ஞாயிறு, 22 ஜூலை, 2012

இரட்டைப்பிள்ளை பிறக்க கணவன் இறக்கவேண்டும்.

   நொரண்டு : வணக்கம் நண்டு.

நண்டு : வாங்க நொரண்டு.

நொரண்டு :   இரட்டைப்பிள்ளை பிறக்க கணவன்  இறக்கவேண்டுமாமே.

நண்டு : அட ...என்னப்பா சொல்லர .

நொரண்டு : ஆமாப்பா.

நண்டு :  யார் சொன்னா ?.


நொரண்டு எங்க பாட்டி சொன்னாங்கப்பா .

நண்டு :  யார்ட்ட ?.

நொரண்டு : எங்க அத்தைகிட்ட சொல்லிட்டு இருந்தாங்க


நண்டு : என்னானு?.

நொரண்டு : அவங்க நேத்து கனவு கண்டாங்கலாம்.

நண்டு :  அதனால் என்ன ?.


நொரண்டு : அட,சொல்ல  முதல விடப்பா.


நண்டு :  சரி சொல்.


நொரண்டு : எங்க அத்தை எங்க மாமா இறந்து விட்டதா கனவு கண்டாங்களாம்.அது கண்டு பயந்து போய் எங்க பாட்டிகிட்ட என்ன அர்த்தம்னு கேட்டாங்க .அதுக்கு  எங்க பாட்டி கணவன் இறந்ததாக  கனவு கண்டா ,கனவு கண்டவள் நீண்ட நாள் கணவனுடன் சுமங்கலியா வாழ்வாள்.இரட்டை பிள்ளைகள் பிறக்கும் ,அதனால கவலைப்படாதே.ஒன்னும் ஆகாதுனு சொன்னாங்க...இது நிஜமா. 


நண்டு :  கனவுகள் பற்றியும் அதற்கான பலன்கள் பற்றியும் நிறைய நம்பிக்கைகள் இருக்கு.அதுல இதுவும் ஒன்று.


நொரண்டு  ஓ .


நண்டு : 

 '' மரப்பெட்டி யுடையக் கண்டாள் ;
 மல்லிகைப்பூவாடக்கண்டாள் ;
ஏற்றி வைத்த திருவிளக்கு இருளடைந்து போகக்கண்டாள் ;
உரைத்துவைத்த சந்தனந்தான் உலர்ந்திட கண்டாள் ;
தேங்காயுடையக் கண்டாள் ;
செம்பு ஜலங் குறையக்கண்டாள் ;
மாலை கசங்கியே தான் மணவாளன் மாளக்கண்டாள்   '' இத  படிச்சிருக்கியா ?.

நொரண்டு  இல்லப்பா, அவங்க இரட்டை  குழந்தைகள் பொத்துக்கிட்டு  100 வருசம் இருந்தவங்களாப்பா.


நண்டு :   ஹா ...  ஹா ..ஹா ...


நொரண்டு : ஏப்பா சிரிக்கிற .


நண்டு :   இது கண்ணகி கண்ட தீ நிமித்தம் இது.


நொரண்டு : ஓ ..ஓ.. ,என்னப்ப ,உண்மையாகவா ?. இது  நிமித்தமா ?.கனவா ?.


நண்டு :  ம் ...அத இளங்கோவை படித்து தெரிந்துகொள்.

நொரண்டு :நின்ன என்ன சொல்ல வர்ரா.


நண்டு :  அந்த காலத்தில தாங்கள் கண்ட கனவு அப்படியே நடக்குனு நம்பினாங்க.இப்ப அதற்கு நேர்மாறா நடக்கும்னு நினைக்கிறாங்க.

நொரண்டு : ஆமாப்பா, இப்படித்தான் இருக்கின்றனர்.

நண்டு :ஆனால் ,ஒன்றுமட்டும்  தெரியல.


நொரண்டு  என்ன தெரியல .


நண்டு :  எங்கையோ இடிக்குதுப்பா ?.

நொரண்டு : என்ன ?.

நண்டு :   இந்த முரணிற்கு காரணம் தான்.

நொரண்டு :ஆமாம்.ஏன் இந்த முரண்.


நண்டு :கனவில் கண்பது அனைத்தும் அப்படியே நடக்கும்  என்பதையும் ஏற்க முடியாது .


நொரண்டு :ஏன்,தையல் மிசின்...


நண்டு :  ஹா ...  ஹா ..

நொரண்டு  ம்...


நண்டு : அது போல அதற்கு நேர்மாற நடக்கும்  என்பதையும் ஏற்க முடியாது.

நொரண்டு  அப்ப என்னத்தத்தான்  ஏத்துக்கிறதா ? .


நண்டு :  அச்சம் நீங்கி அமைதியை மனத்தில் ஏற்படுத்த சொல்லப்படும் இன்சொல்லாக எடுத்துக்கொள்ளலாம்.அவ்வளவே.

நொரண்டு : இது  மூட நம்பிக்கையில்லையா.


நண்டு :   ஹா ...  ஹா ..ஹா ...நல்ல பகுத்தறிவு .

நொரண்டு :  புரியல.


நண்டு : புரியாம இருக்கும் வரை எல்லாம் முட நம்பிக்கையே.Download As PDF

16 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா ஹா... நல்ல உரையாடல் பதிவு.. 'மூட' 'முட' - அருமை... நன்றி சார் !

MARI The Great சொன்னது…

எப்படி விமர்சிக்கறதுன்னு தெரியலை..., ஆனால் முடித்த விதம் வெகு அருமை ராஜா சார்!

ADMIN சொன்னது…

அருமைங்க.. நானே பயந்துபோய் படிக்க வந்தேன்.. கடைசியில கனவோட பலன் சொல்லியிருக்கீங்க..

ADMIN சொன்னது…

கனவுகளின் பலன் அறியன்னு தலைப்பு கொடுத்திருக்கலாம்..

G.M Balasubramaniam சொன்னது…

அச்சம் நீங்கி அமைதிபெற என்று எடுத்துக்கொண்டு ஒதுங்குவதே சரி என்று தோன்றுகிறது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்லாத்தான் சொல்றீங்க...ஆனால் இரட்டை பிள்ளை பிறந்தவர்கள் சந்தோஷமாக வாழ்வதை கண்ணால் பார்க்கிறேன் இது உண்மை....!

சேகர் சொன்னது…

அருமை அண்ணா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

புரியாம இருக்கும்வரை எல்லாம் மூட நம்பிக்கையே!
சரியா சொன்னீங்க!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான முறையில் கனவுபற்றி விவரித்தீர்கள்! அருமை! நன்றி!

பெயரில்லா சொன்னது…

அச்சங்களைக் குறைக்க நிமித்தக் காரர்கள் சொல்வது தான் இவை எல்லாம் .. ஆனால் அவையே மூட நம்பிக்கையாகி விட்டன. இந்தக் காலத்தில் அனைத்தும் மெய்யா பொய்யா என ஆராயும் திறன் இருப்பதால் நிமித்தங்கள் பார்க்க வேண்டியது இல்லை .. மக்களும் கனவுக் குறித்த அதீத அச்சங்களையும், நம்பிக்கைகளையும் விட்டு விலக வேண்டும்.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் நண்டு - இதெல்லாம் மூட நம்பிக்கைதான் - கனவில் வந்தவை நனவில் நடக்க வேண்டும் எனச் சட்டம் இல்லை.

அம்பாளடியாள் சொன்னது…

அச்சம் நீங்கி அமைதியை மனத்தில் ஏற்படுத்த சொல்லப்படும் இன்சொல்லாக எடுத்துக்கொள்ளலாம்.அவ்வளவே.

இதுவே மிக நன்மை!...தொடர வாழ்த்துக்கள் சகோ .

Doha Talkies சொன்னது…

அருமையான விமர்சனம.
சமயம் கிடைத்தால் இந்த தம்பியின் வலைப்பக்கதிற்கு வந்து செல்லவும்.
நன்றி.
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

பெயரில்லா சொன்னது…

அச்சம் தவிர்...கனவு தொலை...

மதன்மணி சொன்னது…

மூட நம்பிக்கை மனித முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு குப்பை உடனே அதை எறித்திட வேண்டும் .....
நல்ல பதிவு உங்கள் பணி மேலோங்கிட வாழ்த்துக்கள்

Athisaya சொன்னது…

இன்று தான் தங்கள் தளம் வருகிறேன்.சந்திப்பு,மகிழ்ச்சி.உரையாட் பாங்கில் அருமையான பதிவு.களைகள் போல் மூடஎய்யங்களும் களையப்படவேண்டும்.சந்திப்போம் சொந்தமே!

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "