செவ்வாய், 22 மே, 2012

கடவுள் இனி தண்டிக்கமாட்டார்.

Spatha



எங்கும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது  கடவுளின் தேசம்,இரண்டு வாரங்களாக நாட்களாக.

சாதாரண நெருப்பல்ல ,கடவுளின் ஆணை என்ற வதந்தி நெருப்பு எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்த்து.

கடவுளுக்கு கீழ் வாழ்ந்து  பழக்கப்பட்டவர்கள்,இனி எப்படி வாழ்வது என்ற அச்சத்தில் உறக்கமின்றி .

செய்தி கேட்டு சிறைச்சாலைகளில் மகிழ்விலிருந்தவர்களுக்கு ,அனைவருக்குமான ஆணைகளை பிறப்பிக்கப்பட்டு விட்டது என்ற வதந்தி மிக்கஅச்சத்தை ஏற்படுத்தியதால்,சிறைகள் முழுதும் ஒரே கலவரத்தில்.

அச்சம்,அச்சம்,எங்கும் ஒரே அச்சம்.

இனி என்ன நடக்குமே,ஏது நடக்குமோ என்ற கேள்விகளுடன் .

பொதுவில் அறிவிக்கப்படும் நாள் நாளை என்பதால் ,அனைவரும் ஆங்காங்கு திரண்டு ,அறிவிப்பை எதிர் நோக்கி காத்திருந்தனர்.

முதல் முறையாக சிறைச்சாலை மைதானம் மக்களுக்காக சைடோனில் திறக்கப்பட்டது.இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.எப்படி செய்தி வியப்போ, அது போலவே சிறைச்சாலை திறப்பும்.

ஒரு பக்கம்,உரிமைக்காக போராடியவர்கள், கொலைகாரர்கள், கொள்ளையர்கள்,திருடர்கள்,மதவாதிகள்,காமக்கொடுரன்கள் போன்ற  சிறைவாசிகள் கூட்டம்,மறுபக்கம் பணக்காரர்கள், உழைப்பாளிகள், வீரர்கள்,படித்தவர்கள்,அறிவாளிகள்,மதவாதிகள்,ஏழைகள் என மக்கள் கூட்டம், நடுவில் செய்திகளை கொண்டுசெல்ல பல இடங்களிலிருந்து வந்திருந்த தந்துகிகள்.பல்லாயிரம்  பேர் பல எண்ணவோட்டத்தில் கூடியிருந்தாலும்,குதிரைகளின் கனைப்பும்,விலங்குகளின் உரசல் ஒலியையும் தவிர்த்து,வேறு எந்த சப்தமும் அங்கு எழவில்லை. வதந்தியாகவே இருக்கவேண்டும் என்ற ஆசையுடன் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

சூரியன் உச்சியை தொட்டுக்கொண்டிருந்தான்.வெப்பத்தை ஒவ்வொருவரும் உணர்ந்துகொண்டிருந்தனர்.தாகமாய் ஒரு பேரிகை முழங்கியது.அனைவரும் ஆர்வத்தில் ஆர்ப்பரித்தனர், ஊரே அதிர்ந்த்து. இரண்டாவது பேரிகை ஒலித்த போது மீண்டும் பழைய அமைதி.இரண்டாவது பேரிகையை தொடர்த்து வெண்புரவியில் அனைவரும் அஞ்சும் செலாஸ்டஸ் வந்தான்,கண கம்பிரமாக,தனது வெள்ளுடையை காற்றில் பறக்கவிட்டு.

.....

மக்களே உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி கொண்டுவந்துள்ளேன்.அது கடவுள் இனி தண்டிக்கமாட்டார்.ஆம்,கடவுள் இனி ஒருபோதும் உங்களை தண்டிக்கமாட்டார்.

இது கேட்டு மக்களின் கூட்டம் இது சரியல்ல,இது சரியல்ல,கடவுளின் முடிவு தவறானது,ஏற்றுக்கொள்ளமுடியாது என ஆர்ப்பரித்தனர்.

கூட்டத்தைப்பார்த்து இது கடவுளின் முடிவு.கட்டுப்படுவது நமது கடமை என்றான் செலாஸ்டஸ்.

நீ பொய்யன் என்றான் கூட்டத்திலிருந்த சீகன்.

கடவுளின் கருணையால் நீ தப்பித்தாய் என்றான் சீகனை பார்த்து செலாஸ்டஸ்.

செலாஸ்டஸ் பொய்யன் ,செலாஸ்டஸ் பொய்யன் என்றது கூட்டம்.

கூச்சல் கேட்டு செலாஸ்டஸ் தனது வாளை உருவினான்.






இதையும் பார்க்க .


 தொடரும் ....





Download As PDF

திங்கள், 7 மே, 2012

ஒண்ணும் பிரச்சனை இல்லை. வாங்க!

நல்ல கருத்துள்ள குறும்படம். மனிதனுக்கு வரும் நோய்க்கு மருத்துவர்களைத் தேடாமல் இயற்கையை நாட வேண்டும் என்று அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. அவசரத்துக்கு மருத்துவரிடம்தானே செல்ல வேண்டியிருக்கிறது. இப்படி மருத்துவர்களிடம் செல்வதால் ஏற்படும் இழப்புகளும் ஏராளம். மருத்துவர்கள் சேவை நோக்கத்துடன் செயல்படும் வரை இந்த இழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


நோயொன்று வந்து, மருத்துவர்களிடம் சென்று விட்டால் போதும்! நோயைக் குறைக்கிறார்களோ இல்லையோ பணத்தைக் கறப்பதில் குறியாக இருக்கிறார்கள் என்பது இன்று நாடறிந்த உண்மையாகி வருகிறது.

பணம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போய்க் கொண்டிருக்கும் இந்த நாட்டில் மனித நேயம் மறக்கப்பட்டு வருகிறது.

மனிதன் வாழ்க்கைக்கு இயற்கையால் கொடுக்கப்பட்ட கொடைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையை விட்டு, செயற்கைக்குப் போன மனிதன் தன் ஆசை அதிகரிப்பால் அதையும் தாண்டி இயற்கையை முற்றிலுமாக அழிக்கத் தொடங்கி விட்டான். இயற்கையையே மறந்து போய் விட்டான்.

இயற்கையின் மறைவால், செயற்கையின் விளைவு கடுமையாக இருக்கிறது. இயற்கையின் சீற்றம் மனிதனைப் பாடாய்ப் படுத்துகிறது.

இது போல் இயற்கை உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் மறந்ததால் மனிதன் வாழ்க்கை நோயின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.

இந்த நோயின் பிடியில் இருப்பவர்களை தங்களின் மருத்துவத் தூண்டிலில் அவர்கள் சேர்த்து வைத்த பணத்தைப் பிடிக்க மருத்துவர்கள் வந்து விட்டார்கள் என்கிற உண்மையையும் இயற்கையான உணவும், உடற்பயிற்சியும் இருதய நோயைக் கூடக் குணப்படுத்தும் என்கிற நம்பிக்கையையும் உருவாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட குறும்படம் இது.

சொடுக்கிப் பார்த்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.




http://www.youtube.com/watch?v=LP-G6lXPJ3g&feature=youtu.be










Download As PDF

செவ்வாய், 1 மே, 2012

Please vote: Bafta TV Awards 2012 nominees - Sri Lanka's Killing Fields


Bafta TV Awards 2012 nominees - Sri Lanka's Killing Fields



Please vote: Bafta TV Awards 2012 nominees - Sri Lanka's Killing Fields
Al Jazeera's Bahrain: Shouting in the Dark has earned the channel a nomination for Current Affairs in this year's Bafta TV Awards. It's competing against Jon Snow's film, Sri Lanka's Killing Fields (pictured), for Channel 4 and two editions of Panorama on BBC1: The Truth about Adoption and Undercover Care: The Abuse Exposed.
It's always a particularly strong category – and Bafta has the final say – but who doyou think should win? Vote in our poll below...
Download As PDF