ஞாயிறு, 11 டிசம்பர், 2011

என்று தனியும் இந்த சுதந்திர தாகம் ...

பாரதி ஒரு கவியா ?
பாஞ்சாலி சபதம் ஏன் எழுதினார் ?
இப்படியான கேள்விகளில் ஆரம்பித்தது பயணம்.
இன்னும் என்னுள் பாரதியைப்பற்றிய அறியாமை இருந்துவருகிறது.
ஆனால்,இன்னும் அவர் உயிர்ப்புடன் தேவையாக இருப்பதை காலம் கண்முன் காட்டுகிறது.


இந்த காணெளி அதனை பாடுகிறது .பார்க்க




பாரதி பற்றி சில :

பாஞ்சாலி சபதம் 1924ல் தான் முழுமையாக வெளிவந்தது.
1919 நவம்பர் 5ல் கானாடுகாத்தான் திரு.வயி.சு.சண்முகம் செட்டியாருக்கு பாரதி எழுதிய கடிதத்திலிருந்து பாஞ்சாலி சபதம் 2-ம் பாகம் 1919லேயே கையெழுத்து படியாக முடிவுற்றிருந்தது என அறியமுடிகிறது.அந்த காலத்தில் வறுமையிலும்,சொல்லொணாத் துயரத்திலும் பாரதி வசிந்துவந்துள்ளார் என்பதும்,அத்தகைய வறுமையிலும் சொல்லழகும்,பொருளழகும் அமைய அழகிய உணர்ச்சிச்சித்திரமாய் சந்தப்பாக்களால் பாஞ்சாலி சபதம்  படைத்துள்ளார்  எனவும் அறியமுடிகிறது .


அடுத்தவர் (அன்னியர்)மீது ஆத்திரத்தை வளர்த்துவிட்டால் மட்டும் தேசிய உணர்வு உறுதி பெற்றுவிடாது ,அது வீண் ,ஆக்க வேலைகளை செய்து காத்து வளர்க்க வேண்டி ஒன்று தேசிய உணர்வு என்பதில் ஆணித்தரமாய் இருந்தார்.


நாட்டிற்கு தேவையான பொதுக்கல்வியை  வற்புறுத்தினார் .

தர்மத்தை துலாக்கோலாய்,தர்க்க நுட்பங்களை எடைகளாய்க்கொண்டு,சிந்தனையை சரக்காய் விற்று தாம் நடத்திய தராசுக் கடை வியாபாரத்தை ஒரு கட்டுரையிலே பாரதி விவரிக்கின்றார்.
அருகிலே இருக்கும் பொருள் நேரே தெரியாமல்,தூர இருக்கும் பொருள் மட்டும் துலங்குகின்ற தூரப்பார்வை கொண்ட வழக்கறிஞர் ஒருவர்,தராசிடம் வந்து ,

'நமது தேசத்துக்கு காருண்ய கவர்ன்மெண்டார் நமக்கு எப்பொழுது ஸ்வராஜ்யம் கொடுப்பார்கள்?'என கேட்டாராம்.

ஒவ்வொரு கிராமத்திலும் ஜனத்தலைவர் பள்ளிக்கூடங்கள் வைத்து,தேச பாஷைகளில் புதிய படிப்பு சொல்லிக்கொடுக்க ஏற்பாடு செய்தால்,உடனே கொடுத்துவிடுவார்கள்' என்று தராசு பதில் தந்தது.

'அது எப்போது முடியும் ?'என வழக்கறிஞர் பதட்டத்துடன் கேட்க,

'நீர் போய் நான்கு கிராமங்களில் நான் சொல்லியபடி பள்ளிக்கூடங்களை ஏற்பாடு செய்துவிட்டுப் பிறகு வந்து கேளும்,சொல்கிறேன்'என்று தராசு பதிலளித்தது.

இதிலிருந்து அவரின் தொலைநோக்கு பார்வை தெளிவாகிறது என்பதோடு வாத விவாதங்களுக்கு அப்பால் செயலுக்கு உந்தும் அவரின் அறைகூவல் தெரிகிறது.


'வேறு வேறு பாஷைகள் -கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ'
 
  என

போலி மோகத்தில் இருக்கும் மொழிஅடிமைகளை  போ...போ...போ ...என விரட்டுகிறார்.



'வீமாதி வீரர் விளித்தெங்கு போயினரோ !
ஏமாறி நிற்கு மிழிஞர்களிங் குள்ளாரே'
  -என நொந்துகொள்கிறார் .


'ஆணெலாம் பெண்ணாய் அரிவையரேலாம் விலங்காய்
மாணெலாம் பாழாகி மங்கிவிட்டதிந் நாடே'

என்று மறைந்த மாண்பை ,பறி கொடுத்த பெருமையை ,இழந்த அனைத்தையும் நினைத்து ஏங்கி ,உயர உறுதிபூண ஊக்கம் பெற துடிப்பினை ஊட்டுகிறார்.


நாம் எவ்வளவுக்கெவ்வளவு அறியாமையில் இருக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு பாரதியின் தேவையும் இருக்கும் .


சரி இன்று நாம் ,
நாம் மறந்தவிட்ட விடயங்களை பட்டியலிட்டுப்பார்க்கலாமா ?.

1. முள்வேலி .
மற்றவற்றை நீங்கள் நினைவிருந்தால் கூறுங்கள் .





.








நன்றி : யூடியும் மற்றும் இணையம்.
.
Download As PDF

36 கருத்துகள் :

சக்தி கல்வி மையம் சொன்னது…

முண்டாசுக் கவி.. நினைவூட்டலுக்கு நன்றி..

Admin சொன்னது…

அருமையான விசயங்களை சொன்னீர்கள்..

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமை

கும்மாச்சி சொன்னது…

பாரதி பற்றி அருமையான விஷயங்கள் கொடுத்து அவர் பிறந்தநாளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

யு டான்சில் இணைத்த சகோ கும்மாச்சி அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் பல .

மாலதி சொன்னது…

barathi patriya muranpadukal thamizhakaththilundu iruppinum parathi parattukkuriyavar idukaikku parattukal...

ADMIN சொன்னது…

யாருக்கேனும் பாரதியைப் பிடிக்காமல் இருக்குமா என்ன? அவரின் எழுச்சி மிகுந்த பாடல்கள் அல்லவா சுதந்திரத்திற்கு வழிவகுத்தது. ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்திலும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியதல்லவா அவரது பாடல்கள்.. இன்று பாடினும் எழுச்சி பொங்க வைக்கும் அவரது கவி வரிகள்.. இன்று மட்டுமல்ல ... என்றும் உயிர்ப்புடன் இருக்கும்.

பகிர்வுக்கு நன்றி ராஜசேகரன் அவர்களே..!!

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி சொன்னது…

முண்டாசுக் கவியை முழுமையாய்
நினைவுபடுத்திய பதிவு...

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி சொன்னது…

முண்டாசுக் கவியை முழுமையாய்
நினைவுபடுத்திய பதிவு...

Riyas சொன்னது…

பாரதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Sadiq சொன்னது…

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி
பாரதியின் வார்த்தைகள்-இல.கணேசனின் குரல்வளையாக, ராம.கோபாலனின் குரல் வளையாக காலத்தைத் தாண்டியும்-நம் காதுகளில் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

ஆம், அந்தப் புரட்சிக்கவி பாரதி விரும்பிய மாற்றம் இதுதான், கேவலத்திலிருந்து கழிசடைக்கு மாறுவது.”

“காசி, நகர்ப் புலவர் பேசும் உரைதான்

காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’ என்கிறார்.

இதை காவுக்கு கா போடுகிற, வெறும் கவிஞனின் மனோபாவம் என்று சுருக்கிவிட முடியாது. இந்திய நகரங்களை இணைத்துப் பார்க்கிற ஒரு தேசியக் கவியின் சிந்தனை என்று நீட்டி முழங்கவும் முடியாது. தேசிய கவிஞனாக மட்டும் இருந்தால்,

‘காஷ்மீர், நகர்ப் புலவர் பேசும் உரைதான்

கன்னியாகுமரியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்’

என்று பாடியிருக்க வேண்டும். ஆனால், பாரதியின் அந்த வரி, அப்பட்டமாக பல் இளிக்கும் பார்ப்பனியம்தானே.

சரி, மற்ற ஊர் புலவர்கள் பேசாத அளவுக்கு அப்படி என்ன, உலக மகா தத்துவத்தை காசியில் இருக்கிற புலவன் பேசிவிடப் போகிறான்? அப்படியே பேசினாலும் அதை உடனே காஞ்சிபுரத்துக்காரன் மட்டும் கேட்க வேண்டிய கட்டாயம் என்ன?

“வேற ஒண்ணுமில்லீங்க தோழர், காசியில் இருக்கிற வேதம் படிச்ச ‘பெரியவாளெல்’லாம், மார்க்சிய அடிப்படையில் புரட்சிகர திட்டங்களை வகுத்து, உடனடியாக காஞ்சிபுரத்து ஜெகத்குருக்களிடம் தெரிவித்தால் – ‘ஜகத்குரு’- லோகத்துக்கு அதைச் சொல்லி மக்களைப் புரட்சிக்கு உசுப்பி விடுவார்னு’ சொன்னாலும் சொல்வார்கள்-மார்க்சிய பாரதியவாதிகள்

for further reading: http://mathimaran.wordpress.com/mybooks/

பெயரில்லா சொன்னது…

தலைப்பில் தனியும் என்பதை தணியும் என்று மாற்றிவிடுங்கள் சார்.

பெயரில்லா சொன்னது…

பாரதி புகழ் ஓங்கட்டும்.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

M.R சொன்னது…

நல்ல தகவல் நண்பரே,பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே

Unknown சொன்னது…

முண்டாசுக் கவி..! நினைவூட்டலுக்கு நன்றி..!


புலவர் சா இராமாநுசம்

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான காணொளியுடன் கூடிய
அருமையான பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
த.ம 11

தினேஷ்குமார் சொன்னது…

மீசைக்காரர் மாகாகவிக்கு தலை வணங்குகிறேன் ...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பாரதியை பற்றி தெரியாத சில விஷயங்களை அறிந்து கொண்டேன்...!!!

shanmugavel சொன்னது…

நாளுக்கேற்ற நல்லதொரு பதிவு,நன்றி.காணொளி அருமை.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பாரதிபற்றிய நல்ல நினைவூ்ட்டல்.

SURYAJEEVA சொன்னது…

நாம் மறந்த விஷயங்கள்...

வெண்மணி...
கப்பலோட்டிய தமிழன்...
அம்பானி திடீர் பணம் படைத்தவர் ஆனது எப்படி?
அலைகற்றை ஊழலில் நீரா ராடியா, டாட்டாவின் பங்கும்..
பழைய ஊழல்களின் பட்டியல்..
இன்னும் எவ்வளவோ பட்டியல் நீண்டாலும்
இறுதியில்
நம் நினைவுக்கு வரவே வராத விஷயம்
கஷ்டப் படுபவன் ஒன்று சேர வேண்டிய கட்டாயத்தை...

ananthu சொன்னது…

பாரதியை பற்றிய பகிர்வுக்கு நன்றி ...!

ஹேமா சொன்னது…

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்....கேட்டுவிட்டுப் போய்விட்டார்.நாங்களும் கேட்டபடிதான் இன்னும்.இருந்திருந்தால் வேறொன்று பாடியிருப்பார்.மறக்கமுடியுமா மீசைக்கவிஞனை !

முள்வேலியை தமிழர்கள் நிச்சயம் மறக்கமாட்டார்கள் !

ananthu சொன்னது…

ஒரு வேண்டுகோள் ...! எல்லோரும் இந்தியர் , இந்தியா முழுவதும் ஒன்றே என்ற அர்த்தத்தில் எழுதப்பட்ட தேச பக்தி பாடலில் கூட பிரிவினையை புகுத்தும் மறுமொழிக்கு ஒரு சின்ன விளக்கம் ...

நில்லாது சுழன்றோட நியமஞ்ச்செய்தருள் நாயகன்
சொல்லாலு மனத்தாலுஞ் தொடரொணாத பருஞ்சோதி ! ... இப்படி பாரதி பாடியது வேறு யாரை பற்றியுமல்ல ... அல்லாவை பற்றி...!

கோகுல் சொன்னது…

தக்கதோர் பகிர்வுக்கு நன்றி!

நான் எனது பதிவில் சொல்லியிருந்தபடி
எல்லாவற்றையும் மறந்து விட்டு அடுத்த விசயம் என்ன என்பதிலே காலம் ஓடி விடுகிறது.

Kanchana Radhakrishnan சொன்னது…

நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.
December 11, 2011 6:50 PM

துரைடேனியல் சொன்னது…

Arumai. Bharathi Oru KAVI SOORIYAN.

TM 16.

மகேந்திரன் சொன்னது…

முண்டாசுக் கவிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

MyKitchen Flavors-BonAppetit!. சொன்னது…

Arumai.Azhntha Karuthukal.Vazhthukkal.

சசிகுமார் சொன்னது…

நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.

http://www.change.org/petitions/central-government-of-india

நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.


பதிவர் நண்பர்களே இந்த செய்தியை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் நம் சமூகத்தை காக்க உதவுங்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

பல அடர்த்தியான விஷயங்கள் நிறைந்த பதிவு களை வெளியிட்டுள்ள தாங்கள் எனது பாரதிபற்றிய கவிதைக்கு கருத்திட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Advocate P.R.Jayarajan சொன்னது…

//'வேறு வேறு பாஷைகள் -கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ'//

இன்றைய விவாதப் பொருளை அன்றே காட்சிக்கு வாய்த்த பாரதி வாழ்க..!
நினைவு கூர்ந்த உங்கள் பதிவு வளர்க..!!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை!
பகிர்வுக்கு நன்றி நண்பரே!

RAMA RAVI (RAMVI) சொன்னது…

பாரதியை பற்றி மிக அருமையான பதிவு.நன்றி பகிர்வுக்கு.

ராஜி சொன்னது…

மீசைக்காரனை பற்றி பதிவிட்டதற்கு நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "