புதன், 24 டிசம்பர், 2008

'புத்துலகு படைக்க வரும் புதிய பகுத்தறிவாளர்களே' - வருக...வருக...

.
நொரண்டு : எதாவது புதிய செய்தி உண்டா ?
நண்டு : ம்......ம்....இந்த நூற்றாண்டின் புதிய பகுத்தறிவாளர்கள் ஒரு சங்கம் ஆரம்பித்து இருக்காக .
நொரண்டு : என்ன புதிய பகுத்தறிவாளர்கள் சங்கமா ?
நண்டு : ஆமாம் ,...புதிய பகுத்தறிவாளர்கள் சங்கம் என்றில்லை
' பகுத்தறிவாளர் சங்கம்' என்று ஒரு புதிய சங்கத்தை ஆரம்பித்து இருக்காக...
நொரண்டு : எப்போ.. ?...எங்க... ? யார் ...?....
நண்டு : எனக்கு அதல்லாம் தெரியாது . எனக்கு வந்தத சொல்றேன்.முதலில் நான் அவர்களின் சிறு விண்ணப்பத்தை கண்டு அதிர்ந்தேன் ....
நொரண்டு : ஏன் ?.....
நண்டு : ஏன் ?.....உனக்கு எதுவும் தெரியாதா?...உனக்குஎதுவும் வரலையா?
நொரண்டு : முதல்ல விசயத்துக்கு வா .

நண்டு : அதென்ன பகுத்தறிவாளர்கள் என்று சொன்ன உடனே பழமைவாதிகள்
தாக்க ஆரம்பித்து விடுவார்களா என்ன ?? இந்த நூற்றாண்டிலுமா... ??? '
பகுத்தறிவாளர் சங்கம்' என்று கூறிக்கொள்பவர்கள் உண்மை தான் கூறுகின்றனரா ? அல்ல ......

நொரண்டு : பொதுவாக பகுத்தறிவாளர்கள் பொய் எதுவும் கூறமாட்டார்கள் . தவறு,தவறு ,பகுத்தறிவாளர்கள் எப்போதும் உண்மை மட்டுமே பேசுவர் ,மேலும் தங்களின் பழமைவாதத்தை நிலைநாட்ட உடனடியாக செயலில் இறங்கி பகுத்தறிவாளர்களை பழமைவாதிகள் அழிக்க நினைப்பது தொடரும் வரலாற்று நிகழ்வே . எந்த நூற்றாண்டானாலும் அப்படியே .
ஆனால் , பகுத்தறிவாளர்கள் மன்னராட்சி காலத்தை விட தற்பொழுது
பழமைவாதிகளோடு மற்றவர்களின் இன்னல்களுக்கும் ஆளாகவேண்டிவரும் ..
நண்டு : யார் அந்த மற்றவர்கள் ?

நொரண்டு : பழைய பகுத்தறிவாளர்கள் ....
நண்டு : ....?....புரியவில்லை......?
நொரண்டு : என்றும் ,எப்பொழுதும் பழமைவாதிகளோடு, பகுத்தறிவாளர்களாக தங்களை உருவகப்படுத்தி்கொண்ட பழைமையானவர்களும் ( பழைய பகுத்தறிவாளர்கள்) சேர்ந்து, புதிய கருத்துக்கள் அது எங்குதோன்றினாலும் தங்களின் பழைமை கருத்துக்களை பாதுகாக்க
எதிர்க்கவே செய்வர் .பழமைவாதிகளை விட பழைய பகுத்தறிவாளர்கள் தான் தங்களின் கடுமையான எதிர்ப்பையும்,முட்டாள்தனமான விவாதத்தையும் முன்வைப்பர் .

நண்டு : புதிய பகுத்தறிவாளர்கள் விவாதம் என ஆரம்பித்துள்ளனர் .அது நன்றாகத்தான் உள்ளது.( எனக்கு தெரிந்ததை சொன்னேன் )
நொரண்டு : அப்படியா ....அப்போ ..நீ சேந்துட்டே

நண்டு : இல்ல ...இல்ல ....நான் எங்க ஊரில இதே மாதிரி ஒரு சங்கத்தில இருக்கோன் .நாங்களாம் சேர்ந்து ஆரம்பிச்சது . நான்நிறையாபேசியிருக்கோன்.எத்தனையோ நிகழ்ச்சிகள் செஞ்சிருக்கோம் . எங்க தலைவர் எவ்வளவோ கருத்துக்களை விட்டுச்சென்றுள்ளார் அதை மக்களிடம் கொண்டு செல்வதற்கே இனி ஏழேழு பிறவி எங்களுக்குவேண்டும். இப்பப்போய் ... என்ன .....
நொரண்டு : சரி விடு . ஆமா நீ உன் சிஸ்டத்தை அப்டேட் சேஞ்சிட்டையா ?
நண்டு : ம்......அதல்லாம் ... அப்பப்போ..உடனுக்குடனே...ஒரு வினாடி கூட தாமதம் இல்லாம...என் சிஸ்டத்தை பாத்தேன எல்லாமே நியு தான்..ஏங்கேக்கர...
நொரண்டு : அட ...அறியா மனிதா ... அப்ப உன் அறிவை மட்டும் ஏன் அப்டேட்
சேஞ்சுக்கமாட்டேங்ர...கொள்கைகளும், கோ ட்பாடுகளும்உறைந்துவிடக்கூடாது. உறைந்து போகும் கொள்கைகளும் , கோட்பாடுகளும் மதமாகிவிடும்(அதுஒருகாலத்தில் பகுத்தறிவாக இருந்திருந்தாலும் சரி) .

நீ மதமாகிய கொள்கை,கோட்பாட்டில் இருக்கின்றாய்.
உன்னால் உண்மையை சுவாசிக்க முடியாது.


நீ
'வரலாற்றை படித்து அறிவியலில் வாழ்கின்றாய் .....
அறிவியலை படித்து வரலாற்றில் வாழ் ' ...
அப்போதுதான் உண்மை உனக்கு த்தெரியும்.


நண்டு : சரியப்பா ...சரி.....நீயும் ஒரு பகுத்தறிவாளி் தான்...போ..... .எப்ப
சங்கம் ஆரம்பிக்கர.. முதல்ல நீ்
http://pakuttarivalarsangam.blogspot.com/
....போய்ப்பார்........

நொரண்டு : எனக்கு தெரியும்...உன்ன டெஸ்ட் பார்த்தேன்.

நண்டு : அதானே ....நீயும் தத்துவம் பேசர.............

( எனக்குள் பல புதிர்கள் மின்னி மறைந்தன ....)


நொரண்டு : உண்மையில் ...

. 1.செம்மொழியாம் தமிழ் மொழி புதிய பாதையில் வீறுநடை
போடும் காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன் .

. 2. தமிழகத்தை புதிய கருத்துக்கள் இனி அலங்கரிப்பதை பார்க்கலாம்.

. 3. புதிய பகுத்தறிவாளர்களின் உலகை மாற்றும் உன்னத கருத்துக்கள் தமிழுக்கு இனி வளம் சேர்க்கும் என நம்பலாம்.


. எனவே,
. 'புத்துலகு படைக்க வரும் புதிய பகுத்தறிவாளர்களை'.... . . . .வருக...வருக...என வரவேற்கிறேன்
Download As PDF

சனி, 20 டிசம்பர், 2008

எப்பொழுது ஒருவர் சிறை செல்லலாம் ?

.
. நண்டு : இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் எப்படி உள்ளது ?

.நொரண்டு: முதலில் தமிழகத்தைபற்றி கூறுகிறேன்: இன்று தமிழகத்தில் சிலர்
மக்களின் அறியாமையைப்பயன்படுத்தி (பெரும்பான்மையினர் கல்வியறிவு இல்லாத நிலையில்) அவர்களிடம் நச்சுவிதைகளை தூவி அதன்மூலம் கிடைக்கும் மலிவு விளம்பரங்களுக்காக ஏதேதோ பேசி கருத்துச்சுதந்திரம் என்னும் உயரிய கொள்கையை கேவலப்படுத்துகின்றனர்.தமிழர்களை
சிந்திக்கவிடாமல் அவர்களை ஆட்டுமந்தைகளாக்கி வருகின்றனர் . தமிழன் சிந்திக்காத வரை இவர்கள் தான் தமிழர்களைக்காக்கும் கைத்தடிகள். உண்மையில் தமிழுக்காக இவர்கள் எதுவும் செய்தது இல்லை.
தமிழ்,தமிழ் இனம் என பூச்சாண்டி காட்டிக்கொண்டு,எவ்வளவோ உயரத்திற்கு
சென்றிருக்கவேண்டிய தமிழை, தற்பொழுது கருத்துச்சுதந்திரம் எனும் போர்வையில் படுபாதாளத்திற்கு தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.
உள்ளூரில் நடக்கும் குடுமிப்பிடியையே தீர்க்க முடியாத இவர்கள் வெளியூரில் நடக்கும் சண்டை பற்றி உள்ளூரில் கொந்தளிப்பதை என்னவென்று செல்ல.
மற்றபடி இந்தியாவில் கருத்துச்சுதந்திரம் நன்றாகத்தான் உள்ளது.

. நண்டு : எப்பொழுது ஒருவர் சிறை செல்லலாம் ?
. நொரண்டு : 1 . ஜனநாயக நாட்டில் ஜனநாயக மரபிற்கு மாறாக ஜனநாயக அமைப்பை குலைக்கும் வகையில் அரசு செயல்படும் தருணங்களில் ஜனநாயகத்தை மீட்க போராடும் ஒருவர் ஜனநாயகத்தை காக்க சிறை செல்லாம் .
. 2 . ஜனநாயக நாட்டில் ஜனநாயகமாண்பைக்காக்க ஒருவர் சிறைசெல்லலாம்
. இதைத்தவிர்த்து பிறவற்றிற்காக சிறை செல்கின்றவர்கள்
உண்மையில் கடுமையாக தண்டிக்கப்படவேண்டியவர்களே.
Download As PDF

செவ்வாய், 9 டிசம்பர், 2008

'' தமிழகத்து ஒபாமா" ' பராக்.... பராக்.... "

.
. நண்டு : வழக்கமான டீக்கடையில் டீ குடிச்சிக்கிட்டு இருந்தேன் நேத்து. அப்போ அங்கிருத்த ஒரு வயசானவரும் ஒரு எலந்தாரி பையனும் பேசிக்கொண்டதை சொல்லரேன்.

எலந்தாரி : ஏ பெரிசு டீ சாப்டியா ?

பெரிசு : ஏ...என்ன பெரிசுங்கிற....பெரிசுன ....யார் தெரியுமா.... 'புரட்சித்தலைவரை" தான் பெரிசுனு சொல்லனும்...(அவர் முகத்தில் ஒரு பொழிவு)...அந்த மனுசன் இருந்தப்ப எந்த குறையும் இல்ல ...நிம்மதியா வாழ்ந்தோம். ஏழையாய் இருப்பதே சந்தோசமாய் இருந்துச்சு...ஏழைக மேல் அவ்ள பாசம் வச்சிருந்தாரு மனுசன். போனாரு நாமெல்லாம் அனாதைகளாய்டோம். இப்போ ஏழைக வாழ்றதே
ரொம்ப கஸ்டம இருக்கு...அவர் இருந்தா இப்ப எப்படிஇருக்கும்தெரியுமா....அமெரிக்கவுல கூட ஏழைகளுக்கு நல்லகலாம் வந்திருச்சாம்...நமக்கு....?..(பெருமூச்சுடன்)..

எலந்தாரி. : ஏன் ... பெரிசு பொலம்பற ...'எங்க தலைவர்"- 'கருப்பு எம்.ஜி.ஆர்"- 'தமிழகத்து ஒபாமா"- 'புரட்சிக்கலைஞர் " இல்லே ... கொஞ்ச நாள் பொறு உன் கனவெல்லாம் நனவாகும். கமல் உலக நாயகனாத்தான் நடிச்சார் ஆனா 'புரட்சித்தலைவர்" இடத்தில் 'தமிழகத்து ஒபாமாவா" ' புரட்சிக்கலைஞர் " ஒக்காற போறார் ... ஏழைகளே இல்லாம ஆக்குவார் ....கவலைய விடு ...ஓட்ட போடு...ஒரு டீ சாப்பிடு.........(அவர்கள் பேச்சு தொடர்ந்தது)....

. .........எனக்குள் ஆயிரம் யோசனைகளுடன் நகர்ந்தேன்..........


. நொரண்டு : 1. உண்மையில் இன்றுவரை
ஏழைகளின் ரட்சகராக எப்.ஜி.ஆர் மக்களின் மனதில் இருந்து வருகின்றார்-எனக்கு அப்படித்தான்
தோன்றுகிறது.
............. 2.- 'தமிழகத்து ஒபாமாவே வருக வருக"- என சுவரொட்டிகளில் இனிகாணலாம் .
............. 3. உண்மையில் மக்கள்ஏழைகளாகஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்என்பதும் மாற்றத்தை விரும்புகின்றனர்என்பதும் தெரிகிறது.
. .............. ....... உஷார் .......உஷார்
. ........ ' தமிழகத்து ஒபாமா" .... 'பராக்".... 'பராக்".....

Download As PDF