ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

தமிழ்த்தாயின் அன்பான வேண்டுகோள் ...

ததமிழ்த்தாய் : தம்பி என்மனம் நோக பேசிவிட்டான் எனது மகன்.
நண்டு : அம்மா ,நீங்க ?
தமிழ்த்தாய் : நான் நொரண்டுவின் அம்மா .
நண்டு : வாங்க அம்மா ,வாங்க ,வணங்குகின்றேன் .என்ன ...
நொரண்டுவின் தமிழ்த்தாய் : மகனே ,நொரண்டு என்னை என் மகன் மனம் நோக பேசிவிட்டான்.
நண்டு : ஓ,அப்படியா ,அவன் நொம்ப நல்லவனாச்சே .
நொரண்டுவின் தமிழ்த்தாய் : ஆமாம் ,இல்லையென்று சொல்லவில்லை ....ஆனால் ,ஆனால் ....
நண்டு : என்ன சொல்லவர்ரீங்க அம்மா ?
நொரண்டுவின் தமிழ்த்தாய் : என்மனம் நோக பேசிவிட்டான் ....
நண்டு : இருந்தாலும் அவன் உங்களின் மகனில்லையா ?
நொரண்டுவின் தமிழ்த்தாய் :இருந்தாலும் ... அவன் என் மகனே இல்லை .
நண்டு : அப்படி சொல்லாதீர்கள் .
நொரண்டுவின் தமிழ்த்தாய் : இல்லை இல்லை அப்படியில்லை . அவன் என்னை திட்டியதைப்பார்த்த
எனது மற்ற புதல்வர்கள் அவனின் உடமைகளை ஆதங்கத்தில் சேதப்படுத்திவிட்டார்கள் .அதற்காக
போலிஸில் கேசு போட்டிருக்காங்க .
நண்டு : ஓ அப்படியா ...
நொரண்டுவின் தமிழ்த்தாய் : ஆம் ,அதற்காக போலிஸில் அவர்களின் மிது நடவடிக்கை எடுத்துள்ளது .
நண்டு : அது தானே சட்டம் .அது தான் சரி.
நொரண்டுவின் தமிழ்த்தாய் : இருக்கலாம் .எனினும் இவன் செய்த குற்றத்திற்காக என்னிடம்
மன்னிப்பு கோட்டுவிட்ட காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கல . ஆனால்,என்னால் தான் எனது
சகோதரர்கள் ஆதங்கப்பட்டுவிட்டார்கள் அதனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம்
என்று கூறுவதுதானே ஒரு பொறுப்புள்ள சகோதரனின் உண்மையான சகோதர பாசமாகும் .அது
தவிர்த்து சட்டம் தனது கடமையைச்செய்யட்டும் என தான் மட்டும் தனது தவற்றிலிருந்து
தப்பித்துக்கொண்டால் போதுமா? தனது சொல்லால் பாதிக்கப்பட்ட தனது சகோதரர்களைப்பற்றி
எந்தக்கவலையும் படாமல் துயரங்களை அனுபவிக்கட்டும் என நினைக்கும் இவனை எப்படி எனது
மகனேன்று ஏற்றுக்கொள்வது .
நண்டு : ஓ ....ஓ....அம்மா வள்ளுவர் ..
நொரண்டுவின் தமிழ்த்தாய் : என்னப்பா செல்ரார் ...
நண்டு :
'பயனில் சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். '' என்கின்றார் .
நொரண்டுவின் தமிழ்த்தாய் : அப்பா எனக்கு ஒன்றும் தெரியாது .அதுக்கு என்னப்பா அர்தம்.
நண்டு : அம்மா ... பயனில்லாத சொற்களை பேசுபவனை ஒரு தாய் மகன் என்று கூறமாட்டால்
.தனக்குப்பிறந்த பதர் என்றே கூறுவாள் .
நொரண்டுவின் தமிழ்த்தாய் : ஆமாப்பா ,ஆமாம் .இவன் பதர் தான் .இவன் இப்படி பேசுவதற்கான
காரணம் அவன் சேந்துள்ள கூட்டம் . அவனது நண்பர்கள் சிலர் தொடர்ந்து என்னை இப்படி
அவமானப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள் .அதனால் தான் இவனும் என்னை திட்ரான் .இதை
யாருமே கண்டுக்க மாட்டேங்கராங்க . ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன் .இனி யாரும்
எம்மை திட்டாதீர்கள் . நானே நொத்து போயிருக்கேன் .
நண்டு : அம்மா ...நொரண்டுகிட்ட சொல்றேன் ... ஆவன செய்வான் என எதிர்பார்க்கின்றேன் .

...

..


வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -தொடரும் ....

..


.

Download As PDF

22 கருத்துகள் :

லோகு சொன்னது…

அருமையான குறள் விளக்கம். சிறப்பான பாணியில் சீரிய பணி. தொடருங்கள்.

நட்புடன் ஜமால் சொன்னது…

இரண்டாவது தடவை தான் விளங்கிற்று

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஓ....
மிக்க நன்றி
நட்புடன் ஜமால் அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க நன்றி
லோகு அவர்களே
மிக்க நன்றி

அண்ணாமலையான் சொன்னது…

அழகா விளக்கியிருக்கிறீர்கள்..

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
அண்ணாமலையான் அவர்களே
மிக்க நன்றி

துபாய் ராஜா சொன்னது…

எளிய முறையில் இனிய குறள் விளக்கம்.அருமை. தொடருங்கள். தொடர்கிறோம்.

பழமைபேசி சொன்னது…

தொடருங்கள்....

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
பழமைபேசி அவர்களே
மிக்க நன்றி

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
துபாய் ராஜா அவர்களே
மிக்க நன்றி

கும்மாச்சி சொன்னது…

நண்டு நல்லாத்தான் கலக்குறீங்க, வாழ்த்துகள்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க நன்றி
கும்மாச்சி அவர்களே
மிக்க நன்றி

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

நல்ல கருத்துரை , விளக்கங்கள் .

அருமை சார் .

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க நன்றி
Starjan ( ஸ்டார்ஜன் ) அவர்களே
மிக்க நன்றி

தேவன் மாயம் சொன்னது…

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -தொடரும் ....//

இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது!!!

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிக்க மகிழ்ச்சி
தேவன் மாயம் அவர்களே
மிக்க நன்றி

vimalavidya சொன்னது…

if you write this matter in the form of an article it would have get good impact and effect--vimalavidya

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
vimalavidya அவர்களே
மிக்க நன்றி

goma சொன்னது…

குறளுக்கு விளக்கம் நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்.....நான் சொல்ற மாதிரியும் சொல்லலாம்...எப்படிச் சொன்னால் என்ன ,குறள் எல்லோர் காதிலும் விழவேண்டும்///சரிதானெ நண்டு @நொரண்டு, என் ஃபிரண்டு?

மீண்டும் மீண்டும் வருவேன்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

//குறள் எல்லோர் காதிலும் விழவேண்டும் //
தங்களின் கருத்துக்கு உடன்படுகின்றேன் .

தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி .

மீண்டும் மீண்டு வாருங்கள் .
goma அவர்களே
நன்றி

பேநா மூடி சொன்னது…

நல்லா இருக்குங்க.., வாழ்த்துக்கள்

நண்டு@நொரண்டு -ஈரோடு சொன்னது…

மகிழ்ச்சி
பேநா மூடி அவர்களே
மிக்க நன்றி

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "