நொரண்டு : வணக்கம் நண்டு .
நண்டு : வணக்கம் ,என்ன விசேசம் ?
நொரண்டு : எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் ?
நண்டு : உண்மை தெரிஞ்சாகனும்னா ,இப்ப பொய்களை தெரிஞ்சு வச்சிருக்கைனு பொருள் .அப்படித்தானே .
நொரண்டு : கொழப்பாதே
நண்டு : சரி ,விசயத்துக்கு வா .
நொரண்டு : இராமர் பிறந்த இடம் எதுனு தெரியுமா ?
நண்டு : இது வந்து இராமர் பிறக்கவில்லை ,இராமர் பிறந்தார் என்பது சரியா என்று கேக்கரதுக்கு பதிலா கேக்கர அப்படித்தானே .
நொரண்டு : அது ....வந்து ...
நண்டு : சரி விடு ,முதலில் இராமர் உனக்கு எப்படி அறிமுகமானார் .
நொரண்டு : ம்..வந்து ...முதல சாமியா வீட்ல ,அப்புறம் பள்ளியில் பாடமா ....அப்புறம் ...
நண்டு : அது உன் தனிப்பட்டவனைப்பொறுத்து .ஆனால்,சமுதாயத்தில் எப்படி அறிமுகனார் ,ஆகியுள்ளார் என தெரியுமா .
நொரண்டு : நீ கேக்கரது ஓன்னும் புரிலையே .
நண்டு : அங்க தான் சிக்கலே ஆரம்பம் .
நொரண்டு : என்ன சிக்கல் ?
நண்டு : இராமரை இங்கு சரியா யோசிக்கல .
நொரண்டு : எப்படி ?
நண்டு : முதலில் நாம் நம்முடைய புரணங்கள் மற்றும் இதிகாசங்களை சரியாகப் புரிந்துகொள்ளாமல் இயங்குகின்றோம் .நாம் இன்றைய சூழலில் இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் அனைத்தையும் மறுஆய்வு செய்யவேண்டியது அவசியமாக உள்ளது .
நொரண்டு : அப்படினா ?
நண்டு : அப்படினா ,இன்றுள்ள கலை ,பண்பாடு,கலாச்சாரம்,இலக்கியம் போன்றவைகளின் நகர்வுகளை ஆய வேண்டியுள்ளது .
நொரண்டு : புரியல
நண்டு : முதலில் நாம் நமது இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் இவற்றிற்கும் மேற்கத்திய இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் இவற்றிற்குமான வித்தியாசத்தை அறிந்துகொள்ளவேண்டும் .
நொரண்டு : அப்படினா ?
நண்டு : மேற்கத்திய இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் இவற்றின் உள்ளாக்கங்கள் ,உட்கூறுகள் வேறு .நமது இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் இவற்றின் உள்ளாக்கங்கள் ,உட்கூறுகள் வேறு .
நொரண்டு : புரியர மாதிரி சொல்லு .
நண்டு : மேற்கத்திய இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் ஆகியவை கற்பனையில் உருவாகி அதில் உண்மை ஒளிந்திருக்கும் .
நொரண்டு : அப்ப நம்மது ?
நண்டு : நமது இதிகாசங்கள் ,இலக்கியங்கள் மற்றும் கலைகள் ஆகியவை உண்மையில் உருவாகி கற்பனை மிகுந்திருக்கும் .
நொரண்டு : அப்படினா
நண்டு : நம்மது உண்மைக்குப் பின்னால் கற்பனை இருக்கும் .அவர்களது கற்பனைக்குப் பின்னால் உண்மையிருக்கும் .இது ஒரு யுத்தி .
நொரண்டு : ஓ..
நண்டு : ஆனால் ,இங்கு கற்பனை மிகைப்படுத்தப்பட்டிருக்கும் .அங்கு சம அளவில் இருக்கும் .
நொரண்டு : அப்படியா ..
நண்டு : ஆமாம் ,ஒரு சின்ன உதாரணம் .இராமனுக்கு ஒரே மனைவி ,தசரதனுக்கு பல மனைவிகள் .ஏன் இந்த முரண். 1000 மனைவிகள் என கூறுவேறும் உளர் . நன்றாக சிந்தித்தால் .இராமனின் குணத்தை மிகவும் சிறப்பிக்க கூறப்பட்ட மிகையே அது .
நொரண்டு : ஓ ...
நண்டு : மற்ற ஒன்றை சொல்கிறேன் கேள்.சீதையை இராவணன் கொண்டுசென்றதை பலர் பல மாதிரி எழுதியுள்ளனர் .இதற்குக்காரணம் அவர்அவர்கள் தங்களுக்குள் கற்பனையில் மிகுந்தவர்கள் என காண்பிக்கவே தவிர வேறு இல்லை .
நொரண்டு : ஓ...
நண்டு : இது போலத்தான் இராவணனுக்கு 1000 தலைகளும் .
நொரண்டு : அப்ப அப்படியில்லையா ?
நண்டு : என்ன முட்டாள் தனமான கேள்வி ? அப்படி இருக்க முடியுமா ? அது சாத்தியமா ?
நொரண்டு : ஆமாம் உண்மை தான் .
நண்டு : இதுவும் இராவணனின் குணத்தை கற்பனையில் மிகுதியாகக்காட்டவே தவிர வேறு ஒன்றும் இல்லை .
நொரண்டு : சரி அத விடு ,விசயத்துக்கு வா .
நண்டு : அதத்தான் சொல்ல வரேன் .
நொரண்டு : எப்படி ?
நண்டு : முதல்ல உனக்கு ஜதகம் இருக்கா ?
நொரண்டு : ஏன் கேக்கிர
நண்டு : சொல்லு சொல்லரேன் .
நொரண்டு : எங்க அப்பிச்சி நான் பிறந்தப்ப அவரின் ஆஸ்தான ஜோசியரிடம் போய் எழுதி வாங்கி வந்த பழைய ஜதகம் ,அந்த ஜதகம்நோட்டு கிழியர மாதிரி ஆனதால் கம்யூட்டர் ஜாதகம் வேற போட்டு வச்சேன் .இங்க பாரு ,பிறந்த ஊர் ,நாள் ,டயம் மட்டும் தான் சொன்னேன் .என்ன ஒரு ஆச்சரியம் பழைய ஜாதகத்த விட துல்லியமா கணித்து கையில 10 தே நிமிசத்தில தன்திடுச்சு .உலகம் எவ்வளவு பாஸ்டா போகுது பாரு . அங்க இருக்கிற ஜோசியர் என் ஜாதகம் இராமர் ஜாதகம் மாதிரினு சென்னார் .அவர் கிட்ட இராமர் ஜாதகம் ,கிருஷ்ணர் ஜாதகம் எல்லாம் இருக்கு பாத்தேன் .
நண்டு : ஓ ,அப்படியா ...
நொரண்டு : என்ன தெரியாத மாதிரி கேக்கிர
நண்டு : அப்ப பிறந்த ஊர் ,வருசம், நேரம் தந்தா ஒருத்தரின் ஜாதகம் கிடைத்து விடும் .
நொரண்டு : ம்...
நண்டு : அப்ப ஒருத்தரின் ஜாதகத்தை வைத்து அவரின் பிறந்த வருசம் ,ஊர் ,நேரம் ஆகியவற்றை கணித்துவிடலாம் அல்லவா .
நொரண்டு : ஆமாம்.ஆமாம் கட்டாயம் ,கண்டிப்பாக . அது சாத்தியமாகும் பொழுது இதுவும் சாத்தியம் ஆகும் தானே .அது தானே உண்மை .
நண்டு : ஒரு ஜாதகத்தைப்பார்த்து அவரின் பிறப்பிடத்தை அறியமுடியும் தானே .
நொரண்டு : ஓ..முடியுமே ,ஏன் முடியாது .
நண்டு : அப்படினா நீ முதலில் இராமரின் ஜாதகத்த வச்சிருக்கர அந்த ஜோசியர் கிட்ட போய் அத வச்சு இராமரின் பிறப்பிடத்தை கண்டுபிடி .உனக்கு புண்ணியமா போகும் .
நொரண்டு : ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !
நண்டு : (: (: (: (: (: (: (: (: (: (: (: (: (: (:
. Download As PDF
Tweet |
|
28 கருத்துகள் :
//அப்படினா நீ முதலில் இராமரின் ஜாதகத்த வச்சிருக்கர அந்த ஜோசியர் கிட்ட போய் அத வச்சு இராமரின் பிறப்பிடத்தை கண்டுபிடி .உனக்கு புண்ணியமா போகும் .//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ,
ஏன் இப்படி , பட் செய்யலாம் தான் ,
கேட்டு சொல்லுங்க , தெரிஞ்சுக ஆர்வமா இருக்கு ,
நண்டு : அப்படினா நீ முதலில் இராமரின் ஜாதகத்த வச்சிருக்கர அந்த ஜோசியர் கிட்ட போய் அத வச்சு இராமரின் பிறப்பிடத்தை கண்டுபிடி .உனக்கு புண்ணியமா போகும் .
நண்டு நல்லாத்தான் நொரண்டுவை குடைஞ்சுட்டீங்க
உங்களுக்கு புண்னியமா போகும் மொதல்ல ஜாதகத்தைப்போட்டு எடத்த கண்டுபுடிங்க சார்.
//அப்படினா நீ முதலில் இராமரின் ஜாதகத்த வச்சிருக்கர அந்த ஜோசியர் கிட்ட போய் அத வச்சு இராமரின் பிறப்பிடத்தை கண்டுபிடி .உனக்கு புண்ணியமா போகும்..//
அதச் செய்யச் சொல்லுங்க முதல்ல...
கெமிக்கல் ரியாக்ஷன்ல ரிவேர்சிபில் இர்ரிவர்சிபில் அப்படின்னு ஒன்று உண்டு அதுபடி டேட்டாவை[dtae,time,place ,planetary motion] வைத்து தகவலை[astrology] உருவாக்கமுடியும் ஆனால் அதே தகவலை[ஜாதகத்தை] வைத்து எல்லா[place] டேட்டாவையும் உருவாக்கமுடியாது.
லக்னத்தில் இருந்து சூர்யோதத்தைக் கணிக்க வேண்டும். அதில் இருந்து அச்சுப் பாகை கிட்டும்; அப் பாகையில் சூர்யோதயம் ஆகும் இடம் (ஊர்) கிட்டும். கிரக நிலைகளைக் கொண்டு கால நேரத்தைக் கணித்த்தெடுப்பதும் சாத்தியம்தான்.
ஆனால் இராமாயணத்தில் உள்ள ஜாதகங்கள் கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட இடைச்செருகல் என்பதும் அதன்படி இராமர் பிறந்தது சூரிய சித்தாந்தத்தின்படி கி.மு. 2000த்தை ஒட்டி என்று கணக்குக் காட்டினாலும் ஐந்து கோள்கள் உச்சம் பெறுவது கி.பி. 1042, ஏப்ரல் 7, புதன்கிழமைதான் என்பதும், மேலும் ராகு கேது கணிப்பு வராகமிகிரர் காலத்தில் விந்தியமலைக்கு வடக்கே இல்லை என்பதால் மேற்படி ஜாதகங்கள் தெற்கத்திக் கள்ளன் ஒருவனால் இடைச்செருகப் பட்டது என்பதும் தெளிவு.
அது சரி, கிரேக்கக் காவியங்களான 'இலியட்', 'ஒடிஸ்ஸி' இவற்றைத் தழுவி உள்நாட்டுக் கற்பனை கலந்து எழுதப்பட்டதொரு காவியத்தின் நாயகனுக்கு ஜாதகம் செய்தால் அது ஏடாகூடமாகத்தானே வரும்?
ரொம்ப நல்லா சிந்திச்சிருக்கீங்க. அப்படியே தொடர்ந்து சிந்திச்சு மனுசன் எங்கிருந்து வந்தான், எங்க போவான் அப்படீங்கறதயும் கொஞ்சம் கண்டுபிடீங்க. சொர்க்கத்துக்கு போறதுக்கு எங்க முன்பதிவு செய்யவேண்டும் என்பதையும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
அன்பின் நண்டு
ஆராய்ச்சி சரி - தேவையா ?
நல்வாழ்த்துகள் நண்டு
நட்புடன் சீனா
பிராமண சமூகத்தினர் அதிகம் வணங்கும் கடவுளான ராமர் ஒரு சத்ரியன்.......
அந்த சத்ரிய கடவுளால் வதம் செய்யப்பட்ட ராவணன் ஒரு பிராமணன்....
ஒன்னும் விளங்கலதான்......
நண்டு : அப்படினா நீ முதலில் இராமரின் ஜாதகத்த வச்சிருக்கர அந்த ஜோசியர் கிட்ட போய் அத வச்சு இராமரின் பிறப்பிடத்தை கண்டுபிடி .உனக்கு புண்ணியமா போகும் .
---------------------------------
ரசித்தேன் விவாதத்தை...இல்ல இல்ல நண்டு பிடியை..
சரியான நண்டுப்பிடிதான்... கண்டுபிடிச்சு சொல்லச்சொல்லுங்க புண்ணியமா போவும் :-))
ஆமாம். கண்டுபிடிங்க கண்டுபிடிங்க:))
இன்னும் நிறையக்கண்டுபிடிங்க :)))))
இராமர் பிறந்த இடம் எதுனு தெரியுமா ?
அதுக்கு நீங்க எல்லாரும் ராமாயணம் படிக்கணும். அதிலே தெளிவா சொல்லி இருக்கே!
As per Mr. Valmeegi,
அயோத்தியில் ராமர் திரேதா யுகத்தில் பிறந்தார்.
திரேதா யுகம் என்பது (12,96,000 ஆண்டுகள்) கொண்டது. அது முடிந்த பின்னர் துவாபர யுகம் தொடங்கி (8,64,000 ஆண்டுகள் நீடித்து) அது முடிந்த பின்னர் கலியுகம் நடந்து கொண்டுள்ளது.(4,32,000 ஆண்டுகள் கொண்ட இந்த கலியுகத்தில்தான் நாம் இருக்கிறோம்).
இந்த கலியுகம் கிருஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன்னால் பிறந்து விட்டது. இப்போது 2010- ம் ஆண்டில் நாம் இருக்கும்படியால், கலியுகம் தொடங்கி 5112 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆக, திரேதா யுகத்தின் கட்டக்கடைசியில் இராமர் பிறந்திருப்பார் என்று அனுமானம் கொண்டாலும், (துவாபரயுகம் + கலியுகம் அதாவது ) 8,64,000 + 5,112 = 8,69,112 வருடங்களுக்கு முந்தியவர் ராமர்... என்றால்..., அயோத்தியும் அவ்வளவு வருடங்கள் பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் அல்லவா?
ஆனால், 1976-77,மத்திய அரசின் தொல்பொருள்துறை இதற்காகவே அயோத்தியை பல வருடங்கள் ஆய்ந்து கடைசியாய், ஆய்வறிக்கையில் 'அயோத்தி தோன்றியது கி.மு 700-இல் தான்' என்று உறுதி பட சொல்லி விட்டனர்.
அதாவது 2710 வருடங்களுக்கு முந்தி அயோத்தி என்ற ஊரே இருந்திருக்க வில்லை.
இதை நம்பாத மத்திய அரசு, மீண்டும் சி.பி.லால், கே.என்.தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்களிடம் இந்த ஆய்வறிக்கையை மறு ஆய்வு செய்ய உத்தரவிட, அவர்களும் சில வருட மறு ஆய்வுக்குப்பிறகு, 'தொல்பொருள்துறை ஆய்வறிக்கை துல்லியமானதே' என்று அறிக்கை சமர்ப்பித்தனர்.
ஆக, ராமர் பிறந்ததாக ராமாயணத்தில் கூறப்படும் அயோத்தி... 'இந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட இந்திய அயோத்தி கிடையாது' என்பதற்கு இந்த ஆதாரம் மட்டுமல்ல, அதே ராமாயணத்தில் மேலும் பல ஆதாரங்கள் உள்ளன.
தொடரும்...
வால்மீகி ராமாயணத்தில் ராமர் பிறந்த அயோத்தி என்ற ஊர் சரயு நதிக்கரையில் இருந்து ஒன்றரை யோஜன் (அதாவது... சுமார் 23கிலோ மீட்டர்) தூரத்தில் இருந்ததாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், இப்போது சரயு என்ற பெயரில் ஒரு நதி ஓடினாலும் அது அயோத்திக்குள்ளாரேயே ஓடிக்கொண்டுள்ளது. அப்படியானால், நதிக்கரையில் இருந்து இரண்டு பக்கமும் 23 கிலோமீட்டர் தூரம் போய் பிரயாணித்தால் வேறு ஊரே இல்லை. ஊரே நோக்கி நதி நகராது (!?) என்பதால்... ஆண்டுகள் பலவாகி நதியை நோக்கி ஊர் மெல்ல மெல்ல நகர்ந்து விட்டது என்றாலும், ராமர் பிறந்த இடம் பாபர் மசூதி அல்ல...!
அப்படியெல்லாம் இல்லை... நதிதான் ஊரை நோக்கி நகர்ந்து விட்டது என்று வாதிட்டால்... அதுவும் தப்பு என்று .... நான் கூற வில்லை... ராமாயணம் கூறுகிறது. எப்படி...?
தொடரும்...
அந்த ராமர் பிறந்த அயோத்தியில் ஓடும் சரயு நதியானது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று திரு.வால்மீகி தன் ராமாயணத்தில் கூறுகிறார்.
ஆனால், நம் நாட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட அயோத்தியில் ஓடும் சரயு நதி... கங்கையில் அல்ல.. மாறாக ராப்தி என்ற நதியில் கலக்கிறது.
ஆக, ஏற்கனவே... ராமாயண அயோத்தி என்பது நம் நாட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட அயோத்தி அல்ல என்று ஏற்கனவே பார்த்து விட்டோம். இப்போது இந்த ராமாயண சரயு நதியும், நம்ம அயோத்திக்குள்ளார ஓடுற சரயு நதி அல்ல என்று தெளிவாகிறது.
இதற்கு வலு சேர்க்கும் மேலும் ஒரு ஆதாரம் அதே ராமாயணத்தில் உள்ளதே...! அதென்னது?
As per Mr. Valmeegi, ராமாயண சரயு நதி கிழகக்கிலிருந்து மேற்கு நோக்கி பாய்கிறதாம். ஆனால், நம்ம நாட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட உபி-யில் உள்ள அயோத்தியில் ஓடுற சரயு நதி....
மேற்கிலிருந்து .... கிழக்கு ... நோக்கி பாய்ந்து... கொண்டு ... உள்ளது. இதற்கு ஆதாரம் வேண்டுமா என்ன?
ஆக... ராமர் பிறந்தது, நம்ம நாட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட உபி-யில் உள்ள சரயு நதிக்கரையிண் இரு மருங்கிலும் அமைந்து உள்ள அயோத்தி என்று சொன்னால்... அவர் ராமாயனத்துக்கு எதிரானவர்... அல்லது ராமருக்கு எதிரானவர்... அல்லது உண்மைக்கு எதிரானவர் என்றாகிறார்.
ஆனால், இராமாயணம் போய் கூற வில்லை என்று ஷேர்சிங் என்ற ஆய்வாளர் உண்மையை கண்டறிந்து விளக்கியுள்ளார். அது என்ன?
தொடரும்....
ஆய்வாளர் ஷேர்சிங் ஆய்ந்து கூறிய அறிக்கை:
////நேப்பாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது.!
அதிலிருந்து இருபது கிமீ தொலைவில் ஒரு ஆறு ஓடுகிறது.!
அது, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாய்கிறது.!
பின்னர் அது கடைசியில் கங்கையில் சங்கமம் ஆகிறது.!
ராமாயணம் சொல்கிற அயோத்தி அதுதான்.////
ஆக...
"ராமர் பிறந்த இடம் நேப்பாளம்..."
என்று நான் சொல்ல்லீங்கோ...
ராமாயணத்தில்...
திருவாளர்.வால்மீகி ஐயா சொல்றாருங்கோ.
...முற்றும்.
அருமையான கட்டுரை தோழரே. அப்ப விரைவில் நல்ல தீர்ப்பு வரும்.ஜாதகத்தை சீக்கிரம் பாக்க சொல்லுங்க..இரண்டு தீர்ப்பும் ஒன்றாக வரட்டும்..
//இது போலத்தான் இராவணனுக்கு 1000 தலைகளும்//
ராவணனுக்கு பத்து தலைகள் என்று தான் கேள்விபட்டுள்ளேன். ஓ இது உங்க கற்பனையா நடக்கட்டும் நடக்கட்டும்.
எல்லாம் வல்ல ராமனால்
அயோத்தியைக்கூட
தக்கவைத்துக் கொள்ளமுடியவில்லை ...
நல்ல பதிவு.
ராமனுக்கு கோவிலும் தேவை இல்லை, பாபருக்கு மசூதியும் தேவை இல்லை.
அவனவன் சிங்கிள் டீ க்கு நாயா அலையுற நேரத்துல, அப்பன் சம்பாரிச்சு வச்ச காச என்ன பண்ணனு தெரியாம இருக்குற இந்த நாதாரிகள் எத வேணும்னாலும் கட்டட்டும். அதனால யாருக்கும் பிரயோஜனம் இல்ல.
நண்டு : அப்படினா நீ முதலில் இராமரின் ஜாதகத்த வச்சிருக்கர அந்த ஜோசியர் கிட்ட போய் அத வச்சு இராமரின் பிறப்பிடத்தை கண்டுபிடி .உனக்கு புண்ணியமா போகும் .
நொரண்டு : ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ! !
நண்டு : (: (: (: (: (: (: (: (: (: (: (: (: (: (:
////
ஹா ஹா
வாய்பே இல்லை
அது சரி, கிரேக்கக் காவியங்களான 'இலியட்', 'ஒடிஸ்ஸி' இவற்றைத் தழுவி உள்நாட்டுக் கற்பனை கலந்து எழுதப்பட்டதொரு காவியத்தின் நாயகனுக்கு ஜாதகம் செய்தால் அது ஏடாகூடமாகத்தானே வரும்?
/////
இதுதான் எனக்கும் தோணுச்சு
அருமையான பதிவு.... இந்த கேள்விய உசிலா தேவி பேர்ல எழுதுர குருசி ராமானந்தா கிட்ட கேட்டா புட்டு புட்டு வச்சிருவாரு தலைவரு மை வச்சு பார்த்து கூட சொல்லிருவாரு
எல்லாம் சும்மாவா!
நம்ம கேஸ் ஜெயிச்சிரும்!
வக்கில் சரியான பாயிண்ட் பிடிச்சி மடக்கிட்டார்!
தங்களின்
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
மிக்க மகிழ்ச்சி
ரோகிணிசிவா @
goma @
ராஜவம்சம் @
அகல்விளக்கு @
smart @
rajasundararajan @
DrPKandaswamyPhD @
cheena (சீனா) @
V.S.Kesavan, Advocate, High Court, Chennai. @
Journey & Thought @
அமைதிச்சாரல் @
மாதேவி @
UFO @
விடுதலைவீரா @
சசிகுமார் @
வானம்பாடிகள் @
கே.ஆர்.பி.செந்தில் @
அலைகள் பாலா @
பிரியமுடன் பிரபு @
ஆயிரத்தில் ஒருவன் @
ஹேமா @
வால்பையன்
அவர்களே
மிக்க நன்றி .
புராணங்கள் உண்மை என்கிறீர்களா ?????
டேய் மதத்த வித்து தின்கிற நாய்பசங்களா வேற எந்த மதத்தல இதமாதிரி எழுது வாங்களாடா ஊரபசங்களா
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "