வியாழன், 3 பிப்ரவரி, 2011

மீனவ தோழர்கள் செய்யவேண்டியது




மிகவும் வேதனைக்குரிய நிகழ்வுகள் ,தமிழக மீனவர்களை சிங்கள அரசால் தாக்கப்படுவதும் ,படுகொலை செய்யப்படுவதும் ஆகும் .இந்நிகழ்வுகள் 1983 ல் இருந்து நடந்து வந்தாலும் யாரும் மீனவர்களின் உண்மையான குரலை கேட்காமலே வந்துள்ளதால் இன்று 500க்கும் அதிகமான நம் தமிழர்களை கொலைசெய்துள்ளனர் சிங்கள கடல் ரௌடிகள் .சிங்கள ரௌடிகளால் முதல் தமிழன் தாக்கப்பட்டபோதே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை தமிழ் சகோதரர்களை இழந்திருக்கமாட்டோம் .

இன்று அரசியலுக்காக கூவும் அண்டங்காக்காய்களுக்கு சிங்கள வெறியர்களால் உயிரிழந்த முதல் தமிழன் யாரேன்றும்,அவர் பெயர் என்னதென்றும் தெரியுமா ?.என்று ,எப்படி நடந்தது என்ற விபரங்களாவது தெரியுமா ? .அப்பொழுது இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் ,சிங்கள அரசுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்க முற்பட்டனர்  என்ற கேள்விகளுக்கு பதில் உண்டா ...இப்படியாக உள்ளது நம் தமிழர்களின் நிலை .

இதற்கு தீர்வு ,

மீனவ தோழர்கள் செய்யவேண்டியது,
1.வரும் தேர்தலில் ,மீனவர் குரல் சட்டசபையில் அனுதினம் ஒலிக்க தங்களின் பிரதிநிதிகளை அவர்களே அனுப்பவேண்டும் .

2.அனைவரும் சுயேச்சையாகவே தேர்தலில் போட்டியிடவேண்டும் .

கட்சிகள் செய்யவேண்டியது .

அனைத்துக்கட்சிகளும்  மீனவ சுயேச்சைகளை ஆதரிக்கவேண்டும் .மீனவ தோழர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்க வழிவிடவேண்டும் .

மற்றவர்கள்  செய்யவேண்டியது .

மீனவர்களை ஆதரித்து,தங்களின் கட்சி வேட்பாளர்களை மீனவர்களுக்கு எதிராக நிறுத்தாத கட்சிகளுக்கே ஆதரவு என்ற கொள்கையில் மற்றவர்கள் உறுதியாக இருக்கவேண்டும் ...மீனவர்களை  ஆதரிக்காத கட்சிகளை ஒட்டுமொத்த தமிழினமே ஒதுக்கவேண்டும் .




இது நடந்தால் தான் தண்ணீரில் இனி  கண்ணீர் இன்றி தமிழன் பாதுகாக்கப்படுவான் .




.




  

Download As PDF

9 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

mmmmm அன்பின் நண்டு - நல்லதே நடக்க நல்வாழ்த்துகள்

goma சொன்னது…

நல்ல முயற்சிக்கு வழி சொல்லியிருக்கிறீர்கல்

பெயரில்லா சொன்னது…

எல்லாமே நல்ல ஐடியாக்கள்

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

உங்கள் கனவு மெய்பட வாழ்த்துக்கள் சார்

Chitra சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

sathishsangkavi.blogspot.com சொன்னது…

:)))

சங்கரியின் செய்திகள்.. சொன்னது…

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

super sir

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "