வெள்ளி, 1 நவம்பர், 2013

படேல் தான் பிரதமராகி இருக்கவேண்டும்-மோடியின் பேச்சின் பின்னணி என்ன ?

உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடிக்கல்: மோடி, அத்வானி பங்கேற்பு






படேல் தான் பிரதமராகி இருக்கவேண்டும்,அப்படி நடந்திருந்தால்
 நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்  என்ற மோடியின் பேச்சு பற்றி பலர் பலவிதமாக தங்களின் அனுமானங்களை கூறிவருகின்றனர்
.இப்படிப்பட்ட அனுமானங்களை படிக்கும் பொழுது எனக்கு அவர்களின் மீதிருந்த  மரியாதை குறைவதோடு ,இன்னும் கற்காலத்திலேயே அவர்கள்  இருப்பதால் அவர்கள் மீது அனுதாபமும் ஏற்படுகிறது.உண்மையில் இவர்கள் அறிந்துள்ள வரலாறு மிகவும் அபத்தமான வரலாறாகும்.அவையால் நமது இந்தியாவிற்கு இன்னும் கொடுதலே நேரும். வரலாற்றை பகுத்தறிவுடன் நோக்குவோர் இங்கு யாரும் இல்லை.படிப்பறிவுடனே நோக்குவதால் தான் இத்தனை முரண்பாடுகள்.


சரி மோடியின் பேச்சிற்கு வருவோம்.படேல் தான் பிரதமராகி இருக்கவேண்டும்.இது  சரியாக என நோக்க ,
படேல் பிரமராகி இருப்பார் ,ஆனால் ஏன் ஆகவில்லை ?.என்பதற்கான பதிலே சரியான ஒன்றாக இருக்கும்.

இதற்கான பதில் ,மிகப்பெரிய வரலாற்று மறைப்புகளை வெளிக்கொணர்ந்து ,மிகப்பெரிய வரலாற்று உண்மையும் வெளிப்படுத்தும் என்பதுவே உண்மை.
நீண்டகாலமாகவே நான் இது குறித்து  ஆய்ந்துவருகிறேன்.இப்போதும் கூட ,அது நீண்ட ஆய்வு,இந்தியா பற்றிய முழுமையான ஆய்வு.அதில் ஒரு பகுதி தான் இது ,மிகவும் சிறிய ஆனால் சிக்கல்கள் நிறைந்த பகுதி.இந்தியர் அனைவரும் தெரித்துகொள்ளவேண்டிய பகுதி.காந்தியின் இன்னொரு பகுதியும் இது ஆகும்.

இது பற்றி சுருக்கமாக கூறுவது மிகவும் கடினம் ,எனினும்  சுருக்கமாக கூறுவதென்றால் மோடி சொல்வதில் நியாயம் உள்ளது.
எவ்வாறு எனில், சிலதை மட்டும் கூறுகிறேன்.

சுதந்திரம் நெருங்க நெருங்க,பதவி ஆசை கொண்ட சில காந்தியின் சீடர்களின் செயல்களால், காந்தி மிகவும் மனமுடைந்தே தனது செயல்பாடுகளை செய்துவந்தார்.காந்திக்கு இந்தியாவின் விடுதலை  மட்டுமே ஒரே குறிக்கோளாக இருந்தபடியால்  தனது சீடர்களின் பதவிவெறியை அவர் சகித்தே வந்தார்.மக்களுக்கான சுதந்திரம் மட்டுமே அவருக்கு முக்கியம் என்பதால் ,தனது சீடங்களின் செயலை மறக்க ஆன்மீக பயணத்தில் மனத்தை லயித்தார்.மக்களையும் அதில் இணைத்தார்.அதனால் தான் அவரின் வாழ்வில் ஆன்மீகம் ஒரு அங்கமாகவே இருந்துவந்தது.

அவரின் சகிப்பை அவரின் சீடர்கள் சிலர் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டனர்.காந்தி உயிருடன் இருந்தவரை தங்களின் சுயத்தை மறைத்து நல்லவர்கள் போல் நடித்து  அவரை ஏமாற்றியே வந்தனர் ,அவரின் மறைவிற்குப் பின் தான் அவர்களின் கோரமுகத்தை இந்தியா பார்த்தது
அதன் நீட்சி தான் இன்றைய இந்தியா.

தொடரும்.....







படங்கள் உதவி நன்றி  ;தினமலர் @ கூகுள்  

Download As PDF

8 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பொறுத்திருந்து பார்ப்போம்...

தொடர்கிறேன்...

மகேந்திரன் சொன்னது…

மீட்கப்படும் வரலாற்று நிகழ்வுகள்...
தொடருங்கள் நண்பரே..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஆவலுடன் தொடர்கிறேன்!

Unknown சொன்னது…

தொடருங்கள், காத்திருக்கிறோம் !

கும்மாச்சி சொன்னது…

தொடருங்கள், தொடர்கிறேன்

Astrologer sathishkumar Erode சொன்னது…

ஒரே பதிவா முடிச்சிருக்கலாம்..காந்தியின் சதியசோதனை ஆராய்ச்சிக்கு எல்லாசப்ளையும் செய்தவர் நேரு...காந்தியின் ஆசிரமத்தின் எல்லா செலவும் அவருடையது..அதுக்கு பரிசு பிரதமர் பதவி..படேல்க்கு அப்படி குறுக்கு வழி தெரியவில்லை..அவர் நேர்மையாபவர்..அதனால் பிரதமர் ஆக முடியவில்லை

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "