சனி, 9 ஜூலை, 2011

தெற்கு சூடானிற்கு ஒரு சிறுவிண்ணப்பம்


இன்று முதல்
தனது உதயத்தைத்தொடரும்
எனதருமை
தெற்கு சூடானே
நீர்
நீடூழி வளமுடனும் நலமுடனும்  வாழ்க .

இந்த இனிய நாளில் நான் உம்மிடம் வைக்கும் ஒரு சிறுவிண்ணப்பம்  யாவெனில் இனி வரும் காலங்களில் ஐ.நா மற்றும் பிற உலக அவையங்களில் நீங்கள் புகழும்படி சிறப்புடன் செயல்படவேண்டும் என்றும் , அத்தகைய அவையங்களில் உலகில் உள்ள  உங்களைப்போல் பாதிக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக  முதற்குரல் கொடுக்கவேண்டும் என்றும் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .

எனது மனமார்ந்த வாழ்த்துக்களை
மீண்டும் ஒருமுறை
தெரிவித்துக்கொள்கிறேன்,
வாழ்த்துக்கள் .

வாழ்க   தெற்கு சூடான்  வாழ்க .
தெற்கு சூடனைப்பற்றி சில துளி தகவல்கள் :

இதற்காக 48 ஆண்டுகளுக்‍கு மேலாக போராடியுள்ளனர் .

இதன் விடுதலைக்கு 20 லட்சம் பேர் தங்களின் இன்னுயிரை அர்பணித்துள்ளனர் .

இங்கு கிட்டத்தட்ட 75 சதவீதம் பேர் கல்வியறிவு அற்றவர்கள்,40 சதவீதம் பேர் உணவின்றி வாழ்கின்றனர்.

இது உலகின் 193வது நாடாகவும் , ஆப்பிரிக்‍க கண்டத்தின் 54-வது நாடாகவும் உதயமாகிறது.

சுதந்திரத்தை "We will never, never, never surrender." என ஆடிபாடி கொண்டாடி மக்கள் மகிழ்கின்றனர் .

"ஆ, நான் சுதந்திரமாக இருக்கிறேன்," என 27 வயது போலீஸ் அதிகாரியும் முன்னாள் ராணுவ விரருமான டேனியல் டெங் தனது  துப்பாக்கியை வெடித்து மகிழ்ந்தார்.
..

Download As PDF

20 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

தென் சூடன் எமக்கும் சற்று நம்பிக்கை தருகிறது ..

புதிதாய் பிறக்கும் ஒரு நாடு, வாழ்த்துக்களுடன் வரவேற்ப்போம் ....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

விடியல் அவர்களுக்கு வெற்றியை தரட்டும்..

சசிகுமார் சொன்னது…

சுதந்திரம் பெற்று தனி நாடாக இன்று உதயமாகும் தெற்கு சூடானிற்கு எனது வாழ்த்துக்கள். முதலில் வறுமையும் ஒழிக்க முயற்சி எடுங்கள்

கூடல் பாலா சொன்னது…

வாழ்த்துக்கள் தெற்கு சூடான்

உலக சினிமா ரசிகன் சொன்னது…

தெற்க்கு சூடானுக்கு வாழ்த்துக்கள்.
இதே வாழ்த்தை என் வாழ் நாளில் தமிழீழத்துக்கும் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் அண்ணாச்சி, தெற்குச் சூடானுக்கான விண்ணப்பத்தினை, தமிழர்களின் குரலாக நீங்கள் பிரபலமான ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அனுப்பினால் இன்னும் நன்றாக இருக்கும்.

தெற்குச் சூடானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் இந் நேரம், எமக்கான விடியலும் வெகு தொலைவில் இல்லை என்று எம் மனதினை மாத்திரம் தேற்றிக் கொள்ள முடிகிறது.

ஹேமா சொன்னது…

சூடானுக்கு வாழ்த்துச் சொல்வதோடு எமக்கான எதிர்பார்ப்பும் இதுபோல ஒருநாளில் !

ராஜ நடராஜன் சொன்னது…

அவசியமான பகிர்வு.நன்றி.

Mahan.Thamesh சொன்னது…

சுகந்திர தேசமாய் உதயமாகும் தென்சுடானுக்கு வாழ்த்துக்கள் . எம் தேசம் மலர புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது .

ceekee சொன்னது…

An excellnt presentation. Congratulations to you and the newly born South Sudan.
Have this translated in various languages of the World to have it sent to people who do not know Thamzih.

As a new born nation, its primary goals would be to eliminate starvation, illiteracy, unemployment and improve public hygiene all this with special focus and emphasis on women, children and the indigent. We, Thamizhs scattered all over the World, while congratulating it on its newly acquired and well deserved freedom, would like to warn it of blindly adopting Western models of "development" and relying on various multinational Corporations whose aims and aspirations are nothing short of inhuman, unethical, ruthless and barbaric exploitation of natural resources at the expense of local and indigenous people causing irreparable damage to Nature.

Eezham will soon rise from its ashes like a phoenix... To handshake with South Sudan.
And it will then shine as a star beckoning and inspiring all the freedom-lovers and adherents of liberty, equality and fraternity of the World...

கவி அழகன் சொன்னது…

சுகந்திர தேச தென்சுடானுக்கு வாழ்த்துக்கள்

எப்போ தணியும் எங்கள் சுதந்திர தாகம் ?????????????????????????????????????????????????????????????????????????????????????????

KARUPPANAN PALANISWAMY சொன்னது…

Note worthy presentation. After a great struggle South Sudan blossoming.The people of South Sudan will improve and a day will be not far of that it will compete with other Nations in all fields. Let us congratulate the people for their relentless struggle to achieve the goal of freedom.
K.PALANISwAMY,
09-07-2011.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - நல்லதொரு சிந்தனை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Kanchana Radhakrishnan சொன்னது…

அவசியமான பகிர்வு.நன்றி.

VELU.G சொன்னது…

நல்ல சிந்தனை

நட்சத்திர வாழ்த்துக்கள்

ஷர்புதீன் சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள்

துளசி கோபால் சொன்னது…

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

நம்மூர்க்காரர இருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. என் மாமியார் வீடு அந்தப் பக்கம்தான்:-) போடி.

ராஜ நடராஜன் சொன்னது…

தென் சூடானுக்கும்,நட்சத்திரமாய் மின்னுவதற்கும் வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

நட்சத்திர பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "