நொரண்டு : வணக்கம் நண்டு .
நண்டு : வாங்க நொரண்டு .
நொரண்டு : எனக்கு ஒரு சந்தேகம்.
நண்டு : ம் ...என்ன சந்தேகம்.
நொரண்டு : நம்ம ஒளவையார் -நல்வழி யில் பாவிகளின் பணம் என்று
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்-கூடுவிட்டிங்
காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்.
என்ற பாடலை வகைப்படுத்தியிருக்காங்களே இது சரியா ?.
நண்டு : ம் ...
நொரண்டு : எனக்கு புரியல.
நண்டு : என்ன புரியல .
நொரண்டு :
அட,இதுக்கு அர்த்தம் -
பாடுபட்டு பணத்தினை தேடி பூமியில் புதைத்து வைக்கும் கேடுகெட்ட மனிதர்களே ,கேளுங்கள் . உயிர் நீங்கிய பின்பு அந்தப் பணத்தை யார் அநுபவிப்பார் என்கின்றனர்.
அதில் தான் எனக்கு .....அது சரியா என்று ...
நண்டு : ஔவையிடம் கேட்டா தான் இது சரியானு சொல்லியிருப்பாங்க .
நொரண்டு : ஔவியம் பேசதே .
நண்டு : இல்லப்பா ...இல்ல...நாம இந்த தப்ப தான் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு வரோம் .அதான் சொன்னேன்.
நொரண்டு : அத விடு ...சரி நீ என்ன சொல்ல வர்ர ?.
நண்டு : என்னைக்கேட்டா
'' பாடுபட்டுத் தேடி சேர்த்த அறிவினை (பணத்தினை) ,அனைவரும் அறிந்துகொள்ளமுடியாத வண்ணம்,பொதுவினில் பெற்ற அறிவினை , பொதுமைப்படுத்தாமல் ,ஒருசிலருக்குள்ளே மட்டும் புதைத்துவைத்து திரியும் உலகில் கெட்ட மானிடரே கேளுங்கள் .கூடுவிட்டிங் காவிதான் போயினபின்பு யார் அநுபவிப்பார் வீணாகப்போகும் அந்த அறிவை . ''
என சொல்லுவேன்.
நொரண்டு : எனக்கு புரியல.
நண்டு : என்ன புரியல ?.
நொரண்டு : நல்லா புரியும்படி சொல்லுப்பா .
நண்டு : முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லு ,அப்புறம் உனக்கு புரியும் ...
நொரண்டு : ம் ... கேள் ... சொல்ரேன்.
நண்டு :பேர் சொல்லா மருந்து தெரியுமா ?.
நொரண்டு : ம் ... கேள்வி ப்பட்டதா இருக்குப்பா.
நண்டு : எங்க கேள்விப்பட்ட .
நொரண்டு : எங்க அம்மாய் வூருல.
நண்டு :ம் ...
நொரண்டு :அங்க நான் முன்னாடி போனப்ப ...
நண்டு :விசயத்துக்கு வா.
நொரண்டு : வயதான பாட்டி ஒருத்தங்க ஔடதம் பார்த்தாங்க.அப்ப அவங்க பொடி ஒன்னு கொடுத்தாங்க .நான் என்னனு கேட்டேன்.அதுக்கு அவர் பேர் சொன்னா பலிக்காது.நீ அத கேட்காதே ,உன் நோவு சரியாகாது,பாத்துக்க ,என்றார்.நானும் நோவு சரியாச்சினா போதும்னு வந்துட்டேன்.
நண்டு : சொன்னா பலிக்காதா... வைத்தியம் .
நொரண்டு : இல்லப்பா அது தலைமுறை வைத்தியம்.அவங்களுக்கு மட்டும் தான் அது கைவரும்.பலிக்கும்.
நண்டு :ம்...இது மடமை.நோய் பொதுவா,அனைவருக்கும் வரும்பொழுது , மருந்து மட்டும் ...எப்படிப்பா ...?.
நொரண்டு : ஏப்பா திரும்பவும் ஔவியம் பேசார . அவங்க பரம்பரயா பணக்காரங்க தெரியுமா ,ஔடதம் பார்த்து தான் பிழைக்கனும்னு அவசியம் இல்ல தெரியுமா.
நண்டு : இங்கு முட்டாள் பணக்காரனாக இருக்க காரணம் என்ன என்று தெரியுமா?.
நொரண்டு : தெரியாது ,நீயே சொல்லு .
நண்டு :
'' பரம்பரை பரம்பரையாக அறிவின் வெளிப்பாட்டினை சுரண்டி பிழைப்பிற்கு பயன்படுத்தி வாழ்ந்து வளம் பெற்று நகர்ந்து வரும் வாரிசாக முட்டாள் இருப்பதால் பணக்காரனாக இருக்கிறான். ''
நொரண்டு : ஓ....ஓ....
நண்டு :அறிவில்லாமல் வாழ்பவன் பிணத்திற்கு ஒப்பாவான்.
நொரண்டு : நடை பிணம் .
நண்டு : ஆமாம்.
நொரண்டு : பணம் இல்லாட்டித்தான் பிணம் என்று பொதுவா கூறுவர்.
நண்டு : ம்...
நொரண்டு : என்னப்பா ம் னு சொல்ற.
நண்டு :ஆமாம்பா ,அறிவில்லாதவன் பிணம் தானே.
நொரண்டு : அப்ப நீ பணம் என்பதற்கு அறிவுனு பொருள்படுத்திக்கொள்றா.
நண்டு : ம் ...
நொரண்டு :அப்புறம் மேல சொல்லு.
நண்டு :நம்ம ஆளுக பணம் என்ற பதத்தை செல்வத்திற்கு தாரைவார்த்து விட்டனர் ஔவை பாட்டில்.
நொரண்டு : என்ன சொல்ற.
நண்டு :அவங்க காலத்துல நாம இப்ப பயன்படுத்தும் பணம் என்பதற்கான அர்த்தம் இல்ல.
நொரண்டு : ஓ.
நொரண்டு : ஏன்?
நண்டு :அத பிறகு பாக்கலாம்.
நொரண்டு :இதத்தான் பாரதி நல்லதோர் வீணை என்றாரே.
திருமூலர் உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என பாடினாரே.
நண்டு : இன்னும் கேள்.
இன்று ஆள் பாதி ஆடை பாதி என
ஆடையில் மறைந்துகொண்டான் மனிதன்,
அதனால் ஆளைவிட ஆடை முக்கியம் என்றாகிவிட்டது இன்று .
நொரண்டு : ம் ....
நண்டு : இன்னும் கேள்.
அறிவை அணிய வேண்டிய மனிதம் ஆடம்பரத்தில் அழிந்துவருகிறது.
அறிவை வளர்கவேண்டிய மானுடம்,ஆசைகளையும் ,அதிகாரத்தையும் வளர்த்துக்கொண்டு அவஸ்தைப்படுகிறது.
மூளையை மகிழ்விக்கவேண்டிய பிறப்பு ,பிற உறுப்புகளை மகிழ்கிறது மடிகிறது.
பிறப்பின் பயணம் தெரியாமல் எங்கொங்கோ பிண்டமாக பயணப்பட்டு சென்றுகொண்டுள்ளது.
நொரண்டு : சரிதான்.
நண்டு :
இந்த உடம்பு அறிவை வளப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டது .
ஆனால்,நாம் அறிவை வளப்படுத்தாமல், அழகுபடுத்தாமல் உடம்பை அழகு படுத்தியும் .அதையே முதன்மைப்படுத்தியும் , அதனை மட்டுமே இன்பப்படுத்தியும் ,அதில் கிடைப்பது மட்டுமே ஆனந்தம் அதுவே வாழ்வு என வாழ்ந்து மடிகிறோம்.
இன்றைய மனிதனின் அத்தனை கேட்டிற்கும் இதுவே காரணம்.
.
இது மீள்வு...
Tweet |
|