இந்த கட்டுரையைப்படிப்பவர்களின் கவனத்திற்கு .
முதலில் முன் முடிவுகளை கழற்றிவைத்துவிட்டு பின் படிக்கவும் .
இது யாரையும் ஆதரித்தோ,எதிர்த்தோ எழுதப்பட்டது அல்ல .
நேற்று என் நண்பர்களிடம் நான் எடுத்துவைத்த கருத்தை இங்கு பதிந்துள்ளேன் .
----------
இங்க எல்லாம் மாறக்கூடியது .
மாறாத எதுவும் உறைந்துவிடும் .
மாற்றத்தை உணராத இசங்கள் உறைந்து அழுகி பின் சிதைந்துவிடும் .சமூதாயத்தில்நோய்க்கிருமிகளாக .பின் அழிந்துவிடும் .
இதற்கு காந்தியிசமானாலும் சரி ,மார்க்சிசமானாலும் சரி இன்னும் உள்ள அனைத்து இசங்களுமானாலும் சரி விதிவிலக்கல்ல .
இசங்களை படித்து அதன்பால் ஈர்க்கப்பட்டு அதனை உருவாக்கியவர்களின் பால் உண்மையானமதிப்புவைத்து வாழ்பவர்கள் யாரும் அந்த இசத்தின் தன்மையில் உறைந்து விடுவார்களேயாயின் .அந்த இசமும் அழிவதோடு அவர்களும் அந்த இசத்தை அழித்தவர்களாவார்கள் .
எந்த ஒரு இசம் சமூதாயத்தில் ,சமுகத்தில் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி ,ஒரு குறிப்பிட்ட சாரரை மட்டுமே மகிழ்வித்து ,முன்னிருத்தி ,அவர்களின் நலவாழ்வு மட்டுமேமுக்கியம் என்ற கோணத்தில் இயங்குமேயானால் ,அதனால் சமுதாயத்தில் என்றும் அமைதியே இருக்காது .
எப்பவும் சமுதாயத்தை அது துண்டாடவே செய்யும் .அதனால் மக்கள் அடையும் பயனைவிட பாதகமேஎன்றும் அதிகமாகவே இருக்கும் .அது எப்பவும் அதனை ஆதரிப்பவர்களையும் நிம்மதியில் விடாது,மற்றவர்களையும் நிம்மதியில் விடாது .
எந்த ஒரு இசமானாலும் சரி அது பொதுவான மக்களின் அமைதியான வாழ்விற்கு ,ஏதுமறியாதஅப்பாவி மக்களு சிறிதளவு ஊறு விளைவித்தாலும் ,அந்த இசம் மனித குலத்திற்கே அநீதியான,ஒதுக்கப்படவேண்டிய இசமாகவே இருக்கும் .
------------
காந்தி உண்மையான சுதந்திரம் வாங்கிக்கொடுக்கவில்லை .
இந்தியா பொற்றது உண்மையான சுதந்திரமே அன்று .
வெள்ளையனிடம் வாங்கி கொள்ளைக்கார பணியாக்களிடம் அடகுவைத்துவிட்டனர் .
நாடாடா இது ...தூ ...சுதந்திர நாடாடா இது ...
சுதந்திரம் இங்கு இல்லை , இங்கு இருப்பதும் சுதந்திரமில்லை .
இந்தியா ஒரு சுதந்திர நாடே கிடையாது .
என பலதரப்பட்ட கூக்குரல்கள் ...
காதில் கேட்கமுடியாத அளவிற்கு
அமைதியடைய ஒரு அரை மணிநேரம் ஆனது .
அமைதியான பின்
நான் அந்த தோழர்களைப்பார்த்து
தோழர்களே ,நீங்கள் சுதந்திரம் என்று எதைக்கூறுகின்றீர்கள் என எனக்குத்தெரியலில்லை .
இந்தியா ஒரு சுதந்திர நாடே கிடையாது என்பதில் அழுத்தம் ,திருத்தமாக இருக்கின்றீர்கள் என்றேன்.
ஆம் ,ஆம் ,உண்மை அது தான் என்ற பதில் அரங்கம் அதிர வந்தது .
சரி ,அப்படியெனில் ,
நீங்கள் சுதந்திர நாடு என உலகில் ஒரு நாட்டை எனக்கு அடையாளம் காட்டுங்கள் .
அந்த நாட்டின் உள்ள சுதந்திரத்தையும் இந்தியாவில் உள்ள சுதந்திரதிர கூறுகளையும் ஒப்பிட்டுப்பார்த்து பின் ஒரு முடிவுக்கு வரலாம் .
ஆதலால் தயவு செய்து கூறுங்கள் என்றேன் .
பதில் யாரிடமிருந்தும் வரலில்லை ....
இதைப்படிக்கும் யாராவது தெரிந்திருந்தால் தயவு செய்து கூறுங்கள் .
------
கொஞ்சமாவது சிந்திப்போமே .
.
.
Download As PDFTweet |
|
39 கருத்துகள் :
///எந்த ஒரு இசமானாலும் சரி அது பொதுவான மக்களின் அமைதியான வாழ்விற்கு ,ஏதுமறியாதஅப்பாவி மக்களு சிறிதளவு ஊறு விளைவித்தாலும் ,அந்த இசம் மனித குலத்திற்கே அநீதியான,ஒதுக்கப்படவேண்டிய இசமாகவே இருக்கும் .///
நாடு என்பதே இன்னொரு நாட்டின் மீது வேறுபாடு கொள்ள வைக்கிறது.ஒரு நாட்டு மக்கள் மீது இன்னொரு நாட்டு மக்களை வெறுப்போ வேறுபாடோ கொள்ள வைக்கிறது.அப்புறம் என்ன சுதந்திரம். இந்த உலகத்திற்கு எல்லை கோடு என்பதே இருக்க கூடாது.
சிந்திக்க வைத்துவிட்டீர்கள், நல்ல பதிவு,ஓட்டு போட்டச்சு.
அண்ணே நானும் இந்தியா எனது தேசம் என்று சொல்லிக் கொள்ள வெக்கப்படுகிறேன்...
Nice Post
அன்பின் நண்டு
நல்ல சிந்தனையில் விளைந்த நல்லதொரு இடுகை. உலகில் உள்ள சுதந்திர நாடுகளை விட நம் நாட்டில் சுந்தந்திரம் அதிகமாகத்தான் இருக்கிறது.
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா
ஆமாம். இந்த நாட்டில் சுதந்திரம் நிறைய அளப்பரிய உள்ளது.வேறு எங்கும் காண முடியாத அளவு இந்தியாவில் சுதந்திரம் எல்லோரும் அனுபவிக்கிறோம். அந்த அளப்பரிய சுதந்திரமே சகல கேடுகளுக்கும் அவலங்களுக்கும் ஆதாரமாக உள்ளது. சுரண்டவும், ஊழலில் ஊறித்திளைத்து பணக்காரனாகவும், ஆட்ச்சி அதிகாரம் கொண்டு ஆணவத்தில் அடங்காது மேலும் செல்வம் சேர்க்கவும் ,பிறரை அடக்கி ஒடுக்கி வாழ்வும் இங்கு அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.
--
சுதந்திர நாடு என்பது உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் ஒப்பீட்டு செய்து தான் தெரிந்து கொள்ளவேண்டுமா என்ன ???? உலகமே ஏகாதிபத்தியத்தின் கீழ் உள்ளது . போபால் தீர்பிர்க்கு உங்கள் பதில் என்ன , பிளாச்சிமடாவில் கோக் ஆதிக்கம் செலுத்தி அந்த ஊரை பாழ் செய்ததே அதற்க்கு உங்கள் பதில் என்ன ??????? தண்டகாரண்யாவில் ஒரு நிருவனதிர்க்காக மக்கள் விரட்டப்படுகிரார்களே ??????? அதன் நோக்கம் என்ன ...........................sterlite ஆலையில் உங்கள் நிலைப்பாடு என்ன ?????? இப்படி முதலாளிகள் நலனுக்காய் சாதாரண மக்கள் சுரண்டப்படும் பொழுது சாதாரண மக்கள் மக்கள் பக்கம் இருப்பதை தானே செய்ய முடியும் அதெப்படி முதலாளிகளுக்கும் சாமானியனையும் ஒரே தராசில் நிறுவ முடியும் என்று தெரிவதில்லை ................நீங்கள் சொல்வதை பார்த்தல் ஆதிக்க மக்கள் , அல்லது முதலாளிகள்
அமைதி பாதிக்க படக்கூடாது என்று அக்கறையாய் இருப்பீர்கள் போல
//நல்ல சிந்தனையில் விளைந்த நல்லதொரு இடுகை. உலகில் உள்ள சுதந்திர நாடுகளை விட நம் நாட்டில் சுந்தந்திரம் அதிகமாகத்தான் இருக்கிறது. //அப்படியா இது உண்மையா ???????
சுதந்திர நாடு என்றால் நமக்கு யூஎஸ் தான் நினைவு வருகிறது. சொல்லுங்கள் நண்பரே அந்த நாட்டின் ஈராக் போர் பற்றி அந்த நாட்டு மக்கள் எந்தளவு கீழே சென்றும் விமர்சனம் செய்ய முடியும் தெருவில் இறங்கி போராட முடியும். ஆனால் இங்கு ஈழ மக்களுக்கு உரத்து குரல் கொடுக்க முடியாது. ஆளும் கட்சிக்கு எதிராக கை விரல் நீட்ட முடியாது. வலை பதிவரை கைது செய்யும் அளவுக்கு போகிவிட்டார்கள். மாவோயிஸ்ட் ஆதரவாக கருத்து தெரிவிப்பது எழுதுவது தேச துரோகமாக பார்க்கபடுகிறது. ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஊதுகுழலாக இல்லாவிட்டால் தாக்கப்படுகின்றன. தனிமனித சுதந்திர மேற்கு நாடுகளை ஒப்பிடும் பொழுது மோசமாக உள்ளது. நமது மீனவர்கள் கடல் எல்லை தாண்டி சுட்டு தள்ளும் சிங்கள மீனவன் எல்லை தாண்டினால் பத்திரமாக பாதுகாக்கபடுகிறான். சுதந்திர அடைந்த போது சுதேசி மன்னர்கள், வனவாசிகள், பிற மக்கள் குழுக்கள் ஆகியவற்றின் விருப்பம் பெறப்படாமாலே ஒன்றினைக்கப்பட்ட நாடு என்பதை மறக்க முடியாது. ஒப்பினியன் வாக்கு எடுப்பு நடத்தினால் எத்தனை மாநிலம் இருக்கும் என்பது தெரியவில்லை.காஷ்மீர் இணைக்கப்படும் போது அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் பறக்க விடப்பட்டது . மற்ற சுதந்திர நாடுகளை விட மட்டு பட்ட அளவிலே நமது நாடு உள்ளது.
சுதந்திர நாடு என்பதனை பற்றி சொல்ல வரும்போது எந்த அரசிலும் எல்லா மக்களின் எண்ணங்களையும் பிரதிபளிக்கவோ அல்லது பூர்த்தி செய்யவோ இயலாது. சுதந்திர நாடு என்ற வரையரையை விட்டு இந்தியாவை பற்றி சொல்ல வேண்டுமானால் மக்கள் நல மற்றும் மக்களின் உரிமையைப் பேணும அரசு என்ற வகையில் பெரும் தோல்வியையே அடைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். மேலும் இன்றைய நிலையில் மக்கலாட்சித்தத்துவமே கேலிப் பொருளாகிவிட்டிருக்கிறது. மன்னராட்சியின் அடுத்த பரிமாணமாக இது உள்ளது. எந்தவொரு உரிமைக்காகவும் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது.தனி பதிவே எழுதலாம்.
நம் நாட்டில் பல பகுதிகள் சுதந்திரமாகவும், பல பகுதிகள் சுதந்திரமற்றதாகவும் உள்ளது.
நமக்கு இருக்கும் உரிமைகளை முறையாகப் பயன்படுத்தினால் நம் நாடு தான் சொர்க்கம்.
ம்ம்.. என்ன செய்ய
நண்பா,
சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்று சொல்வதை விட, விடுதலை இன்னும் கிடைக்கவில்லை என்ற வார்த்தி சரியானதாக இருக்கும்.
பாரதியின் பாடல் ஒன்றை மட்டும் முன் வைக்கின்றேன்.
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ
ஆரமுதுண்ணுதற்கு ஆசைப் பட்டார்-கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ.
விண்ணிலிரவி தனை
விட்டுவிட்டவரும் போய்
மின்மினி கொள்வாரோ-
கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால்
கை கொட்டிச் சிரியாரோ.
இதுதான் இன்றைய நிலை...
சனநாயகத்தை வாக்குச்சீட்டுகள் நிர்ணயிக்கின்றன. பெரும்பாண்மை தான் இங்கே பேசுகிறதே தவிர வெகுசன நம்பிக்கைக் குரல்களல்ல
குறைகல், வெட்ககேடான செயல்கள், அநாகரீகங்அல்,நேதனைச் சம்பவங்கள் என்று பல விசயங்க்ளில் கோபமும், ஆற்றாமையும் இருந்தாலும்... தவறு செய்யும் அரசை தூக்கியெறிய மக்களுக்க் எப்பவும் ஒரு வழி இருந்துகொண்டுதான் இருக்கிறது.... இரண்டு தேர்தல்களில் மக்கள் சரியாகப்பிறயோகப்படுத்தினால், அதன்பிறகு அரசியல் வாதிகல், பணம்படைத்தவர்களுக்கு செம்பு தூக்குவது நின்று..., திருந்த வாய்ப்பிருக்கிறது....., மக்கள் விளிப்புணர்ச்சி அடைந்து வாக்குறிமையை சரியாகப் பயன்படுத்துவதுதான், சரியான தீர்வாக இருக்கும்.....மற்ற வேரெந்த வழிகளில் போராடினாலும், பிரச்சினை தீராது, தொடர்ந்து கொண்டுதாக இருக்கும்...
///நமது மீனவர்கள் கடல் எல்லை தாண்டி சுட்டு தள்ளும் சிங்கள மீனவன் எல்லை தாண்டினால் பத்திரமாக பாதுகாக்கபடுகிறான்.///
இது பணம் குடுத்தவனுக்கு ஓட்டை விற்ற பச்சைத் தமிழனின் குற்றமா?. இல்லை நாட்டின் குற்றமா நண்பரே?
தங்களின் கூற்று மிகமிகச்சரியானது.
நந்தா ஆண்டாள்மகன் அவர்களே .
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி .
மிக்க நன்றி .
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
தேவன் மாயம் @
கே.ஆர்.பி.செந்தில்@
T.V.ராதாகிருஷ்ணன்@
cheena (சீனா)
அவர்களே
மிக்க நன்றி .
உண்மை தான்
கக்கு - மாணிக்கம் அவர்களே .
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி .
மிக்க நன்றி .
//உலகமே ஏகாதிபத்தியத்தின் கீழ் உள்ளது//
எனில்
//சுதந்திர நாடு என்பது உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் ஒப்பீட்டு செய்து தான் தெரிந்து கொள்ளவேண்டுமா என்ன ?//
சரி தான் .
//போபால் தீர்பிர்க்கு உங்கள் பதில் என்ன , பிளாச்சிமடாவில் கோக் ஆதிக்கம் செலுத்தி அந்த ஊரை பாழ் செய்ததே அதற்க்கு உங்கள் பதில் என்ன ??????? தண்டகாரண்யாவில் ஒரு நிருவனதிர்க்காக மக்கள் விரட்டப்படுகிரார்களே ??????? அதன் நோக்கம் என்ன ...........................sterlite ஆலையில் உங்கள் நிலைப்பாடு என்ன ??????//
சுதந்திரம் என்ற பதத்தின் அர்த்தம் தெரியாத அரசியல்வாதிகளால் நாடு ஆளப்பட்டால் என்ன நடக்கும் என்பதற்கு இவைகளும் சான்றுகள் .
//நீங்கள் சொல்வதை பார்த்தல் ஆதிக்க மக்கள் , அல்லது முதலாளிகள்
அமைதி பாதிக்க படக்கூடாது என்று அக்கறையாய் இருப்பீர்கள் போல //
//எந்த ஒரு இசமானாலும் சரி அது பொதுவான மக்களின் அமைதியான வாழ்விற்கு ,ஏதுமறியாதஅப்பாவி மக்களு சிறிதளவு ஊறு விளைவித்தாலும் ,அந்த இசம் மனித குலத்திற்கே அநீதியான,ஒதுக்கப்படவேண்டிய இசமாகவே இருக்கும் ..//
நான் இந்த ஏதுமறியாதஅப்பாவி மக்களுக்கான நிம்மதியை பார்க்கின்றேன் .
உங்கள் பார்வையில் இந்த ஏதுமறியாதஅப்பாவி மக்கள் தான்
ஆதிக்க மக்கள் , அல்லது முதலாளிகள் எனில் அவர்களின் அமைதி
பாதிக்க படக்கூடாது என்பதில் அக்கறையாய் இருப்பது தவறில்லை என்றே நினைக்கின்றேன்.
// //நல்ல சிந்தனையில் விளைந்த நல்லதொரு இடுகை. உலகில் உள்ள சுதந்திர நாடுகளை விட நம் நாட்டில் சுந்தந்திரம் அதிகமாகத்தான் இருக்கிறது. //அப்படியா இது உண்மையா ??????? //
இல்லையா ?????
வெண்ணிற இரவுகள்....! அவர்களே
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி .
மிக்க நன்றி .
ம்...இது ஜனநாயக சறுக்கல்
v.pitchumani அவர்களே
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி .
மிக்க நன்றி .
//சுதந்திர நாடு என்பதனை பற்றி சொல்ல வரும்போது எந்த அரசிலும் எல்லா மக்களின் எண்ணங்களையும் பிரதிபளிக்கவோ அல்லது பூர்த்தி செய்யவோ இயலாது. //
அதற்குப்பெயர் சுதந்திர நாடு அல்ல .
அரைகிறுக்கன் அவர்களே
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி .
மிக்க நன்றி .
//நமக்கு இருக்கும் உரிமைகளை முறையாகப் பயன்படுத்தினால் நம் நாடு தான் சொர்க்கம்.//
உரிமைகளையும் ,கடமைகளையும்
தெரிந்து கொண்டாலே போதும்
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan அவர்களே.
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி .
//சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்று சொல்வதை விட, விடுதலை இன்னும் கிடைக்கவில்லை என்ற வார்த்தி சரியானதாக இருக்கும்//
அப்படி நினைக்கின்றீர்கள் .
//சனநாயகத்தை வாக்குச்சீட்டுகள் நிர்ணயிக்கின்றன.//
ஆம்,
ஆனால் சுதந்திரத்தையல்ல .
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி .
ஆரூரன் விசுவநாதன் அவர்களே
மிக்க நன்றி .
//குறைகல், வெட்ககேடான செயல்கள், அநாகரீகங்அல்,நேதனைச் சம்பவங்கள் என்று பல விசயங்க்ளில் கோபமும், ஆற்றாமையும் இருந்தாலும்... தவறு செய்யும் அரசை தூக்கியெறிய மக்களுக்க் எப்பவும் ஒரு வழி இருந்துகொண்டுதான் இருக்கிறது.... இரண்டு தேர்தல்களில் மக்கள் சரியாகப்பிறயோகப்படுத்தினால், அதன்பிறகு அரசியல் வாதிகல், பணம்படைத்தவர்களுக்கு செம்பு தூக்குவது நின்று..., திருந்த வாய்ப்பிருக்கிறது....., மக்கள் விளிப்புணர்ச்சி அடைந்து வாக்குறிமையை சரியாகப் பயன்படுத்துவதுதான், சரியான தீர்வாக இருக்கும்.....மற்ற வேரெந்த வழிகளில் போராடினாலும், பிரச்சினை தீராது, தொடர்ந்து கொண்டுதாக இருக்கும்... //
//இது பணம் குடுத்தவனுக்கு ஓட்டை விற்ற பச்சைத் தமிழனின் குற்றமா?. இல்லை நாட்டின் குற்றமா நண்பரே? //
மிக அருமையாகச் சொன்னீர்கள் .
Jey அவர்களே
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி .
மிக்க நன்றி .
யார் சொன்னது இந்தியா சுதந்திர நாடு அல்ல என்று?
1. வெள்ளையன் கையிலிருந்து கொள்ளையன் கைக்கு மாறிய சுதந்திரம் இது.
2. அரசியல் வாதிகள் திட்டங்களை போட்டு கொள்ளை அடிக்கலாம். மக்கள் கேட்க முடியாத சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது.
3. அதிகாரிகள் லஞ்சம் வாங்கலாம், மக்கள் கேட்க முடியாது. அளவற்ற சுதந்திரம் உள்ளது.
4. சுதந்திர இந்தியாவில் மக்களைக் கேட்காமல் அல்லது மக்கள் பிரதிநிதிகளின் பாராளுமன்றத்தில் பேசாமல் கூட அணு ஆயுத ஒப்பந்தம் போடலாம்.
அந்த ஒப்பந்தத்தில் என்ன இருந்தது என்று எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் கேட்டபோது அதை வெளியிட வில்லை. அளவற்ற சுதந்திரம் ஆட்சியாளர்களுக்கு உள்ளது.
5. இன்னும் பல
மேலே உள்ள எவற்றையும் கேட்கும் சுதந்திரம் மக்களுக்கு இல்லை.
இந்த நாடு மிக மோசமான நிலைக்கு போன ஒரே காரணம் காங்கிரஸ்.. காங்கிரஸ் வேறு எதுவும் காரணமில்லை... அந்த இயக்கத்தில் பங்கேற்ற பெருவாரியான முதலாளிகள் மற்றும் உயர் குலத்தோர்.. தங்களின் சுயநலன் சார்ந்தே செயல்பட்டார்கள்... காந்தியும், காமராஜும் தங்கள் இறுதி காலத்தில் அந்த கட்சியின் மீது பெரும் அவநம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பது வரலாறு. ஒரு இனத்தையே அழித்துக்கொன்ற படுபாதகத்தை செய்து காங்கிரஸ் மட்டுமே.. (ஈழத்தமிழர்கள்) ஊழலின் ஊற்றுக்கண்ணே காங்கிரஸ் தான்.. டி.டி.கே, போபால்,போபர்ஸ்,சர்க்கரை,காமன்வெல்த் ஒலிம்பிக்,ஸ்பெக்ட்ரம்,இன்னும் தோண்ட,தோண்ட,பல ஊழல் பிணங்கள் அழுகி வெளியே வரும்.. இறுதியில் தண்டகாரண்யத்தில் தன் சொந்த மலைவாழ் மக்களையும், காஷ்மீர் முஸ்லிம்களையும் கொன்றுகொண்டிருப்பதும் காங்கிரஸ்தான்.. காங்கிரஸ் இந்திய நாட்டை பிடித்திருக்கும் தரித்திரம். அது ஒழியாத வரை இந்த நாட்டுக்கு விமோசனம் இல்லை..
Independance Day....
Our own President can not give an independant day speech with out bullet proof protection...
Our PM/CMs/Ministers need (A to) Z type police protection even to visit thier own places.
But ... the terrorists from neighbouring countries can come down and kill anybody on street... and no action till today for that..
Still you all say this is independance? I hate to be called as an INDIAN.....
இப்படி பேச முடிவதே சுதந்திரம்தானே:)
//அரசியல் வாதிகள் திட்டங்களை போட்டு கொள்ளை அடிக்கலாம்//
நீங்கள் குறிப்பிடும் இந்த அரசியல்வாதிகளில் பெரும்பான்மையினரும்
//அதிகாரிகள் லஞ்சம் வாங்கலாம், //
நீங்கள் குறிப்பிடும் இந்த அதிகாரிகளில் பெரும்பான்மையினரும் ,
//அளவற்ற சுதந்திரம்//பெற்றுள்ள //ஆட்சியாளர்க//ளில் பெரும்பான்மையினரும் ,
மற்றும்
அவர்களின் அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தி படைத்தவர்களில் பெரும்பான்மையினரும்
குடிசையில் பிறந்தவர்கள் தான் என்பதனை ஞாபகப்படுத்துகிறேன் .
இரா.சுகுமாரன் அவர்களே
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி .
மிக்க நன்றி .
காங்கிரஸ் மட்டும் காரணமில்லை
நீங்களும் கூட காரணமாக உள்ளீர்கள்
என்பதனை முதலில் உணருங்கள் .
raja அவர்களே
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி .
மிக்க நன்றி .
உங்கள் வீட்டிற்கு மட்டும் சுவர் ,
கதவு ,ஜன்னல் வேண்டும் .
அடுத்தவன் மட்டும் வெட்டவெளியில் வாழவேண்டும் .
//the terrorists from neighbouring countries can come down and kill anybody //
உங்களுக்கே தெரியுது தீவிரவாதிகளின் செயல் என்று
அப்புறம் எதுக்குங்க இந்த வெட்டி நா யம் .
tshankar89 அவர்களே
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி .
மிக்க நன்றி .
//இப்படி பேச முடிவதே சுதந்திரம்தானே//
100 க்கு 100 உண்மைங்க
வானம்பாடிகள் அவர்களே
தங்களின்
வருகைக்கும் ,கருத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி .
மிக்க நன்றி .
//இப்படி பேச முடிவதே சுதந்திரம்தானே//
100 க்கு 100 உண்மைங்க
வானம்பாடிகள் அவர்களே//
இந்த அளவாவது சுதந்திரம் கிடைக்கிறதே என்று மகிழ்ச்சி அடைவது, சுதந்திரச் சிந்தனை அல்ல. அடிமைச் சிந்தனை.
//இப்படி பேச முடிவதே//
என்ற பதத்திற்கு முழு அர்த்தமும் உணராமல்
தெரியாமல் நம்ம பாட்டுக்கு
அடிமைச் சிந்தனை என பின்னூட்டமிடுவது கூட
சுதந்திரச் சிந்தனை தான் .
ஆமா, அடிமைச் சிந்தனை என்றால் என்ன ?
இரா.சுகுமாரன் அவர்களே
//ஆமா, அடிமைச் சிந்தனை என்றால் என்ன ?//
இன்று தினமணியில் அடடே.......! மதி
ஆகஸ்டு -15 இன்று இந்திய வரலாற்றில் முக்கியமான நாள்.
லஞ்சம், ஊழல், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பெருகி வரும் மக்கள் தொகை, கடும் விலைவாசி ஏற்றம், பணவீக்கம், காஷ்மீர் பிரச்சனை, தெலுங்கான பிரச்சனை, நக்சலைட் தாக்குதல்கள்,
தமிழக மீனவர்கள் படுகொலை, நதிநீர்ப் பிரச்சனை, வியாபாரமாகிவிட்ட கல்வி, சட்ட ஒழுங்கு சீர்கேடு, இதையெல்லாம் தீர்க்க இயலாத மத்திய அரசு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திருவாளர் பொதுசனம்...........
எந்த பிரச்சனை இருந்தாலும் எல்லாவாற்றையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் அவர்களுக்கே ஒட்டுப் போடப் போகும் அடிமைகள்.
அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
அடிமைத் தனம் என்பது ஆடு
தம் கழுத்தை அறுக்கப் போகும்
ஒருவனையே நம்பிப் போகும் நிலை போன்றது.
இவர்களை இந்தியாவின் சுதந்திர அடிமைகள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அடிமையாய் இருப்பதைவிடவும் மோசமானது நாம் அடிமை என்பது தெரியாமல் இருப்பது தான்.
பார்க்க இரா.சுகுமாரன் அவர்களே
அழிந்து போகும் அரசியல் கட்சிகள்… எவை? எவை? ...எப்படி? எப்படி?
http://nanduonorandu.blogspot.com/2009/03/blog-post_28.html
It is childish to say 'Gandhi did not 'get' true freedom and give us'. Freedom is not a commodity to be purchased from a petty shop like idly to be distributed to beggars. Vaangal & kodukkal can only be in trading. To be tree is an eternal struggle. Gandhi never accepted that India became free on Aug 15, 1947. We were subjects under British rule. Now objects under free rule. Never aspire to be citizens. It is not Gandhi's fault. Goat-like people will only get wolf-like rulers.
P.S. Narayanan, Orissa
No democratic country in world is so corrupted as ours in every level.
All the Four pillars of the Democracy (Executive, Legislative, Judicial and the Media)
are fully corrupted.
Scam starts from Nehru regime to till date
Legislative - Both central & Spend 2000 crores for Election, But the parties spent 8000 crores.
Judicial – Even the Supreme Court Judges are corrupted (8 out of 16)
Media – A bottle of Chivas Regal can buy the reporter, if not the Political power.
நாம் நாட்டில் சட்டத்தை மீர, ரோட்டில் துப்பதான் சுதந்திரம் உள்ளது இது சுதந்திரம் இல்லை. ஒரு சராசரி மனிதன் தன் அரசுக்கு எதிரான கருத்தை சுதந்திரமாக கூறினால் அவனால் சுதந்திரமாக இந்த நாட்டில் இருக்க முடியுமா.....
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "