சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார்.
@ .@ .@. @ .@ .@
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்
@ .@ .@. @ .@ .@
கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம்
அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
@ .@ .@. @ .@ .@
தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
@ .@ .@. @ .@ .@
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?
@ .@ .@. @ .@ .@
அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.
@ .@ .@. @ .@ .@
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.
@ .@ .@. @ .@ .@
நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
@ .@ .@. @ .@ .@
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
....
பாரதியின் பாடல்கள் .
பாரதியின் நினைவாக .
இன்று பாரதியின் பிறந்த தினம் .
Tweet |
|
6 கருத்துகள் :
பாரதி போற்றுவோம்
பாரதி போற்றுவோம்
தம 3
அற்புதமான வரிகளை எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள்.
சிறப்பு...
/மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?/ அவன் பாட்டைப் புகழ்வோர் அவன் சிந்தித்ததை நினைத்துப் பாராததேனோ.
அருமையான பதிவு! நண்பரே! ஜிஎம்பி சார் சொன்னதையும் கருத்தில் கொள்ள வேண்டும்!
கருத்துரையிடுக
" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "