ஞாயிறு, 18 ஜூலை, 2010

முலையிரண்டும் இல்லாதாள்

.



முலையிரண்டும் இல்லாதாள் .
முலையை குறிப்பாக குறிப்பிடுவதன் காரணம் என்ன?.

முலையில்லாதவள் என சொல்வதற்கு என்ன இடர் ?.
ஏன் இரண்டையும் சொல்லவேண்டும் ?.
ஆணுக்கு பொண்ணை உதாரணம் சொல்வது போல உள்ளதே
அப்படித்தானா இல்லை ஆணாதிக்க சிந்தனையா ?.
இங்கு முலையை குறிப்பிடுவதன் குறிப்பான நோக்கம் என்ன ?.
என பற்பல சிந்தனைகளை என்னுள் ஏற்படுத்திய குறள்


'கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.'


தாய்ப்பால் எவ்வளவு சிறந்தது என நாம் அனைவருக்கும் தெரியும்.முலை வழி தாய் தன் மகவுக்கு தனது அனைத்தையும் அதன் பிறப்பிற்குப் பின் கொடுக்கின்றாள் .இதனால் முக்கியமானது சேய் தாய்ப்பால் பெறுவது .
அதைவிட முக்கியமானது தாய் தனதுசேய்க்கு பால் ஊட்டுவது .
தாய் மொழி எவ்வளவு சிறந்தது என நாம் அனைவருக்கும் தெரியும்.சொல் வழி மொழி தன் மகவுக்கு தனது அனைத்தையும் அதன் பிறப்பிற்குப் பின் கொடுக்கின்றாது.இதனால் முக்கியமானது சேய் தாய் மொழி பெறுவது .
அதைவிட முக்கியமானது தாய் தனதுமொழியில் அறிவூட்டுவது .

தாய் தன் மகவிற்கு வாயால் ஊட்டும் பால் மட்டுமே உயர்ந்த,சிறந்த ஆரோக்கியத்தை தரும்.
மொழி தன் மகவிற்கு வாயால் ஊட்டும் சொல் மட்டுமே உயர்ந்த,சிறந்த அறிவைத் தரும் .

தாயிடமிருந்து அனைத்தையும் சேய் பெறுகிறது .இதில் சிறந்தது தாயின் முலைப்பால்.
கல்வியிலிருந்து தன் பிறப்பிற்குப் பின் உயர்ந்த விசயங்களை ஒருவர் பெறுகின்றார்.
இதில் சிறந்தது தாய்மொழியில் கல்வி .

வாயால் தாய்ப்பால் ஊட்டுவதால் தாய்மை சிறப்பாகிறது.
சொல்லால் அறிவுபால்ஊட்டுவதால் மொழி சிறப்பாகிறது .

முலையின் பயன் -தாய்மை.
சொல்லின் பயன் -வாய்மை.

தாய்மை என்பது பிறப்பின் உயர்வு.
வா
ய்மை என்பது சொல்லின் உயர்வு .

தாய்மையில் பாலூட்டல் தனி சிறப்பு .
வாய்மையில் சொல்லூட்டல் தனி சிறப்பு.



மேற்கண்ட குறளில்

கல்லாதான் முலையிரண்டும் இல்லாதாள் க்கு ஒப்புமை .
கல்வி முலைக்கு
ஒப்புமை .
சொற்காமுறுதல் பெண்காமுற்ற
சொல் பெண்க்கு
சொல்லாக காமுறுதல் பெண்ணாக காமுறுதல்.
காமுறுதல் என்றால் வெளிப்படல்
சொற்களை கல்லாதவன் முலையுள்ள பெண்ணாக இல்லாதவள் என்பதாகிறது .
இங்கு முலை குறியீடு .


சுருக்கமான விளக்கம் .

மலடி குழந்தை பொத்துக்க ஆசைப்பட்டமாதிரி-னு ஒரு பழமொழி உள்ளது அல்லவா அதுவேதான் இதுவும்.
மலடி பெண் என்று வெளிப்படாலும் அவளால் தாய்மை என்னும் உயரிய பண்பை அடைய முடியாது .அதனால் பாலுட்டமுடியாது .
அப்படிப்பட்டவள் ஓரு குழந்தைக்கு பாலூட்டுவது போல் நடிக்க முடியும் அதனால் அவளுக்கும் ஆதாயம் இல்லை குழந்தைக்கும் எதுவுப் பயனில்லை .
கல்வியறிவில்லாமல் ஒன்றைச்சொல்வது மலடி பால் கொடுக்க ஆவல்படுவது போல் . படிப்பறிவில்லாதவனின் எழுத்துக்களால் யாருக்கும் பயனிருக்காது .மொழியும் சேதப்படும் .பயனும் அதற்கில்லை .தாய்ப்பால் குடிக்காத குழந்தையின் ஆரோக்கியம் போன்றது கல்லாதவன் சொல்லும் சொல் என்கின்றார் .

வள்ளுவர் காலத்தில் ஆணுக்கு மட்டுமே கல்வி என்ற நிலை இல்லாமல் இருந்ததால் தான்
ஆணுக்கு பொண்ணை உதாரணம் சொல்கிறார் .

கல்வி கற்பது அவசியம் அதுவும் தாய்மொழியில் கல்வி கற்பதே சிறப்பு .மற்ற மொழிகளில் கற்பது
மலடி குழந்தை பொத்துக்க ஆசைப்பட்டமாதிரி என்கிறார் .அதனால் தான் முலையிரண்டும் இல்லாதாள் என்கிறார் .



மேலும் ...


...





வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ... தொடரும் ...






.


Download As PDF

18 கருத்துகள் :

goma சொன்னது…

கட்டுரை வாசித்து மலைப்பால் கட்டுண்டேன்

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

குறாளாசானின் குறளுக்கு அருமையான விளக்கம் - நல்லதொரு உவமையினை எடுத்துக் காட்டி இருக்கிறார். இக்குறள் கல்லாமையினை - அறியாமையினை விளக்க வரும் போது கூறப்படும் குறள். கல்வி அறிவில்லாதவன் கற்றவர்கள் நிரம்பிய சபையினில் பேச முயல்வது முலைகள் இல்லாத பெண்ணினைத் தழுவுவது போல என்ற பொருளில் கூறுகிறார்.

இருப்பினும் இச்சிந்தனையும் நன்றாகத் தான் இருக்கிறது. மாறுபட்ட சிந்தனை வரவேற்கத் தக்கது தான்

நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா

பெயரில்லா சொன்னது…

இந்த குறளுக்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால்,
"கல்வி கற்காத ஒருவன் , கற்றவர்களின் அவையில் தனது கருத்தை கூற முற்படுவது ,
முலையிரண்டும் இல்லாத பெண் , காமமுருவதை போன்றதாகும். "

ஜெயக்குமார் - லண்டன்

ரோகிணிசிவா சொன்னது…

thnks for sharing -it was so clear as a crystal ,

Unknown சொன்னது…

விரிவான அலசல்.. பாராட்டுக்கள்..
தாய்மை எப்போதும் உயர்வானதே.. இதில் மாற்றுக் கருத்தே இல்லை/,,

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

ரொம்ப அருமையான குறள் விளக்கங்கள். தாய்ப்பாலின் மகிமையையும் கல்வியின் சிறப்பையும் அழகாக விளக்கமாக பகிர்ந்துள்ளீர்கள். நன்று நன்று

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

மாறுபட்ட சிந்தனை

செ.சரவணக்குமார் சொன்னது…

அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

நன்று. தொடருங்கள்.

Radhakrishnan சொன்னது…

வித்தியாசமாத்தான் இருக்கு.

ஹேமா சொன்னது…

தாய்ப்பால் நோய்களை அகற்றுவதுபோல தாய்மொழியும்.நல்ல கருத்து.

பெயரில்லா சொன்னது…

தாய்ப்பால் ஒரு சில காலத்துக்கு மட்டுமே நண்பரே! அதற்குப் பின் வேறு உணவு தேடியாகத் தான் வேண்டும். அது போல் தான் தாய்மொழியும். அதை கற்பது நன்று, அதிலேயே பேசுவது, புழங்குவதும் நன்று. ஆனால் அதை மட்டுமே, அதில் மட்டுமே, கற்பது நடைமுறைக்கு ஒவ்வாததாகும்.

பெயரில்லா சொன்னது…

//தாய்ப்பால் ஒரு சில காலத்துக்கு மட்டுமே நண்பரே! அதற்குப் பின் வேறு உணவு தேடியாகத் தான் வேண்டும். அது போல் தான் தாய்மொழியும். அதை கற்பது நன்று, அதிலேயே பேசுவது, புழங்குவதும் நன்று. ஆனால் அதை மட்டுமே, அதில் மட்டுமே, கற்பது நடைமுறைக்கு ஒவ்வாததாகும்//

Exactly You are right!!!!! Few groups in Tamil Nadu always mourning these idiotic slogans... FEW Bloggers also yielded to these idiotic arguments and continue to their support.. Ultimately these bloggers are earning through the other language and preaching others to learn in Tamil...

Note: I am not hurt to anybody.. if you feel.. I am extremely sorry for that..

Prabhu..

ஜானகிராமன் சொன்னது…

அழகான, பொருத்தமான விளக்கம்.

ஜில்தண்ணி சொன்னது…

என்னவொறு குறள் அதன் ஆழ்ந்த அர்த்தங்கள் வியக்க வைக்கிறது

தொடருங்கள்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின்
வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
goma @
cheena (சீனா) @
ரோகிணிசிவா @
கே.ஆர்.பி.செந்தில் @
Starjan ( ஸ்டார்ஜன் )@
T.V.ராதாகிருஷ்ணன் @
செ.சரவணக்குமார் @
V.Radhakrishnan @
ஹேமா @
Prabhu.. @
ஜானகிராமன் @
ஜில்தண்ணி - யோகேஷ்
அவர்களே,
மிக்க நன்றி .

அ.சின்னதுரை சொன்னது…

super.continue pannunka unkalin kural vilakkathai.

இமா க்றிஸ் சொன்னது…

'பிரபலமான இடுகைகள்' பகுதியில் மேலே உள்ள படத்தையும் தலைப்பையும் ஒன்றாகப் பார்த்துக் குழம்பி, என்னதான் சொல்கிறீர்கள் என்று பார்க்க வந்தால்... குறள் விளக்கமா!!!

இந்த விமர்சனம் படத்திற்கு மட்டும்... தவறாக எண்ண வேண்டாம் சகோதரரே, தலைப்புக்குப் பொருத்தமாக வேறு படமே கிடைக்கவில்லையா!! ;(

படத்தை மாற்றும் பொழுது என் இந்தக் கருத்தினையும் நீக்கிவிடுங்கள்.

இமா க்றிஸ் சொன்னது…

எனக்கு ஏதாவது பதில் இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தேன். காணோம். :)

மேலே உள்ளது அன்னை மரியாள் & யேசுபாலன் படம்.

இப்போதும்... தலைப்பையும் படத்தையும் மட்டும் காணும்போது சங்கடமாகத்தான் இருக்கிறது. ;((

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "