புதன், 13 ஜூலை, 2011

ஜாதி , தீண்டாமை X சமச்சீர்கல்வி .


இன்று சமச்சீர் கல்வி என்றால் என்னவென்று ஓரளவிற்கு தெரியவந்துவிட்டது .ஆனால்,இன்னும் கல்வி சம்பந்தமாக விழிப்பு வரவில்லை.அதுவும் ஒரு ஜனநாயக நாட்டில் எத்தகைய கல்வி இருக்கவேண்டும் என்ற விழிப்புணர்வு அரசியல் தளத்தில் முதலில் இருக்கவேண்டும் என்பதுவே முக்கிமான ஒன்றாகும் .

இன்றைக்கு நமக்கு சமச்சீர் கல்வி என்பதை விட பொதுக்கல்வியே மிகவும் அவசியமான கட்டாயமான ஒன்று.  ஆனால்,இதன் தேவை மற்றும் அவசியம் பற்றி எந்தவித கவலையும்,பார்வையும் இல்லாமல் மக்களும், சமத்துவம் ,சகோதரத்துவம்,பகுத்தறிவு ,முதலாளி,தொழிலாளி ,ஒடுக்கப்பட்டவர் என எதையாவது கூறிக்கொண்டு அனுதினம் போராட்டத்தில் குதித்து தாங்களை மக்களின் காவலர்களாக காட்டிக்கொள்ளும் அனைத்து கட்சிகளும் இருப்பது அறியாமையிலா இல்லை அனைத்திலும் பாசிச குணம் புகுந்துவிட்டதாலா என்பது ஆராயக்கூடிய விசயமாக உள்ளது .
அறியாமையில் என்றால் உணர்த்தலாம்,பாசிசம் என்றால் துரத்தி துடைப்பதைத்தவிர்த்து வேறு வழியே கிடையாது .

தீண்டாமை ஒழிப்புக்காக காந்தி,பெரியார்,அம்போத்கார் மற்றும் பல பெயர் தெரிந்த தெரியாத தலைவர்கள் மற்றும் முகம் தெரியாத பாதிக்கப்பட்ட அனைவரின் உயிர்,உழைப்பு ,கஷ்டம் மற்றும் கனவிற்கு மருந்தாக உள்ளது தான் நமது அரசியலமைப்பு கூறும் கல்வி என்ற அடிப்படை உரிமை. அப்படிப்பட்ட அடிப்படை உரிமையான கல்வியில் பொதுக்கல்வி முக்கியமான காரணியாக இருந்து நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு மேலும் உயர்வு சேர்க்கிறது என்றால் அது மிகையாகாது .

அடிப்படை உரிமை கல்வி என்னும் பொழுது அனைத்து கல்வி நிலையங்களையும் அரசே நடத்த வேண்டும்.அது தான் சரி,அது தான் சட்டமும் கூறுகிறது.அப்படி அரசே ஏற்று நடத்தும் பொழுது ,அண்மைப்பள்ளியில் தான் அனைவரும் படிக்கவேண்டும் .அப்பொழுது அனைவரும் ஒரே குடையின் கீழ் தான் படிப்பர். அப்படி குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கும் பொழுது ,குழந்தைகளின் மனதில் எத்தகைய ஜாதிபோதங்களும் இல்லாத  காரணத்தினால் அவர்கள் இயல்பாகவே தாங்கள் எந்தவித ஜாதி ,தீண்டாமை இன்றி ஒருவருடன் ஒருவர் நன்றாக பழகி ஒரே தன்மையினராக வளர்வர்.இவ்வாறு ஜாதி போதமின்றி தங்களுக்கிடையே தீண்டாமை என்னும் பாவங்கள் இன்றி ஒத்த மாணாக்கர்களாய் வளர்வர். அவ்வறு அவர்களை வளர்த்தெடுப்பதன் மூலம் ஜாதி ,தீண்டாமை என்னும் கொடுமைகளை  சமுதாயத்திலிருந்து மாய்க்கமுடியும்.

அதை விடுத்து நாம் ஜாதியை மரமாக பள்ளியில் வளரவிட்டு பின் அதனை சமுதாயத்தில் வெட்ட நினைப்பது முட்டாள் தனமாகும் ,5 ல் வளையாதது 50 ல் வளையாது .

ஜாதி ஒழியவேண்டும்  தீண்டாமை மறையவேண்டும் என நினைக்கும் மக்களின் காவலர்கள் இதனை  உணர்ந்து உடனே பொதுக்கல்வி என்னும் அனைவருக்குமான தரமான ஒரே கல்வியை அமுல்படுத்த இணைந்து போராட வேண்டும் .

ஜாதி ஒழிந்தால்
வேற்றுமை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்
தீண்டாமை  என்ற அறியாமை அகன்றுவிடும் .


குழந்தைகளை பாருங்கள் .....

அவர்களிடம் அன்பு என்ற ஒன்றைத்தவிர்த்து வேறு எதுவும் இருப்பது இல்லை .

நாமாவது
குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்
குழந்தைகளை  குழந்தைகளாக வளர்ப்போமாக .
. Download As PDF

21 கருத்துகள் :

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

சாரி சார்.. noreply+02609088989433549489@google.com இந்த மெயில்ல வந்திருக்கு. பார்க்கலை.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வுப்பதிவு.. தமிழமண் நட்சத்திர அந்தஸ்துக்கு வாழ்த்து. (அருண் ஐஸ் க்ரீம் ட்ரீட் வைக்கவும் )

பவள சங்கரி சொன்னது…

நாமாவது
குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்
குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போமாக .

உண்மை.....சிந்திக்கச் செய்யும் பதிவு. சாதி ஒழிய வேண்டும் முற்றிலும்........தொடருங்கள். வாழ்த்துகள்.

தங்களுடைய தரமான படைப்புகள் வல்லமை இதழுக்கு வரவேற்கப்படுகிறது.நன்றி.

பவள சங்கரி,
நிர்வாக ஆசிரியர்,
வல்லமை மின்னிதழ்.

www.vallamai.com

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - அருமையான கருத்து நல்ல சிந்தனையில் உதித்திருக்கிறது. அரசே நடத்த வேண்டும் - பிள்ளைகள் - ஏழை பணக்காரன் வேறுபாடின்றி எச்சாதியாக இருந்தாலும் வீட்டிர்கு அருகில் உள்ள பள்ளியில் தான் பயில வேண்டும் என அரசாணை. நடந்து விட்டால் நல்லது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

kaialavuman சொன்னது…

கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும் அரசே நடத்துவது தான் உண்மையான மக்களுக்கான அரசு. இல்லையேல் ”மக்களுக்காக மக்களால்” என்பது வெறும் கோஷமாகவே அமையும்.

வெட்டிப்பேச்சு சொன்னது…

//அதை விடுத்து நாம் ஜாதியை மரமாக பள்ளியில் வளரவிட்டு பின் அதனை சமுதாயத்தில் வெட்ட நினைப்பது முட்டாள் தனமாகும் ,5 ல் வளையாதது 50 ல் வளையாது .

//

அருமையான கருத்து அன்பரே..

வாழ்த்துக்கள்

கூடல் பாலா சொன்னது…

பள்ளி கல்வி பற்றிய நல்ல பதிவு ....

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.

goma சொன்னது…

குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்
குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போமாக .

well said

Mohamed Faaique சொன்னது…

///ஜாதி ஒழிந்தால்
வேற்றுமை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்
தீண்டாமை என்ற அறியாமை அகன்றுவிடும் .///

///குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்
குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போமாக .////

நல்ல பதிவு.

Jeyamaran சொன்னது…

Anna arumaiyana pathivu...........
Nallathoru muyarchi..........
vaalthugal
HiFriends Entertainment

ஹேமா சொன்னது…

நல்லதொரு பதிவு !

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

ஜாதி ஒழிந்தால்
வேற்றுமை என்ற ஒன்று இல்லாமலே போய்விடும்
தீண்டாமை என்ற அறியாமை அகன்றுவிடும் .//

இதுக்குத்தான் பாடுபடணும் முதலில் நாம் அனைவருமாய் இணைந்து.

vijayan சொன்னது…

முதலில் இந்த மனமாற்றத்தை நம் வீட்டிலிருந்து தொடங்கவேண்டும்.அரசுபள்ளியில்தான் குழந்தையை சேர்க்கவேண்டும் என்பதை நம்முடைய தாய் தந்தை மற்றும் மனைவியை ஒப்புகொள்ள செய்யவேண்டும்.பொது கல்வி நம் காலத்தில் காண இறைவன் அருள் புரியட்டும்.

மதுரை சரவணன் சொன்னது…

good post... vaalththukkal

பெயரில்லா சொன்னது…

உங்கள் கருத்தை அட் வெர்பாட்டிம் கோட் பண்ணினால் இடத்தைய‌டைக்கும். எனவே பாரா 4ப் பார்க்க. அதில் நீங்கள் சொல்வதை நான் புரிந்தவரை எடுத்துச்சொன்னால்,

"அரசுப்பள்ளித்தவிற வேறு பள்ளிகள் கூடா; பெற்றோர் தம் பிள்ளைகளை அருகிலிருக்கும் அரசுப்பள்ளியில் சேர்க்கவேண்டும். ஆங்கு மாணவர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கா. தீண்டாமைக்கு இடமேயில்லை".

சரியா இராஜசேகரன் ?

முதலில் இஃது ஒரு பாசிசம். மக்கள் மீது அரசு ஒரு கொள்கையை, அதுவும் அவர்கள் குழந்தைகள் வாழ்வு சம்பந்தப்பட்டதை - திணிக்கவேண்டும் என்கிறீர்கள் நாளை அரசு சொல்லும் பெயர்களைத்தான் குழந்தைகளுக்கு இட வேண்டும்; அரசு சொல்லும் சட்டையைத்தான் அணியவேண்டும் என்பீர்கள். ஏனென்றால், அப்படி செய்யின் எல்லாருக்கும் கிட்டத்தட்ட ஒரே பெயர், அல்லது ஒரே துணி, அல்லது ஒரேவகையான வாழ்க்கை வரும், ஏற்றத்தாழ்வுகள் ஓடிவிடும் என்பீர்கள்.

என் குழந்தை எங்கு படிக்கவேண்டும்? என்பது என் உரிமை. என்னைவிட எவருக்கு என் குழந்தையின் எதிர்கால வளர்ச்சியில் அக்கறையிருக்க முடியும்? போகட்டும்.

அரசுப்பள்ளிகளில்தான் எனக்கட்டாயப்படுத்தினாலும், ஒன்றைக்கவனிக்க. ஓரூரில் ஒரு அரசுப்பள்ளி. பட்டணமெனில் ஒன்றுக்கு மேல் சிற்றூரில் மக்கள் ஜாதிவாரியாகப்பிரிந்துதான் வாழ்கிறார்கள். தலித்துகள் தனியாக அவர்கள் சேரியில் தான் இன்றும் வாழ்கிறார்கள். பள்ளியில் எவன் எந்தத் தெருவிலிருந்து வருகிறான் என்று தானாகவே தெரிந்து விடும் ஆசிரியருக்கும் பிறமாணாக்கருக்கும். எனவே தலித்து மாணவன் தீண்டாமைக்கு உள்ளாவது திண்ணம். தீண்டாமையை நேருக்கு நேர் செய்யவதில்லை. அதை இலைமறை காயாகவும் செய்வார் ஆசிரியர். தலித்து மாணவர்களைக்கேட்டால் சொல்வர்.

அரசுப்பள்ளிகள் தீண்டாமையைப்போதிப்பதில்லை. ஆனால் அழிக்கமுடியாது. தென்மாவட்டங்களில் - குறிப்பாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், கிராமப்புறங்களில் அரசுப்பள்ளிகள்தான், ஆனால் ஆங்கே மாணவர்களுக்கிடையே கடும் ஜாதிப்பிளவு உண்டு. ஆசிரியர்கள் பலர் தூண்டிவிடுவதுண்டு.

சென்னைச்சட்டக்கல்லூரி அரசுக்கல்லூரிதானே ?

Unknown சொன்னது…

நண்பரே, இப்போதுதான் தங்கள் பதிவை பார்த்தேன். good poste

சாதியுணர்வை, எல்லோரையும் கற்றவர்களாக ஆக்கினால்தான் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கமுடியும் என்பது என் கருத்து. மேலே சிம்மக்கல்லின் கருத்தையும் பாருங்களேன்.

மற்றபடி,
'குழந்தைகளை குலம் தை யாக வளர்த்தாமல்
குழந்தைகளை குழந்தைகளாக வளர்ப்போமாக' .
என்ற உங்கள் வரிகளோடு நான் 100 சதவீதம் உடன்படுகிறேன்

Unknown சொன்னது…

நல்ல சொன்னீங்க அண்ணா.

இந்த விசயத்துல நாம கூட சீனாவை (நாடு) பின் பற்றினால் சரியாய் இருக்கும் என்றே தோன்றுகிறது

அடக்குமுறை / பாசிசம் என்று யாரேனும் கருதினாலும் அது தேவையே..

Srikandarajah கங்கைமகன் Gangaimagan சொன்னது…

சிந்திக்க வைக்கும் கட்டுரை. அருமை!

பார்த்தீபன் சொன்னது…

SIR... I AGREE WITH YOU...

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "