இன்றைக்கு கொடுமை செய்யும் நபரைக்கண்டால் நமக்கு ஓடிவரும் ஒப்பீடு உருவம் ஹிட்லர் .வரலாற்றில் இவரிடம் மிகவும் தனியானது .எது எப்படியிருப்பினும் ஹிட்லரிடமிருந்து நாம் கற்றுக்கொண்ட விசயங்களை விட இனியும் கற்றுக்கொள்ளவேண்டியவைகள் இன்னும் உண்டு .அதிலும் நாம் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டியவைகளும் உண்டு .
வரலாற்றை நாம் ஒன்றுக்கும் ஆகாத ஒன்றாகவே பார்த்தும்,படித்தும் வருகின்றோம் .வரலாற்றை வரலாறாகவே வரலாற்று அறிஞர்களும் பார்த்தும்,மற்றவர்களுடன் மாறுபடும் தன்மையில் சிறப்பினை பெறுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தியும் நீர்த்துவிடுகின்றனர்.
வரலாற்று நாவல்கள் கூட தங்களின் பணிகளை சிறப்பாக செய்வதில்லை .ரசனையான விசயமாகவே ஆக்கப்பட்டு படிக்கும் படிமமாகிவிடுகின்றன.
வரலாற்றின் உயர்வு,அது கூறும் செய்திகளை மக்கள் உணர்ந்து நகர்வதைப்பொறுத்து அமைகிறது .இந்த வகையில் ஹிட்லரின் வரலாற்றிலிருந்து நாம் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டியவைகள் நிறைய இருந்தாலும் நாம் நாம் கட்டாயம் கற்றுக்கொள்ளவேண்டியவைகள் சிலது உள்ளது .எது என என்னைக்கேட்டால் ...
உலகே நடுங்கும்படியான மிகப்பெரிய படை .மிகச்சிறந்த செரிவான பேச்சு .யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரம் .எதிரியாக யாரும் இருக்க பயப்படும்படியான ஒரு தன்மையை வளர்த்துக்கொண்ட ஆளுமை .உயிருடன் இருக்கும் வரை தனக்கு நிகர் தானாகவே இருந்து மறைந்த ஒரு ஆட்சியாளர் .இப்படிப்பட்ட இவர் எதற்காக போராடினார்,போரிட்டார் ,எப்படி தோற்றார் தெரியுமா ? .
இங்கு நாம் ஆரியர்கள் பற்றியும் .ஆரியர்கள், திராவிடர்களுக்கிடையேயுமான மோதல்கள் மற்றும் பிணக்குகள் பற்றியும் பேசுகின்றோமே .இதை இவர் ஜெர்மனியில் பேசினார்.உலகிலே தலைசிறந்தவர்கள் நாங்கள் தான் .ஆளப்பிறந்தவர்களும் நாங்கள் தான் .மற்றவர்கள் எங்களுக்கு சேவகம் செய்யவே படைக்கப்பட்டவர்கள் எனக்கூறியதோடு நில்லாமல் ,செயல்பட்டவும் ஆரம்பித்து உலகு அடிபணிந்த்து ,அவ்வளவு தான் என்று அவரின் கருத்தின் உச்சத்தைத் தொட்டுவிட்டாதாக நினைத்து உலகை மனிதக்கொலைகளால் நிறைத்துக்கொண்டு வந்து அதன் மீது நின்று கொக்கரிக்க ஆரம்பித்தும் விட்டார் .இவரின் கூவலுக்கு அடிபணிந்து சேவகம் செய்ய சென்னையில் இவர் வந்தால் வரவேற்ற ஜெர்மனிய மொழி கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டதினின்று இவரின் உச்சத்தையும் ,இவருக்கு இவரை ஆதரித்தவர்கள் கொடுத்த மரியாதையையும் தெரிந்துகொள்ளலாம் .அந்தளவிற்கு மக்கள் தலைவனாகிவிட்டாருந்தார் .இப்படிப்பட்டவர் ஏன் தோற்றார் ?.
வாழ்க்கை நகர்வில் ,அதிகாரமும் பதவியும் கைவரப்பொற்றவர்கள் ,தாங்கள் தான் வரலாறு என்ற மிதப்பில் செய்யும் சில வரலாற்றுப்பிழைகள் தான் ,அவர்களை ஓரம் கட்டுகிறது.
ஹிட்லர் செய்த வரலாற்றுப்பிழையில் முதன்மையானது எதுவெனில் ,ஆயுதங்களினால் மட்டுமே ஒரு அரசை அமைத்துவிடமுடியும் என்பதும் ,அதன் மூலம் மட்டமே ஒரு இனவாத அரசை நிர்மாணித்து நிலைநிறுத்தி விட முடியும் என்பதுவே .ஆள் பலத்தாலோ,படை பலத்தாலோ ஒரு அரசை நிறுவிட முடியாது .அப்படி ஆள் பலத்திலும்,படை பலத்திலும் அரசை நிறுவிக்கொண்டுவந்ததினால் தான் வரலாறு நெடுகிலும் போர்,போர்,போர், ...
தொடரும் ...
Tweet |
|
18 கருத்துகள் :
vadai....
bajji
வரலாற்று தகவல்.....
நல்ல பதிவு...
நான் ஹிட்லரின் "மெயின் கேம்ப்" புத்தகம் படிச்சிருக்கேன்....
நீங்கள் சொல்ல வரும் தன்மை எனக்கு நன்றாக புரிகிறது....
adutha pakuthiyai padika avalaga ullen
பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே அறிந்துகொள்ளவேண்டிய தகவல்
Hitler kuritha varalarukal ennai kuzhapamura seikindrana.
அருமை!
ஒரு டவுட்- ஷிட்லர்??? - ஹிட்லர் தானே?
தொடருங்கள் நண்டு சார்..முழுசா படிச்சுக்கிறேன்...ஷிட்லர் ஆ..ஹிட்லர் ஆ??
nalla pathivu anna
வாழ்க்கை நகர்வில் ,அதிகாரமும் பதவியும் கைவரப்பொற்றவர்கள் ,தாங்கள் தான் வரலாறு என்ற மிதப்பில் செய்யும் சில வரலாற்றுப்பிழைகள் தான் ,அவர்களை ஓரம் கட்டுகிறது.
..... நல்லா எழுதி இருக்கீங்க.... தொடருங்கள்!
அன்பின் நண்டு - தொடர்கிறதா - தொடர்களையும் படித்து விட்டு வருகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நல்ல பகிர்வு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
இன்றுதான் முதல் முறையாக உங்கள் பக்கம் வருகிறேன் சார்! ஹிட்லரின் மறுமுகத்தை அலசி இருக்கிறீர்கள்! கலைத்துறையிலும் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்! ஒவ்வொரு மனிதனிடமும் நல்லா குணங்களும் கெட்ட கணங்களும் கலந்தே இருக்கின்றன! நன்றி சார் உங்கள் பதிவுக்கு!!
ம்...நிதர்சனம் !
உங்க கிட்டே இருந்தும் நிறையா கத்துக்கனும் சார்
உங்களிடம் இருந்து அதிகமாக எதிர்ப்பார்க்கிறேன். மதனின் , "மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்" என்ற புத்தகம் கிடைத்தால் வாசிக்கவும் (விகடன் பிரசுரம்). உங்கள் தொடருக்கு உதவியாய் இருக்கக் கூடும்.
நல்ல பகிர்வு
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "