சரியாக கணித்து கூற முடியவில்லை ,
சுதந்திரம் பெறுவதற்கு சற்று முன்பிருந்து என எடுத்துக்கொள்ளலாம் .
இது எவ்வளவு சரி என்பதை விட ,இதனுள் பல சரிக்கள் இருப்பதால்,
இதனை சற்று நோக்கவேண்டியுள்ளது.
ஒரு ஒழுங்கமைவை நோக்கிய மனித குழுமத்தில் வரலாற்று ஆசிரியனின் கடமை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று .ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளை நோக்க அத்தகைய கடமைகள் எதையும் எந்த வரலாற்று ஆசிரியனும் செய்ததாக அறியப்படவில்லை . இது வேதனையான விடயம் என்பதை விட ,இது மிகவும் விடமான விடயமும் ஆகும்.
இதனை விட இதனால் யாருக்கு என்ன பாதிப்பு என்பதனை நோக்கும் பொழுது, இதனால் பாதிக்கப்பட்ட இனம் தமிழினம் என்பதனை அறியும் பொழுது ,இது பற்றி சிந்தித்து ,செயல்படாமல் முடங்கிப்போக சுயம் விடாமல் நச்சறித்து , விடியல் வழிகளை தேடி ,கிடைத்த பதில்களில் ஒன்று நூற்றாண்டு கால வரலாற்று ஆசிரியனின் உறக்கம் இது என்பது.
வரலாற்று ஆசிரியன் உறங்க முடியுமா என்பது தான் எனது முதல் கேள்வியாக நூற்றாண்டு கால வரலாற்று ஆசிரியனின் உறக்கத்திற்கான பதிலுக்கு நான் கேட்டது .ஏனெனில்,உண்மையில் ஒரு வரலாற்று ஆசிரியன் எப்பொழுது உறங்குவான் என ஆய்ந்தால் ,அவன் தனது வரலாற்று மறைப்பில் தான் உறங்குவான் என்பது தெளிவான உண்மை .ஆனால்,அப்படி இல்லாத ஒரு வரலாற்று படிவத்தை நமக்கு முன் வைத்துவிட்டு சென்றுள்ள நமது கடந்த காலத்தை நாம் எப்படி சுவாசிப்பது என்பதற்கு ஒரு பதிலும் இல்லை . இப்படியான ஒன்று எப்படி, ஏன், எதற்காக,யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பது மிகவும் கவனமாக ஆய வேண்டிய முக்கியமான ஒன்றாகும் .இந்த ஆய்வு இல்லை எனில் நாம் நம்மை மாயையில் மடித்து வீணாய் போவோம் .
ஏதோ இது நமக்கு மட்டும் ஏற்பட்ட ஒன்றல்ல ,அனைவருக்கும் ஏற்பட்டது . முதல் பலி தமிழனும் ,தமிழினமும் என்பதுவே நிதர்சனமான உண்மை .
சரி இந்த உறக்க வரலாற்றை யார் கட்டமைத்தது ,எதனால் இவ்வாறு கட்டமைத்தார்கள் ,ஏன் , இதற்கான அவசியம் என்ன ,அதனால் யாருக்கு என்ன பயன் என ஆய.அவைகள் தெள்ளத்தெளிவாக எடுப்பார் கைப்பிள்ளையாகி விட்டிருப்பது தெரியவந்தது .தமிழன் அதனை எடுக்க முயற்சிக்கவே இல்லை என்பதை முந்தைய படிம வரை வரலாறு கூறுகிறது.அப்படியெனில் தமிழனுக்கு எதிராக யார் எடுத்தார்கள் என்பதனை நோக்க ,அது மிகவும் நீண்ட எண்ணிக்கை கொண்டது.அதில் காழ்ப்புணர்வு,காட்டுமிராண்டித்தம் மற்றும் சுரண்டல் மனே நிலையில் பிறந்து அடுத்தவரை ஏய்க்கும் ஓநாய் குரல் தீவு மனிதன்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது.அவர்களை பிறித்துப்பார்க்க முடியாதபடி அவர்கள் நல்லவர்களாக மிகவும் லாவகமாக தங்களை படியவைத்திருப்பது தெரியவரும் பொழுது , உண்மை மிகவும் கசப்பாகவும் , கடினமாகவும்,ஏற்க முடியாததாகவும் ,அதிலும் அறிவு சிறைபட்டும்,சிறுமை பட்டும் ,அழுத்தப்பட்டு அழுத்தப்பட்டு அமிழ்ந்துள்ளது ....
.
படங்கள் உதவி நன்றி . இணையம் .
Download As PDF