வெள்ளி, 3 டிசம்பர், 2010

சிங்களம் காட்டுமிராண்டி மொழி யென்று


சிங்களா ...
உரக்கச்சொல்லுவேன்
உங்களிடம் நான்
உரக்கச்சொல்லுவேன்
உங்களின் மீது தவறில்லை
உங்களின் மொழியின் மீது தவறென்று
புத்தனின் புத்தத்தை
புதைத்து
புறமுதுகிடா மறவனை
புறமிருத்து கொன்று
கருவறையிலே தமிழினத்தை
கல்லறையாக்கி
மனிதனை மனிதனாக்கா
மாபதகஞ்செய்யும்
சிங்களத்தை
உரகச்சொல்லுவேன்
உலகம்
உறைக்கச்சொல்லுவேன்
காட்டுமிராண்டி மொழியென்று...
(இது மீள்வு  ) Download As PDF

40 கருத்துகள் :

Jerry Eshananda சொன்னது…

வழிமொழிகிறேன்

No Name சொன்னது…

http://vselvashinthu89.blogspot.com

No Name சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
துமிழ் சொன்னது…

இந்த இடத்தில்தான் தமிழர்களாக நாம் தவற விடுகிறோம்.சிங்களவர்கள் அவர்கள் மொழி மீது வைத்திருக்கும் பற்றானது நாம்
நமது தமிழ் வீது வைத்திருக்கும் பற்றை விட எத்தனையோ மடங்கு அதிகம்.நாம்தான் மொழிக்காக உயிரை விடுபவர்களாக
பேசிப் பேசியே அதை அழித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களோ வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எந்தச் சிங்களவரும் சிங்களந்தான் என் மூச்சு,உயிர் என்று சொல்லுவதேயில்லை.தமிழன்தான் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
என்று மேடை போட்டு தமிழை விற்கிறோம். (நான் எல்லோரையும் சொல்லவில்லை).ஆங்கில மொழிக் கலப்பில்லாமல் தாய்
மொழி பேசும் வல்லமை நம்மை விட அதிகம் அவர்களுக்கு இருக்கிறது.

சிங்களவன் மடையன் காட்டு மிராண்டி என்று நாம் அவனைத் தாழ்த்துவது நமது இயலாமையை மறைப்பதற்கான வழியே அன்றி வேறில்லை.

பெயரில்லா சொன்னது…

http://vselvashinthu89.blogspot.com/­ ­
64 அடி பிள்ளையார் சிலை அமைக்கப்படஉள்ளது­ ­
help me­ ­

No Name சொன்னது…

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயம்
phone no 0652250645விமலாணந்தராசா இந்துஇளைஞ்ஞர்மன்றம்

எஸ்.கருணா சொன்னது…

சிங்களனோ..சிங்களமோழியோ...காட்டுமிராண்டியல்ல..அவர்களை அப்படி வெறியேற்றி வைத்திருக்கும் சிங்கள அரசியல்வாதிகள்தான் காட்டுமிராண்டிகள்..

கார்த்தி சொன்னது…

அழிந்தது என்னவோ தமிழினம்தான்!

ராஜ நடராஜன் சொன்னது…

//ஆங்கில மொழிக் கலப்பில்லாமல் தாய்
மொழி பேசும் வல்லமை நம்மை விட அதிகம் அவர்களுக்கு இருக்கிறது.//

துமிழ்!ஆங்கிலமே தெரியாமல் இருந்தாலும் மொழிக்கலப்பில்லாமல் பேச முடியும்.

சித்திரமும் கைப்பழக்கம்ங்கிற மாதிரி நாம் இரு மொழிகளையும் எதிர் எதிரா விளையாட விட்டு விட்டோம்.இருமொழிகளுமே தண்டவாளத்தின் இருபக்கங்களாக பயணித்திருக்க வேண்டியவை.

ராஜ நடராஜன் சொன்னது…

//சிங்களனோ..சிங்களமோழியோ...காட்டுமிராண்டியல்ல..அவர்களை அப்படி வெறியேற்றி வைத்திருக்கும் சிங்கள அரசியல்வாதிகள்தான் காட்டுமிராண்டிகள்.. //

சிங்கள மக்கள் பழகுவதற்கு எளிதானவர்களாகவே இருக்கிறார்கள் வெளியுலகம் சுற்றும் போது.இலங்கைக்குள் எப்படியென்பதும்,அரசியல்வாதிகளின் தவறுகளுமே குறைகளுக்கும் விமர்சனத்துக்கும் உரியவை.

மோகன் காந்தி சொன்னது…

மொழியால் மனிதன் மாறுவதில்லை
குணத்தால் தான் மாறுகிறான்

nis சொன்னது…

சரியாக கூறி உள்ளீர்கள்

பெயரில்லா சொன்னது…

துமிழ்- சரியாக சொன்னீர்கள். எங்களுக்கு ஆங்கிலம் கலந்து பேசினால் பெருமை என்று நினைப்பு. அவர்கள் அப்படி நினைக்கவில்லை.

ஹேமா சொன்னது…

எங்கள் ஊரிலும் சொல்லிக்கொள்வோம்"மடச் சிங்களவன்"ன்னு.ஆனால் அவன் தான் புத்திசாலித்தனமா காய் நகர்த்திக்கொண்டிருக்கான் !

துமிழ் கூறியது மிக மிகச் சரியே.அவர்கள் பேசும்போது ஆங்கிலக் கலப்பு வருவதேயில்லை !

துமிழ் சொன்னது…

ராஜ நடராஜன் said...
//ஆங்கில மொழிக் கலப்பில்லாமல் தாய்
மொழி பேசும் வல்லமை நம்மை விட அதிகம் அவர்களுக்கு இருக்கிறது.//

துமிழ்!ஆங்கிலமே தெரியாமல் இருந்தாலும் மொழிக்கலப்பில்லாமல் பேச முடியும்.

சித்திரமும் கைப்பழக்கம்ங்கிற மாதிரி நாம் இரு மொழிகளையும் எதிர் எதிரா விளையாட விட்டு விட்டோம்.இருமொழிகளுமே தண்டவாளத்தின் இருபக்கங்களாக பயணித்திருக்க வேண்டியவை.

December 3, 2010 10:59 PM//

ஒரு காலத்தில் தமிழர்கள் மட்டும்தான் ஆங்கிலத்தில் வல்லமை பெற்றவர்களாக இருந்தது உண்மைதான். இப்போது தமிழர்களை விட அதிகம் ஆங்கிலப் புலமை உள்ளவர்கள்
அவர்களே.அவர்கள் பேசினால் தனியே ஆங்கிலத்திலே பேசுவார்கள் அல்லது சிங்களத்திலே பேசுவார்கள். அவ்வளவுதான்...
நான் அவர்களை வக்காலத்து வாங்கவில்லை நாம் மாற வேண்டும் அப்போதுதான் முன்னேறலாம்.

பெயரில்லா சொன்னது…

தமிழ் நண்பா, உன் குறிகிய துவேஷ மனதை கண்டு வெட்கித்து தலை குனிகின்றேன்.
உன்னைப் போன்று அழகிய தமிழில் எழுத என்னால் இயலாது அன்பனே, இருந்தும் துவேஷத்தை தவிர்ப்பது பண்புடையோர் குணமென்று சிறு வயதில் எனதன்னை அடித்துக் கூறியது ஞாபகம்.
அண்ணே, தமிழ் உயர்ந்தது தான். உலகம் அறிந்த உண்மை. ஓர் உண்மையை மீண்டும் மீண்டும் புதுப் புது கவிதைகளால் வர்ணிப்பது கவிஞனின் போக்கு, பொழுது போக்கு.
ஏன், உரிமை எனவும் கூறலாமே.
அதற்காக பிறிதொரு பாஷையை
தாழ்த்தித் தான் எமது தமிழை உயர்த்த வேண்டும் என்றில்லையே.
அப்படியானால், என் தமிழ் உழுத்து, அழுகி, நாறி, அழிந்தே போகட்டும்.
எமது வருங்கால சந்ததியாவது துவேஷம் குடிகொண்ட மனமில்லாது உலக மக்களாக திகள்ந்து வாழட்டும்.

பெயரில்லா சொன்னது…

Anonymous I totally agree with you. Every language has its beauty and no language is second to another. Language is just a medium of communication. Thats all. Some of our people are language fanatics.

Thanks for your comments.

பெயரில்லா சொன்னது…

Anonymous ,ungal karuththu thavaraanathu.mozhithaan oru manithanin kunaathisayangalukku kaaranam.izhiseyal puriyum singalavarukku avar mozhi moolamaaga amaikirathu.so,antha mozhi izhivaanathu.athaiye kavithai solli nirkkirathu....!ithil,thamizh mozhiyai avar engume oppidavillaiye.

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

Anonymous
நான் முதலில் தங்களிடமிருந்து கிழ்கண்ட கேள்விகளுக்கான பதிலை அறிய ஆசைப்படுகின்றேன் .
அன்பு என்றால் என்ன ?
கருணை என்றால் என்ன ?
அகிம்சை என்றால் என்ன ?
உயிர் என்றால் என்ன ? .

காட்டுமிராண்டிகளென்று நாம் யாரைக்குறிப்பிடுகின்றேம் ?.
காட்டுமிராண்டித்தனமென்று எதைக்குறிப்பிடுகின்றேம் ?.
மானிதகுலமாண்பிற்கு,மனிதாபிமானத்திற்கு
ஒவ்வாத செயல்களைச் செய்பவர்களைப்பார்த்து தானே அவ்வாறு அழைக்கின்றேம் .ஏன் ?

இலங்கையின் மதம் புத்தம் தானே?
அவ்வாறிருக்க ,இலங்கையில் பச்சிளம் குழந்தை வரை கொன்று குவித்து , மனிதன் உணவிற்கு அள்ளல்படு்ம் அளவிற்கு புத்தமதம் தனது கருத்தினில் அங்கு அது நீர்த்துப்போனது எதனால் ? எப்படி ? ஏன் ?
கூற முடியுமா ?.

அதற்கு
ஒன்று புத்தத்தில் தவறிருக்கவேண்டும் அல்லது அதை சரியான வழியில் தனது எழுத்தின் முலம் தனது மக்களுக்கு கொண்டுசெல்லத்தவறிய அவர்களின் மொழியின் மீது தவறிருக்கவேண்டும் . இதைத்தவிர்த்து வேறு ஒன்றும் காரணமாக இருக்கமுடியாது ?.
பதில் கூறுங்கள் .

என்னைப்பொறுத்தவரைபுத்தம் அன்பை ,கருணையை ,
அகிம்சையை அது தோன்றியதிலிருந்து இன்று வரை
தொடர்ந்து இடைவிடாது மக்களுக்கு போதித்து வருகின்றது என்கின்றனர் .
அதனால் எக்காலத்திலும் புத்தத்தில்சிறு தவறு கூட இருக்கமுடியாது .
சரிதானே.
ஒத்துக்கொள்கின்றீர்களா ?.
ஆம் என நீங்கள் இதை ஒத்துக்கொள்ளும் பட்சத்தில்
அதை சரியான வழியில் தனது எழுத்தின் முலம் தனது மக்களுக்கு கொண்டுசெல்லத்தவறிய அவர்களின் மொழியின் மீது தானே தவறிருக்கவேண்டும் .
ஆமா? ,இல்லையா?
கூறுங்கள் .
இல்லையென கூறினீர்கள் எனில்
புத்தத்தில் தவறா? .
பதில் கூறுங்கள் .

ஒவ்வொரு மொழியும் தனது மக்களுக்கு மேன்மையான கருத்துக்களையும் ,மேன்மையான குணத்தையையும் ,நல்லொண்ணம் ,நல்லொலுக்கம் ஆகியவற்றையும் தொடர்ந்து படிப்பித்துக்கொண்டே வருவதுடன் மக்களை மக்களாக்கும் முயற்சியில் சதா சர்வகாலமும் இயங்கிக்கொண்டேயிருக்க வேண்டும் .அப்படி இயங்கிக்கொண்டு இருக்கும் மொழி தான் பண்பட்ட மொழியாகும் .அப்படியில்லாமல் ,குறுகிய வட்டத்திற்குள் தனது மக்களுக்கு உயர்ந்த ண்புகளைப் போதிக்காது,மானிதகுலமாண்பிற்கும்,மனிதாபிமானத்திற்கும்
ஒவ்வாத செயல்களைச்செய்யும் அளவிலே மட்டுமே அவர்களிடம் அறிவைச்சேர்த்துவரும் மொழியை காட்டுமிராண்டி மொழி யென்று கூறாமல் எவ்வாறு கூறுவது?.
அதுவும் புத்தனின் பெயரில் .

ஒவ்வொரு மொழியும் சிறந்தது . ஒன்றிற்கு ஒன்று தாழ்ந்ததும் இல்லை ,உயர்வானதும் இல்லை .அப்படிப்பார்க்கும் பார்வையே தவறானது என்பது எனது கருத்து .

நான் எனது தாய்மொழியை எவ்வளவுக்கொவ்வளவு மதிக்கின்றேனே,எனது தாய்மொழிக்கு எவ்வளவு மரியாதை செலுத்துகின்றேனே அவ்வளவிற்கவ்வளவு மதிப்பும், மரியாதையும் சிங்கள மொழியின் மீதும் வைத்துள்ளேன் .
இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது .
இதுவே உண்மை ,
அதனால் தான் ,
புத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ள அம்மொழி
பண்பானவர்களை ,அன்பானவர்களை
உருவாக்காமல் ,
பண்படாமல் இருக்கின்றதே என்ற கவலையில் அவ்வாறு
எழுதினெனே தவிர
''குறிகிய துவேஷ மனதி''னால் அல்ல .
இது தங்களின் தவறான புரிதல் .
தங்களின் //Language is just a medium of communication.//
என்பதைப்போல தவறான புரிதல் .

மேலும் ,
அப்படிப்பட்ட ''துவேஷ மன'' தை எனது தாய்மொழியும் எனக்குக் கற்றுத்தரவில்லை .
அப்படிப்பட்டவளுமல்ல எனது தாய் .

முடிவாக ,
தாங்கள் எனது கவிதையின் நோக்கத்தை தவறாக புரிந்துகொண்டீர்கள் .

மீண்டும் ஒரு முறை படித்துப்பார்க்கவும் .

தங்கள் இருவரின் பின்னூட்டத்திற்கும்
நன்றி .

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

சிங்களவன் மடையன் காட்டு மிராண்டி என்று நாம் அவனைத் தாழ்த்துவது நமது இயலாமையை மறைப்பதற்கான வழியே அன்றி வேறில்லை. //

சரியே..

//மாபதகஞ்செய்யும்
சிங்களத்தை
உரகச்சொல்லுவேன்
உலகம்
உறைக்கச்சொல்லுவேன்
காட்டுமிராண்டி மொழியென்று..//


இக்கவிதை தவறான புரிதலை ஏற்படுத்துகின்றது நண்பரே..

வருந்துகிறேன்..

:(

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

எனக்கு நல்ல சிங்கள நட்புகள் உண்டு..

நான் முன்பு வேலை செய்த அலுவலில் தலைமைப்பொறுப்புஇல் இருந்தவர் சிங்களவரே.. மிக மிக நல்ல மனிதர்...மென்மையான குணம் படைத்தவர்கள் நான் பழகிய சிங்களவர்....


ஒரு மொழியை , ஒரு இனத்தை இழிவு செய்வது நம்மை நாமே இழிவு செய்வதற்கு சமம்..

பவள சங்கரி சொன்னது…

I too agree with Payanamum ennangalaum.........

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

//எனக்கு நல்ல சிங்கள நட்புகள் உண்டு..

நான் முன்பு வேலை செய்த அலுவலில் தலைமைப்பொறுப்புஇல் இருந்தவர் சிங்களவரே.. மிக மிக நல்ல மனிதர்...மென்மையான குணம் படைத்தவர்கள் நான் பழகிய சிங்களவர்....//

அவரிடம் நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க ஏன் உங்கள் அரசு மட்டும் இப்படி மனிதத்தன்மையில்லாமல் நடந்துகொள்கிறது என கேட்டுப்பாருங்கள் .அதற்கு என்ன பதில் சொல்கிறார் என பார்ப்போம் .

ஒரு சிங்களர் கூட தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறையை எதிர்த்து இது மனிதாபிமான செயல் அல்ல என மனித உரிமைக்காகவாவது ஒரு வார்த்தை இது வரை கூறியதாக எனக்குத்தெரிந்து அறியப்படவில்லை .

தங்களின் நல்ல நண்பர்களாவது இனி குரல் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன் .

எனது பின்னூட்டத்தை படித்துப்பார்த்து பின் தங்களின் கருத்துக்களை தெரிவித்தால் நலமாக இருக்கும் என எண்ணுகிறேன்
பயணமும் எண்ணங்களும் அவர்களே ..

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நான் எனது தாய்மொழியை எவ்வளவுக்கொவ்வளவு மதிக்கின்றேனே,எனது தாய்மொழிக்கு எவ்வளவு மரியாதை செலுத்துகின்றேனே அவ்வளவிற்கவ்வளவு மதிப்பும், மரியாதையும் சிங்கள மொழியின் மீதும் வைத்துள்ளேன் .
இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது .
இதுவே உண்மை ,//


நன்று.


//அதனால் தான் ,
புத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ள அம்மொழி
பண்பானவர்களை ,அன்பானவர்களை
உருவாக்காமல் ,
பண்படாமல் இருக்கின்றதே என்ற கவலையில் அவ்வாறு
எழுதினெனே தவிர
''குறிகிய துவேஷ மனதி''னால் அல்ல .
இது தங்களின் தவறான புரிதல் .//

புரிகிறது நண்பரே..

இருப்பினும் தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளி விடுவதாய் எண்ண வைத்துவிட்டது கவிதை என உண்மையை சொல்கிறோம் ..

இது கூட உங்கள் மேலுள்ள மரியாதையால் ..ஏற்பட்ட நிஜமான விமர்சனம் .

வருந்த வேண்டாம்..

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

அவரிடம் நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க ஏன் உங்கள் அரசு மட்டும் இப்படி மனிதத்தன்மையில்லாமல் நடந்துகொள்கிறது என கேட்டுப்பாருங்கள் .அதற்கு என்ன பதில் சொல்கிறார் என பார்ப்போம் .

ஒரு சிங்களர் கூட தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறையை எதிர்த்து இது மனிதாபிமான செயல் அல்ல என மனித உரிமைக்காகவாவது ஒரு வார்த்தை இது வரை கூறியதாக எனக்குத்தெரிந்து அறியப்படவில்லை .//

நான் அதிகம் பேசியுள்ளேன்..

அவர்கள் சொல்வதெல்லாம் , நாங்கள் இன்னும் தமிழர்களோடு தாயா பிள்ளையாத்தான் இருக்கோம் என்றும், தமிழரில்லாமல் முடியாது என்ற நிலைமையையும்..


சில அரசியல் சகதிகள் ( தட்டச்சு பிழையல்ல ) இருபக்கமும் விளையாடி நாட்டை துண்டாடியதாகத்தான் அவர்கள் எண்ணம்..

அதுமட்டுமல்ல , என் குடும்பத்தினரே ப்ல ஆண்டுகள் ஈழத்தில் வாழ்ந்தவர்களே..

என் தாத்தா சித்தப்பாவை 1985 ல் அங்கே பலிகொடுத்தோம்..

சித்தி , அவர்கள் மாமியார் அகதிகள் முகாமில் தங்கியவர்களே..

அவர்களை முதலில் காட்டிக்கொடுத்ததே ஒரு தமிழர்.. :(

அவர்களுக்கு உதவியது அவர்கள் தோட்டங்களில் வேலை செய்த சிங்களவர்களே...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

நான் கேட்பது ஒரு சிங்களராவது தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறையை எதிர்த்து இது மனிதாபிமான செயல் அல்ல ,தவறு ,நிறுத்துங்கள் என குரல் கொடுத்துள்ளார்களா பயணமும் எண்ணங்களும் அவர்களே கூறுங்கள் .

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

//சிங்களா ...
உரக்கச்சொல்லுவேன்
உங்களிடம் நான்
உரக்கச்சொல்லுவேன்
உங்களின் மீது தவறில்லை
உங்களின் மொழியின் மீது தவறென்று //உங்க நல்லெண்ணம் புரியும் அதே வேளையில் , கவிதை என்ற சில வரிகள் உங்கள் கோபத்தை மட்டுமே அதிகப்படியாய் காண்பித்துவிட்டது...


இதுவே ஒரு பார்வையாளனின் எண்ணம்..நேர்மையான விமர்சனம்

தவறாக எண்ண வேண்டாம்..


உங்கள் மேல் உங்க எழுத்தின் மேல் அதிக மரியாதை கொண்டுள்ளோம் .. தொடருங்கள்..

நேர்மையான விமர்சனம் தங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புகள் நண்பரே...

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நான் கேட்பது ஒரு சிங்களராவது தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் அடக்குமுறையை எதிர்த்து இது மனிதாபிமான செயல் அல்ல ,தவறு ,நிறுத்துங்கள் என குரல் கொடுத்துள்ளார்களா பயணமும் எண்ணங்களும் அவர்களே கூறுங்கள் .//


சமீபத்தில் லண்டனில் ராஜபக்ஷே வை வர விடாமல் போராட்டம் செய்தவரில் சிங்களவருமுண்டாமே ..

உள்நாட்டில் எதிர்ப்பு இருக்கும். ஆனால் , நம்மைப்போல் இயலாமையில் இருக்கக்கூடும்...

நம் நாட்டில் கண் முன்னால் நடக்கும் ஊழல்களை காலங்காலமாக என்ன செய்ய முடிந்தது?..கேள்வி கேட்பட்தை தவிர?.அது ஒரு தொடர்கதையாக தொடர்கிறது...

எல்லா இனத்திலும் நல்லவரும் கெட்டவரும் கலந்தே உள்ளனர்..

தமிழனுக்கு கூட துரோகி வெளியே இல்லை... :)

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

தமிழனுக்கு கூட துரோகி வெளியே இல்லை... :) //

அதனால் தமிழ் அவனுக்கு கற்றுத்தரவில்லை என தமிழை பழிக்க இயலாதுதானே நண்பரே.?


துரோகிகள் , ஞானிகள் , நல்லவர் , கெட்டவர், நாத்திகர் , ஆத்திகர் , எல்லா இனத்திலும் உண்டு...


அப்படியே ஏற்போம்..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

கவிதை சிங்களவர்களைப்பற்றியோ ,தமிழைப்பற்றியோ அல்ல .சிங்கள மொழி பற்றியது .ஆனால் நமது வாதம் மொழியை பற்றியில்லாமல் மொழி பேசும் மக்களைப்பற்றி செல்வதால் அது கவிதையின் கருத்தினின்று விலகிச்செல்வதாக உணர்வதால் மக்களைப்பற்றிய வாதத்தை இத்துடன் முடித்துக்கொண்டு மொழியைப்பற்றிய வாதமாக தொடர்தல் நலமாக இருக்கும் என நினைக்கின்றேன் பயணமும் எண்ணங்களும் அவர்களே .

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

கவிதை சிங்களவர்களைப்பற்றியோ ,தமிழைப்பற்றியோ அல்ல .சிங்கள மொழி பற்றியது .ஆனால் நமது வாதம் மொழியை பற்றியில்லாமல் மொழி பேசும் மக்களைப்பற்றி செல்வதால் அது கவிதையின் கருத்தினின்று விலகிச்செல்வதாக உணர்வதால் மக்களைப்பற்றிய வாதத்தை இத்துடன் முடித்துக்கொண்டு மொழியைப்பற்றிய வாதமாக தொடர்தல் நலமாக இருக்கும் என நினைக்கின்றேன் பயணமும் எண்ணங்களும் அவர்களே .//

சரியே

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி பயணமும் எண்ணங்களும் அவர்களே .

பெயரில்லா சொன்னது…

//சிங்களவன் மடையன் காட்டு மிராண்டி என்று நாம் அவனைத் தாழ்த்துவது நமது இயலாமையை மறைப்பதற்கான வழியே அன்றி வேறில்லை. //
நமது இயலாமை என்ன என துமிழ் கூற முடியுமா .
எனக்கு நீங்க தமிழர் தானா என்ற அச்சம் தோன்றியுள்ளது .தமிழன் தான் எனில் எட்டப்பனில்லையே ? . உங்களைப்போன்று சிங்களர்களுக்கு பரிந்துபேசும் துரோகிகள் இருக்கும் வரை தமிழ் துமிழ் தான் தூ ...தூ....தூ...மிழ் தான்

ராவணன் சொன்னது…

"நான் சிங்களவனுக்குப் பிறந்தேன்", "சிங்களவனோடு லிவிங் டுகெதரில் உள்ளேன்" என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் சில பின்னூட்டங்களும் இங்கே உள்ளன.

என்ன சொல்வது?

சிங்களவன் எனக்கு மாமா மச்சான் உறவு முறை.

அம்புட்டுத்தான்...போவே...

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

ராவணன் said.

"நான் சிங்களவனுக்குப் பிறந்தேன்", "சிங்களவனோடு லிவிங் டுகெதரில் உள்ளேன்" என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் சில பின்னூட்டங்களும் இங்கே உள்ளன.

என்ன சொல்வது?

சிங்களவன் எனக்கு மாமா மச்சான் உறவு முறை.

அம்புட்டுத்தான்...போவே... //

இதுக்கும் நீங்கேள் கீழே சொன்னதுக்கும் பொருத்தினால் தமிழும் காட்டுமிராண்டியாகிடுமே நண்பரே..

அதனால்தான் சொல்கிறோம் மனிதர்களை வைத்து மொழியை தீர்மானிக்கக்கூடாது..//ஒவ்வொரு மொழியும் தனது மக்களுக்கு மேன்மையான கருத்துக்களையும் ,மேன்மையான குணத்தையையும் ,நல்லொண்ணம் ,நல்லொலுக்கம் ஆகியவற்றையும் தொடர்ந்து படிப்பித்துக்கொண்டே வருவதுடன் மக்களை மக்களாக்கும் முயற்சியில் சதா சர்வகாலமும் இயங்கிக்கொண்டேயிருக்க வேண்டும் .அப்படி இயங்கிக்கொண்டு இருக்கும் மொழி தான் பண்பட்ட மொழியாகும் .அப்படியில்லாமல் ,குறுகிய வட்டத்திற்குள் தனது மக்களுக்கு உயர்ந்த ண்புகளைப் போதிக்காது,மானிதகுலமாண்பிற்கும்,மனிதாபிமானத்திற்கும்
ஒவ்வாத செயல்களைச்செய்யும் அளவிலே மட்டுமே அவர்களிடம் அறிவைச்சேர்த்துவரும் மொழியை காட்டுமிராண்டி மொழி யென்று கூறாமல் எவ்வாறு கூறுவது?.//

தினேஷ்குமார் சொன்னது…

புறமுதுகில் தாக்கியவனே
சிங்கத்தின் சினத்தை
எதிர் நின்று எதிர்திருந்தால்
உன்கரம் பிடித்த
துப்பாக்கி தானே
விழும் கீழே அவ்விடத்திலே
இரண்டும் போயிருப்பாய்
துர்நாற்றம் பிடித்த சிங்களா

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எனது வலைப்பூவிற்கு வருகை தந்து
தமிழ்மணம் மற்றும் இன்ட்லி யில் வாக்களித்தவர்களுக்கும்
பின்னூட்டமிட்டவர்களுக்கும்
எனது மனமார்ந்த நன்றி கலந்த வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன் .

ceekee சொன்னது…

Well said.There is no option to lovers of truth except to call a spade a spade.
Any language which instills racial hatred and inspires among its people violence and genocide must have been poisoned to a large extent.
Singhla language has been inundated by false
"histories", harmful mythologies, hate spewing "sacred texts " for long. The ideas of democracy, equality, fraternity, international brotherhood, secularism, humanism, respect for human rights, amicable living of different races/languages/religions seems foreign and alien to Singhala language.

Your voice must serve as a warning call :
Time for the Singlala scholars to review their language and attempt to rectify and remedy the situation, if they want to save their language and its people ...

வெத்து வேட்டு சொன்னது…

ரொம்ப நோண்டீட்டிங்க நொரண்டு...பிரபாவும்..விடுதலை புலிகளும்... கடைசி சண்டை தொடங்கும் பொது...
தெற்கிலும்..கொழும்புவிலும் இரத்த ஆறு ஓடும் என்றும்... யாழ்பாணத்தில் இருக்கும் 50000 இராணுவமும் சவபெட்டியில் தான் போகுமென்றும்..வன்னி தான் இலங்கை இராணுவத்துக்கு சவக்குழி என்றெல்லாம் ...படம் காட்டினார்கள்..அதன் விளைவு தான் இது...
உன்னை திருத்து உலகம் தானே திருந்தும்...அது தமிழர்களுக்கும் பொருந்தும்...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வழிமொழிகிறேன்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "