புதன், 28 டிசம்பர், 2016

முட்டாள் பணக்காரனாக காரணம் என்ன ?.



நொரண்டு   வணக்கம் நண்டு .

நண்டு வாங்க நொரண்டு .

நொரண்டு :  எனக்கு ஒரு சந்தேகம்.

நண்டு : ம் ...என்ன சந்தேகம்.

நொரண்டு நம்ம  ஒளவையார் -நல்வழி யில் பாவிகளின் பணம்   என்று

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம். 

என்ற பாடலை வகைப்படுத்தியிருக்காங்களே  இது சரியா ?.

நண்டு : ம் ...

நொரண்டு :  எனக்கு புரியல.

நண்டு :  என்ன புரியல .

நொரண்டு 
அட,இதுக்கு அர்த்தம் -
பாடுபட்டு  பணத்தினை தேடி பூமியில் புதைத்து வைக்கும் கேடுகெட்ட மனிதர்களே ,கேளுங்கள் . உயிர் நீங்கிய பின்பு அந்தப் பணத்தை யார் அநுபவிப்பார்   என்கின்றனர்.
அதில் தான் எனக்கு  .....அது சரியா என்று ...

நண்டு :  ஔவையிடம்  கேட்டா  தான் இது சரியானு சொல்லியிருப்பாங்க .

நொரண்டு ஔவியம்  பேசதே .

நண்டு : இல்லப்பா ...இல்ல...நாம இந்த தப்ப தான் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு வரோம் .அதான் சொன்னேன்.

நொரண்டு : அத விடு ...சரி நீ என்ன சொல்ல வர்ர ?.

நண்டு  என்னைக்கேட்டா

'' பாடுபட்டுத் தேடி சேர்த்த அறிவினை (பணத்தினை)  ,அனைவரும் அறிந்துகொள்ளமுடியாத வண்ணம்,பொதுவினில் பெற்ற அறிவினை , பொதுமைப்படுத்தாமல் ,ஒருசிலருக்குள்ளே மட்டும் புதைத்துவைத்து திரியும் உலகில் கெட்ட மானிடரே கேளுங்கள் .கூடுவிட்டிங் காவிதான் போயினபின்பு யார் அநுபவிப்பார் வீணாகப்போகும்  அந்த  அறிவை . ''
என சொல்லுவேன்.

நொரண்டு : எனக்கு  புரியல.

நண்டு : என்ன புரியல ?.

நொரண்டு : நல்லா புரியும்படி சொல்லுப்பா .

நண்டு : முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லு ,அப்புறம் உனக்கு புரியும் ...

நொரண்டு : ம் ... கேள் ... சொல்ரேன்.

நண்டு :பேர் சொல்லா மருந்து தெரியுமா ?.

நொரண்டு : ம் ... கேள்வி ப்பட்டதா இருக்குப்பா.

நண்டு :  எங்க கேள்விப்பட்ட .

நொரண்டு : எங்க அம்மாய் வூருல.

நண்டு :ம் ...

நொரண்டு :அங்க நான் முன்னாடி போனப்ப ...

நண்டு :விசயத்துக்கு வா.

நொரண்டு வயதான பாட்டி ஒருத்தங்க ஔடதம் பார்த்தாங்க.அப்ப அவங்க  பொடி ஒன்னு கொடுத்தாங்க .நான் என்னனு கேட்டேன்.அதுக்கு அவர் பேர் சொன்னா பலிக்காது.நீ அத கேட்காதே ,உன் நோவு சரியாகாது,பாத்துக்க ,என்றார்.நானும் நோவு சரியாச்சினா போதும்னு வந்துட்டேன்.

நண்டு சொன்னா பலிக்காதா... வைத்தியம் .

நொரண்டு :  இல்லப்பா அது தலைமுறை  வைத்தியம்.அவங்களுக்கு மட்டும் தான் அது கைவரும்.பலிக்கும்.

நண்டு :ம்...இது மடமை.நோய் பொதுவா,அனைவருக்கும்  வரும்பொழுது , மருந்து மட்டும் ...எப்படிப்பா ...?.

நொரண்டு : ஏப்பா திரும்பவும் ஔவியம்  பேசார . அவங்க பரம்பரயா பணக்காரங்க தெரியுமா ,ஔடதம்  பார்த்து தான் பிழைக்கனும்னு அவசியம் இல்ல தெரியுமா.


நண்டு இங்கு முட்டாள் பணக்காரனாக  இருக்க காரணம் என்ன என்று தெரியுமா?.

நொரண்டு : தெரியாது ,நீயே சொல்லு  .

நண்டு :  

'' பரம்பரை பரம்பரையாக அறிவின் வெளிப்பாட்டினை சுரண்டி பிழைப்பிற்கு பயன்படுத்தி  வாழ்ந்து வளம் பெற்று நகர்ந்து வரும் வாரிசாக முட்டாள் இருப்பதால்  பணக்காரனாக இருக்கிறான். '' 



நொரண்டு : ஓ....ஓ....

நண்டு :அறிவில்லாமல் வாழ்பவன் பிணத்திற்கு ஒப்பாவான்.

நொரண்டு :  நடை பிணம் .

நண்டு :  ஆமாம்.

நொரண்டு பணம் இல்லாட்டித்தான்  பிணம் என்று பொதுவா  கூறுவர்.

நண்டு : ம்...

நொரண்டு :  என்னப்பா ம் னு சொல்ற.

நண்டு :ஆமாம்பா ,அறிவில்லாதவன் பிணம் தானே.

நொரண்டு : அப்ப நீ பணம் என்பதற்கு அறிவுனு பொருள்படுத்திக்கொள்றா.

நண்டு ம் ...

நொரண்டு :அப்புறம் மேல சொல்லு.

நண்டு :நம்ம ஆளுக பணம் என்ற பதத்தை செல்வத்திற்கு தாரைவார்த்து விட்டனர் ஔவை பாட்டில்.

நொரண்டு : என்ன சொல்ற.


நண்டு :அவங்க காலத்துல நாம இப்ப பயன்படுத்தும் பணம் என்பதற்கான அர்த்தம் இல்ல.  

நொரண்டு :  ஓ. 

நண்டு : ஆனால்,பாடல் தரும் பல அர்த்தங்களில் செல்வத்தை  மட்டுமே பிரதானமாகிவிட்டது ....நிகழ்வுகளில்.

நொரண்டு : ஏன்?

நண்டு :அத பிறகு பாக்கலாம்.

நொரண்டு :இதத்தான்  பாரதி நல்லதோர் வீணை  என்றாரே.
திருமூலர்   உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே  என பாடினாரே.


நண்டு : இன்னும் கேள்.



இன்று ஆள் பாதி ஆடை பாதி என 
ஆடையில் மறைந்துகொண்டான் மனிதன்,
அதனால் ஆளைவிட ஆடை முக்கியம்  என்றாகிவிட்டது இன்று  .


நொரண்டு : ம் ....

நண்டு இன்னும் கேள்.

அறிவை அணிய வேண்டிய  மனிதம் ஆடம்பரத்தில் அழிந்துவருகிறது.

அறிவை வளர்கவேண்டிய மானுடம்,ஆசைகளையும் ,அதிகாரத்தையும் வளர்த்துக்கொண்டு அவஸ்தைப்படுகிறது.

மூளையை மகிழ்விக்கவேண்டிய பிறப்பு ,பிற  உறுப்புகளை  மகிழ்கிறது மடிகிறது.

பிறப்பின் பயணம் தெரியாமல் எங்கொங்கோ பிண்டமாக பயணப்பட்டு சென்றுகொண்டுள்ளது.

நொரண்டு : சரிதான்.


நண்டு :

இந்த உடம்பு அறிவை வளப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டது .
ஆனால்,நாம் அறிவை வளப்படுத்தாமல், அழகுபடுத்தாமல் உடம்பை அழகு படுத்தியும் .அதையே  முதன்மைப்படுத்தியும் , அதனை மட்டுமே இன்பப்படுத்தியும் ,அதில் கிடைப்பது  மட்டுமே ஆனந்தம்  அதுவே வாழ்வு என வாழ்ந்து மடிகிறோம்.

இன்றைய மனிதனின் அத்தனை கேட்டிற்கும் இதுவே காரணம்.









.

இது மீள்வு...
Download As PDF

11 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உண்மை
அருமை
தங்களை வலையில் சந்தித்து நீண்ட நாட்களாகிவிட்டன நண்பரே
தொடர்ந்து எழுதுங்கள்

the poles "colonelpaaganesanvsm.blogspot.com" சொன்னது…

வணக்கம் நண்பரே.வலைப்பூவில் சந்திதிப்பது மகிழ்ச்சி.
சுவையான பதிவு.

'பசி'பரமசிவம் சொன்னது…

பாடல்களுக்குப் புதிய கோணத்தில் விளக்கம் தந்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...!

வாங்க தல... தொடர்ந்து நான் வாசிக்க வேண்டும்...

ப.கந்தசாமி சொன்னது…

அய்யகோ, என்னே நான் செய்த கர்மம், ஊழ்வினை இப்படி ராஜசேகரன் ரூபத்தில் வந்து உறுத்துதே!

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

Super

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

Super

Unknown சொன்னது…

அது அவ்வை சொன்னது ,அதில் அர்த்தம் உள்ளது :)

KILLERGEE Devakottai சொன்னது…

ஸூப்பர்

Shan Nalliah / GANDHIYIST சொன்னது…

GREAT...WRITE MORE STORIES!..SHORT & SWEET!

Keelakalangal Karan சொன்னது…

உங்களுடைய தர்க்கம் மிக நன்றாக உள்ளது. ஆனால் அதில் உண்மை இல்லை. ஒரு சில வைத்திய முறைகளில் ஒரு சில மந்திரம் உண்டு. அதை அந்த குறிப்பிட்ட நபர் அளித்தால் மட்டுமே மருந்து வேலை செய்யும். அதை அனுபவப்பட்டால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். நாம் அதே மருந்துகளை தயார் செய்து அளித்தாலும் வேலை செய்யாது.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "