திங்கள், 22 பிப்ரவரி, 2010

ப்ளாக்கர் உலகமும் -பழகா நட்பும் .

ஜெகநாதன் has left a new comment on your post "நம்மில் நாம் பிறப்போம் ,வாழ்வை வசந்தமாக்குவோம்.":

நண்டு@நொரண்டுதான், நான் தேடிக்​கொண்டிருந்த​டோமி என்று தெரியாமல் போயிற்று.
3 வரிகள் மட்டும் எழுதும் ​டோமியிடமிருந்து இப்படி வித்யாசமான ​செறிவான ​சிந்தனைகளைப் படிக்க சுவாரஸியமா இருக்கு!

தொடர்ந்து நடப்போம்!Posted by ஜெகநாதன் to நண்டு @ நொரண்டு at February 22, 2010 6:56 AM


இதைப்படித்ததும் எனக்கு கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட உணர்ச்சி ஒத்த நட்பு தான் கண்முன் காட்சியானது .

பாண்டிய நாட்டில் பண்டைக்காலத்தில் பிசிராந்தையார் என்ற அருந்தமிழ்ப்புலவர் வாழ்ந்துவந்தார் .அப்புலவர் சான்றாண்மைப் பண்புகள் ஒருங்கமைந்த ஆன்றோராக விளங்கினார் .பிசிராந்தையார் பாண்டிய நாட்டில் வாழ்ந்த காலத்தே சோழவள நாட்டை கோப்பெருஞ்சோழன் என்பவர் ஆண்டு வந்தார் .அவர் தமிழில் பெரும் புலமையுடையவர் .'புல மிக்கவரை புலமை தெரிதல் புலம் மிக்கவர்க்கே புலனாம்' என்பது பழமொழி .சோழனுடைய தமிழ்ப்பற்றினால் புலவர் பெருமக்கள் அவர் அன்பிற்குறிய நண்பர்களாய் அல்லும் பகலும் அவரை விட்டகலாது அவர் உடன் உறைந்தனர் . பாண்டிய நாட்டுப் பைந்தமிழ் புலவர்களின் வாயிலாக பிசிராந்தையாரின் பெருமையை அறிந்தார் கோப்பெருஞ்சோழன் .அவரைக்கண்டு அளாவளாவ்வேண்டும் என்ற வேட்கை சோழனுக்கு உண்டாயிற்று .அது பின்னர் சோழனின் உள்ளத்தில் பெருநட்பாய் மலர்ந்து மணம் வீசலாயிற்று .

கோப்பெருஞ்சோழன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு துன்ப நிகழ்ச்சியால் ஏற்பட்டவிருந்த பெரிய மானக்குறையை தவிர்க்க ,மானம் இழந்து உயிர் வாழ விரும்பாத சோழன் தனது ஆட்சிப்பொறுப்பைத் துறந்து இழிவைப்போக்கிக்கொள்ள வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தார் .காவிரியாற்றங்கரையில் வடக்கிருக்க இடங்கள் வகுக்கப்பட்டன.அப்போது சோழன்,'பிசிராந்தையார் என் ஆருயிர் நண்பர் .அவரும் என்னுடன் வடக்கிருக்க வருவார் .அவருக்கு எனக்குப் பக்கத்தில் இடம் ஒதுக்கி வைக்கவும் ' என ஆணையிட்டான் .அதுகேட்ட ஏனைய புலவர்கள் வியப்புற்று ,'அரசே! பாண்டி நாடு தொலைவில் உள்ளதே .பிசிராந்தையாரை தாங்கள் ஒருமுறைகூடக் கண்டதும் இல்லை;பழகியதும் இல்லையே! நீங்கள் இருவரும் கேள்வியளவிலேயே நட்புக்கொண்டீர் .அவ்வாறு இருக்க எவ்வாறு வருவார்?' என ஐயமுற்று உரைத்தனர் .அதுகேட்ட சோழன் 'புலவர் பெருமக்களே ! ஐயம் வேண்டாம் .நாங்கள் கேள்வியளவிலேயே நட்புக்கொண்டாலும் எங்கள் நட்பு மிகவும் உறுதியானது.நிச்சயமாக வருவார்.ஆதலால் அவருக்கு ஓர் இடம் ஏற்படுத்துங்கள்,'என்று கூறிக்கொண்டிருக்கும் போதே பிசிராந்தையார் அவர்கள் முன் வந்து நின்றார் .அது கண்டு அனைவரும் திகைத்து நின்றனர் .மன்னர் உரைத்த உரை பழுதாகாமல் அங்கு சேர்ந்தபிசிராந்தையாரின் உணர்ச்சி ஒத்த நட்பின் திறத்தினை பலவாறு பாராட்டினர் .

இதனை கண்ணகனார் என்னும் புலவர்

' பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங் கென்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே ' -

என்ற அழகிய செந்தமிழ்ப்பாடலைப் பாடி அவர்கள் நட்பின் பெருமையை பாராட்டினார் .

கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் கொண்ட உணர்ச்சி ஒத்த நட்புரிமையே தமிழகத்தில் நட்புக்கு இலக்கியமாக போற்றப்பட்டு வருகின்றது .

இதனை நான் கல்லுரி்களில் பயின்ற காலத்தே இப்படியெல்லாம் இருந்திருக்கமுடியுமா என ஐயுற்றேன் .புலவர்களின் பொய்யுரைகளில் இதுவும் ஒன்று என நகைத்ததும் உண்டு .ஆனால் ,அதற்கு மாறாக புலவர்கள் உரை என்றும் பழுதாகாது என்பதனை நான் ப்ளாக் ஆரம்பித்த பிறகு காலம் உணர்த்தியது .

அப்படி எனக்கு உணர்த்திய ஒன்றைத்தான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் படித்தது .

நான் 'அட்டக்கத்தி 'என்ற எனது மற்றொரு ப்ளாக்கில் 'டோமி 'என்ற பெயரில் 'கவிதைபாடும் நேரம் 'என்று சிற்பாக்கள் வடித்துவந்தேன் .அதில் அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது .
சிற்பா என்றால் ,இது தமிழ்க்கவிதை வடிவில் ஒரு வகை
- எளிமையான கவிதை நடை
- மூவடி
- "தத்துவம்",'உணர்ச்சி", சார்ந்தது
- இலக்கணம் தவிர்த்தது
- இயல்பானது
- இயற்கை யானது.

உதாரணத்திற்கு

'அறிய முடியாது
குருடர்களால்
அழகிய மே மரப்பூக்கள் '

இதற்கு பல அர்த்தங்கள் .
அப்படித்தான் வடிவமைக்கடுவது சிற்பா .
ஒரு சில .
முதலாவதாக நேரடியான பொருள் நேரடியாகவே உள்ளது .
2வதாக ப்ராய்டு, 'குருடர்களால் சிவப்பு நிறத்தை அறிய முடியாது ' என்பார் .அது இதில் உணர்த்தப்பட்டுள்ளது .
3வதாக மே பூக்கள் சிவப்பு நிறத்தது எனில் கம்யூனிம் அதன் குறியிடாக , அறிவற்ற மனிதர்களால் கம்யூனிசத்தைப்பார்க்க முடியாது .அவர்கள் குருடர்களே ....
இப்படி அடுக்கிக்கொட்டே போகலாம் அவரவர் ....
இப்படியாக நான் சிற்பாக்கள் வடித்துவந்தபொழுதுகளில்
ஜெகநாதன் ,முனியப்பன் பக்கங்கள் ,மற்றும் பேராசிரியர் குணசேகரன் ஆகியோர் நண்பர்களானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் .
அட்டக்கத்தியில் இவர்கள் என்றால்
நண்டு@நொரண்டில் vimalavidya ,பழமைபேசி,
பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அம்மா அவர்கள் goma,cheena (சீனா) ,
Starjan ( ஸ்டார்ஜன் ) ,அண்ணாமலையான்,நேசமித்ரன்,துபாய் ராஜா ,
Maximum India ,Prince Ennares Periyar,செல்வ ராயன் ,veeraa,லோகு ,
நட்புடன் ஜமால் ,தேவன் மாயம் ,பேநா மூடி,பிரியமுடன்...வசந்த் ,
கட்டபொம்மன் ,க.பாலாசி ,வித்யாசாகர் ,அகல்விளக்கு ,
பிரியமுடன் பிரபு ,V.A.S.SANGAR மற்றும் benzaloy ஆகியோர் நண்பர்களானவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் .
இவர்கள் அனைவரும் எனது பழகா நண்பர்கள் . இவர்களுடனான எனது நட்பு பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் கொண்ட உணர்ச்சி ஒத்த பழகா நட்புக்கு இணையானது .இவர்கள் அனைவரும் எனக்கு கோப்பெருஞ்சோழன் ஆவார்கள் .
.


.


.

. Download As PDF

18 கருத்துகள் :

ப்ரியமுடன்...வசந்த் சொன்னது…

அட அட்டக்கத்திய்ன்றதில எழுதுறதும் நீங்கதானா?

க.பாலாசி சொன்னது…

//இவர்கள் அனைவரும் எனக்கு கோப்பெருஞ்சோழன் ஆவார்கள் .//

நன்றி பிசிராந்தையாரே....

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
க.பாலாசி அவர்களே
மிக்க மகிழ்ச்சி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஆம் பிரியமுடன்...வசந்த் அவர்களே

கண்ணகி சொன்னது…

நட்பின் அறிமுகம் நல்லாருக்கு...

அண்ணாமலையான் சொன்னது…

சிறப்பா சொல்லிட்டீங்க... நன்றி

23ம் கோப்பெருஞ்சோழன் சொன்னது…

மிக்க நன்றி பிசிராந்தையாரே!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
கண்ணகி அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக மகிழ்ச்சி
23ம் கோப்பெருஞ்சோழன்
மிக நன்று

۞உழவன்۞ சொன்னது…

http://ulavan.net/topsite/

ஜெகநாதன் சொன்னது…

அன்பு டோமி @ நண்டு @ நொரண்டு,

அட்டக்கத்தியின் பக்கம் பலமுறை ​சென்று புதுப்பதிவு காணாமல் திரும்பியிருக்கிறேன்.
இப்போது தங்களைக் காண்பதில் மிக மகிழ்ச்சி.
இங்கு புகைப்படமும் வேறுமாதிரியாக இருந்ததால் அடையாளம் காணமுடியாமல் போயிற்று.

நட்பு பற்றி நீங்க எழுதியிருப்பது ​வெகு அருமை. ​வடக்கிருந்த நண்பர்கள் பற்றி மீள்வாசிக்க முடிந்தது.
-
சின்னவயசில கிளிபிடிப்பதற்காக நண்பன் நந்து பனையேறுவான். அவன் கீழே வரும்வரை பதைபதைப்பாக இருக்கும். நெஞ்சுக் கீறல்களோடு கீழே வந்து கிளியைக் காட்டும்​போது அறியாமல் பூக்கும் ஒரு புன்னகை. அது நட்பின் முகத்துவாரம்தானே?

அப்படி ஒரு முகத்துவாரம் (புன்னகை) இப்ப எனக்கு!

அட்டக்கத்தியில் நீங்க 3வரிகளா எழுதியிருப்பீங்க. அந்த 3 வரிகளும் ஊற்றுக்கண் மாதிரி குபுக் குபுக்னு படிச்சது, சிந்ததிச்சது என்று ஒரு சின்ன நினைவோடையை உண்டுபண்றதுக்கு ​போதுமானதா எனக்கு இருந்தது. அதை என் பின்னூட்டங்களில் எழுதியிருக்கிறேன்.

அந்த சிற்பாக்கள் ஒருவகையில் எளியமுறையில் சார்ஜ் ​செய்து​கொள்கிற டாப்-அப்புகள் மாதிரி!

ஊற்றுக்கண்ணிலிருந்து முகத்துவாரம் வழியாக கடல் சேரும் பயணமா இருக்கு நட்பு!

நன்றி நண்டு!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
ஜெகநாதன் அவர்களே
மிக்க மகிழ்ச்சி

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்புடையீர்,
தமிழ்நாட்டைவிட்டு - குறிப்பாக 36 ஆண்டுக் காலம் வாழ்ந்த மதுரையை விட்டு விலகி வடகோடியில் வசித்து வரும் எனக்கும் உங்களைப் போல வாய்த்திருக்கும் நல்ல பல வலை நட்புக்கள்தான் கோடையில் இளைப்பாறிக் கொள்ளும் குளிர் தருவாய் இதம் தந்து கொண்டிருக்கின்றன.
இணையத்துக்கு நன்றி.
நான் மனதில் எண்ணியதை உங்கள் பதிவில் வடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
’பழகாத நட்பு’ எனச் சொல்ல வேண்டியதில்லை.நேரில் பார்த்தால்தானா.
நீங்கள் மிக நேசிக்கும் வள்ளுவம்,
‘’உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும் ‘’
என்று சொல்கிறதல்லவா?
உணர்ச்சிநெகிழ்வுடன் கூடிய பதிவுக்குப் பாராட்டு.
என் பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
TechShankar @ டெக்‌ஷங்கர்
மிக்க மகிழ்ச்சி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அம்மா எம்.ஏ.சுசீலா அவர்களே
மிக்க நன்றி

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு

மிக்க நன்றி - கோப்பெருஞ்சோழனா ? அட - நாம் அவ்வளவு தூரம் பழகுகிறோமா ? நம்மை அறியாமலேயே நண்பர்கள் ஆகிறோமா - நேரில் பார்க்காமலேயே நண்பர்கள் - பலே பலே - சந்திப்போம் நண்பா

நல்வாழ்த்துகள்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
cheena (சீனா) அவர்களே
மிக்க மகிழ்ச்சி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "