yaathoramani.blogspot.com சொன்னது…

பயனுள்ள தளத்தை அறிமுகப்படுத்திய
பயனுள்ள பதிவு
என்னை இணைத்துகொண்டேன்
நன்றி

ம.தி.சுதா சொன்னது…

சுதாவின் இந்த முயற்சி மிகவும் பெறுமதியானது என்னால் இப்போது அவருக்கு உதவமுடியாமல் இருப்பத வரத்தமே ஆனால் என்னால் முடிந்த உதவியை செய்யக் காத்திருக்கிறென் பகிர்வக்கு நன்றி சகோதரா..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சாருவின் ஆபாச அரட்டை உண்மையா? பொய்யா? ஆதார பதிவு

Unknown சொன்னது…

நல்ல குறிக்கோள். வெகுவிரைவில் ஈரோட்டில் நடக்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியைப் பயன்படுத்திப் புதிய நண்பர்களின் உதவிகளைப் பெற முடியுமா என்றும் யோசிக்கலாம். இன்றைய தினமணியில் முதற்பக்கத்தில் அரைப்பக்க கல்வி விளம்பரம் வந்துள்ளது. பார்க்கவும். உங்களுக்குத் தேவையான தகவலும் உண்டு. இத்தகைய கல்வி வணிகச் சூழலில் தங்கள் முயற்சி வெற்றி பெற்றால் நல்லது. அனைத்துப் பாடங்கள் குறித்த குறுந்தகடுகள் ஆங்கிலத்தில் அதிக அளவிலும், தமிழில் குறைவாகவும் கிடைப்பதாகவும் தகவல் உண்டு. முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

கூடல் பாலா சொன்னது…

அருமையான இணைய தளம் ...என்னாலியன்ற பங்களிப்பு செய்வேன் .....நன்றி !

Kousalya Raj சொன்னது…

வாழ்த்துகிறேன் உங்களை...! முடிந்தவரை செய்தியை பிறரிடம் கொண்டு செல்கிறேன். நன்றி

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு = அங்கும் கணக்குத் துவங்கி விட்டேன் - இயன்றவரை பங்களிப்போம். பகிர்வினிர்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஹேமா சொன்னது…

முதலில் வாழ்த்து.பங்களிப்பும் செய்ய முயற்சிப்பேன் !

Unknown சொன்னது…

அருமையான, மிகவும் பயனுள்ள தளம்.

தளத்தை நடத்தும் சுதர்சனத்திற்கும், அதை எமக்கு அறிமுகப்படுத்திய தங்களுக்கும் மிக்க நன்றிகள்!

வாழ்த்துக்கள்!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கணடிப்பாக ஒன்றிணைவோம்...

இதில் தமிழ்பதிவர்கள் தங்களால் இயன்ற முயற்ச்சியை தரவேண்டும் என்றும் வேண்டுகோள் வைக்கிறேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

முதலில் இந்த தளத்தில் லிங்க்கை என்தளத்தில் வைக்கிறேன்....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தமிழ்மணத்தில் 7-வது ஓட்டையும் போட்டாயிற்து...

Mahan.Thamesh சொன்னது…

மிக சிறந்த முயற்சி இந்த தளத்தினை பற்றி நான் என்னுடைய நண்பர்களுடன் பகிர்கிறேன்; இந்த தளத்தில் கண்டிப்பாக என்னால் முடிந்த பங்களிப்பினை ஆற்றுவேன்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

ரொம்ப நல்ல முயற்சி. வாழ்த்துகள்..

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல முயற்சி நண்பரே

வாழ்த்துக்கள்

sarujan சொன்னது…

பயனுள்ள பதிவு
நல்ல முயற்சி

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல முயற்சி.
முடிந்தவரை என்னால் முடிந்த முயற்சிகள் செய்கிறேன்.
வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் சொன்னது…

நிச்சயமாக இணைவோம் இணைந்து செயல்படுவோம்

4Tamilmedia சொன்னது…

http://www.4tamilmedia.com/index.php/knowledge/useful-links/5715--ewowlk

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள், பகிர்வுக்கு நன்றி

அன்புடன் அருணா சொன்னது…

பூங்கொத்து! நானும் இணைகிறேன்..

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ, அருமையான முயற்சி, என்னால் இயன்ற உதவிகளையும் நான் உங்களுக்கு வழங்குகிறேன்.

Jeyamaran சொன்னது…

Nalla muyarchi anna vaalthugal...............
HiFriends

Venkat சொன்னது…

Good initiative..All the best.

பெயரில்லா சொன்னது…

பயனுள்ள தளத்தை அறிமுகப்படுத்திய
பயனுள்ள பதிவு...நல்ல முயற்சி ...வாழ்த்துக்கள் நண்பரே...

உணவு உலகம் சொன்னது…

//தமிழில் இணையத்தில் தேடினால் கிடைக்க வேண்டும் என்பதே எமது ஒரே நோக்காக இருந்தது//
நல்ல சிந்தனை. 3

அம்பாளடியாள் சொன்னது…

நல்லதொரு முயற்சி உங்கள் எண்ணம்
நிறைவேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
சகோதரரே ...........

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "