வெள்ளி, 16 நவம்பர், 2018

பொது வெளியின் இன்றைய நிலைஒவ்வொருவரும்
தனது கனவு வெளியை 
திறந்து வைத்து  ...

அவரவர் 
கனவு வெறியை  மொய்க்க
மற்றவர்களை அழைக்கின்றனர்.

அதனில்
தனது கனவு வெளியை மொய்ப்பவர்களை
விட்டில் பூச்சிகளாக்கி 
மாய்க்க பெரு முயற்சி செய்கின்றனர் 
களவு வெறியுடன் .

அதில்
பூச்சிகளானவர்களை  மதிக்கின்றனர்,
மற்றவரை கொந்தளிக்கின்றனர்.

அந்த
கனவு வெளியில்
களவு வெறி மட்டுமே  மிஞ்ச
கடந்து செல்கின்றனர் 
கல கலப்புடன்
பல சலிப்புடன் .


இணையவாசிகளும் சரி
இலக்கியவாதிகளும் சரி
இயக்கவாதிகளும் சரி
இதைத்தான் செய்கிறார்கள்.
இதுதான்  இன்றைய  பொது நிலை ..


Download As PDF

3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி தான்...

நலம் தானே தோழர்...

KILLERGEE Devakottai சொன்னது…

உண்மை நண்பரே...

Yarlpavanan சொன்னது…

அருமையான வரிகள்
பாராட்டுகள்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "