ஈரோட்டில் நடக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் மொழி ,இன ,நலம் விருப்பிகள் நடத்தும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திற்கும் ,மாநாட்டிற்கும் நான் சாதாரண பார்வையாளனாய் சென்று பார்ப்பது வழக்கம்.ஒவ்வொரு உணர்வாளர்கள் என்பவர்களும் தாங்கள் தமிழுக்காகவோ, அதன் உயர்வுக்காகவோ இல்லை என்பதனை பேச ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலே வெளிப்படுத்தி விடுவதுடன் தமிழின் பெயரால் தவறாமல் தமிழர்களை மடையர்களாக்குவதோடு தாங்களை மட்டும் உன்னதமானவர்களாக காட்டிக்கொண்டு புரட்சியாளர் வரிசையில் அமரத்துடித்து ,வீர வசனம் பேசி நடித்துச்செல்வதை கண்டு ஒவ்வொரு தடவையும் நான் மிகவும் ஏமாற்றப்பட்டே திரும்பியுள்ளேன்.அப்பொழுது நான் நினைத்துப்பார்க்கும் நாடு அமெரிக்கா .
(இதில் வேடிக்கை என்னவெனில் இன்றுள்ள பல வீர வசன தமிழ் தலைவர்களுக்கு நாடு, அரசு,மக்களாட்சி,கட்சி,இயக்கம் என்றால் என்னவென்றே தெரியாத ஒன்றாக இருப்பதுவும் ,இருந்தாலும் இவர்கள் தலைவர்களாக உள்ளதும் தான் .ஆனால்,அவர்களுக்கு கற்பிதம் என்ற வார்த்தை மட்டும் நன்றாக உச்சரிக்கத்தெரியும் ,இது தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்பது உள்ளங்கை நெல்லி .)
வெத்து வீர வசனம் பேசி மறத்தமிழனை மழுங்கடிக்கும் பேச்சுத்தமிழர்களே கேளுங்கள் ...
நான் உலக அரசியல் அமைப்புச்சட்டங்கள் அனைத்தையும் ஆழ்ந்து படித்துவந்த பொழுது என்னை மிகவும் வசீகரித்தது அமேரிக்காவின் அரசியல் அமைப்புச்சட்டம் .
மிக மிக எளிமையான ஆனால் மிகமிக அழுத்தமான சரத்துக்களை தன்னுள் கொண்டுள்ளதை படித்த பொழுது மிகவும் வியந்தேன் .
அதை மிகவும் ஊன்றிப்படித்த பொழுது தான் தெரிந்து கொண்டேன் .தாங்களின் தலைவனை தனது மக்கள் எப்படிப்பட்டவராக தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதனை உள்ளீடாக கொண்டிருக்கும் பல விசயங்களை.
அதில் முதன்மையானது ,
தலைவன் மயக்கப்பேசும் தன்மையுடையவனாக ,மேடையில் முழங்கும் அட்டக்கத்தி வீரனாக இருக்கக்கூடாது என்பதுவே.
மேடையில் வீர வசனம் பேசும் வீணர்களுக்கு இங்கு இடமில்லை ,மக்களுக்கு நல்லது செய்பவன் வீர வசனம் பேச மாட்டான் .அப்படி பேசுகிறவன் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கமாட்டான் என்பதை மக்களிடம் அது கொண்டுசென்றுள்ள பாங்கை அறிந்து மிகவும் வியந்தேன் .
அதனால் தான் அமெரிக்கா நல்லரசாக தனது மக்களுக்கு உள்ளது.
இங்கு வெத்து வீர்ர்ர வசனம் பேசியே நம்மை சாகடிக்கின்றனர் .
இனி நாமும் அமேரிக்காவின் வழியில் பயணிப்போம் .
வெத்து வீர வசனங்கள் பேசி மறத்தமிழர்களை மழுங்கடிக்கும் பேச்சுத்தமிழர்களே உங்களுக்கு நாங்கள் விடைகொடுக்கிறோம்.
இனி நீங்கள் இன்டஸ்ட்ரீயில் கவனம் செலுத்துங்கள்.
அதையாவது தரமாக்குங்கள்.
எனவே
இனிய தமிழ் நெஞ்சங்களே,இனி அவர்களின் வீர்ர்ர வசனங்களை தியோட்டர்களில் மட்டுமே கேட்போம் .
நம் நாட்டை நாம் பார்த்துக்கொள்வோம்.
Tweet |
|