புதன், 8 மார்ச், 2017

செல்போனில் கடவுள் தொன்றிய உண்மைச்சம்பவம்.



இது முற்றிலும் உண்மையாக நடந்த நிகழ்வு.

எனக்கு இது ஒரு வியப்பான ஒன்றாகாவே உள்ளது.

மாயை என்பதற்கான முழு அர்த்தம் உணர இது காரணமாயிற்று.

பலர் பல சமயங்களில் கூறியவைகளை ,உணர்ந்தவைகளானவைகளை என்னுள் மீள்பார்வை பார்க்கவைத்த ஒரு காட்சி இது.

இதைத்தான் தோடுகிறார்களே,
இப்படிப்பட்ட செல்பிக்காகத்தான் முயன்றுவருகிறனரா  இந்த செல்பி சமூகம்  என மன ஓட்டம் கேள்வி கேட்கிறது.

ஆனால்,நான் செல்பி பிரியனும் இல்லை.
இதற்காக இந்த செல்பி எடுக்கவும் இல்லை.

இந்த செல்பிக்கு பின் உள்ள நிகழ்வை முதலில் பார்ப்போம்.

இந்த செல்பி எடுக்க காரணம் வறட்சி,பசுமை மறைந்துவரும் ஏக்கம் மற்றும் ஐந்தறிவு உயிரினங்கள் நீரின்றி படும் அவதி இவற்றால் மனப்போராட்டத்திற்கு ஆட்பட்ட நிலையில் மனிதர்கள் தான் இயற்கையை பாழ்படுத்துகிறான் ,அவனுக்கு இயற்கைஇன்னையே நீ எந்தகைய தண்டனையையும் கொடு.உன்னேடு இயைந்துவாழும் இவைகளுக்கு ஏன் இந்த தண்டனை என்ற கேள்வியுடன் சிந்தித்துக்கொண்டே எனது மனைவியின் வருகைக்காக காத்திருந்த பொழுது இயற்கையுடன் இயைந்த ஒரு செல்பி எடுக்கப்பட்டது கடந்த 22.2.17 மாலை 4.33க்கு.

அந்த செல்பி இதோ



இனி இதில் கடவுள்  பிரதஷ்டனை  விசயத்திற்கு வருவோம்

ஏதெச்சையாக நேற்று இரவு எனது Instagram பார்த்துக்கொண்டிருந்தபொழுது
S Photo Editor-Collage Maker என்ற செயலி ஒன்று பார்த்தேன் .அதனை எனது செல்பேசியில் நிறுவி அதன் செயல்பாடுகளை சோதித்துப்பார்த்துக்கொண்டு வந்தேன்.அப்பொழுது அதன் Edit பகுதிக்கு சென்று  இதன் Mirrorபகுதிக்கு உட்செல்ல எனது செல்போனில் கடவுள் உரு பிரத்தஷ்டனை ஆனது.


படத்தின் பின்புலத்தினை நன்றாக உற்றுநோக்கவும். (அதில் எத்தனை கடவுளின்உ ருக்கள் தெரிகிறது என்பது உங்களின் மனதினை பொறுத்தது )
 


இதனை கண்ணுற்ற நான் இது இயற்கை அன்னை என்பதனை அறிந்துகொண்டேன்.

அவள் என்னைப்பார்த்து எனது மனப்போரட்டம் அறிந்து ஏதோ ஒன்றை எனக்கு உணர்த்துகிறார் என்பதனை அறிந்துகொண்டேன்.

அது அவள் என்னிடம் நீ உன்னின் எதிரெதிர் இருசமனபார்வையில் உன்னுள் கட்புலனாகும் சமயம் இவ்வுலக  உண்மையை அறிவாய் என  உரக்க உரைப்பதாக உணர்கிறேன்.

எனது பகுத்தறிவு பாதையின்  அடுத்த பரிணாமம் உணர்த்திய இயற்கை அன்னைக்கு எனது வாழ்த்துக்கள். அதுவும் மகளிர் தினமான இன்று உமக்கு வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

 
இயற்கை அன்னையே நீ வாழ்க .

உமது செழிப்பில் தான் இவ்வுலகு நலம்பெறும்.



 இதுவோ எனது செல்போனில் இயற்கை அன்னை தொன்றிய நிகழ்வின் உண்மை.              





Download As PDF

15 கருத்துகள் :

KILLERGEE Devakottai சொன்னது…

இருபடங்களை இப்படி இணைக்கும் பொழுது நிகழ்வது உண்மைதான் தோழரே... நான் பலமுறை இப்படி இணைத்து இருக்கிறேன்

இருப்பினும் படம் பொருத்தமாக இருக்கின்றது பகிர்வுக்கு நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...!

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்ல, வித்தியாசமான சிந்தனை

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இயற்கையில் செழிப்பில் இவ்வுலகுநலம் பெறட்டும்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இயற்கை அன்னை.....

நல்ல பதிவு.

அன்பே சிவம் சொன்னது…

அன்னையின் போராட்டம் யானும் அறிவேன். எப்பாடு பட்டாவது அவரை காப்போம். என் வலைத்தளம் வாருங்களேன்.

Unknown சொன்னது…

எனக்கும் தெரியும் அந்த அன்னையை நானும் வணங்குகிறேன்:)

தருமி சொன்னது…

உங்கள் படத்தில் என் கண்ணுக்கு மூன்று “பெண் கடவுள்கள்” தோன்றினார்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யம்.

G.M Balasubramaniam சொன்னது…

ம்ம்ம்ம்ம்......

Unknown சொன்னது…

தேவையற்ற Android APPS யூஸ் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

https://www.youtube.com/watch?v=pNxwUFvzUkU

Unknown சொன்னது…

நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

Unknown சொன்னது…

வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

தாமத வருகைக்கு வருந்துகிறேன்! இணைய இணைப்பில் கோளாறு.

ஆனால், உற்று உற்றுப் பார்த்தும் எனக்கு மரத்தையும் உங்களையும் தவிர வேறொன்றும் தெரியவில்லையே!

Kripa சொன்னது…

Dear Admin,
Greetings!
We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website to reach wider Tamil audiance...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

நன்றிகள் பல,
நம் குரல்
Note: To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "