ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வித்தியாசமான விளையாட்டு .






இது
ஒரு
வித்தியாசமான விளையாட்டு
சொல்லித் தருகிறேன்
வா .

ஒன்று ,இரண்டு ,மூன்று ,நான்கு ...
என
எண்ணிட  எண்ணிட
நாம்
இலக்கியம் செய்யவேண்டும்


அங்க இங்க
பார்த்த கேட்ட
இத்தியாதி இத்தியாதி என
வட்டமோ,சதுரமோ,
முக்கோணமோ
ஏதோ ஒன்று
இருக்க வேண்டும்
அதில் .

இதில்
கைகோர்க்க
படிமத்தை
எதிர்ரெதிர் பார்க்க
கால் மாற்ற
காலம் மாற்ற
இரண்டும் மாற மாற
நகர்ந்து நகர்ந்து
மையத்தை மாற்ற
அமைப்பு சிதையா
விதிக்கு சரியாக
யாரோ சொன்னதால்
வட்டமே தேர்வானது
இன்றுவரை .


இது ஒரு
வித்தியாசமான விளையாட்டு
உனக்கும் சொல்லித் தருகிறேன்
நீயும் வா .

ஒன்று ,இரண்டு ,மூன்று ,நான்கு ...
உனக்கு  எனக்கு ....

கைகோர்  கைகோர்
கால் மாற்று
களம் மாற்று
நகர்  நகர்
மையம்   ...
ஓ !!!
வட்டம் .

இனி
என்ன இருக்கிறது
இலக்கியம் செய்ய ?.
வட்டம் தான் வந்துவிட்டதே.


ம் ...
விளையாடும் வரை விளையாட்டு
விலகிய பின் வட்டம்

விளையாட்டை விட்டுவிட்டு
வட்டத்தைப்பார்.

நீயும் சொல்வாய்
இது ஒரு
வித்தியாசமான விளையாட்டு
என .

இனி
நீயும் சொல்வாய்
இது ஒரு
வித்தியாசமான விளையாட்டு
நானும் சொல்லித் தருகிறேன்
என.












படம் :  நண்டு @ நொரண்டு .




Download As PDF

6 கருத்துகள் :

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிகச் சரி
நாம் அன்றாடம் விளையாடும் விளையாட்டு
ம்...

G.M Balasubramaniam சொன்னது…

எனக்கு விளையாட்டு புரியவில்லை ஐயா

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வித்தியாசம்தான்!

KILLERGEE Devakottai சொன்னது…

வித்தியாசமாக இருக்கிறதே ?
தமிழ் மணம் 4
தேவகோட்டை கில்லர்ஜி

கும்மாச்சி சொன்னது…

வித்தியாசமான விளையாட்டுதான்......

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "