இன்று இணையம் வந்தபொழுது இங்கு ஒரு ஆரோக்கியமற்ற அசாதரணசூழல் நிலவுவதை உணர முடிந்தது.
இச்சூழல் மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும்.
நமது நாடு காந்தீய சுதந்திர பூமி.
இங்கு யாருக்கும் ,எவருக்கும் ஒருவரை விட மற்றொருவருக்கு
அதிக அதிகாரமோ,உரிமையோ கொடுக்கப்படவில்லை.
யாரும் அப்படி எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்படவும் இல்லை.
கூடவும் கூடாது.முடியவும் முடியாது.
ஆனால் நடந்த சில நிகழ்வுகள் அப்படியில்லை என்பதனை காட்டுகிறது.
இனிய இணைய உலகில் ,நமது தாய் மொழி தனது மழலை நடையை ஆரம்பித்துள்ள இந்நிலையில் ,இது போன்ற அசாதரணசூழல் இணையத்தில், நம் மொழி பாவனையாளர்களை அதிரவைத்துள்ளது என்பது தான் மிகவும் வருத்தமான ஒன்றாக உள்ளது.
கருத்துரிமைக்கு எல்லையில்லை ,
இங்கு யாரும் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடவும் கூடாது.
இங்கு யாரும் யாருடைய சுதந்திரத்தையும் தடைபோடவும்
கூடாது.
இங்கு சுதந்திரம் மற்றும் கருத்துரிமை பற்றிய சரியான புரிதல் இல்லாதது தான் இத்தகைய அசாதரணசூழலுக்கு காரணம் .
இது பற்றி விரிவான புரிந்துணர்வை ஏற்படுத்தவேண்டும்.
இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இணைய பாவனையாளர்கள் சந்திப்பு ஒன்று கூட ஏற்பாடு செய்யலாம்.
மேலும் இணைய உலகில் நாம் அனைவரும் ஒருவரே.
இங்கு ஒருவருக்கொருவர் பகைமை கொண்டிருத்தல் என்பது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.
மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியது மட்டுமல்ல,
மதிக்கப்பட்ட வேண்டிய ஒன்றும் ஆகும்.
தமிழன் கடக்கவேண்டிய தொலைவுகள் மிகஅதிகம் .
நீங்கள் யாரென்று எனக்குத்தெரியாது ,
ஆனால்
உங்களின் நல்ல எழுத்துக்கள்
எனக்கு உறவு.
உறவுகளை மேம்படுத்துவோம்.
Tweet |
|
21 கருத்துகள் :
தமிழ் இணையம் இன்னும் பண்படவில்லை என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்!
ஆரோக்கியமான கருத்தாக இருந்தாலும் கண்பார்வை செல்வதென்னமோ காந்தியின் கொலைவழக்கு பற்றியே.வாயை மூடிக்கொள்ளாமல் அது பற்றி சொல்ல நினைப்பதுவே கருத்து சுதந்திரம்.கோட்சேவின் மரணவாக்கு மூலம் மாதிரியான எழுத்துக்களை படிக்க நேர்ந்தது.ஆனாலும் நான் காந்தியின் பக்கமே.இதனை சொல்வதற்கு காந்தி மீது கட்டியெழுக்கப்பட்ட பிம்பமல்ல காரணம்.
////
இங்கு யாரும் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடவும் கூடாது.
இங்கு யாரும் யாருடைய சுதந்திரத்தையும் தடைபோடவும்
கூடாது.
////////////
இதை அனைவரும் உணர்ந்தால் சரி...
எல்லாம் சகஜ நிலைக்கும் திரும்பும் என்று நம்புகிறேன்...
அருமையான பதிவு.
நன்றி.
மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் சந்தேகமில்லை சார். அப்படி வைக்கப்படும் மாற்றுக்கருத்துக்களை நாகரீகமான முறையில் வைத்தல் நலம்
அன்பின் நண்டு
மாற்றுக் கருத்துகள் இல்லாமல் எந்த ஒரு செயலும் வெற்றி பெறாது. ஆனால் சபை நாகரீகம் வேண்டும். எடுத்துக் கூறுவதிலும் ஒரு பண்பு வேண்டும்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
இங்கு யாரும் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடவும் கூடாது.
இங்கு யாரும் யாருடைய சுதந்திரத்தையும் தடைபோடவும் கூடாது.
மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படவேண்டியது மட்டுமல்ல,
மதிக்கப்பட்ட வேண்டிய ஒன்றும் ஆகும்.
தமிழன் கடக்கவேண்டிய தொலைவுகள் மிகஅதிகம் .
சிந்திக்க வைத்த வரிகள்.
தங்கள் கருத்துக்கள் முழுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்! வாழ்த்துக்கள்!
நீங்கள் யாரென்று எனக்குத்தெரியாது ,
ஆனால்
உங்களின் நல்ல எழுத்துக்கள்
எனக்கு உறவு.
உறவுகளை மேம்படுத்துவோம்.
>>
மிகச்சரியான வரிகள்
உன் கருத்தை முற்றிலுமாக மறுக்கிறேன்
ஆயினும் கருத்தைச் சொல்வதற்கான உனது
உரிமையை நான் மதிக்கிறேன் என ஒரு அறிஞன்
சொன்னது நினைவுக்கு வந்தது
வாழ்த்துக்கள்
நலமா?
//தமிழன் கடக்கவேண்டிய தொலைவுகள் மிக அதிகம்...//
மிகச்சரி...
அனைவரும் உணர வேண்டிய கருத்துக்கள்...
முடிவில் சொன்னது 100% உண்மை...
வழக்குரைஞர் சார்,
//கருத்துரிமைக்கு எல்லையில்லை ,
இங்கு யாரும் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடவும் கூடாது.
இங்கு யாரும் யாருடைய சுதந்திரத்தையும் தடைபோடவும்
கூடாது.
இங்கு சுதந்திரம் மற்றும் கருத்துரிமை பற்றிய சரியான புரிதல் இல்லாதது தான் இத்தகைய அசாதரணசூழலுக்கு காரணம் .
இது பற்றி விரிவான புரிந்துணர்வை ஏற்படுத்தவேண்டும்.
இது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இணைய பாவனையாளர்கள் சந்திப்பு ஒன்று கூட ஏற்பாடு செய்யலாம்.//
நீங்க சொல்வதை கேட்கும் போது சிலிர்ப்பாக தான் இருக்கு, ஆனால் ,
கொஞ்ச நாளுக்கு முன்னர்,
//தமிழக முதல்வர் அம்மா அவர்களை ஆபாசமாக சித்தரித்ததற்கு வன்மையான கண்டனங்கள் .//
அப்படின்னு சொல்லி இருக்கீங்க, இப்போ யாரோட அம்மா தமிழ் நாட்டுக்கு முதல்வராக இருக்காங்கன்னு சொல்லுறிங்க?
காந்திக்கே தேச தந்தைன்னு பட்டம் இல்லைன்னு மத்திய அரசு சொல்லியாச்சு, ஆனாலும் தமிழ்நாட்டு முதல்வர் யாருன்னு சொல்லாம அம்மான்னு சொல்லும் உங்கள் கருத்தை நம்பி எல்லாம் ஓடியாரனுமா :-))
----------------
http://marchoflaw.blogspot.in/
இது உங்க வலைப்பதிவா, நான் உங்க பதிவுன்னு நினைச்சு அங்கே ஒரு மேட்டர் சொல்லிட்டேன்.
நீங்க தான் "வீடு திரும்பல் மோகன் குமாருக்கு" சட்ட ஆலோசனை சொன்னதுன்னு தெரிஞ்சா மேற்கொண்டு பேசுகிறேன்.
ஏன் எனில் கருத்து சுதந்திரம் பத்தி பேசும் போது , அதனை ஆதரிக்கும் மனசும் இருக்கும்னு நினைக்கிறேன்.
-------------------
//தமிழன் கடக்கவேண்டிய தொலைவுகள் மிக அதிகம்...//
நன்று சொன்னீர்
ஓகெ ஓகே!
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_12.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்...
எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "