திங்கள், 7 மே, 2012

ஒண்ணும் பிரச்சனை இல்லை. வாங்க!

நல்ல கருத்துள்ள குறும்படம். மனிதனுக்கு வரும் நோய்க்கு மருத்துவர்களைத் தேடாமல் இயற்கையை நாட வேண்டும் என்று அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. அவசரத்துக்கு மருத்துவரிடம்தானே செல்ல வேண்டியிருக்கிறது. இப்படி மருத்துவர்களிடம் செல்வதால் ஏற்படும் இழப்புகளும் ஏராளம். மருத்துவர்கள் சேவை நோக்கத்துடன் செயல்படும் வரை இந்த இழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.


நோயொன்று வந்து, மருத்துவர்களிடம் சென்று விட்டால் போதும்! நோயைக் குறைக்கிறார்களோ இல்லையோ பணத்தைக் கறப்பதில் குறியாக இருக்கிறார்கள் என்பது இன்று நாடறிந்த உண்மையாகி வருகிறது.

பணம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போய்க் கொண்டிருக்கும் இந்த நாட்டில் மனித நேயம் மறக்கப்பட்டு வருகிறது.

மனிதன் வாழ்க்கைக்கு இயற்கையால் கொடுக்கப்பட்ட கொடைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இயற்கையை விட்டு, செயற்கைக்குப் போன மனிதன் தன் ஆசை அதிகரிப்பால் அதையும் தாண்டி இயற்கையை முற்றிலுமாக அழிக்கத் தொடங்கி விட்டான். இயற்கையையே மறந்து போய் விட்டான்.

இயற்கையின் மறைவால், செயற்கையின் விளைவு கடுமையாக இருக்கிறது. இயற்கையின் சீற்றம் மனிதனைப் பாடாய்ப் படுத்துகிறது.

இது போல் இயற்கை உணவுகளையும், உடற்பயிற்சிகளையும் மறந்ததால் மனிதன் வாழ்க்கை நோயின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.

இந்த நோயின் பிடியில் இருப்பவர்களை தங்களின் மருத்துவத் தூண்டிலில் அவர்கள் சேர்த்து வைத்த பணத்தைப் பிடிக்க மருத்துவர்கள் வந்து விட்டார்கள் என்கிற உண்மையையும் இயற்கையான உணவும், உடற்பயிற்சியும் இருதய நோயைக் கூடக் குணப்படுத்தும் என்கிற நம்பிக்கையையும் உருவாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட குறும்படம் இது.

சொடுக்கிப் பார்த்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
http://www.youtube.com/watch?v=LP-G6lXPJ3g&feature=youtu.be


Download As PDF

6 கருத்துகள் :

Unknown சொன்னது…

ஆம் நண்பரே நீங்கள் சொல்வது உண்மைதான்.இன்று ஒரு சில மருத்துவர்கள் தான் மனித நேயத்துடன் செயல்படுகிறார்கள்

Unknown சொன்னது…

ஆம் நண்பரே நீங்கள் சொல்வது சரிதான்.இன்று மனிதநேயத்துடன் செயல்படும் பருத்துவர்கள் குறைவுதான்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை தான் !

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உண்மையைய சொல்லிட்டேங்கய்யா....!!!

MARI The Great சொன்னது…

நேரம் கிடைக்கும் போது சொடுக்கிப் பார்கிறேன் சார் ..!

Unknown சொன்னது…

படம் பார்த்தேன் மருத்துவம் அடிக்கும் கொள்ளை !
சா இராமாநுசம்

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "